Skip to content

அயோத்தியா காண்டம் — ஆறு செல் படலம் · அயோத்தியா காண்டம் — ஆறு செல் படலம்

Ayodhya Kandam — āṟu cel paṭalam

ayōttiyā kāṇṭam — āṟu cel paṭalam

The original Tamil verses of Kambar’s Ramayanam.

59 versesTamil with transliteration

A spreading tree, recalling the forest journeys in Kambar’s Ramayanam.

வரன்முறை தெரிந்து உணர் மறையின் மா தவம் அத்து அரு மறை முனிவனும் , ஆண்டையான் என , விரைவின் வந்து ஈண்டினர் ; விரகின் எய்தினர் ; பரதனை வணங்கினர் ; பரியும் நெஞ்சினர் .

varaṉmuṟai terintu uṇar maṟaiyiṉ mā tavam attu aru maṟai muṉivaṉum , āṇṭaiyāṉ eṉa , viraiviṉ vantu īṇṭiṉar ; virakiṉ eytiṉar ; parataṉai vaṇaṅkiṉar ; pariyum neñciṉar .

Report an error

மந்திரக் கிழவரும் , நகர மாந்தரும் , தந்திரத் தலைவரும் , தரணி பாலரும் , அந்தர முனிவரோடு அறிஞர் யாவரும் , சுந்தரக் குரிசிலை மரபில் சுற்றினார் .

mantirak kiḻavarum , nakara māntarum , tantirat talaivarum , taraṇi pālarum , antara muṉivarōṭu aṟiñar yāvarum , cuntarak kuricilai marapil cuṟṟiṉār .

Report an error

சுற்றினர் இருந்துழிச் சுமந்திரப் பெயர்ப் பொன் தடந் தேர்வலான் , புலமை உள்ளத்தான் , கொற்றவற்கு உறு பொருள் குறித்த கொள்கையான் முற்றுணர் முனிவனை முகத்து நோக்கினான் .

cuṟṟiṉar iruntuḻic cumantirap peyarp poṉ taṭan tērvalāṉ , pulamai uḷḷattāṉ , koṟṟavaṟku uṟu poruḷ kuṟitta koḷkaiyāṉ muṟṟuṇar muṉivaṉai mukattu nōkkiṉāṉ .

Report an error

நோக்கினால் சுமந்திரன் நுவலல் உற்றதை , வாக்கினால் அன்றியே உணர்ந்த மாதவன் , 'காக்குதி உலகு ! நின் கடன் அது ஆம் ' எனக் கோக் குமரனுக்கு அது தெரியக் கூறுவான் .

nōkkiṉāl cumantiraṉ nuvalal uṟṟatai , vākkiṉāl aṉṟiyē uṇarnta mātavaṉ , 'kākkuti ulaku ! niṉ kaṭaṉ atu ām ' eṉak kōk kumaraṉukku atu teriyak kūṟuvāṉ .

Report an error

'வேதியர் , அருந்தவர் , விருத்தர் , வேந்தர்கள் , ஆதியர் நின் வயின் அடைந்த காரியம் , நீதியும் தருமமும் நிறுவ ; நீ இது , கோது அறு குணத்தினாய் ! மனத்துள் கோடியால் . '

'vētiyar , aruntavar , viruttar , vēntarkaḷ , ātiyar niṉ vayiṉ aṭainta kāriyam , nītiyum tarumamum niṟuva ; nī itu , kōtu aṟu kuṇattiṉāy ! maṉattuḷ kōṭiyāl . '

Report an error

தருமம் என்று ஒரு பொருள் தந்து நாட்டுதல் அருமை என்பது பெரிது அறிதி ; ஐய ! நீ ; இருமையும் தருவதற்கு இயைவது ; ஈண்டு இது , தெருள் மனத்தார் செயும் செயல் இது ஆகுமால் .

tarumam eṉṟu oru poruḷ tantu nāṭṭutal arumai eṉpatu peritu aṟiti ; aiya ! nī ; irumaiyum taruvataṟku iyaivatu ; īṇṭu itu , teruḷ maṉattār ceyum ceyal itu ākumāl .

Report an error

'வள் உறு வயிர வாள் அரசு இல் வையகம் நள் உறு கதிர் இலாப் பகலும் , நாள் ஒடு உம் தெள் உறு மதி இலா இரவும் , தேர்தரின் உள் உறை உயிர் இலா உடலும் ஒக்குமே .

'vaḷ uṟu vayira vāḷ aracu il vaiyakam naḷ uṟu katir ilāp pakalum , nāḷ oṭu um teḷ uṟu mati ilā iravum , tērtariṉ uḷ uṟai uyir ilā uṭalum okkumē .

