Skip to content

அயோத்தியா காண்டம் — திருவடிசூட்டு படலம் · அயோத்தியா காண்டம் — திருவடிசூட்டு படலம்

Ayodhya Kandam — tiruvaṭicūṭṭu paṭalam

ayōttiyā kāṇṭam — tiruvaṭicūṭṭu paṭalam

The original Tamil verses of Kambar’s Ramayanam.

142 versesTamil with transliteration

A spreading tree, recalling the forest journeys in Kambar’s Ramayanam.

வந்த மா தவத்தோன் ஐ அம் மைந்தனும் , தந்தை ஆம் எனத் தாழ்ந்து வணங்கினான் ; இந்து மோலி அன்னானும் , இரங்கினான் , அந்தம் இல் நலத்து ஆசிகள் கூறினான் .

vanta mā tavattōṉ ai am maintaṉum , tantai ām eṉat tāḻntu vaṇaṅkiṉāṉ ; intu mōli aṉṉāṉum , iraṅkiṉāṉ , antam il nalattu ācikaḷ kūṟiṉāṉ .

Report an error

'எடுத்த மா முடி சூடி , நின்பால் இயைந்து அடுத்த பேர் அரசு ஆண்டிலை , ஐய ! நீ , முடித்த வார் சடைக் கற்றையை , மூசு தூசு உடுத்து நண்ணுதற்கு உற்று உளது யாது ? ' என்றான் .

'eṭutta mā muṭi cūṭi , niṉpāl iyaintu aṭutta pēr aracu āṇṭilai , aiya ! nī , muṭitta vār caṭaik kaṟṟaiyai , mūcu tūcu uṭuttu naṇṇutaṟku uṟṟu uḷatu yātu ? ' eṉṟāṉ .

Report an error

சினக் கடும் திறல் சீற்ற வெம் தீயினால் மனக் கடுப்பினன் , மா தவத்து ஓங்கலை , 'எனக்கு அடுப்பது இயம்பிலை நீ என்தான் ? உனக்கு அடுப்பது அன்று , ஆல் , உரவோய் ! ' எனா .

ciṉak kaṭum tiṟal cīṟṟa vem tīyiṉāl maṉak kaṭuppiṉaṉ , mā tavattu ōṅkalai , 'eṉakku aṭuppatu iyampilai nī eṉtāṉ ? uṉakku aṭuppatu aṉṟu , āl , uravōy ! ' eṉā .

Report an error

மறையின் கேள்வற்கு மன் இளம் தோன்றல் , பின் , 'முறையின் நீங்கி முது நிலம் கொள்கிலேன் ; இறைவன் கொள்கிலன் ஆம் எனின் , யாண்டு எலாம் உறைவென் கானத்து ஒருங்கு உடனே ' என்றான் .

maṟaiyiṉ kēḷvaṟku maṉ iḷam tōṉṟal , piṉ , 'muṟaiyiṉ nīṅki mutu nilam koḷkilēṉ ; iṟaivaṉ koḷkilaṉ ām eṉiṉ , yāṇṭu elām uṟaiveṉ kāṉattu oruṅku uṭaṉē ' eṉṟāṉ .

Report an error

உரைத்த வாசகம் கேட்டலும் , உள் எழுந்து இரைத்த காதல் இரும் தவத்தோர்க்கு எலாம் குரைத்த மேனியொடு உள்ளம் குளிர்ந்தவால் , அரைத்த சாந்துகொடு அப்பியது என்னவே .

uraitta vācakam kēṭṭalum , uḷ eḻuntu iraitta kātal irum tavattōrkku elām kuraitta mēṉiyoṭu uḷḷam kuḷirntavāl , araitta cāntukoṭu appiyatu eṉṉavē .

Report an error

அன்ன காதல் அருந்தவர் , 'ஆண்தகை ! நின்னை ஒப்பவர் யார் உளர் நீ அலால் ? ' என்ன வாழ்த்திடும் ஏல்வை , இரவியும் பொன்னின் மேருவில் போய் மறைந்திட்டது ஏ .

aṉṉa kātal aruntavar , 'āṇtakai ! niṉṉai oppavar yār uḷar nī alāl ? ' eṉṉa vāḻttiṭum ēlvai , iraviyum poṉṉiṉ mēruvil pōy maṟaintiṭṭatu ē .

Report an error

ஆய காலையில் ஐயனைக் கொண்டு தன் தூய சாலை குறுகினன் தோம் இலான் ; 'மேய சேனைக்கு அமைப்பென் விருந்து ' எனாத் தீயின் ஆவுதி செங்கையின் ஓக்கினான் .

āya kālaiyil aiyaṉaik koṇṭu taṉ tūya cālai kuṟukiṉaṉ tōm ilāṉ ; 'mēya cēṉaikku amaippeṉ viruntu ' eṉāt tīyiṉ āvuti ceṅkaiyiṉ ōkkiṉāṉ .

Report an error

துறந்த செல்வன் நினையத் துறக்கம்தான் பறந்து வந்து படிந்தது ; பல்சனர் , பிறந்து வேறு ஒர் உலகு பெற்றார் என , மறந்து வைகினர் முன்னைத் தம் வாழ்வு எலாம் .

tuṟanta celvaṉ niṉaiyat tuṟakkamtāṉ paṟantu vantu paṭintatu ; palcaṉar , piṟantu vēṟu or ulaku peṟṟār eṉa , maṟantu vaikiṉar muṉṉait tam vāḻvu elām .

Report an error

நந்தல் இல் அறம் நந்தினர் ஆம் என , அந்தரத்தின் அரம்பையர் , அன்பினர் , வந்து உவந்து எதிர் ஏற்றனர் , மைந்தரை , இந்துவின் சுடர் கோயில் கொண்டு ஏகினார் .

nantal il aṟam nantiṉar ām eṉa , antarattiṉ arampaiyar , aṉpiṉar , vantu uvantu etir ēṟṟaṉar , maintarai , intuviṉ cuṭar kōyil koṇṭu ēkiṉār .

Report an error

நானம் நன்கு உரைத்தார் , நளிர் வான் இடை ஆன கங்கை அரும் புனல் ஆட்டினார் ; கான மா மணிக் கற்பகம் தாங்கிய ஊனம் இல் மலர் ஆடை உடுத்தினார் .

nāṉam naṉku uraittār , naḷir vāṉ iṭai āṉa kaṅkai arum puṉal āṭṭiṉār ; kāṉa mā maṇik kaṟpakam tāṅkiya ūṉam il malar āṭai uṭuttiṉār .

Report an error

கொம்பின் நின்று நுடங்குறு கொள்கையார் , செம் பொனின் கல ராசி திருத்தினார் ; அம்பரத்தின் அரம்பையர் , அன்பொடும் , உம்பர் கோன் நுகர் இன் அமிழ்து ஊட்டினார் .

kompiṉ niṉṟu nuṭaṅkuṟu koḷkaiyār , cem poṉiṉ kala rāci tiruttiṉār ; amparattiṉ arampaiyar , aṉpoṭum , umpar kōṉ nukar iṉ amiḻtu ūṭṭiṉār .

Report an error

அஞ்சு அடுத்த அமளி , அலத்தகப் பஞ்சு அடுத்த பரிபுரப் பல்லவம் , நஞ்சு அடுத்த நயனியர் , நவ்வியின் துஞ்ச , அத்தனை மைந்தரும் துஞ்சினார் .

añcu aṭutta amaḷi , alattakap pañcu aṭutta paripurap pallavam , nañcu aṭutta nayaṉiyar , navviyiṉ tuñca , attaṉai maintarum tuñciṉār .

Report an error

ஏந்து செல்வம் அத்து இமையவர் ஆம் எனக் கூந்தல் தெய்வ மகளிர் கொண்டாடினார் , வேந்தர் ஆதி , சிவிகையின் வீங்கு தோள் மாந்தர் காறும் , வரிசை வழாமலே .

ēntu celvam attu imaiyavar ām eṉak kūntal teyva makaḷir koṇṭāṭiṉār , vēntar āti , civikaiyiṉ vīṅku tōḷ māntar kāṟum , varicai vaḻāmalē .

Report an error

மாதர் யாவரும் வானவர் தேவியர் கோது இல் செல்வத்து வைகினர் , கொவ்வை வாய்த் தீது இல் தெய்வ மடந்தையர் , சேடியர் , தாதிமார் , எனத் தம் பணி கேட்பவே .

mātar yāvarum vāṉavar tēviyar kōtu il celvattu vaikiṉar , kovvai vāyt tītu il teyva maṭantaiyar , cēṭiyar , tātimār , eṉat tam paṇi kēṭpavē .

Report an error

நந்து அம் நந்த வனங்களில் , நாள் மலர்க் கந்தம் உந்திய கற்பகக் காவில் , நின்று அந்தர் வந்தென , அந்தி தன் கை தர மந்தம் முந்த , நடந்தது வாடை ஏ .

nantu am nanta vaṉaṅkaḷil , nāḷ malark kantam untiya kaṟpakak kāvil , niṉṟu antar vanteṉa , anti taṉ kai tara mantam munta , naṭantatu vāṭai ē .

Report an error

மான்று அளிக் குலம் மா மதம் வந்து உணத் தேன் தளிர்த்த கவளமும் , செம் கதிர் கான்ற நெல் தழைக் கற்றையும் , கற்பகம் ஈன்று அளிக்க , நுகர்ந்தன யானையே .

māṉṟu aḷik kulam mā matam vantu uṇat tēṉ taḷirtta kavaḷamum , cem katir kāṉṟa nel taḻaik kaṟṟaiyum , kaṟpakam īṉṟu aḷikka , nukarntaṉa yāṉaiyē .

