Skip to content

அயோத்தியா காண்டம் — வனம்புகு படலம் · அயோத்தியா காண்டம் — வனம்புகு படலம்

Ayodhya Kandam — vaṉampuku paṭalam

ayōttiyā kāṇṭam — vaṉampuku paṭalam

The original Tamil verses of Kambar’s Ramayanam.

47 versesTamil with transliteration

A spreading tree, recalling the forest journeys in Kambar’s Ramayanam.

பூரியர் புணர் மாதர் பொது மனம் என , மன்னும் ஈரமும் உளது இல் என்று அறிவு அரும் இளவேனில் , ஆரியன் வரலோடும் , அமுது அளவிய சீதக் கார் உறு குறி வானம் காட்டியது அவண் எங்கும் .

pūriyar puṇar mātar potu maṉam eṉa , maṉṉum īramum uḷatu il eṉṟu aṟivu arum iḷavēṉil , āriyaṉ varalōṭum , amutu aḷaviya cītak kār uṟu kuṟi vāṉam kāṭṭiyatu avaṇ eṅkum .

Report an error

வெயில் இளம் நிலவே போல் விரி கதிர் இடை வீசப் பயில் மரம் நிழல் ஈனப் பனி புரை துளி மேகம் புயல் தர , இள மென் கால் பூ ! அளவியது எய்த , மயில் இனம் நடம் ஆடும் வழி இனியன போனார்

veyil iḷam nilavē pōl viri katir iṭai vīcap payil maram niḻal īṉap paṉi purai tuḷi mēkam puyal tara , iḷa meṉ kāl pū ! aḷaviyatu eyta , mayil iṉam naṭam āṭum vaḻi iṉiyaṉa pōṉār

Report an error

'மன்றலின் மலி கோதை மயில் இயல் மடம் மான் ஏ ! இன் துயில் வதி கோபம் அத்து இனம் விரவின எங்கும் கொன்றைகள் சொரி போதின் குப்பைகள் , குலம் மாலைப் பொன் திணி மணி மானப் பொலிவன பல காணாய் . '

'maṉṟaliṉ mali kōtai mayil iyal maṭam māṉ ē ! iṉ tuyil vati kōpam attu iṉam viraviṉa eṅkum koṉṟaikaḷ cori pōtiṉ kuppaikaḷ , kulam mālaip poṉ tiṇi maṇi māṉap polivaṉa pala kāṇāy . '

Report an error

'பாண் இனம் ஞிமிறு ஆகப் படும் மழை பணை ஆக , நாணின தொகு பீலி கோலின நடம் ஆடல் , பூண் இயல் ! நின சாயல் பொலிவது , பல கண்ணில் காணிய எனல் ஆகும் களி மயில் இவை காணாய் . '

'pāṇ iṉam ñimiṟu ākap paṭum maḻai paṇai āka , nāṇiṉa toku pīli kōliṉa naṭam āṭal , pūṇ iyal ! niṉa cāyal polivatu , pala kaṇṇil kāṇiya eṉal ākum kaḷi mayil ivai kāṇāy . '

Report an error

'சேந்து ஒளி விரி செம் வாய் பசுமை கிளி செறி கோலக் காந்தளின் மலர் ஏறிக் கோதுவ , கவின் ஆரும் மா தளிர் நறும் மேனி மங்கை ! நின் மணி முன்கை எந்தின எனல் ஆகும் இயல்பின இவை காணாய் !

'cēntu oḷi viri cem vāy pacumai kiḷi ceṟi kōlak kāntaḷiṉ malar ēṟik kōtuva , kaviṉ ārum mā taḷir naṟum mēṉi maṅkai ! niṉ maṇi muṉkai entiṉa eṉal ākum iyalpiṉa ivai kāṇāy !