Report an error

தேவர் தம் உலகினும் , தீமை செய்து உழல் மா வலி அவுணர்கள் வைகும் நாட்டினும் , ஏ எவை உலகம் என்று இசைக்கும் அன்னவை காவல் செய் தலைவரை இன்மை கண்டிலம் .

tēvar tam ulakiṉum , tīmai ceytu uḻal mā vali avuṇarkaḷ vaikum nāṭṭiṉum , ē evai ulakam eṉṟu icaikkum aṉṉavai kāval cey talaivarai iṉmai kaṇṭilam .

Report an error

முறை தெரிந்து ஒருவகை முடிய நோக்குறின் , மறையவன் வகுத்தன , மண்ணில் , வான் இடை , நிறை பெருந்தன்மையின் நிற்ப , செல்வன , இறைகளை இல்லன யாவை ? காண்கிலம் .

muṟai terintu oruvakai muṭiya nōkkuṟiṉ , maṟaiyavaṉ vakuttaṉa , maṇṇil , vāṉ iṭai , niṟai peruntaṉmaiyiṉ niṟpa , celvaṉa , iṟaikaḷai illaṉa yāvai ? kāṇkilam .

Report an error

பூத்த நாள் மலர் அயன் ஆதிப் புண்ணியர் ஏத்து வான் புகழினர் , இன்றுகாறும் கூக் காத்தனர் ; பின் , ஒரு களைகண் இன்மையால் நீத்த நீர் உடைகல நீரது ஆகுமால் .

pūtta nāḷ malar ayaṉ ātip puṇṇiyar ēttu vāṉ pukaḻiṉar , iṉṟukāṟum kūk kāttaṉar ; piṉ , oru kaḷaikaṇ iṉmaiyāl nītta nīr uṭaikala nīratu ākumāl .

Report an error

'உந்தையோ இறந்தனன் ; உம்முன் நீத்தனன் ; வந்ததும் அன்னை தன் வரத்தில் , மைந்த ! நீ , அந்தம் இல் பேர் அரசு அளித்தி ; அன்னது சிந்தனை எமக்கு ' எனத் தெரிந்து கூறினான் .

'untaiyō iṟantaṉaṉ ; ummuṉ nīttaṉaṉ ; vantatum aṉṉai taṉ varattil , mainta ! nī , antam il pēr aracu aḷitti ; aṉṉatu cintaṉai emakku ' eṉat terintu kūṟiṉāṉ .

Report an error

'தஞ்சம் இவ் உலகம் , நீ தாங்குவாய் ' எனச் செம் செவ்வே முனிவரன் செப்பக் கேட்டலும் , 'நஞ்சினை நுகர் ' என , நடுங்குவாரினும் அஞ்சினன் அயர்ந்தனன் அருவிக் கண்ணின் ஆன் .

'tañcam iv ulakam , nī tāṅkuvāy ' eṉac cem cevvē muṉivaraṉ ceppak kēṭṭalum , 'nañciṉai nukar ' eṉa , naṭuṅkuvāriṉum añciṉaṉ ayarntaṉaṉ aruvik kaṇṇiṉ āṉ .

Report an error

நடுங்கினன் ; நாத் தடுமாறி , நாட்டமும் இடுங்கினன் ; மகளிரின் இரங்கும் நெஞ்சினன் ; ஒடுங்கிய உயிரினன் ; உணர்வு கைதரத் தொடங்கினன் , அரச அவைக்கு உள்ளம் சொல்லுவான் .

naṭuṅkiṉaṉ ; nāt taṭumāṟi , nāṭṭamum iṭuṅkiṉaṉ ; makaḷiriṉ iraṅkum neñciṉaṉ ; oṭuṅkiya uyiriṉaṉ ; uṇarvu kaitarat toṭaṅkiṉaṉ , araca avaikku uḷḷam colluvāṉ .

Report an error

மூன்று உலகினுக்கும் ஓர் முதல்வன் ஆய் முதல் தோன்றினன் இருக்க , யான் மகுடம் சூடுதல் , சான்றவர் உரைசெயத் தருமம் ஆதலால் , ஈன்றவள் செய்கையின் இழுக்கு உண்டாகும் ஓ ?

mūṉṟu ulakiṉukkum ōr mutalvaṉ āy mutal tōṉṟiṉaṉ irukka , yāṉ makuṭam cūṭutal , cāṉṟavar uraiceyat tarumam ātalāl , īṉṟavaḷ ceykaiyiṉ iḻukku uṇṭākum ō ?