Report an error

நரகதர்க்கு அறம் நல்கும் நலத்த நீர் கர கதக் கரி கால் நிமிர்த்து உண்டன ; மரகதத்தின் கொழுந்து என வார்ந்த புல் குரகதம் அத்து இன் குழாங்களும் கொண்டவே .

narakatarkku aṟam nalkum nalatta nīr kara katak kari kāl nimirttu uṇṭaṉa ; marakatattiṉ koḻuntu eṉa vārnta pul kurakatam attu iṉ kuḻāṅkaḷum koṇṭavē .

Report an error

இன்னர் , இன்னணம் யாவரும் , இந்திரன் துன்னு போகங்கள் துய்த்தனர் ; தோன்றல்தான் , அன்ன காயும் கிழங்கும் உண்டு , அவ் இராப் பொன்னின் மேனி பொடி உறப் போக்கினான் .

iṉṉar , iṉṉaṇam yāvarum , intiraṉ tuṉṉu pōkaṅkaḷ tuyttaṉar ; tōṉṟaltāṉ , aṉṉa kāyum kiḻaṅkum uṇṭu , av irāp poṉṉiṉ mēṉi poṭi uṟap pōkkiṉāṉ .

Report an error

நீல வல் இருள் நீங்கலும் , நீங்குறும் மூலம் இல் கனவில் , திரு முற்று உற , ஏல நல்வினை துய்ப்பவர்க்கு ஈறுசெல் காலம் என்னக் கதிரவன் தோன்றினான் .

nīla val iruḷ nīṅkalum , nīṅkuṟum mūlam il kaṉavil , tiru muṟṟu uṟa , ēla nalviṉai tuyppavarkku īṟucel kālam eṉṉak katiravaṉ tōṉṟiṉāṉ .

Report an error

ஆறி நின்று அறம் ஆற்றலர் வாழ்வு எனப் பாறி வீந்தது செல்வம் ; பரிந்திலர் தேறி , முந்தைத் தம் சிந்தையர் ஆயினார் , மாறி வந்து பிறந்து அன்ன மாட்சியார் .

āṟi niṉṟu aṟam āṟṟalar vāḻvu eṉap pāṟi vīntatu celvam ; parintilar tēṟi , muntait tam cintaiyar āyiṉār , māṟi vantu piṟantu aṉṉa māṭciyār .

Report an error

காலை என்று எழுந்தது ; கண்டு , வானவர் , 'வேலை ' என்று , 'அனிகம் ' என்று ஏங்கி விம்முறச் சோலையும் கிரிகளும் சுண்ணமாய் எழப் பாலை சென்று , அடைந்தது பரதன் சேனை ஏ .

kālai eṉṟu eḻuntatu ; kaṇṭu , vāṉavar , 'vēlai ' eṉṟu , 'aṉikam ' eṉṟu ēṅki vimmuṟac cōlaiyum kirikaḷum cuṇṇamāy eḻap pālai ceṉṟu , aṭaintatu parataṉ cēṉai ē .

Report an error

எழுந்தது துகள் ; அதின் , எரியும் வெய்யவன் அழுந்தினன் , அவிப்ப அரும் வெம்மை ஆறினான் ; பொழிந்தன கரி மதம் , பொடி வெங் கானகம் இழிந்தன , வழி நடந்து ஏற தொணாமை ஏ .

eḻuntatu tukaḷ ; atiṉ , eriyum veyyavaṉ aḻuntiṉaṉ , avippa arum vemmai āṟiṉāṉ ; poḻintaṉa kari matam , poṭi veṅ kāṉakam iḻintaṉa , vaḻi naṭantu ēṟa toṇāmai ē .

Report an error

வடி உடை அயில் படை மன்னர் வெண் குடை செடி உடை நெடு நிழல் செய்த ; தீப் பொதி படி உடைப் பரல் உடைப் பாலை , மேல் உயர் கொடி உடைப் பந்தரின் , குளிர்ந்தது எங்குமே .

vaṭi uṭai ayil paṭai maṉṉar veṇ kuṭai ceṭi uṭai neṭu niḻal ceyta ; tīp poti paṭi uṭaip paral uṭaip pālai , mēl uyar koṭi uṭaip pantariṉ , kuḷirntatu eṅkumē .

Report an error

'பெருகிய செல்வம் நீ பிடி ' என்றாள் வயின் திருகிய சீற்றத்தால் செம்மையாய் , நிறம் கருகிய அண்ணலைக் கண்டு , காதலின் உருகிய , தளிர்த்தன உலவை ஈட்டமே .

'perukiya celvam nī piṭi ' eṉṟāḷ vayiṉ tirukiya cīṟṟattāl cemmaiyāy , niṟam karukiya aṇṇalaik kaṇṭu , kātaliṉ urukiya , taḷirttaṉa ulavai īṭṭamē .

Report an error

வன் தெறு பாலையை மருதம் ஆம் எனச் சென்றது , சித்திரகூடம் சேர்ந்தது ஆல் ; ஒன்று உரைத்து , 'உயிரினும் ஒழுக்கம் நன்று ' எனப் பொன்றிய புரவலன் பொரு இல் சேனையே .

vaṉ teṟu pālaiyai marutam ām eṉac ceṉṟatu , cittirakūṭam cērntatu āl ; oṉṟu uraittu , 'uyiriṉum oḻukkam naṉṟu ' eṉap poṉṟiya puravalaṉ poru il cēṉaiyē .

Report an error

தூளியின் படலையும் , துரகம் , தேரொடு , மூள் இருஞ் சினக் கரி முழங்கும் ஓதையும் , ஆள் இருங் குழுவினர் ஆரவாரமும் , 'கோள் இரும் படை இது ' என்று உணரக் கூறவே .

tūḷiyiṉ paṭalaiyum , turakam , tēroṭu , mūḷ iruñ ciṉak kari muḻaṅkum ōtaiyum , āḷ iruṅ kuḻuviṉar āravāramum , 'kōḷ irum paṭai itu ' eṉṟu uṇarak kūṟavē .

Report an error

எழுந்தனன் இளையவன் , ஏறினான் நிலம் கொழுந்து உயர்ந்து அனையது ஓர் நெடிய குன்றின்மேல் , செழும் திரைப் பரவையைச் சிறுமை செய்த அக் கழுந்து உடை வரி சிலைக் கடலை நோக்கினான் .

eḻuntaṉaṉ iḷaiyavaṉ , ēṟiṉāṉ nilam koḻuntu uyarntu aṉaiyatu ōr neṭiya kuṉṟiṉmēl , ceḻum tiraip paravaiyaic ciṟumai ceyta ak kaḻuntu uṭai vari cilaik kaṭalai nōkkiṉāṉ .

Report an error

'பரதன் , இப் படை கொடு , பார் கொண்டான் , மறம் கருதி , உள் கிடந்தது ஓர் கறுவு காதலால் , விரதம் உற்று இருந்தவன் மேல் , வந்தான் ; இது சரதம் , மற்று இலது ' எனத் தழங்கு சீற்றத்தான் .

'parataṉ , ip paṭai koṭu , pār koṇṭāṉ , maṟam karuti , uḷ kiṭantatu ōr kaṟuvu kātalāl , viratam uṟṟu iruntavaṉ mēl , vantāṉ ; itu caratam , maṟṟu ilatu ' eṉat taḻaṅku cīṟṟattāṉ .

Report an error

குதித்தனன் பாரிடைக் குவடு நீறு எழ மிதித்தனன் , இராமனை விரைவின் எய்தினான் , 'மதித்திலன் , பரதன் நின்மேல் வந்தான் , மதில் பதிப் பெருஞ் சேனையின் பரப்பினான் ' எனா .

kutittaṉaṉ pāriṭaik kuvaṭu nīṟu eḻa mitittaṉaṉ , irāmaṉai viraiviṉ eytiṉāṉ , 'matittilaṉ , parataṉ niṉmēl vantāṉ , matil patip peruñ cēṉaiyiṉ parappiṉāṉ ' eṉā .

Report an error

கட்டினன் சுரிகையும் கழலும் ; பல் கணைப் புட்டிலும் பொறுத்தனன் ; கவசம் பூட்டு அமைத்து இட்டனன் ; எடுத்தனன் வரிவில் ; ஏந்தலைத் தொட்டு அடி வணங்கி நின்று , இனைய சொல்லினான் .

kaṭṭiṉaṉ curikaiyum kaḻalum ; pal kaṇaip puṭṭilum poṟuttaṉaṉ ; kavacam pūṭṭu amaittu iṭṭaṉaṉ ; eṭuttaṉaṉ varivil ; ēntalait toṭṭu aṭi vaṇaṅki niṉṟu , iṉaiya colliṉāṉ .