Report an error

'நெய்ஞ் ஞிறை நெடு வேலின் நிறம் உறு திறம் முற்றிக் கைஞ் ஞிறை நிமிர் கண்ணாய் ! கருதின இனம் என்றே மெய்ஞ் ஞிறை விரி சாயல் கண்டு நின் விழி கண்டு மஞ்ஞையும் மடம் மானும் வருவன இவை காணாய் . '

'neyñ ñiṟai neṭu vēliṉ niṟam uṟu tiṟam muṟṟik kaiñ ñiṟai nimir kaṇṇāy ! karutiṉa iṉam eṉṟē meyñ ñiṟai viri cāyal kaṇṭu niṉ viḻi kaṇṭu maññaiyum maṭam māṉum varuvaṉa ivai kāṇāy . '

Report an error

'பூவலர் குரவோடும் புடை தவழ் பிடவு ஈனும் மா அலர் சொரி சூழல் துயில் எழும் மயில் ஒன்றின் தூவி இன் மணம் நாறத் துணை பிரி பெடைதான் , அச் சேவலொடு உற ஊடித் திரிவதன் இயல் காணாய் . '

'pūvalar kuravōṭum puṭai tavaḻ piṭavu īṉum mā alar cori cūḻal tuyil eḻum mayil oṉṟiṉ tūvi iṉ maṇam nāṟat tuṇai piri peṭaitāṉ , ac cēvaloṭu uṟa ūṭit tirivataṉ iyal kāṇāy . '

Report an error

'அருந்ததி அனையாளே ! அமுதினும் இனியாளே ! செருந்தியின் மலர் தாங்கும் செறி இதழின் அசோகம் , பொருந்திய களி வண்டில் பொதிவன , பொன் ஊதும் இருந்தையின் எழு தீ ஒத்து எழுவது ஒர் இயல் பாராய் . '

'aruntati aṉaiyāḷē ! amutiṉum iṉiyāḷē ! ceruntiyiṉ malar tāṅkum ceṟi itaḻiṉ acōkam , poruntiya kaḷi vaṇṭil potivaṉa , poṉ ūtum iruntaiyiṉ eḻu tī ottu eḻuvatu or iyal pārāy . '

Report an error

'ஏந்து இளம் முலையாளே ! எழுதரும் எழிலாளே ! காந்தளின் முகை கண்ணில் கண்டு , ஒரு களி மஞ்ஞை , 'பாந்தள் இது ' என உன்னிக் கவ்வியபடி பாராத் , தேம் தளவுகள் செய்யும் சிறு குறு நகை காணாய் . '

'ēntu iḷam mulaiyāḷē ! eḻutarum eḻilāḷē ! kāntaḷiṉ mukai kaṇṇil kaṇṭu , oru kaḷi maññai , 'pāntaḷ itu ' eṉa uṉṉik kavviyapaṭi pārāt , tēm taḷavukaḷ ceyyum ciṟu kuṟu nakai kāṇāy . '

Report an error

'குன்று உறை வயம் மாவின் குருளையும் இருள் சிந்திப் பின்றின எனல் ஆகும் பிடி தரு சிறு மாவும் அன்று அல பிரிவு ஒல்லா அண்டர்தம் மனை ஆவின் கன்று ஒடு விளையாடும் களியன பல காணாய் . '

'kuṉṟu uṟai vayam māviṉ kuruḷaiyum iruḷ cintip piṉṟiṉa eṉal ākum piṭi taru ciṟu māvum aṉṟu ala pirivu ollā aṇṭartam maṉai āviṉ kaṉṟu oṭu viḷaiyāṭum kaḷiyaṉa pala kāṇāy . '

Report an error

'அகில் புரை குழல் மாதே ! அணி இழை எனல் ஆகும் நகும் மலர் நிறை மாலைக் கொம்புகள் , நதி தோறும் துகில் புரை நுரை நீரில் தோய்வன , துறை ஆடும் முகிழ் இள முலையாரில் மூழ்குவ பல காணாய் . '

'akil purai kuḻal mātē ! aṇi iḻai eṉal ākum nakum malar niṟai mālaik kompukaḷ , nati tōṟum tukil purai nurai nīril tōyvaṉa , tuṟai āṭum mukiḻ iḷa mulaiyāril mūḻkuva pala kāṇāy . '

Report an error

'முற்றுறும் முகை கிண்டி முரல்கில சிறு தும்பி , வில் திரு நுதல் மாதே ! அம் மலர் விரி கோங்கின் சுற்று உறும் மலர் ஏறித் துயில்வன சுடர் மின்னும் பொன் தகடு உறும் நீலம் புரைவன பல காணாய் . '

'muṟṟuṟum mukai kiṇṭi muralkila ciṟu tumpi , vil tiru nutal mātē ! am malar viri kōṅkiṉ cuṟṟu uṟum malar ēṟit tuyilvaṉa cuṭar miṉṉum poṉ takaṭu uṟum nīlam puraivaṉa pala kāṇāy . '