Report an error

'அடைவு அருங் கொடுமை என் அன்னை செய்கையை நடை வரும் தன்மை நீர் , 'நன்று இது ' என்றிர் ஏல் , இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து இது கடை வரும் தீ நெறிக் கலியின் ஆட்சியோ ? '

'aṭaivu aruṅ koṭumai eṉ aṉṉai ceykaiyai naṭai varum taṉmai nīr , 'naṉṟu itu ' eṉṟir ēl , iṭai varum kālam īṇṭu iraṇṭum nīttu itu kaṭai varum tī neṟik kaliyiṉ āṭciyō ? '

Report an error

வேந்து அவை இருந்த நீர் , விமலன் உந்தியில் பூத்தவன் முதலிய புவியுள் தோன்றினார் , மூத்தவர் இருக்கவே , முறைமையான் நிலம் காத்தவர் உளர் எனின் காட்டிக் காண்டிர் ஆல் .

vēntu avai irunta nīr , vimalaṉ untiyil pūttavaṉ mutaliya puviyuḷ tōṉṟiṉār , mūttavar irukkavē , muṟaimaiyāṉ nilam kāttavar uḷar eṉiṉ kāṭṭik kāṇṭir āl .

Report an error

நல் நெறி என்னினும் , நான் இந் நானில மன் உயிர்ப் பொறை சுமந்து இருந்து வாழ்கிலேன் ; அன்னவன் தனை கொணர்ந்து , அலங்கல் மா முடி தொல் நெறி முறைமையின் சூட்டக் காண்டிர் ஆல் .

nal neṟi eṉṉiṉum , nāṉ in nāṉila maṉ uyirp poṟai cumantu iruntu vāḻkilēṉ ; aṉṉavaṉ taṉai koṇarntu , alaṅkal mā muṭi tol neṟi muṟaimaiyiṉ cūṭṭak kāṇṭir āl .

Report an error

''அன்று எனின் , அவனொடும் அரிய கான் இடை நின்று , இனிது இரும் தவம் நெறியின் ஆற்றுவென் ; ஒன்று இனி உரைக்கில் என் உயிரை நீக்குவென் '' என்றனன் ; என்றபோது , இருந்த பேர் அவை .

''aṉṟu eṉiṉ , avaṉoṭum ariya kāṉ iṭai niṉṟu , iṉitu irum tavam neṟiyiṉ āṟṟuveṉ ; oṉṟu iṉi uraikkil eṉ uyirai nīkkuveṉ '' eṉṟaṉaṉ ; eṉṟapōtu , irunta pēr avai .

Report an error

ஆன்ற பேர் அரசனும் இருப்ப , ஐயனும் ஏன்றனன் மணி முடி ஏந்த , ஏந்தல் நீ , வான் தொடர் திருவினை மறுத்தி ; மன் இளந் தோன்றல்கள் யார் உளர் நின்னின் தோன்றினார் .

āṉṟa pēr aracaṉum iruppa , aiyaṉum ēṉṟaṉaṉ maṇi muṭi ēnta , ēntal nī , vāṉ toṭar tiruviṉai maṟutti ; maṉ iḷan tōṉṟalkaḷ yār uḷar niṉṉiṉ tōṉṟiṉār .

Report an error

'ஆழியை உருட்டியும் , அறங்கள் போற்றியும் , வேள்வியை இயற்றியும் , வளர்க்க வேண்டும் ஓ ? ஏழின் ஒடு ஏழ் எனும் உலகும் எஞ்சினும் வாழிய நின் புகழ் ! ' என்று வாழ்த்தினார் .

'āḻiyai uruṭṭiyum , aṟaṅkaḷ pōṟṟiyum , vēḷviyai iyaṟṟiyum , vaḷarkka vēṇṭum ō ? ēḻiṉ oṭu ēḻ eṉum ulakum eñciṉum vāḻiya niṉ pukaḻ ! ' eṉṟu vāḻttiṉār .

Report an error

குரிசிலும் தம்பியைக் கூவிக் 'கொண்டலின் முரசு அறைந்து , ''இ நகர் முறைமை வேந்தனைத் தருதும் ஈண்டு '' என்பது சாற்றித் தானையை , விரைவினில் எழுக ! என விளம்புவாய் ' என்றான் .

kuricilum tampiyaik kūvik 'koṇṭaliṉ muracu aṟaintu , ''i nakar muṟaimai vēntaṉait tarutum īṇṭu '' eṉpatu cāṟṟit tāṉaiyai , viraiviṉil eḻuka ! eṉa viḷampuvāy ' eṉṟāṉ .