Report an error

'இருமையும் இழந்த அப் பரதன் ஏந்து தோள் பருமையும் , அன்னவன் படைத்த சேனையின் பெருமையும் , நின் ஒரு பின்பு வந்த என் ஒருமையும் கண்டு , இனி உவத்தி உள்ளம் நீ . '

'irumaiyum iḻanta ap parataṉ ēntu tōḷ parumaiyum , aṉṉavaṉ paṭaitta cēṉaiyiṉ perumaiyum , niṉ oru piṉpu vanta eṉ orumaiyum kaṇṭu , iṉi uvatti uḷḷam nī . '

Report an error

'படர் எலாம் படப் படும் பரும யானையின் திடர் எலாம் உருட்டின , தேரும் ஈர்த்தன , குடர் எலாம் திரைத்தன , குருதி ஆறுகள் கடர் எலாம் மடுப்பன பலவும் காண்டி ஆல் . '

'paṭar elām paṭap paṭum paruma yāṉaiyiṉ tiṭar elām uruṭṭiṉa , tērum īrttaṉa , kuṭar elām tiraittaṉa , kuruti āṟukaḷ kaṭar elām maṭuppaṉa palavum kāṇṭi āl . '

Report an error

'கருவியும் , கைகளும் , கவச மார்பமும் உம் , உருவின உயிரினோடு , உதிரம் தோய்வு இல திரிவன , சுடர்க் கணை , திசைக் கை யானைகள் வெருவரச் செய்வன , காண்டி , வீர ! நீ . '

'karuviyum , kaikaḷum , kavaca mārpamum um , uruviṉa uyiriṉōṭu , utiram tōyvu ila tirivaṉa , cuṭark kaṇai , ticaik kai yāṉaikaḷ veruvarac ceyvaṉa , kāṇṭi , vīra ! nī . '

Report an error

'கோடகத் தேர்படு , குருதி தாவிய ஆடகத் தட்டு இடை , அலகை , அற்று உகு கேடகத் தடக்கைகள் கவ்விக் கிந்தின , நாடகம் நடிப்பன காண்டி , நாத ! நீ . '

'kōṭakat tērpaṭu , kuruti tāviya āṭakat taṭṭu iṭai , alakai , aṟṟu uku kēṭakat taṭakkaikaḷ kavvik kintiṉa , nāṭakam naṭippaṉa kāṇṭi , nāta ! nī . '

Report an error

'பண் முதிர் களிறு ஒடு பரந்த சேனையின் எண் முதல் அறுத்து , நான் இமைப்பின் நீக்கலால் , விண் முதுகு உளுக்கவும் , வேலை ஆடையின் மண் முதுகு ஆற்றவும் காண்டி , வள்ளல் ! நீ . '

'paṇ mutir kaḷiṟu oṭu paranta cēṉaiyiṉ eṇ mutal aṟuttu , nāṉ imaippiṉ nīkkalāl , viṇ mutuku uḷukkavum , vēlai āṭaiyiṉ maṇ mutuku āṟṟavum kāṇṭi , vaḷḷal ! nī . '

Report an error

''நிவந்த வான் குருதியின் நீத்தம் நீந்தி மெய் சிவந்த சாதகரொடு சிறு கண் கூளியும் , கவந்தமும் , 'உலகம் நின் கையது ஆயது ' என்று , உவந்தன குனிப்பன காண்டி , உம்பர் போல் . ''

''nivanta vāṉ kurutiyiṉ nīttam nīnti mey civanta cātakaroṭu ciṟu kaṇ kūḷiyum , kavantamum , 'ulakam niṉ kaiyatu āyatu ' eṉṟu , uvantaṉa kuṉippaṉa kāṇṭi , umpar pōl . ''

Report an error

'சூழி வெம் கட கரி , துரக ராசிகள் , பாழி வன் புயம் அத்து இகல் வயவர் பட்டு அற , ஆழி வெம் குருதியால் அழிந்த வேலைகள் ஏழும் , ஒன்றாகி நின்று இரைப்பக் காண்டி ஆல் . '

'cūḻi vem kaṭa kari , turaka rācikaḷ , pāḻi vaṉ puyam attu ikal vayavar paṭṭu aṟa , āḻi vem kurutiyāl aḻinta vēlaikaḷ ēḻum , oṉṟāki niṉṟu iraippak kāṇṭi āl . '

Report an error

'ஆள் அற , அலங்கு தேர் அழிய , ஆடவர் வாள் அற , வரிசிலை துணிய , மா கரி தாள் அறத் தலை அறப் புரவி , தாளொடும் தோள் அற வடி கணை தொடுப்பக் காண்டியால் . '

'āḷ aṟa , alaṅku tēr aḻiya , āṭavar vāḷ aṟa , varicilai tuṇiya , mā kari tāḷ aṟat talai aṟap puravi , tāḷoṭum tōḷ aṟa vaṭi kaṇai toṭuppak kāṇṭiyāl . '

Report an error

'தழைத்த வான் சிறையன , தசையும் கவ்வின , அழைத்த வான் பறவைகள் , அலங்கு பொன் வடிம்பு இழைத்த வான் பகழி புக்கு இருவர் மார்பிடைப் புழைத்த வான் பெருவழி போகக் காண்டியால் . '

'taḻaitta vāṉ ciṟaiyaṉa , tacaiyum kavviṉa , aḻaitta vāṉ paṟavaikaḷ , alaṅku poṉ vaṭimpu iḻaitta vāṉ pakaḻi pukku iruvar mārpiṭaip puḻaitta vāṉ peruvaḻi pōkak kāṇṭiyāl . '

Report an error

'ஒரு மகள் காதலின் உலகை நோய் செய்த பெருமகன் ஏவலின் பரதன் தான் பெறும் இரு நிலம் ஆள்கை விட்டு , இன்று , என் ஏவலால் அரு நரகு ஆள்வது காண்டி , ஆழியாய் ! '

'oru makaḷ kātaliṉ ulakai nōy ceyta perumakaṉ ēvaliṉ parataṉ tāṉ peṟum iru nilam āḷkai viṭṭu , iṉṟu , eṉ ēvalāl aru naraku āḷvatu kāṇṭi , āḻiyāy ! '

Report an error

'''வையகம் துறந்து வந்து அடவி வைகுதல் எய்தியது உனக்கு ' என , நின்னை ஈன்றவள் நைதல் கண்டு உவந்தவள் , நவையின் ஓங்கிய கைகயன் மகள் , விழுந்து அரற்றக் காண்டியால் . ''

'''vaiyakam tuṟantu vantu aṭavi vaikutal eytiyatu uṉakku ' eṉa , niṉṉai īṉṟavaḷ naital kaṇṭu uvantavaḷ , navaiyiṉ ōṅkiya kaikayaṉ makaḷ , viḻuntu araṟṟak kāṇṭiyāl . ''

Report an error

''அரம் சுட அழல் நிமிர் அலங்கல் வேலினாய் ! விரஞ்சு ஒரு நொடியில் , இவ் அனிக வேலையை உரம் சுடு வடிக்கணை ஒன்றில் வென்று , முப் புரம் சுடும் ஒருவனின் , பொலிவென் யான் '' என்றான் .

''aram cuṭa aḻal nimir alaṅkal vēliṉāy ! virañcu oru noṭiyil , iv aṉika vēlaiyai uram cuṭu vaṭikkaṇai oṉṟil veṉṟu , mup puram cuṭum oruvaṉiṉ , poliveṉ yāṉ '' eṉṟāṉ .

Report an error

'இலக்குவ ! உலகம் ஓர் ஏழும் ஏழும் நீ கலக்குவன் என்பது கருதினால் , அது விலக்குவது அரிது ; அது விளம்ப வேண்டும் ஓ ? புலக்கு உரித்து ஒரு பொருள் புகலக் கேட்டி ஆல் '

'ilakkuva ! ulakam ōr ēḻum ēḻum nī kalakkuvaṉ eṉpatu karutiṉāl , atu vilakkuvatu aritu ; atu viḷampa vēṇṭum ō ? pulakku urittu oru poruḷ pukalak kēṭṭi āl '

Report an error

'நம் குலத்து உதித்தவர் , நவையின் நீங்கினார் , எங்கு உலப்புறுவர்கள் ? எண்ணின் , யாவரே தம் குலத்து ஒருவரும் தருமம் நீங்கினார் ? பொங்கு உலத் திரள் ஒடு உம் பொருத தோளினாய் ! '

'nam kulattu utittavar , navaiyiṉ nīṅkiṉār , eṅku ulappuṟuvarkaḷ ? eṇṇiṉ , yāvarē tam kulattu oruvarum tarumam nīṅkiṉār ? poṅku ulat tiraḷ oṭu um poruta tōḷiṉāy ! '

Report an error

'எனைத்து உள மறை அவை இயம்பல் பாலன , பனை திரள் கரக் கரிப் பரதன் செய்கையே ; அனைத்திறம் அல்லன அல்ல ; அன்னது நினைத்திலை , என்வயின் நேய நெஞ்சின் ஆல் . '

'eṉaittu uḷa maṟai avai iyampal pālaṉa , paṉai tiraḷ karak karip parataṉ ceykaiyē ; aṉaittiṟam allaṉa alla ; aṉṉatu niṉaittilai , eṉvayiṉ nēya neñciṉ āl . '

Report an error

'பெருமகன் ஏவலின் , பிறந்த காதலின் வரும் என நினைகையும் , மண்ணை என் வயின் தரும் என நினைகையும் தவிரத் தானையால் பொரும் என நினைகையும் புலமைப் பாலது ஓ ? '

'perumakaṉ ēvaliṉ , piṟanta kātaliṉ varum eṉa niṉaikaiyum , maṇṇai eṉ vayiṉ tarum eṉa niṉaikaiyum tavirat tāṉaiyāl porum eṉa niṉaikaiyum pulamaip pālatu ō ? '