Report an error

'கூடிய நறை வாயில் கொண்டன , விழிகொள்ளா மூடிய களி மன்னும் முடுகின , நெறி காணா , ஆடிய சிறை மா வண்டு அந்தரின் இசை முன்னம் பாடிய பெடை கண்ணா வருவன , பல காணாய் . '

'kūṭiya naṟai vāyil koṇṭaṉa , viḻikoḷḷā mūṭiya kaḷi maṉṉum muṭukiṉa , neṟi kāṇā , āṭiya ciṟai mā vaṇṭu antariṉ icai muṉṉam pāṭiya peṭai kaṇṇā varuvaṉa , pala kāṇāy . '

Report an error

'கன்னியர் அணி கோலம் கற்று அறிகுநர் என்னப் பொன் அணி நற வேங்கை கோங்குகள் புது மென் பூ , அன்னம் மெல் நடையாய் ! நின் அளி வளர் அளகப் பூம் சின்ன நல் மலர் மானச் சிந்துவ பல காணாய் . '

'kaṉṉiyar aṇi kōlam kaṟṟu aṟikunar eṉṉap poṉ aṇi naṟa vēṅkai kōṅkukaḷ putu meṉ pū , aṉṉam mel naṭaiyāy ! niṉ aḷi vaḷar aḷakap pūm ciṉṉa nal malar māṉac cintuva pala kāṇāy . '

Report an error

'மணம் கிளர் மலர் வாரும் மாருதம் வர , வாசக் கணம் கிளர்தரு சுண்ணம் கல் இடையன கானம் அத்து , அணங்கினும் இனியாய் ! உன் அணி வடம் முலை முன்றில் சுணங்கு இனம் அவை மானத் துறுவன பல காணாய் . '

'maṇam kiḷar malar vārum mārutam vara , vācak kaṇam kiḷartaru cuṇṇam kal iṭaiyaṉa kāṉam attu , aṇaṅkiṉum iṉiyāy ! uṉ aṇi vaṭam mulai muṉṟil cuṇaṅku iṉam avai māṉat tuṟuvaṉa pala kāṇāy . '

Report an error

'அடி இணை பொறை கல்லா என்று கொல் , அதர் எங்கும் , இடையிடை மலர் சிந்தும் இனம் மரம் இவை காணாய் ! கொடியினொடு இள வாசக் கொம்புகள் , குயிலே ! உன் துடி புரை இடை மானத் துவள்வன இவை காணாய் ! '

'aṭi iṇai poṟai kallā eṉṟu kol , atar eṅkum , iṭaiyiṭai malar cintum iṉam maram ivai kāṇāy ! koṭiyiṉoṭu iḷa vācak kompukaḷ , kuyilē ! uṉ tuṭi purai iṭai māṉat tuvaḷvaṉa ivai kāṇāy ! '

Report an error

'வாள் புரை விழியாய் ! உன் மலர் அடி அணி மானத் தாள் புரை தளிர் வைகும் தகை ஞிமிறு இவை காணாய் ! கோள் புரை இருள் வாசக் குழல் புரை மழை காணாய் ! தோள் புரை இளம் வேயின் தொகுதிகள் இவை காணாய் !

'vāḷ purai viḻiyāy ! uṉ malar aṭi aṇi māṉat tāḷ purai taḷir vaikum takai ñimiṟu ivai kāṇāy ! kōḷ purai iruḷ vācak kuḻal purai maḻai kāṇāy ! tōḷ purai iḷam vēyiṉ tokutikaḷ ivai kāṇāy !

Report an error

'பூ நனை சினை துன்றிப் புள் இடையிடை பம்பி , நால் நிற நளிர் வல்லி கொடி நவை இல பல்கி , மான் இனம் மயில் , மாலைக் குயில் இனம் வதி கானம் , தீ நிகர் தொழில் ஆடைத் திரை பொருவன பாராய் ! '

'pū naṉai ciṉai tuṉṟip puḷ iṭaiyiṭai pampi , nāl niṟa naḷir valli koṭi navai ila palki , māṉ iṉam mayil , mālaik kuyil iṉam vati kāṉam , tī nikar toḻil āṭait tirai poruvaṉa pārāy ! '