Report an error

நல்லவன் உரைசெய , நம்பி கூறலும் அல்லலில் அழுங்கிய அன்பின் மா நகர் , ஒல் என ஒலித்தது ஆல் ; உயிர் இல் யாக்கையைச் சொல் எனும் அமிழ்தினால் துளித்தது என்னவே .

nallavaṉ uraiceya , nampi kūṟalum allalil aḻuṅkiya aṉpiṉ mā nakar , ol eṉa olittatu āl ; uyir il yākkaiyaic col eṉum amiḻtiṉāl tuḷittatu eṉṉavē .

Report an error

அவித்த ஐம்புலத்தவர் ஆதியாய் உள புவி தலை உயிர் எலாம் , ''இராமன் பொன் முடி கவிக்கும் '' என்று உரைக்கவே களித்தலால் , அது செவி புலம் நுகர்வது ஓர் தெய்வத் தேன் கொல் ஆம் .

avitta aimpulattavar ātiyāy uḷa puvi talai uyir elām , ''irāmaṉ poṉ muṭi kavikkum '' eṉṟu uraikkavē kaḷittalāl , atu cevi pulam nukarvatu ōr teyvat tēṉ kol ām .

Report an error

படு முரசு அறைந்தனர் , ''பரதன் தம்முனைக் கொடி நகர்த் தரும் ; அவன் கொணர சேனையும் முடுகுக '' என்ற சொல் மூரி மா நகர் , உடு பதி வேலையின் உதயம் போன்றதே .

paṭu muracu aṟaintaṉar , ''parataṉ tammuṉaik koṭi nakart tarum ; avaṉ koṇara cēṉaiyum muṭukuka '' eṉṟa col mūri mā nakar , uṭu pati vēlaiyiṉ utayam pōṉṟatē .

Report an error

எழுந்தது பெரும்படை , ஏழு வேலையின் மொழிந்த பேர் ஊழியில் முழங்கி ; முந்து எழ அழிந்தது கேகயன் மடந்தை ஆசை ; போய்க் கழிந்தது துயர் , நெடும் காதல் தூண்டவே .

eḻuntatu perumpaṭai , ēḻu vēlaiyiṉ moḻinta pēr ūḻiyil muḻaṅki ; muntu eḻa aḻintatu kēkayaṉ maṭantai ācai ; pōyk kaḻintatu tuyar , neṭum kātal tūṇṭavē .

Report an error

பண்ணின புரவி தேர் பகடு பண்டியும் மண்ணினை மறைத்தன ; வளர்ந்த மா கொடி விண்ணினை மறைத்தன ; விரிந்த மா துகள் கண்ணினை மறைத்தன , கமலத் தோனை ஏ .

paṇṇiṉa puravi tēr pakaṭu paṇṭiyum maṇṇiṉai maṟaittaṉa ; vaḷarnta mā koṭi viṇṇiṉai maṟaittaṉa ; virinta mā tukaḷ kaṇṇiṉai maṟaittaṉa , kamalat tōṉai ē .

Report an error

ஈசன் இவ் உலகினை அழிக்கும் நாள் எழும் ஓசையின் நிமிர்ந்து உளது , ஒல்லென் பேர் ஒலி ; காசையில் கரியவற் காண மூண்டு எழும் ஆசையின் நிமிர்ந்தது , அவ் அனிக ராசியே .

īcaṉ iv ulakiṉai aḻikkum nāḷ eḻum ōcaiyiṉ nimirntu uḷatu , olleṉ pēr oli ; kācaiyil kariyavaṟ kāṇa mūṇṭu eḻum ācaiyiṉ nimirntatu , av aṉika rāciyē .

Report an error

படியொடு திரு நகர் துறந்து , பல் மரம் செடி ஒடு தொடர் வனம் நோக்கி , சீதையாம் கொடி ஒடு நடந்த அக் கொண்டல் ஆம் எனப் பிடியொடு நடந்தன பெருங்கை வேழமே .

paṭiyoṭu tiru nakar tuṟantu , pal maram ceṭi oṭu toṭar vaṉam nōkki , cītaiyām koṭi oṭu naṭanta ak koṇṭal ām eṉap piṭiyoṭu naṭantaṉa peruṅkai vēḻamē .

Report an error

சேற்று இள மரை மலர் சிறந்த ஆம் எனக் கால் தளம் பொலிதரு கன்னிமாரொடும் ஏற்று , இளம் பிடி குலம் , இகலில் மெல் நடை தோற்று , இள மகளிரைச் சுமப்ப போன்றவே .

cēṟṟu iḷa marai malar ciṟanta ām eṉak kāl taḷam politaru kaṉṉimāroṭum ēṟṟu , iḷam piṭi kulam , ikalil mel naṭai tōṟṟu , iḷa makaḷiraic cumappa pōṉṟavē .