Report an error

'பொன் ஒடும் பொரு கழல் பரதன் போந்தனன் , நல் நெடும் பெரும்படை நல்கல் அன்றியே , என்னொடும் பொரும் என இயம்பற் பாலதோ ? மின் ஒடு உம் பொருவுற விளங்கும் வேலினாய் ! '

'poṉ oṭum poru kaḻal parataṉ pōntaṉaṉ , nal neṭum perumpaṭai nalkal aṉṟiyē , eṉṉoṭum porum eṉa iyampaṟ pālatō ? miṉ oṭu um poruvuṟa viḷaṅkum vēliṉāy ! '

Report an error

'சேண் உயர் தருமத்தின் தேவைச் செம்மையின் ஆணியை , அன்னது நினைக்கல் ஆகுமோ ? பூண் இயல் மொய்ம்பினாய் ! போந்தது ஈண்டு எனைக் காணிய ; நீ இது பின்னும் காண்டியால் ! '

'cēṇ uyar tarumattiṉ tēvaic cemmaiyiṉ āṇiyai , aṉṉatu niṉaikkal ākumō ? pūṇ iyal moympiṉāy ! pōntatu īṇṭu eṉaik kāṇiya ; nī itu piṉṉum kāṇṭiyāl ! '

Report an error

என்றனன் , இளவலை நோக்கி , ஏந்தலும் நின்றனன் ; பரதனும் , நிமிர்ந்த சேனையைப் 'பின் தருக ' என்று , தன் பிரிவு இல் காதலின் தன் துணைத் தம்பியும் தானும் முந்தினான் .

eṉṟaṉaṉ , iḷavalai nōkki , ēntalum niṉṟaṉaṉ ; parataṉum , nimirnta cēṉaiyaip 'piṉ taruka ' eṉṟu , taṉ pirivu il kātaliṉ taṉ tuṇait tampiyum tāṉum muntiṉāṉ .

Report an error

தொழுது உயர் கையினன் , துவண்ட மேனியன் , அழுது அழி கண்ணினன் , 'அவலம் ஈது ' என எழுதிய படிவம் ஒத்து , எய்துவான் தனை , முழுது உணர் சிந்தையான் முடிய நோக்கினான் .

toḻutu uyar kaiyiṉaṉ , tuvaṇṭa mēṉiyaṉ , aḻutu aḻi kaṇṇiṉaṉ , 'avalam ītu ' eṉa eḻutiya paṭivam ottu , eytuvāṉ taṉai , muḻutu uṇar cintaiyāṉ muṭiya nōkkiṉāṉ .

Report an error

கார்ப் பொரு மேனி அக் கண்ணன் காட்டினான் , 'ஆர்ப்பு உறு வரி சிலை இளைய ! ஐய ! நீ , தேர்ப் பெருந் தானை அப் பரதன் சீறிய போர்ப் பெருங் கோலத்தைப் பொருந்த நோக்கு ' எனா .

kārp poru mēṉi ak kaṇṇaṉ kāṭṭiṉāṉ , 'ārppu uṟu vari cilai iḷaiya ! aiya ! nī , tērp perun tāṉai ap parataṉ cīṟiya pōrp peruṅ kōlattaip porunta nōkku ' eṉā .

Report an error

எல் ஒடுங்கிய முகத்து இளவல் நின்றனன் , மல் ஒடுங்கிய புயத்தவனை வைது எழும் சொல்லொடும் சினம் அத்து ஒடும் உணர்வு சோர்தர , வில் ஒடு உம் கண்ணின் நீர் நிலம் அத்து வீழவே .

el oṭuṅkiya mukattu iḷaval niṉṟaṉaṉ , mal oṭuṅkiya puyattavaṉai vaitu eḻum colloṭum ciṉam attu oṭum uṇarvu cōrtara , vil oṭu um kaṇṇiṉ nīr nilam attu vīḻavē .

Report an error

கோது அறத் தவம் செய்து குறிப்பின் எய்திய நாதனைப் பிரிந்தனள் , நலத்து நீங்கினாள் , வேதனைத் திருமகள் மெலிகின்றாள் விடு தூது எனப் பரதனும் தொழுது தோன்றினான் .

kōtu aṟat tavam ceytu kuṟippiṉ eytiya nātaṉaip pirintaṉaḷ , nalattu nīṅkiṉāḷ , vētaṉait tirumakaḷ melikiṉṟāḷ viṭu tūtu eṉap parataṉum toḻutu tōṉṟiṉāṉ .

Report an error

'அறம்தனை நினைந்திலை ! அருளை நீத்தனை ! துறந்தனை முறைமையை ! ' என்னும் சொல்லினான் , மறந்தனன் , மலர் அடி வந்து வீழ்ந்தனன் , இறந்தனன் தாதையை எதிர்கண்டு என்னவே .

'aṟamtaṉai niṉaintilai ! aruḷai nīttaṉai ! tuṟantaṉai muṟaimaiyai ! ' eṉṉum colliṉāṉ , maṟantaṉaṉ , malar aṭi vantu vīḻntaṉaṉ , iṟantaṉaṉ tātaiyai etirkaṇṭu eṉṉavē .

Report an error

உண்டு கொல் உயிர் என ஒடுங்கினான் உருக் கண்டனன் , நின்றனன் கண்ணன் , கண் எனும் புண்டரீகம் பொழி புனல் அவன் சடா மண்டலம் நிறைந்துபோய் வழிந்து சோரவே .

uṇṭu kol uyir eṉa oṭuṅkiṉāṉ uruk kaṇṭaṉaṉ , niṉṟaṉaṉ kaṇṇaṉ , kaṇ eṉum puṇṭarīkam poḻi puṉal avaṉ caṭā maṇṭalam niṟaintupōy vaḻintu cōravē .

Report an error

அயா உயிர்த்து , அழு கண் நீர் அருவி மார்பிடை உயா உற திரு உளம் உருகப் புல்லினான் , நியாயம் அத்தனைக்கும் ஓர் நிலயம் ஆயினான் , தயா முதல் அறம் அத்து இன் ஐ தழீஇயது என்னவே .

ayā uyirttu , aḻu kaṇ nīr aruvi mārpiṭai uyā uṟa tiru uḷam urukap pulliṉāṉ , niyāyam attaṉaikkum ōr nilayam āyiṉāṉ , tayā mutal aṟam attu iṉ ai taḻīiyatu eṉṉavē .

Report an error

புல்லினன் நின்று , அவன் புனைந்த வேடம் அத்து ஐ பல் முறை நோக்கினான் , பலவும் உன்னினான் ; 'அல்லலின் அழுங்கினை , ஐய ! ஆள் உடை மல் உயர் தோளினான் வலியன் ஓ ? ' என்றான் .

pulliṉaṉ niṉṟu , avaṉ puṉainta vēṭam attu ai pal muṟai nōkkiṉāṉ , palavum uṉṉiṉāṉ ; 'allaliṉ aḻuṅkiṉai , aiya ! āḷ uṭai mal uyar tōḷiṉāṉ valiyaṉ ō ? ' eṉṟāṉ .

Report an error

அரியவன் உரைசெயப் பரதன் , 'ஐய ! நின் பிரிவு எனும் பிணியினால் , என்னைப் பெற்ற அக் கரியவள் வரம் எனும் காலன் ஆல் , தனக்கு உரிய மெய் நிறுவிப் போய் , உம்பரான் ' என்றான் .

ariyavaṉ uraiceyap parataṉ , 'aiya ! niṉ pirivu eṉum piṇiyiṉāl , eṉṉaip peṟṟa ak kariyavaḷ varam eṉum kālaṉ āl , taṉakku uriya mey niṟuvip pōy , umparāṉ ' eṉṟāṉ .

Report an error

'விண் இடை அடைந்தனன் ' என்ற வெய்ய சொல் , புண் இடை அயில் எனச் செவி புகாமுனம் , கண் ஒடு மனம் சுழல் கறங்கு போல ஆய் , மண் இடை விழுந்தனன் வானின் உம்பரான் .

'viṇ iṭai aṭaintaṉaṉ ' eṉṟa veyya col , puṇ iṭai ayil eṉac cevi pukāmuṉam , kaṇ oṭu maṉam cuḻal kaṟaṅku pōla āy , maṇ iṭai viḻuntaṉaṉ vāṉiṉ umparāṉ .

Report an error

இரு நிலம் சேர்ந்தனன் இறை , உயிர்த்திலன் , உரும் இனை அரவு என உணர்வு நீங்கினான் ; அருமையின் உயிர்வர அயாவுயிர்த்து , அகம் பொருமினன் பல் முறை , புலம்பினான் அரோ .

iru nilam cērntaṉaṉ iṟai , uyirttilaṉ , urum iṉai aravu eṉa uṇarvu nīṅkiṉāṉ ; arumaiyiṉ uyirvara ayāvuyirttu , akam porumiṉaṉ pal muṟai , pulampiṉāṉ arō .

Report an error

'நந்தா விளக்கு அனைய நாயகனே ! நானிலத்தோர் தந்தாய் ! தனி அறத்தின் தாயே ! தயாநிலையே ! எந்தாய் ! இகல் வேந்தர் ஏறே ! இறந்தனையே ? அந்தோ ! இனி , வாய்மைக்கு ஆர் உளரே மற்று ? ' என்றான் .

'nantā viḷakku aṉaiya nāyakaṉē ! nāṉilattōr tantāy ! taṉi aṟattiṉ tāyē ! tayānilaiyē ! entāy ! ikal vēntar ēṟē ! iṟantaṉaiyē ? antō ! iṉi , vāymaikku ār uḷarē maṟṟu ? ' eṉṟāṉ .