Report an error

என்று , நல் மடவாளோடு இனிதினின் விளையாடிப் பொன் திணி திரள் தோளான் போயினன் நெறி ; போதும் சென்றது குடபால் ; அ திரு மலை இது அன்று ஓ ? என்றனன் , வினை வென்றோர் மேவு இடம் எனலோடும்

eṉṟu , nal maṭavāḷōṭu iṉitiṉiṉ viḷaiyāṭip poṉ tiṇi tiraḷ tōḷāṉ pōyiṉaṉ neṟi ; pōtum ceṉṟatu kuṭapāl ; a tiru malai itu aṉṟu ō ? eṉṟaṉaṉ , viṉai veṉṟōr mēvu iṭam eṉalōṭum

Report an error

அருத்தியன் அகம் விம்மும் அன்பினன் , 'நெடும் நாளில் திருத்திய வினை முற்றிற்று இன்று ' எனல் தெரிகின்றான் , பரத்துவன் எனும் நாமப் பரம் முனி பவம் நோயின் மருத்துவன் அனையானை வரவு எதிர்கொள வந்தான் .

aruttiyaṉ akam vimmum aṉpiṉaṉ , 'neṭum nāḷil tiruttiya viṉai muṟṟiṟṟu iṉṟu ' eṉal terikiṉṟāṉ , parattuvaṉ eṉum nāmap param muṉi pavam nōyiṉ maruttuvaṉ aṉaiyāṉai varavu etirkoḷa vantāṉ .

Report an error

குடையினன் , நிமிர் கோலன் , குண்டிகையினன் , மூரிச் சடையினன் , உரி மானின் சருமன் , நல் மரம் நாரின் உடையினன் , மயிர் நாலும் உருவினன் , உயிர் பேணும் நடையினன் , மறை நாலும் நடம் நவில்தரு நாவான் .

kuṭaiyiṉaṉ , nimir kōlaṉ , kuṇṭikaiyiṉaṉ , mūric caṭaiyiṉaṉ , uri māṉiṉ carumaṉ , nal maram nāriṉ uṭaiyiṉaṉ , mayir nālum uruviṉaṉ , uyir pēṇum naṭaiyiṉaṉ , maṟai nālum naṭam naviltaru nāvāṉ .

Report an error

செம் தழல் புரி செல்வன் , திசை முக முனி செவ்வே தந்தன உயிர் எல்லாம் தன் உயிர் என நல்கும் அந்தணன் , 'உலகு ஏழும் அமை ' எனின் , அமர ஈசன் உந்தியின் உதவாமே உதவிடு தொழில் வல்லான் .

cem taḻal puri celvaṉ , ticai muka muṉi cevvē tantaṉa uyir ellām taṉ uyir eṉa nalkum antaṇaṉ , 'ulaku ēḻum amai ' eṉiṉ , amara īcaṉ untiyiṉ utavāmē utaviṭu toḻil vallāṉ .

Report an error

அ முனி வரலோடும் , அழகனும் மலர் தூவி மும்முறை தொழுதான் ; அம் முதல்வனும் எதிர் புல்லி , 'இ முறை உருவோ நான் காண்குவது ? ' என உள்ளம் விம்மினன் , இழி கண்ணீர் விழி வழி உக நின்றான் .

a muṉi varalōṭum , aḻakaṉum malar tūvi mummuṟai toḻutāṉ ; am mutalvaṉum etir pulli , 'i muṟai uruvō nāṉ kāṇkuvatu ? ' eṉa uḷḷam vimmiṉaṉ , iḻi kaṇṇīr viḻi vaḻi uka niṉṟāṉ .

Report an error

''அகல் இடம் நெடிது ஆளும் அமைதியை , அது தீரப் புகல் இடம் எமது ஆகும் புரை இடை , இது நாளில் , தகவு இல தவ வேடம் தழுவினை வருவான் என் ? இகல் அடு சிலை வீர ! இளையவனொடும் '' என்றான் .

''akal iṭam neṭitu āḷum amaitiyai , atu tīrap pukal iṭam ematu ākum purai iṭai , itu nāḷil , takavu ila tava vēṭam taḻuviṉai varuvāṉ eṉ ? ikal aṭu cilai vīra ! iḷaiyavaṉoṭum '' eṉṟāṉ .