Report an error

வேதனை வெயில் கதிர் தணிக்க , மென் மழைச் சீத நீரொடு நெடும் கொடி உம் சென்றன ; கோதை வெம் சிலையவன் கோலம் காண்கிலா மாதரின் நுடங்குவ , வரம்பு இல் கோடியே .

vētaṉai veyil katir taṇikka , meṉ maḻaic cīta nīroṭu neṭum koṭi um ceṉṟaṉa ; kōtai vem cilaiyavaṉ kōlam kāṇkilā mātariṉ nuṭaṅkuva , varampu il kōṭiyē .

Report an error

வெண் மதி மீச் செல மேகம் ஊர்ந்து என அண்ணல் வெம் கதிரவன் , அளவு இல் மூர்த்தி ஆய் , மண் இடை இழிந்து , ஒரு வழி கொண்டால் என , எண் அரு மன்னவர் களிற்றின் ஏகினார் .

veṇ mati mīc cela mēkam ūrntu eṉa aṇṇal vem katiravaṉ , aḷavu il mūrtti āy , maṇ iṭai iḻintu , oru vaḻi koṇṭāl eṉa , eṇ aru maṉṉavar kaḷiṟṟiṉ ēkiṉār .

Report an error

தேர் மிசைச் சென்றது ஒர் சிந்து ; செம்முகக் கார் மிசை கழிந்தது ஆர்கலி ; ஒர் கார்க் கடல் ஏர் மிசை இவுளிமேல் ஏகிற்று ; எங்கணும் பார் மிசை படர்ந்தது , பதாதிப் பௌவமே .

tēr micaic ceṉṟatu or cintu ; cemmukak kār micai kaḻintatu ārkali ; or kārk kaṭal ēr micai ivuḷimēl ēkiṟṟu ; eṅkaṇum pār micai paṭarntatu , patātip pauvamē .

Report an error

தாரையும் , சங்கமும் , தாளம் , கொம்பொடு , வார் விசி பம்பையும் , துடியும் , மற்றவும் , பேரியும் இயம்பல சென்ற பேதைமைப் பூரியர் குழாம் அத்து இடை அறிஞர் போலவே .

tāraiyum , caṅkamum , tāḷam , kompoṭu , vār vici pampaiyum , tuṭiyum , maṟṟavum , pēriyum iyampala ceṉṟa pētaimaip pūriyar kuḻām attu iṭai aṟiñar pōlavē .

Report an error

தா அரு நாண் முதல் அணி அலால் , தகை மேவரு கலங்களை வெறுத்த மேனியர் , தேவரும் மருள் கொளத் தெரியும் காட்சியர் , பூ உதிர் கொம்பு என மகளிர் போயினார் .

tā aru nāṇ mutal aṇi alāl , takai mēvaru kalaṅkaḷai veṟutta mēṉiyar , tēvarum maruḷ koḷat teriyum kāṭciyar , pū utir kompu eṉa makaḷir pōyiṉār .

Report an error

அதிர் கடல் வையகம் அனைத்தும் காத்தவன் விதி வரும் தனிக் குடை மீது இலாப் படை , பொதி பல கவிகை மீன் பூத்தது ஆகிலும் கதிர் மதி நீங்கிய கங்குல் போன்றதே

atir kaṭal vaiyakam aṉaittum kāttavaṉ viti varum taṉik kuṭai mītu ilāp paṭai , poti pala kavikai mīṉ pūttatu ākilum katir mati nīṅkiya kaṅkul pōṉṟatē

Report an error

செல்லிய செலவினால் , 'சிறிய திக்கு ' எனச் சொல்லிய சேனையைச் சுமந்தது ஏ எனில் , ஒல்லொலி வேலை நீர் உடுத்த பாரை , 'ஓர் மெல்லியல் ' என்றவர் மெய்யரே கொலாம் ?

celliya celaviṉāl , 'ciṟiya tikku ' eṉac colliya cēṉaiyaic cumantatu ē eṉil , olloli vēlai nīr uṭutta pārai , 'ōr melliyal ' eṉṟavar meyyarē kolām ?

Report an error

தங்கு செம் சாந்து அகில் கலவை சார்கில , குங்குமம் கோட்டில , கோவை முத்து இல , பொங்கு இளம் கொங்கைகள் புதுமை வேறு இல , தெங்கு இளம் நீர் எனத் தெரிந்த காட்சிய .

taṅku cem cāntu akil kalavai cārkila , kuṅkumam kōṭṭila , kōvai muttu ila , poṅku iḷam koṅkaikaḷ putumai vēṟu ila , teṅku iḷam nīr eṉat terinta kāṭciya .