Report an error

'சொல் பெற்ற நோன்பின் துறையோன் அருள் வேண்டி , நல் பெற்ற வேள்வி , நவை நீங்க , நீ இயற்றி , என் பெற்று , நீ பெற்றது இன் உயிர் போய் நீங்கல் ஓ ? கொல் பெற்ற வெற்றிக் கொலை பெற்ற கூர் வேலோய் ! '

'col peṟṟa nōṉpiṉ tuṟaiyōṉ aruḷ vēṇṭi , nal peṟṟa vēḷvi , navai nīṅka , nī iyaṟṟi , eṉ peṟṟu , nī peṟṟatu iṉ uyir pōy nīṅkal ō ? kol peṟṟa veṟṟik kolai peṟṟa kūr vēlōy ! '

Report an error

'மன் உயிர்க்கு நல்கு உரிமை மண் பாரம் நான் சுமக்கப் பொன் உயிர்க்கும் தாரோய் ! பொறை உயிர்த்த ஆறு இதுவோ ? உன் உயிர்க்கும் கூற்றாய் உலகு ஆள உற்றேன் ஓ ? மின் உயிர்க்கும் தீவாய் வெயில் உயிர்க்கும் வெள் வேலோய் ! '

'maṉ uyirkku nalku urimai maṇ pāram nāṉ cumakkap poṉ uyirkkum tārōy ! poṟai uyirtta āṟu ituvō ? uṉ uyirkkum kūṟṟāy ulaku āḷa uṟṟēṉ ō ? miṉ uyirkkum tīvāy veyil uyirkkum veḷ vēlōy ! '

Report an error

'எம் பரத்தது ஆக்கி அரசுரிமை , இந்தியங்கள் தம் பரத்தில் வீழாத் தவம் இழைத்த ஆறு இது ஓ ? சம்பரப் பேர்த் தானவனைத் தள்ளிச் சதமகற்கு , அன்று , அம்பரத்தின் நீங்கா அரசு அளித்த ஆழியாய் ! '

'em parattatu ākki aracurimai , intiyaṅkaḷ tam parattil vīḻāt tavam iḻaitta āṟu itu ō ? camparap pērt tāṉavaṉait taḷḷic catamakaṟku , aṉṟu , amparattiṉ nīṅkā aracu aḷitta āḻiyāy ! '

Report an error

'வேண்டும் திறத்தாரும் வேண்டா அரசாட்சி பூண்டு , இவ் உலகுக்கு இடர் கொடுத்த புல்லனேன் , மாண்டு முடிவது அல்லால் , மாயா உடம்பு இது கொண்டு , ஆண்டு வருவது இனி , யார் முகத்தே நோக்கவோ ? '

'vēṇṭum tiṟattārum vēṇṭā aracāṭci pūṇṭu , iv ulakukku iṭar koṭutta pullaṉēṉ , māṇṭu muṭivatu allāl , māyā uṭampu itu koṇṭu , āṇṭu varuvatu iṉi , yār mukattē nōkkavō ? '

Report an error

'தேன் அடைந்த சோலைத் திருநாடு கைவிட்டுக் கான் அடைந்தேன் என்னத் தரியாது , காவல ! நீ வான் அடைந்தாய் ; இன்னம் இருந்தேன் நான் , வாழ்வு உகந்து ஏ ; ஊன் அடைந்த தெவ்வர் உயிர் அடைந்த ஒள் வேலோய் ! '

'tēṉ aṭainta cōlait tirunāṭu kaiviṭṭuk kāṉ aṭaintēṉ eṉṉat tariyātu , kāvala ! nī vāṉ aṭaintāy ; iṉṉam iruntēṉ nāṉ , vāḻvu ukantu ē ; ūṉ aṭainta tevvar uyir aṭainta oḷ vēlōy ! '

Report an error

'வண்மையும் , மானமும் , வானவர்க்கும் பேர்க்ககிலாத் திண்மையும் , செங்கோல் நெறியும் , திறம்பாத உண்மையும் , எல்லாம் உடனே கொண்டு ஏகினை ஏ ! தண்மை தகை மதிக்கும் ஈந்த தனி குடையோய் ! '

'vaṇmaiyum , māṉamum , vāṉavarkkum pērkkakilāt tiṇmaiyum , ceṅkōl neṟiyum , tiṟampāta uṇmaiyum , ellām uṭaṉē koṇṭu ēkiṉai ē ! taṇmai takai matikkum īnta taṉi kuṭaiyōy ! '

Report an error

என்று எடுத்துப் பற்பலவும் பன்னி , இடர் உழக்கும் குன்று எடுத்த போலும் குவவுத் தோள் கோள் அரியை , வன் தட கைத் தம்பியரும் , வந்து அடைந்த மன்னவரும் , சென்று எடுத்துத் தாங்கினார் ; மா வதிட்டன் தேற்றினான் .

eṉṟu eṭuttup paṟpalavum paṉṉi , iṭar uḻakkum kuṉṟu eṭutta pōlum kuvavut tōḷ kōḷ ariyai , vaṉ taṭa kait tampiyarum , vantu aṭainta maṉṉavarum , ceṉṟu eṭuttut tāṅkiṉār ; mā vatiṭṭaṉ tēṟṟiṉāṉ .

Report an error

பன் அரிய நோன்பின் பரத்துவனே ஆதியாம் பின்னு சடையோரும் , பேர் உலகம் ஓர் ஏழின் மன்னவரும் , மந்திரியர் எல்லாரும் , வந்து அடைந்தார் ; தன் உரிமைச் சேனைத் தலைவோரும் தாம் அடைந்தார் .

paṉ ariya nōṉpiṉ parattuvaṉē ātiyām piṉṉu caṭaiyōrum , pēr ulakam ōr ēḻiṉ maṉṉavarum , mantiriyar ellārum , vantu aṭaintār ; taṉ urimaic cēṉait talaivōrum tām aṭaintār .

Report an error

மற்றும் வரற்பாலர் எல்லாரும் வந்து அடைந்து , சுற்றும் இருந்த அமைதியினில் , துன்பு உழக்கும் கொற்றக் குரிசில் முகம் நோக்கிக் கோ மலரோன் பெற்ற பெருமைத் தவ முனிவன் பேசுவான் .

maṟṟum varaṟpālar ellārum vantu aṭaintu , cuṟṟum irunta amaitiyiṉil , tuṉpu uḻakkum koṟṟak kuricil mukam nōkkik kō malarōṉ peṟṟa perumait tava muṉivaṉ pēcuvāṉ .

Report an error

'''துறத்தலும் நல் அறத் துறையும் அல்லது , புறத்து ஒரு துணை இலை , பொருந்தும் மன்னுயிர்க்கு , இறத்தலும் பிறத்தலும் இயற்கை ' என்பதை மறத்தி ஓ , மறைகளின் வரம்பு கண்ட நீ ? ''

'''tuṟattalum nal aṟat tuṟaiyum allatu , puṟattu oru tuṇai ilai , poruntum maṉṉuyirkku , iṟattalum piṟattalum iyaṟkai ' eṉpatai maṟatti ō , maṟaikaḷiṉ varampu kaṇṭa nī ? ''

Report an error

''உண்மை இல் பிறவிகள் உலப்பு இல் கோடிகள் தண்மையில் வெம்மையில் தழுவின எனும் வண்மையை நோக்கிய , வலிய கூற்றின்பால் கண்மையும் உளது எனக் கருதல் ஆகுமோ ? ''

''uṇmai il piṟavikaḷ ulappu il kōṭikaḷ taṇmaiyil vemmaiyil taḻuviṉa eṉum vaṇmaiyai nōkkiya , valiya kūṟṟiṉpāl kaṇmaiyum uḷatu eṉak karutal ākumō ? ''

Report an error

''பெறுவதன் முன் உயிர் பிரிதல் காண்டியால் , மறு அறு கற்பினில் வையம் யாவையும் அறுவதினாயிரம் ஆண்டும் ஆண்டவன் இறுவது கண்டு , அவற்கு இரங்கல் வேண்டுமோ ? ''

''peṟuvataṉ muṉ uyir pirital kāṇṭiyāl , maṟu aṟu kaṟpiṉil vaiyam yāvaiyum aṟuvatiṉāyiram āṇṭum āṇṭavaṉ iṟuvatu kaṇṭu , avaṟku iraṅkal vēṇṭumō ? ''

Report an error

''சீலமும் , தருமமும் சிதைவு இல் செய்கையாய் ! சூலமும் , திகிரியும் , சொல்லும் தாங்கிய , மூலம் வந்து உதவிய , மூவர்க்கு ஆயினும் , காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ ? ''

''cīlamum , tarumamum citaivu il ceykaiyāy ! cūlamum , tikiriyum , collum tāṅkiya , mūlam vantu utaviya , mūvarkku āyiṉum , kālam eṉṟu oru valai kaṭakkal ākumō ? ''

Report an error

''கண் முதல் காட்சிய , கரை இல் நீளத்த , உள் முதல் பொருட்கு எலாம் ஊற்றம் ஆவன , மண் முதல் பூதங்கள் மாயும் என்ற போது , எண் முதல் உயிர்க்கு நீ இரங்கல் வேண்டும் ஓ ? ''

''kaṇ mutal kāṭciya , karai il nīḷatta , uḷ mutal poruṭku elām ūṟṟam āvaṉa , maṇ mutal pūtaṅkaḷ māyum eṉṟa pōtu , eṇ mutal uyirkku nī iraṅkal vēṇṭum ō ? ''