Report an error

உற்றுள பொருள் எல்லாம் உணர்வுற உரைசெய்தான் ; நல் தவ முனி , 'அந்தோ ! விதி தரும் நவை ' என்பான் , 'இற்றது ; செயல் உண்டோ இனி ? ' என இடர்கொண்டான் , 'பெற்றிலள் தவம் அந்தோ பெரும் நிலமகள் ' என்றான் .

uṟṟuḷa poruḷ ellām uṇarvuṟa uraiceytāṉ ; nal tava muṉi , 'antō ! viti tarum navai ' eṉpāṉ , 'iṟṟatu ; ceyal uṇṭō iṉi ? ' eṉa iṭarkoṇṭāṉ , 'peṟṟilaḷ tavam antō perum nilamakaḷ ' eṉṟāṉ .

Report an error

“ ‘துப்பு உறு துவர் வாயில் தூ மொழி இவளோடும் அப்பு உறு கடல் ஞாலம் ஆளுதி கடிது ' என்னா , ஒப்பு அறும் மகன் உன்னை , 'உயர் வனம் உற ஏகு ' என்று எப் பரிவு உயிர் உய்ந்தான் என் துணை அவன் ? '' என்றான் .

“ ‘tuppu uṟu tuvar vāyil tū moḻi ivaḷōṭum appu uṟu kaṭal ñālam āḷuti kaṭitu ' eṉṉā , oppu aṟum makaṉ uṉṉai , 'uyar vaṉam uṟa ēku ' eṉṟu ep parivu uyir uyntāṉ eṉ tuṇai avaṉ ? '' eṉṟāṉ .

Report an error

'அல்லலும் உள , இன்பம் அணுகலும் உள , அன்றோ ! நல்லவும் உள , செய்யும் நவைகளும் உள , அன்றோ ! இல்லை ஒர் பயன் நான் இன்று இடர் உறும் இதின் , ' என்னாப் புல்லினன் , உடனே கொண்டு இனிது உறை புரை புக்கான் .

'allalum uḷa , iṉpam aṇukalum uḷa , aṉṟō ! nallavum uḷa , ceyyum navaikaḷum uḷa , aṉṟō ! illai or payaṉ nāṉ iṉṟu iṭar uṟum itiṉ , ' eṉṉāp pulliṉaṉ , uṭaṉē koṇṭu iṉitu uṟai purai pukkāṉ .

Report an error

புக்கு , உறை இடம் நல்கிப் பூசனை முறை பேணித் தக்கன கனி காயும் தந்து , உரை தரும் அன்பால் தொக்க நல் முறை கூறித் தூயவன் உயிர்போலும் மக்களின் அருள் உற்றான் ; மைந்தரும் மகிழ்வுற்றார் .

pukku , uṟai iṭam nalkip pūcaṉai muṟai pēṇit takkaṉa kaṉi kāyum tantu , urai tarum aṉpāl tokka nal muṟai kūṟit tūyavaṉ uyirpōlum makkaḷiṉ aruḷ uṟṟāṉ ; maintarum makiḻvuṟṟār .

Report an error

வைகினர் ; கதிர் நாறும் அளவையின் மறையோனும் , 'உய்குவென் இவனொடு யான் உடன் உறைதலின் ' என்பான் . செய்தனன் இனிது எல்லாம் , செல்வனை முகம் முன்னாக் 'கொய் குலம் மலர் மார்ப ! கூறுவது உளது ' என்றான் .

vaikiṉar ; katir nāṟum aḷavaiyiṉ maṟaiyōṉum , 'uykuveṉ ivaṉoṭu yāṉ uṭaṉ uṟaitaliṉ ' eṉpāṉ . ceytaṉaṉ iṉitu ellām , celvaṉai mukam muṉṉāk 'koy kulam malar mārpa ! kūṟuvatu uḷatu ' eṉṟāṉ .

Report an error

'நிறையும் நீர் மலர் நெடும் கனி கிழங்கு காய் கிடந்த ; குறையும் தீயவை ; தூயவை குறைவு இல ; எம்மோடு உறையும் இவ் வழி , ஒருங்கினில் உயர் தவம் முயல்வார்க்கு இறையும் ஈது அலாது , இனியது ஒர் இடம் அரிது ; இன்னும் .

'niṟaiyum nīr malar neṭum kaṉi kiḻaṅku kāy kiṭanta ; kuṟaiyum tīyavai ; tūyavai kuṟaivu ila ; emmōṭu uṟaiyum iv vaḻi , oruṅkiṉil uyar tavam muyalvārkku iṟaiyum ītu alātu , iṉiyatu or iṭam aritu ; iṉṉum .