Report an error

இன் துணையவர் முலை எழுது சாந்தினும் மன்றல் அம் தாரினும் மறைந்து இலாமை ஆல் , துன்று இளங்கொடி முதல் தூறு நீங்கிய குன்று எனப் பொலிந்தன குவவுத் தோள்களே .

iṉ tuṇaiyavar mulai eḻutu cāntiṉum maṉṟal am tāriṉum maṟaintu ilāmai āl , tuṉṟu iḷaṅkoṭi mutal tūṟu nīṅkiya kuṉṟu eṉap polintaṉa kuvavut tōḷkaḷē .

Report an error

நறை அறு கோதையர் நாள் செய் கோலம் அத்து இன் துறை அற , அஞ்சனம் துறந்த நாட்டங்கள் குறை அற நிகர்த்தன கொற்றம் முற்றுவான் , கறை அறக் கழுவிய கால வேலையே .

naṟai aṟu kōtaiyar nāḷ cey kōlam attu iṉ tuṟai aṟa , añcaṉam tuṟanta nāṭṭaṅkaḷ kuṟai aṟa nikarttaṉa koṟṟam muṟṟuvāṉ , kaṟai aṟak kaḻuviya kāla vēlaiyē .

Report an error

விரி மணி மேகலை விரவி ஆர்க்கில தெரிவையர் அல்குல் , தார் ஒலி இல் தேர் என ; பரிபுரம் ஆர்க்கில பவளச் சீறடி , அரி இனம் ஆர்க்கிலாக் கமலம் என்னவே .

viri maṇi mēkalai viravi ārkkila terivaiyar alkul , tār oli il tēr eṉa ; paripuram ārkkila pavaḷac cīṟaṭi , ari iṉam ārkkilāk kamalam eṉṉavē .

Report an error

மல்கிய கேகயன் மடந்தை வாசகம் நல்கியது அரிவையர் நடுவிற்கே கொல் ஆம் ! புல்கிய மலர் வடம் பூண்கிலாமையால் ஒல்கிய ஒருவகைப் பொறை உயிர்த்தவே .

malkiya kēkayaṉ maṭantai vācakam nalkiyatu arivaiyar naṭuviṟkē kol ām ! pulkiya malar vaṭam pūṇkilāmaiyāl olkiya oruvakaip poṟai uyirttavē .

Report an error

'கோமகன் பிரிதலின் , கோலம் நீத்து உள தாமரைச் செல்வியும் , தவத்தை மேவினாள் ; காமனும் , அரும் துயர் கடலில் மூழ்கினான் ஆம் ' என நிகழ்ந்தது அவ் அளவில் சேனையே .

'kōmakaṉ piritaliṉ , kōlam nīttu uḷa tāmaraic celviyum , tavattai mēviṉāḷ ; kāmaṉum , arum tuyar kaṭalil mūḻkiṉāṉ ām ' eṉa nikaḻntatu av aḷavil cēṉaiyē .

Report an error

மண்ணையும் , வானையும் , வயங்கு திக்கையும் , உண்ணிய நிமிர் கடல் ஒக்கும் என்பது என் ? கண்ணினும் மனத்தினும் கமலம் அத்து அண்ணல் தன் எண்ணினும் நெடிது அவண் எழுந்த சேனை ஏ !

maṇṇaiyum , vāṉaiyum , vayaṅku tikkaiyum , uṇṇiya nimir kaṭal okkum eṉpatu eṉ ? kaṇṇiṉum maṉattiṉum kamalam attu aṇṇal taṉ eṇṇiṉum neṭitu avaṇ eḻunta cēṉai ē !

Report an error

அலை நெடும் புனல் அறக் குடித்தலால் , அகம் நிலைபெற நிலை நெறி நிறுத்தலால் , நெடு மலையினை மண் உற அழுத்தலால் , தமிழ்த் தலைவனை நிகர்த்தது அத் தயங்கு தானை ஏ .

alai neṭum puṉal aṟak kuṭittalāl , akam nilaipeṟa nilai neṟi niṟuttalāl , neṭu malaiyiṉai maṇ uṟa aḻuttalāl , tamiḻt talaivaṉai nikarttatu at tayaṅku tāṉai ē .