Report an error

''புண்ணிய நறு நெயில் , பொரு இல் காலம் ஆம் திண்ணிய திரியினில் , விதி என் தீயினில் , எண்ணிய விளக்கு அவை இரண்டும் எஞ்சினால் , அண்ணலே ! அவிவதற்கு ஐயம் யாவதோ ? ''

''puṇṇiya naṟu neyil , poru il kālam ām tiṇṇiya tiriyiṉil , viti eṉ tīyiṉil , eṇṇiya viḷakku avai iraṇṭum eñciṉāl , aṇṇalē ! avivataṟku aiyam yāvatō ? ''

Report an error

''இவ் உலகத்தினும் இடர் உளே கிடந்து , அவ் உலகத்தினும் நரகில் ஆழ்ந்து , தம் வெவ் வினை துய்ப்பன விரிந்த யோனிகள் , எவ் அளவில் செல எண்ணல் ஆகுமோ ? ''

''iv ulakattiṉum iṭar uḷē kiṭantu , av ulakattiṉum narakil āḻntu , tam vev viṉai tuyppaṉa virinta yōṉikaḷ , ev aḷavil cela eṇṇal ākumō ? ''

Report an error

''உண்டு கொல் இது அலது உதவி நீ செய்வது ? எண் தகு குணத்தினாய் ! தாதை என்றலால் , புண்டரீகத் தனி முதற்கும் போக்கு அரு விண்டுவின் உலகு இடை விளங்கினான் அரோ ! ''

''uṇṭu kol itu alatu utavi nī ceyvatu ? eṇ taku kuṇattiṉāy ! tātai eṉṟalāl , puṇṭarīkat taṉi mutaṟkum pōkku aru viṇṭuviṉ ulaku iṭai viḷaṅkiṉāṉ arō ! ''

Report an error

''ஐய ! நீ யாது ஒன்றும் அவலிப்பாய் அலை ; உய் திறம் அவற்கு இனி இதனின் ஊங்கு உண்டோ ? செய்வன வரன் முறை திருத்திச் சேந்த பின் கையினால் ஒழுக்குதி கடன் எலாம் '' என்றான் .

''aiya ! nī yātu oṉṟum avalippāy alai ; uy tiṟam avaṟku iṉi itaṉiṉ ūṅku uṇṭō ? ceyvaṉa varaṉ muṟai tiruttic cēnta piṉ kaiyiṉāl oḻukkuti kaṭaṉ elām '' eṉṟāṉ .

Report an error

''விண்ணு நீர் மொக்குளின் விளியும் யாக்கையை எண்ணி நீ அழுங்குதல் இழுதைப் பாலதால் ; கண்ணின் நீர் உகுத்தலின் கண்டது இல்லை ; போய் மண்ணு நீர் உகுத்தி , நீ , மலர் கையால் '' என்றான் .

''viṇṇu nīr mokkuḷiṉ viḷiyum yākkaiyai eṇṇi nī aḻuṅkutal iḻutaip pālatāl ; kaṇṇiṉ nīr ukuttaliṉ kaṇṭatu illai ; pōy maṇṇu nīr ukutti , nī , malar kaiyāl '' eṉṟāṉ .

Report an error

என்ற பின் , ஏந்தலை ஏந்தி , வேந்தரும் , பொன் திணிந்து அன சடைப் புனிதனோடும் , போய்ச் சென்றனர் செறி திரைப் புனலில் ; 'செய்க ' என , நின்றனர் இராமனும் , நெறியை நோக்கினான் .

eṉṟa piṉ , ēntalai ēnti , vēntarum , poṉ tiṇintu aṉa caṭaip puṉitaṉōṭum , pōyc ceṉṟaṉar ceṟi tiraip puṉalil ; 'ceyka ' eṉa , niṉṟaṉar irāmaṉum , neṟiyai nōkkiṉāṉ .

Report an error

புக்கனன் புனலினில் , முழுகிப் போந்தனன் , தக்க நல் மறையவன் சடங்கு காட்டத் தான் முக்கையின் நீர் விதி முறையின் ஈந்தனன் , ஒக்க நின்று உயிர் தொறும் உணர்வு நல்குவான் .

pukkaṉaṉ puṉaliṉil , muḻukip pōntaṉaṉ , takka nal maṟaiyavaṉ caṭaṅku kāṭṭat tāṉ mukkaiyiṉ nīr viti muṟaiyiṉ īntaṉaṉ , okka niṉṟu uyir toṟum uṇarvu nalkuvāṉ .

Report an error

ஆனவன் பிற உள யாவும் ஆற்றிப் பின் மான மந்திரத்தவர் , மன்னர் , மாதவர் , ஏனையர் பிறர்களும் , சுற்ற ஏகினன் , சானகி இருந்த அச் சாலை எய்தினான் .

āṉavaṉ piṟa uḷa yāvum āṟṟip piṉ māṉa mantirattavar , maṉṉar , mātavar , ēṉaiyar piṟarkaḷum , cuṟṟa ēkiṉaṉ , cāṉaki irunta ac cālai eytiṉāṉ .

Report an error

எய்திய வேலையில் , தமியள் எய்திய தையலை நோக்கினன் , சாலை நோக்கினான் , கைகளின் கண்மலர் புடைத்துக் கால் மிசை , ஐயன் , அப்பரதன் , வீழ்ந்து அரற்றினான் அரோ .

eytiya vēlaiyil , tamiyaḷ eytiya taiyalai nōkkiṉaṉ , cālai nōkkiṉāṉ , kaikaḷiṉ kaṇmalar puṭaittuk kāl micai , aiyaṉ , apparataṉ , vīḻntu araṟṟiṉāṉ arō .

Report an error

வெம் துயர் தொடர்தர , விம்மி விம்மி , நீர் உந்திய நிரந்தரம் , ஊற்று மாற்றில சிந்திய , குரிசில் அச் செம்மல் சேந்த கண் , இந்தியங்களில் எறி கடல் உண்டு என்னவே .

vem tuyar toṭartara , vimmi vimmi , nīr untiya nirantaram , ūṟṟu māṟṟila cintiya , kuricil ac cemmal cēnta kaṇ , intiyaṅkaḷil eṟi kaṭal uṇṭu eṉṉavē .

Report an error

அந்நெடும் துயர் உறும் அரிய வீரனைத் தன் நெடும் தடக்கையால் இராமன் தாங்கினான் , நல் நெடும் கூந்தலை நோக்கி , 'நாயகன் , என் நெடும் பிரிவினால் , துஞ்சினான் ' என்றான் .

anneṭum tuyar uṟum ariya vīraṉait taṉ neṭum taṭakkaiyāl irāmaṉ tāṅkiṉāṉ , nal neṭum kūntalai nōkki , 'nāyakaṉ , eṉ neṭum piriviṉāl , tuñciṉāṉ ' eṉṟāṉ .

Report an error

துண்ணொனும் நெஞ்சினாள் துளங்கினாள் , துணைக் கண் எனும் கடல் நெடும் கலுழி கான்றிட , மண் எனும் செவிலிமேல் வைத்த கையினாள் , பண் எனும் கிளவியால் பன்னி , ஏங்கினாள் .

tuṇṇoṉum neñciṉāḷ tuḷaṅkiṉāḷ , tuṇaik kaṇ eṉum kaṭal neṭum kaluḻi kāṉṟiṭa , maṇ eṉum cevilimēl vaitta kaiyiṉāḷ , paṇ eṉum kiḷaviyāl paṉṉi , ēṅkiṉāḷ .

Report an error

கல் நகு திரள் புயக் கணவன் பின் செல , நல் நகர் ஒத்தது நடந்த கானமும் ; 'மன்னவன் துஞ்சினன் ' என்ற மாற்றத்தால் , அன்னமும் துயர் கடல் அடி வைத்தாள் , அரோ !

kal naku tiraḷ puyak kaṇavaṉ piṉ cela , nal nakar ottatu naṭanta kāṉamum ; 'maṉṉavaṉ tuñciṉaṉ ' eṉṟa māṟṟattāl , aṉṉamum tuyar kaṭal aṭi vaittāḷ , arō !

Report an error

ஆயவள் தன்னை நேர்ந்து அங்கை ஏந்தினர் , தாயரின் , முனிவர் தம் தருமப் பன்னியர் , தூய நீர் ஆட்டினர் , துயரம் நீக்கினர் , நாயகற் சேர்த்தினர் , நவையுள் நீங்கினார் .

āyavaḷ taṉṉai nērntu aṅkai ēntiṉar , tāyariṉ , muṉivar tam tarumap paṉṉiyar , tūya nīr āṭṭiṉar , tuyaram nīkkiṉar , nāyakaṟ cērttiṉar , navaiyuḷ nīṅkiṉār .

Report an error

தேன் தரும் தெரியல் அச் செம்மல் நால்வரை ஈன்றவர் மூவரோடு , இருமை நோக்குறும் சான்றவர் குழாம் அத்து ஒடு உம் , தருமம் நோக்கிய தோன்றல் பால் , சுமந்திரன் தொழுது தோன்றினான் .

tēṉ tarum teriyal ac cemmal nālvarai īṉṟavar mūvarōṭu , irumai nōkkuṟum cāṉṟavar kuḻām attu oṭu um , tarumam nōkkiya tōṉṟal pāl , cumantiraṉ toḻutu tōṉṟiṉāṉ .