Report an error

''கங்கையாளொடு கரியவள் நாமகள் கலந்த சங்கம் ஆதலின் பிரியலென் ; தாமரைச் செம் கண் அம் கண் நாயக ! அயனுக்கும் அரும் பெறல் தீர்த்தம் எங்கள் போலியர் தரத்தது அன்று ; இருத்தி ஈண்டு '' என்றான் .

''kaṅkaiyāḷoṭu kariyavaḷ nāmakaḷ kalanta caṅkam ātaliṉ piriyaleṉ ; tāmaraic cem kaṇ am kaṇ nāyaka ! ayaṉukkum arum peṟal tīrttam eṅkaḷ pōliyar tarattatu aṉṟu ; irutti īṇṭu '' eṉṟāṉ .

Report an error

பூண்ட மாதவன் அ மொழி விரும்பினன் புகல , 'நீண்டது அன்று இது , நிறை புனல் நாட்டுக்கு நடு ஆம் ; மாண்ட சிந்தைய ! இவ் வழி வைகுவென் என்றால் , ஈண்ட யாவரும் நெருங்குவர் ' என்றனன் , இராமன் .

pūṇṭa mātavaṉ a moḻi virumpiṉaṉ pukala , 'nīṇṭatu aṉṟu itu , niṟai puṉal nāṭṭukku naṭu ām ; māṇṭa cintaiya ! iv vaḻi vaikuveṉ eṉṟāl , īṇṭa yāvarum neruṅkuvar ' eṉṟaṉaṉ , irāmaṉ .

Report an error

'ஆவது உள்ளதே ! ஐய ! கேள் , ஐயிரண்டு அமைந்த காவதப் பொழிற்கு அ புறம் கழிந்தபின் காண்டி , மேவு காதலின் வைகுதி , விண்ணினும் இனிதாத் தேவர் கைதொழும் சித்திரகூடம் என்று உளது ஆல் . '

'āvatu uḷḷatē ! aiya ! kēḷ , aiyiraṇṭu amainta kāvatap poḻiṟku a puṟam kaḻintapiṉ kāṇṭi , mēvu kātaliṉ vaikuti , viṇṇiṉum iṉitāt tēvar kaitoḻum cittirakūṭam eṉṟu uḷatu āl . '

Report an error

என்று காதலின் ஏயினன் ; அடி தொழுது , ஏகிக் கொன்றை அம் குழல் கோவலர் முல்லையும் குறுகிச் சென்று , செம் கதிர் செல்வனும் நடு உறச் சிறு மான் கன்று நின்று உகள் கரை உடை காளிந்தி கண்டார் .

eṉṟu kātaliṉ ēyiṉaṉ ; aṭi toḻutu , ēkik koṉṟai am kuḻal kōvalar mullaiyum kuṟukic ceṉṟu , cem katir celvaṉum naṭu uṟac ciṟu māṉ kaṉṟu niṉṟu ukaḷ karai uṭai kāḷinti kaṇṭār .

Report an error

ஆறு கண்டனர் , அகம் மகிழ்ந்து இறைஞ்சினர் , அறிந்து , நீறு தோய் மணி மேனியர் , நெடும் புனல் படிந்தார் , ஊறும் மென் கனி கிழங்கினோடு உண்டு நீர் உண்டார் ; 'ஏறி ஏகுவது எங்ஙனம் ? ' என்றலும் இளையோன் .

āṟu kaṇṭaṉar , akam makiḻntu iṟaiñciṉar , aṟintu , nīṟu tōy maṇi mēṉiyar , neṭum puṉal paṭintār , ūṟum meṉ kaṉi kiḻaṅkiṉōṭu uṇṭu nīr uṇṭār ; 'ēṟi ēkuvatu eṅṅaṉam ? ' eṉṟalum iḷaiyōṉ .