Report an error

அறிஞரும் சிறியரும் ஆதி அந்தமாச் செறி பெருந் தானையும் திருவும் நீங்கலால் , குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்ட நாள் , மறி கடல் ஒத்தது அவ் அயோத்தி மாநகர் .

aṟiñarum ciṟiyarum āti antamāc ceṟi perun tāṉaiyum tiruvum nīṅkalāl , kuṟiyavaṉ puṉal elām vayiṟṟil koṇṭa nāḷ , maṟi kaṭal ottatu av ayōtti mānakar .

Report an error

பெரும் திரை நதிகளும் , வயலும் , பெட்பு உறு மரங்களும் , மலைகளும் , மண்ணும் , கண் உறத் திருந்தலில் , அயோத்தி ஆம் தெய்வ மா நகர் அருந்தெரு ஒத்தது அ படை செல் ஆறு அரோ !

perum tirai natikaḷum , vayalum , peṭpu uṟu maraṅkaḷum , malaikaḷum , maṇṇum , kaṇ uṟat tiruntalil , ayōtti ām teyva mā nakar arunteru ottatu a paṭai cel āṟu arō !

Report an error

'தார்கள் தாம் , கோதை தாம் , தாமம் , தாம் , தகை ஏர் கடாம் , கலவை தாம் , கமழ்ந்தின்று ' என்பர் ஆல்-- கார்கள் தாம் என மிகக் கடுத்த கை மலை வார் கடாம் அல்லது , அம்மன்னன் சேனையே .

'tārkaḷ tām , kōtai tām , tāmam , tām , takai ēr kaṭām , kalavai tām , kamaḻntiṉṟu ' eṉpar āl-- kārkaḷ tām eṉa mikak kaṭutta kai malai vār kaṭām allatu , ammaṉṉaṉ cēṉaiyē .

Report an error

ஆள் உலாம் கடலினும் அகன்ற அக் கடல் , தோள் உலாம் குண்டலம் முதல தொல் அணி கேள் உலாம் மின் ஒளி கிளர்ந்தது இல்லை ஆல் ; வாள் உலாம் நுதலியர் மருங்குல் அல்லது ஏ .

āḷ ulām kaṭaliṉum akaṉṟa ak kaṭal , tōḷ ulām kuṇṭalam mutala tol aṇi kēḷ ulām miṉ oḷi kiḷarntatu illai āl ; vāḷ ulām nutaliyar maruṅkul allatu ē .

Report an error

மத்தளம் முதலிய வயங்கு பல் இயம் ஒத்தன சேறலின் , உரை இலாமையின் , சித்திரச் சுவர் நெடுஞ் சேனை தீட்டிய பத்தியை நிகர்த்தது அ படை இன் ஈட்டம் ஏ .

mattaḷam mutaliya vayaṅku pal iyam ottaṉa cēṟaliṉ , urai ilāmaiyiṉ , cittirac cuvar neṭuñ cēṉai tīṭṭiya pattiyai nikarttatu a paṭai iṉ īṭṭam ē .

Report an error

ஏடு அறு கோதையர் விழியின் எய்த கோல் ஊடு உற உரம் தொளைத்து உயிர் உணாவகை , ஆடவர்க்கு அரும் பெரும் கவசம் ஆயது-- காடு உறை வாழ்க்கை அக் கண்ணன் நண்ணல் ஏ .

ēṭu aṟu kōtaiyar viḻiyiṉ eyta kōl ūṭu uṟa uram toḷaittu uyir uṇāvakai , āṭavarkku arum perum kavacam āyatu-- kāṭu uṟai vāḻkkai ak kaṇṇaṉ naṇṇal ē .

Report an error

கனங்குழைக் கேகயன் மகளின் கண்ணிய சினம் கிடந்து எரிதலின் தீய்ந்தவே கொலாம் அனங்கன் ஐங் கொடுங்கணை கடந்த ஆடவர் மனம் , கிடந்து உண்கில மகளிர் கொங்கையே .

kaṉaṅkuḻaik kēkayaṉ makaḷiṉ kaṇṇiya ciṉam kiṭantu eritaliṉ tīyntavē kolām aṉaṅkaṉ aiṅ koṭuṅkaṇai kaṭanta āṭavar maṉam , kiṭantu uṇkila makaḷir koṅkaiyē .

Report an error

இன்னணம் நெடும்படை ஏக , ஏந்தலும் , தன்னுடைத் திரு அரைச் சீரை சாத்தினான் ; பின் இளையவனொடும் , பிறந்த துன்பொடும் , நல் நெடும் தேர் மிசை நடத்தல் மேயினான் .

iṉṉaṇam neṭumpaṭai ēka , ēntalum , taṉṉuṭait tiru araic cīrai cāttiṉāṉ ; piṉ iḷaiyavaṉoṭum , piṟanta tuṉpoṭum , nal neṭum tēr micai naṭattal mēyiṉāṉ .