Report an error

'எந்தை யாண்டையான் ? இயம்புவீர் ! ' எனா , வந்த தாயர் தம் வயங்கு சேவடி சிந்தி நின்றனன் சேந்த கண்ண நீர் , முந்தை நான்முகத்தவற்கும் முந்தையான் .

'entai yāṇṭaiyāṉ ? iyampuvīr ! ' eṉā , vanta tāyar tam vayaṅku cēvaṭi cinti niṉṟaṉaṉ cēnta kaṇṇa nīr , muntai nāṉmukattavaṟkum muntaiyāṉ .

Report an error

தாயரும் தலைப் பெய்து தாம் தழீஇ , ஓய்வு இல் துன்பினால் உரறல் ஓங்கினார் ; ஆய சேனையும் , அணங்கு அனார்களும் , தீயில் வீழ்ந்து தீ மெழுகின் , தேம்பினார் .

tāyarum talaip peytu tām taḻīi , ōyvu il tuṉpiṉāl uraṟal ōṅkiṉār ; āya cēṉaiyum , aṇaṅku aṉārkaḷum , tīyil vīḻntu tī meḻukiṉ , tēmpiṉār .

Report an error

பின் அவ் வீரரைப் பெற்ற பெற்றி அப் பொன் அனார்களும் சனகன் பூவையைத் துன்னி , மார்பு உறத் தொடர்ந்து புல்லினார் , இன்னல் வேலை புக்கு இழிந்து அழுந்துவார் .

piṉ av vīraraip peṟṟa peṟṟi ap poṉ aṉārkaḷum caṉakaṉ pūvaiyait tuṉṉi , mārpu uṟat toṭarntu pulliṉār , iṉṉal vēlai pukku iḻintu aḻuntuvār .

Report an error

சேனை வீரரும் , திரு நல் மா நகர் மால் நை மாந்தரும் , மற்று உளோர்களும் , ஏனை வேந்தரும் , பிறரும் , யாவரும் கோனை எய்தினார் , குறையும் சிந்தையார் .

cēṉai vīrarum , tiru nal mā nakar māl nai māntarum , maṟṟu uḷōrkaḷum , ēṉai vēntarum , piṟarum , yāvarum kōṉai eytiṉār , kuṟaiyum cintaiyār .

Report an error

படம் செய் நாகம் அணை பள்ளி நீங்கினான் இடம் செய் தொல் குலத்து இறைவன் ஆதலால் , தடம் செய் தேரினான் , தானும் நீரினால் கடம் செய்வான் எனக் கடலின் மூழ்கினான் .

paṭam cey nākam aṇai paḷḷi nīṅkiṉāṉ iṭam cey tol kulattu iṟaivaṉ ātalāl , taṭam cey tēriṉāṉ , tāṉum nīriṉāl kaṭam ceyvāṉ eṉak kaṭaliṉ mūḻkiṉāṉ .

Report an error

அன்று தீர்ந்தபின் , அரச வேலையும் , துன்று செஞ்சடைத் தவரும் , சுற்றமும் , தன் துணைத் திருத் தம்பிமார்களும் , சென்று சூழ , ஆண்டு இருந்த செம்மல் தான் .

aṉṟu tīrntapiṉ , araca vēlaiyum , tuṉṟu ceñcaṭait tavarum , cuṟṟamum , taṉ tuṇait tirut tampimārkaḷum , ceṉṟu cūḻa , āṇṭu irunta cemmal tāṉ .

Report an error

'வரதன் துஞ்சினான் ; வையம் ஆணையால் சரதம் நின்னதே ; மகுடம் தாங்கலாய் , விரத வேடம் நீ என் கொல் வேண்டுவான் ? பரத ! கூறு ' எனாப் பரிந்து கூறினான் .

'varataṉ tuñciṉāṉ ; vaiyam āṇaiyāl caratam niṉṉatē ; makuṭam tāṅkalāy , virata vēṭam nī eṉ kol vēṇṭuvāṉ ? parata ! kūṟu ' eṉāp parintu kūṟiṉāṉ .

Report an error

என்றலும் , பதைத்து எழுந்து , கைதொழா நின்று , தோன்றலை நெடிது நோக்கி , 'நீ அன்றி யாவரே அறத்து உளோர் ? அதில் பின்றுவாய் கொலாம் ? ' என்னப் பேசுவான் .

eṉṟalum , pataittu eḻuntu , kaitoḻā niṉṟu , tōṉṟalai neṭitu nōkki , 'nī aṉṟi yāvarē aṟattu uḷōr ? atil piṉṟuvāy kolām ? ' eṉṉap pēcuvāṉ .

Report an error

'மனக்கு ஒன்றாதன வரத்தின் , நின்னையும் நினக்கு ஒன்றா நிலை நிறுவி , நேமியான் தனைக் கொன்றாள் தரும் தனையன் ஆதலால் , எனக்கு ஒன்றா , தவம் அடுப்பது எண்ணினால் . '

'maṉakku oṉṟātaṉa varattiṉ , niṉṉaiyum niṉakku oṉṟā nilai niṟuvi , nēmiyāṉ taṉaik koṉṟāḷ tarum taṉaiyaṉ ātalāl , eṉakku oṉṟā , tavam aṭuppatu eṇṇiṉāl . '

Report an error

'நோவது ஆக இவ் உலகை நோய் செய்த பாவ காரியின் பிறந்த பாவியேன் , சாவது ஓர்கிலேன் , தவம் செய்வேன் அலேன் , யாவன் ஆகி , இப் பழி நின்று ஏறுவேன் ? '

'nōvatu āka iv ulakai nōy ceyta pāva kāriyiṉ piṟanta pāviyēṉ , cāvatu ōrkilēṉ , tavam ceyvēṉ alēṉ , yāvaṉ āki , ip paḻi niṉṟu ēṟuvēṉ ? '

Report an error

'நிறையின் நீங்கிய மகளிர் நீர்மையும் , பொறையின் நீங்கிய தவமும் , பொங்கு அருள் துறையின் நீங்கிய அறமும் , தொல்லையோர் முறையின் நீங்கிய அரசின் முந்துமோ ? '

'niṟaiyiṉ nīṅkiya makaḷir nīrmaiyum , poṟaiyiṉ nīṅkiya tavamum , poṅku aruḷ tuṟaiyiṉ nīṅkiya aṟamum , tollaiyōr muṟaiyiṉ nīṅkiya araciṉ muntumō ? '

Report an error

'பிறந்து நீயுடைப் பிரிவு இல் தொல் அறம் துறந்து மாதவம் தொடங்குவாய் என்றால் , மறந்தும் நீதியில் திறம்பி , வாளின் கொன்று அறம் தின்றான் என , அரசு அது ஆள்வென் ஓ ? '

'piṟantu nīyuṭaip pirivu il tol aṟam tuṟantu mātavam toṭaṅkuvāy eṉṟāl , maṟantum nītiyil tiṟampi , vāḷiṉ koṉṟu aṟam tiṉṟāṉ eṉa , aracu atu āḷveṉ ō ? '

Report an error

'தொகை இல் அன்பினால் இறைவன் துஞ்ச , நீ புகையும் வெஞ்சுரம் புகுதப் புந்தியால் வகை இல் வஞ்சனாய் அரசு வௌவ , யான் பகைவனே கொலாம் இறவு பார்க்கின்றேன் ? '

'tokai il aṉpiṉāl iṟaivaṉ tuñca , nī pukaiyum veñcuram pukutap puntiyāl vakai il vañcaṉāy aracu vauva , yāṉ pakaivaṉē kolām iṟavu pārkkiṉṟēṉ ? '

Report an error

'உந்தை தீமையும் , உலகு உறாத நோய் தந்த தீவினைத் தாய் செய் தீமையும் , எந்தை ! நீங்க , மீண்டு அரசு செய்க ' எனாச் சிந்தை யாவதும் தெரியக் கூறினான் .

'untai tīmaiyum , ulaku uṟāta nōy tanta tīviṉait tāy cey tīmaiyum , entai ! nīṅka , mīṇṭu aracu ceyka ' eṉāc cintai yāvatum teriyak kūṟiṉāṉ .

Report an error

சொற்ற வாசகத் துணிவு உணர்ந்த பின் , 'இற்றதோ இவன் மனம் ! ' என்று எண்ணுவான் , 'வெற்றி வீர ! யான் விளம்பக் கேள் ' எனா , முற்ற நோக்கினான் மொழிதல் மேயினான் .

coṟṟa vācakat tuṇivu uṇarnta piṉ , 'iṟṟatō ivaṉ maṉam ! ' eṉṟu eṇṇuvāṉ , 'veṟṟi vīra ! yāṉ viḷampak kēḷ ' eṉā , muṟṟa nōkkiṉāṉ moḻital mēyiṉāṉ .