Report an error

வாங்கு வெம் கழை துணித்தனன் , மாணையின் கொடியால் ஒங்கு தெப்பம் ஒன்று அமைத்து , அதின் , உம்பரின் உலம்போல் வீங்கு தோள் அண்ணல் தேவியொடு இனிது வீற்றிருப்ப , நீங்கினன் அந்த நெடும் நதி இரு கையால் நீந்தி .

vāṅku vem kaḻai tuṇittaṉaṉ , māṇaiyiṉ koṭiyāl oṅku teppam oṉṟu amaittu , atiṉ , umpariṉ ulampōl vīṅku tōḷ aṇṇal tēviyoṭu iṉitu vīṟṟiruppa , nīṅkiṉaṉ anta neṭum nati iru kaiyāl nīnti .

Report an error

ஆலை பாய் வயல் அயோத்தியர் ஆண்டகைக்கு இளையான் மாலை மால் வரைத் தோள் எனும்மந்தரம் திரியக் காலை வேலையின் உற்றது , கழிந்த நீர் ; கடிதின் மேலை வேலையில் பாய்ந்தது ; மீண்ட நீர் வெள்ளம் .

ālai pāy vayal ayōttiyar āṇṭakaikku iḷaiyāṉ mālai māl varait tōḷ eṉummantaram tiriyak kālai vēlaiyiṉ uṟṟatu , kaḻinta nīr ; kaṭitiṉ mēlai vēlaiyil pāyntatu ; mīṇṭa nīr veḷḷam .

Report an error

அனையர் அப் புனல் ஏறினர் , அ கரை அணைந்தார் , புனையும் வற்கலைப் பொற்பினர் , நெடும் நெறி போனார் , சினையும் மூலமும் முகடும் வெந்து இரு நிலம் தீய்ந்து நினையும் நெஞ்சமும் சுடுவதோர் நெடுஞ்சுரம் நேர்ந்தார் .

aṉaiyar ap puṉal ēṟiṉar , a karai aṇaintār , puṉaiyum vaṟkalaip poṟpiṉar , neṭum neṟi pōṉār , ciṉaiyum mūlamum mukaṭum ventu iru nilam tīyntu niṉaiyum neñcamum cuṭuvatōr neṭuñcuram nērntār .

Report an error

'நீங்கல் ஆற்றலள் சனகி ' என்று அண்ணலும் நினைந்தான் , ஓங்கு வெய்யவன் உடுபதி எனக் கதிர் உகுத்தான் ; தாங்கு வெம் கடந்து உலவைகள் தழை கொண்டு தழைத்த ; பாங்கு வெம் கனல் பங்கய வனங்களாய்ப் பரந்த !

'nīṅkal āṟṟalaḷ caṉaki ' eṉṟu aṇṇalum niṉaintāṉ , ōṅku veyyavaṉ uṭupati eṉak katir ukuttāṉ ; tāṅku vem kaṭantu ulavaikaḷ taḻai koṇṭu taḻaitta ; pāṅku vem kaṉal paṅkaya vaṉaṅkaḷāyp paranta !

Report an error

வறுத்து வித்திய அனையன வல் அயில் பரல்கள் , பறித்து வித்திய மலர் எனக் குளிர்ந்தன பசைந்த ; இறுத்து எரிந்தன வல்லிகள் இளம் தளிர் ஈன்ற ; கறுத்த வாள் அரவு எயிறு இன் ஊடு அமுது உகக் களித்த ,

vaṟuttu vittiya aṉaiyaṉa val ayil paralkaḷ , paṟittu vittiya malar eṉak kuḷirntaṉa pacainta ; iṟuttu erintaṉa vallikaḷ iḷam taḷir īṉṟa ; kaṟutta vāḷ aravu eyiṟu iṉ ūṭu amutu ukak kaḷitta ,

Report an error

குழுமி மேகங்கள் குமுறின குளிர் துளி கொணர்ந்த ; முழு வில் வேடரும் முனிவரின் முனிகிலர் ; உயிரைத் தழுவி நின்றன பசி இல பகை இல தணிந்த ; உழுவையின் முலை மான் இளங் கன்றுகள் உண்ட .

kuḻumi mēkaṅkaḷ kumuṟiṉa kuḷir tuḷi koṇarnta ; muḻu vil vēṭarum muṉivariṉ muṉikilar ; uyirait taḻuvi niṉṟaṉa paci ila pakai ila taṇinta ; uḻuvaiyiṉ mulai māṉ iḷaṅ kaṉṟukaḷ uṇṭa .