Report an error

தாயரும் , அருந் தவத்தவரும் , தந்தையின் ஆய மந்திரியரும் , அளவு இல் சுற்றமும் , தூய அந்தணர்களும் , தொடர்ந்து சூழ்வரப் போயினன்-- திரு நகர்ப் புரிசை வாயிலே .

tāyarum , arun tavattavarum , tantaiyiṉ āya mantiriyarum , aḷavu il cuṟṟamum , tūya antaṇarkaḷum , toṭarntu cūḻvarap pōyiṉaṉ-- tiru nakarp puricai vāyilē .

Report an error

மந்தரைக் கூற்றமும் , வழிச்செல்வாரொடும் உந்தியே போதல் கண்டு , இளவல் ஓடி ஆர்த்து , அந்தரத்து ஏற்றுவான் அழன்று , பற்றலும் , சுந்தரத் தோளவன் விலக்கிச் சொல்லுவான் .

mantaraik kūṟṟamum , vaḻiccelvāroṭum untiyē pōtal kaṇṭu , iḷaval ōṭi ārttu , antarattu ēṟṟuvāṉ aḻaṉṟu , paṟṟalum , cuntarat tōḷavaṉ vilakkic colluvāṉ .

Report an error

''முன்னையர் முறைகெட முடித்த பாவியைச் சின்னபின்னம் செய்து என் சினத்தைத் தீர்வென் ஏல் , 'என்னை இன்று என் ஐயன் துறக்கும் ' என்று அலால் , 'அன்னை ' என்று உணர்ந்திலென் ஐய ! நான் '' என்றான் .

''muṉṉaiyar muṟaikeṭa muṭitta pāviyaic ciṉṉapiṉṉam ceytu eṉ ciṉattait tīrveṉ ēl , 'eṉṉai iṉṟu eṉ aiyaṉ tuṟakkum ' eṉṟu alāl , 'aṉṉai ' eṉṟu uṇarntileṉ aiya ! nāṉ '' eṉṟāṉ .

Report an error

'ஆதலால் , முனியும் இன்று ஐயன் ; அந்தம் இல் வேதனைக் கூனியை வெகுண்டும் என்னினும் , கோது இலா அருமறை குலவு நூல் வலாய் ! போதும் நாம் ' என்று கொண்டு அரிதில் போயினான் .

'ātalāl , muṉiyum iṉṟu aiyaṉ ; antam il vētaṉaik kūṉiyai vekuṇṭum eṉṉiṉum , kōtu ilā arumaṟai kulavu nūl valāy ! pōtum nām ' eṉṟu koṇṭu aritil pōyiṉāṉ .

Report an error

மொய் பெருஞ் சேனையும் மூரி ஞாலமும் கை கலந்து அயல் ஒரு கடலின் சுற்றிட , ஐயனும் தேவியும் இளைய ஆளியும் வைகிய சோலையில் தானும் வைகினான் .

moy peruñ cēṉaiyum mūri ñālamum kai kalantu ayal oru kaṭaliṉ cuṟṟiṭa , aiyaṉum tēviyum iḷaiya āḷiyum vaikiya cōlaiyil tāṉum vaikiṉāṉ .

Report an error

அல் அணை நெடுங் கண் நீர் அருவி ஆடினன் , கல் அணை கிழங்கொடு கனியும் உண்டிலன் , வில் அணைத்து உயர்ந்த தோள் வீரன் வைகிய புல் அணை மருங்கில் , தான் பொடியின் வைகினான் .

al aṇai neṭuṅ kaṇ nīr aruvi āṭiṉaṉ , kal aṇai kiḻaṅkoṭu kaṉiyum uṇṭilaṉ , vil aṇaittu uyarnta tōḷ vīraṉ vaikiya pul aṇai maruṅkil , tāṉ poṭiyiṉ vaikiṉāṉ .

Report an error

ஆண்டு நின்று , 'ஆண் தகை , அடியின் ஏகினான் ஈண்டிய நெறி ' எனத் தானும் ஏகினான் ; தூண்டிடு தேர்களும் துரக ராசியும் காண்தகு கரிகளும் தொடரக் காலினே .

āṇṭu niṉṟu , 'āṇ takai , aṭiyiṉ ēkiṉāṉ īṇṭiya neṟi ' eṉat tāṉum ēkiṉāṉ ; tūṇṭiṭu tērkaḷum turaka rāciyum kāṇtaku karikaḷum toṭarak kāliṉē .

Report an error

Illustration: Verse & Place (Project-owned).