Report an error

கல் அளைக் கிடந்து அகடு வெந்து அயர்கின்ற கதழ் பாம்பு அல்லல் உற்று இல , அலை புனல் கிடந்தன அனைய ; வல்லை உற்ற வேய் புற்றொடும் எரிவன , மணிவாழ் புல் எயிற்று இளம் கன்னியர் தோள் எனப் பொலிந்த .

kal aḷaik kiṭantu akaṭu ventu ayarkiṉṟa kataḻ pāmpu allal uṟṟu ila , alai puṉal kiṭantaṉa aṉaiya ; vallai uṟṟa vēy puṟṟoṭum erivaṉa , maṇivāḻ pul eyiṟṟu iḷam kaṉṉiyar tōḷ eṉap polinta .

Report an error

படர்ந்து எழுந்த புல் , பசும் நிறம் கம்பளம் பரப்பிக் கிடந்த போன்றன ; கேகயம் , தோகைகள் கிளர , மடந்தைமார் என நாடகம் வயின் தொறும் நவின்ற ; தொடர்ந்து பாணரில் பாங்கு இசை முரன்றன தும்பி .

paṭarntu eḻunta pul , pacum niṟam kampaḷam parappik kiṭanta pōṉṟaṉa ; kēkayam , tōkaikaḷ kiḷara , maṭantaimār eṉa nāṭakam vayiṉ toṟum naviṉṟa ; toṭarntu pāṇaril pāṅku icai muraṉṟaṉa tumpi .

Report an error

காலம் இன்றியும் கனிந்தன கனி ; நெடுங் கந்தம் மூலம் இன்றியும் முகிழ்த்தன ; நிலன் உற முழுதும் கோல மங்கையர் ஒத்தன கொம்பர்கள் ; இம்பர்ச் சீலம் அன்றியும் செய் தவம் வேறும் ஒன்று உளது ஓ ?

kālam iṉṟiyum kaṉintaṉa kaṉi ; neṭuṅ kantam mūlam iṉṟiyum mukiḻttaṉa ; nilaṉ uṟa muḻutum kōla maṅkaiyar ottaṉa komparkaḷ ; imparc cīlam aṉṟiyum cey tavam vēṟum oṉṟu uḷatu ō ?

Report an error

எயினர் தங்கு இடம் இருடிகள் இருப்பிடம் ஏய்ந்த ; வயின் வயின் தொறும் மணி நிறக் கோபங்கள் மலர்ந்த ; பயில் மரம் தொறும் பிரிந்தன பேடையைப் பயிரும் குயில் இரங்கின ; குருந்தம் நின்று அரும்பின முருந்தம் .

eyiṉar taṅku iṭam iruṭikaḷ iruppiṭam ēynta ; vayiṉ vayiṉ toṟum maṇi niṟak kōpaṅkaḷ malarnta ; payil maram toṟum pirintaṉa pēṭaiyaip payirum kuyil iraṅkiṉa ; kuruntam niṉṟu arumpiṉa muruntam .

Report an error

பந்தம் ஞாட்பு உறு பாசறை பொருள் வயின் பருவம் தந்த கேள்வரை உயிர் உறத் தழுவினர் பிரிந்த கந்த ஓதியர் சிந்தையில் கொதித்தது , அக் கழலோர் வந்த போது அவர் மனம் எனக் குளிர்ந்தது அவ் வனமே .

pantam ñāṭpu uṟu pācaṟai poruḷ vayiṉ paruvam tanta kēḷvarai uyir uṟat taḻuviṉar pirinta kanta ōtiyar cintaiyil kotittatu , ak kaḻalōr vanta pōtu avar maṉam eṉak kuḷirntatu av vaṉamē .

Report an error

வெளிறு நீங்கிய பாலையை மெல் எனப் போனார் , ஒளிறு வான் மதிக் குழவி தன் சூல் வயிற்று உதைப்பப் பிளிறும் மேகத்தைப் பிடியெனப் பெரும் பனைத் தட கை களிறு நீட்டும் அச் சித்திரகூடத்தைக் கண்டார் .

veḷiṟu nīṅkiya pālaiyai mel eṉap pōṉār , oḷiṟu vāṉ matik kuḻavi taṉ cūl vayiṟṟu utaippap piḷiṟum mēkattaip piṭiyeṉap perum paṉait taṭa kai kaḷiṟu nīṭṭum ac cittirakūṭattaik kaṇṭār .

Report an error

Illustration: Verse & Place (Project-owned).