Report an error

'முறையும் , வாய்மையும் , முயலும் நீதியும் , அறையும் மேன்மையோடு அறனும் ஆதியாம் துறையுள் யாவையும் , சுருதி நூல் விடா இறைவர் ஏவலால் இயைவ காண்டியால் . '

'muṟaiyum , vāymaiyum , muyalum nītiyum , aṟaiyum mēṉmaiyōṭu aṟaṉum ātiyām tuṟaiyuḷ yāvaiyum , curuti nūl viṭā iṟaivar ēvalāl iyaiva kāṇṭiyāl . '

Report an error

'பரவு கேள்வியும் , பழுது இல் ஞானமும் , விரவு சீலமும் , வினையின் மேன்மையும் , உர விலோய் ! தொழற்கு உரிய தேவரும் , குரவரே எனப் பெரிது கோடி ஆல் . '

'paravu kēḷviyum , paḻutu il ñāṉamum , viravu cīlamum , viṉaiyiṉ mēṉmaiyum , ura vilōy ! toḻaṟku uriya tēvarum , kuravarē eṉap peritu kōṭi āl . '

Report an error

'அந்த நல் பெருங் குரவர் ஆர் எனச் சிந்தை தேர்வு உற தெரிய நோக்கினால் , தந்தை தாயர் என்று இவர்கள் தாம் அலால் , எந்தை ! கூற வேறு எவரும் இல்லை ஆல் . '

'anta nal peruṅ kuravar ār eṉac cintai tērvu uṟa teriya nōkkiṉāl , tantai tāyar eṉṟu ivarkaḷ tām alāl , entai ! kūṟa vēṟu evarum illai āl . '

Report an error

'தாய் வரம் கொளத் தந்தை ஏவலால் மேய நம் குலத் தருமம் மேவினேன் ; நீ வரம் கொளத் தவிர்தல் நீர்மையோ ? ஆய்வு அரும் புலத்து அறிவு மேவினாய் ! '

'tāy varam koḷat tantai ēvalāl mēya nam kulat tarumam mēviṉēṉ ; nī varam koḷat tavirtal nīrmaiyō ? āyvu arum pulattu aṟivu mēviṉāy ! '

Report an error

'தனையர் ஆயினார் தந்தை தாயரை வினையின் நல்லது ஓர் இசையை வேய்தலோ , நினையல் ஓவிடா நெடிய வன் பழி புனிதலோ , ஐய ! புதல்வர் ஆதல்தான் ? '

'taṉaiyar āyiṉār tantai tāyarai viṉaiyiṉ nallatu ōr icaiyai vēytalō , niṉaiyal ōviṭā neṭiya vaṉ paḻi puṉitalō , aiya ! putalvar ātaltāṉ ? '

Report an error

'இம்மை பொய் உரைத்து இவறி , எந்தையார் அம்மை வெம்மை சேர் நரகம் ஆள , யான் கொம்மை வெம் முலைக் குவையின் வைகி வாழ் செம்மை சேர் நிலம் அத்து அரசு செய்வெனோ ? '

'immai poy uraittu ivaṟi , entaiyār ammai vemmai cēr narakam āḷa , yāṉ kommai vem mulaik kuvaiyiṉ vaiki vāḻ cemmai cēr nilam attu aracu ceyveṉō ? '

Report an error

'வரன் நில் உந்தை சொல் மரபினால் , உடைத் தரணி நின்னது என்று இயைந்த தன்மையால் , உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால் , அரசு நின்னதே , ஆள்க ' என்ன வே .

'varaṉ nil untai col marapiṉāl , uṭait taraṇi niṉṉatu eṉṟu iyainta taṉmaiyāl , uraṉiṉ nī piṟantu urimai ātalāl , aracu niṉṉatē , āḷka ' eṉṉa vē .

Report an error

'முன்னர் வந்து உதித்து , உலகம் மூன்றினும் நின்னை ஒப்பு இலா நீ பிறந்த பார் என்னது ஆகில் , யான் இன்று தந்தனென் ; மன்ன ! போந்து நீ மகுடம் சூடு ' எனா .

'muṉṉar vantu utittu , ulakam mūṉṟiṉum niṉṉai oppu ilā nī piṟanta pār eṉṉatu ākil , yāṉ iṉṟu tantaṉeṉ ; maṉṉa ! pōntu nī makuṭam cūṭu ' eṉā .

Report an error

'மலங்கி வையகம் வருந்தி வைக , நீ , உலம் கொள் தோள் உனக்கு , உறுவ செய்தி ஓ ? கலங்குறா வணம் காத்தி போந்து ' எனாப் பொலம் குலாவு தாள் பூண்டு , வேண்டினான் .

'malaṅki vaiyakam varunti vaika , nī , ulam koḷ tōḷ uṉakku , uṟuva ceyti ō ? kalaṅkuṟā vaṇam kātti pōntu ' eṉāp polam kulāvu tāḷ pūṇṭu , vēṇṭiṉāṉ .

Report an error

'பசைந்த சிந்தை நீ பரிவின் வையம் என் வசம் செய்தால் , அது முறைமையோ ? வசைக்கு அசைந்த எந்தையார் அருள , அன்று , நான் , இசைந்த ஆண்டு எலாம் இன்றொடு ஏறும் ஓ ? '

'pacainta cintai nī pariviṉ vaiyam eṉ vacam ceytāl , atu muṟaimaiyō ? vacaikku acainta entaiyār aruḷa , aṉṟu , nāṉ , icainta āṇṭu elām iṉṟoṭu ēṟum ō ? '

Report an error

'வாய்மை என்னும் ஈது அன்றி , வையகம் தூய்மை என்றும் ஒன்று உண்மை சொல்லும் ஓ ? தீமை தான் அதில் தீர்தல் ; அன்றியே , ஆய் , மெய் ஆக , வேறு அறையல் ஆவது ஏ ? '

'vāymai eṉṉum ītu aṉṟi , vaiyakam tūymai eṉṟum oṉṟu uṇmai collum ō ? tīmai tāṉ atil tīrtal ; aṉṟiyē , āy , mey āka , vēṟu aṟaiyal āvatu ē ? '

Report an error

'எந்தை ஏவ , ஆண்டு ஏழொடு ஏழ் எனா வந்த காலம் நான் வனத்துள் வைக , நீ , தந்த பாரகம் தன்னை , மெய்ம்மையால் அந்த நாள் எலாம் ஆள் , என் ஆணை , ஆல் . '

'entai ēva , āṇṭu ēḻoṭu ēḻ eṉā vanta kālam nāṉ vaṉattuḷ vaika , nī , tanta pārakam taṉṉai , meymmaiyāl anta nāḷ elām āḷ , eṉ āṇai , āl . '

Report an error

'மன்னவன் இருக்க ஏ உம் , ''மணி அணி மகுடம் சூடுக '' என்ன , யான் இயைந்தது , அன்னான் ஏயது மறுக்க அஞ்சி ; அன்னது நினைந்து நீ என் ஆணையை மறுக்கல் ஆம் ஓ ? சொன்னது செய்தி , ஐய ! துயர் உழந்து அயரல் ! ' என்றான் .

'maṉṉavaṉ irukka ē um , ''maṇi aṇi makuṭam cūṭuka '' eṉṉa , yāṉ iyaintatu , aṉṉāṉ ēyatu maṟukka añci ; aṉṉatu niṉaintu nī eṉ āṇaiyai maṟukkal ām ō ? coṉṉatu ceyti , aiya ! tuyar uḻantu ayaral ! ' eṉṟāṉ .

Report an error

ஒள்ளியோன் இனைய எல்லாம் உரைத்தலும் , உரைக்கல் உற்ற பள்ளம் நீர் வெள்ளம் அன்ன பரதனை விலக்கிப் பண்டு தெள்ளிய குலத்தோர் செய்கை சிக்கு அறச் சிந்தை நோக்கி , 'வள்ளியோய் ! கேட்டி ' என்னா , வசிட்ட மா முனிவன் சொன்னான் .

oḷḷiyōṉ iṉaiya ellām uraittalum , uraikkal uṟṟa paḷḷam nīr veḷḷam aṉṉa parataṉai vilakkip paṇṭu teḷḷiya kulattōr ceykai cikku aṟac cintai nōkki , 'vaḷḷiyōy ! kēṭṭi ' eṉṉā , vaciṭṭa mā muṉivaṉ coṉṉāṉ .

Report an error

'கிளர் அகன் புனலுள் நின்று , அரி , ஓர் கேழல் ஆய் , இளை எனும் திருவினை ஏந்தினான் அரோ , உளைவு அரும் பெருமை ஓர் எயிற்றின் உள் புரை வளர் இளம் பிறை இடை மறுவின் தோன்றவே . '

'kiḷar akaṉ puṉaluḷ niṉṟu , ari , ōr kēḻal āy , iḷai eṉum tiruviṉai ēntiṉāṉ arō , uḷaivu arum perumai ōr eyiṟṟiṉ uḷ purai vaḷar iḷam piṟai iṭai maṟuviṉ tōṉṟavē . '

Report an error

'ஆதிய அமைதியின் இறுதி , ஐம்பெரும் பூதமும் வெளி ஒழித்து எவையும் புக்க பின் நாதன் அவ் அகன் புனல் நல்கி , நண்ணரும் சோதி ஆம் தன்மையின் துயிறல் மேயினான் . '

'ātiya amaitiyiṉ iṟuti , aimperum pūtamum veḷi oḻittu evaiyum pukka piṉ nātaṉ av akaṉ puṉal nalki , naṇṇarum cōti ām taṉmaiyiṉ tuyiṟal mēyiṉāṉ . '

Report an error

'ஏற்ற இ தன்மையின் , அமரர்க்கு இன் அமுது ஊற்றுடைக் கடல்வணன் உந்தி உந்திய நூற்று இதழ்க் கமலம் அத்து இன் , நொய்தின் யாவையும் தோற்றுவித்து உதவிட , முதல்வன் தோன்றினான் . '

'ēṟṟa i taṉmaiyiṉ , amararkku iṉ amutu ūṟṟuṭaik kaṭalvaṇaṉ unti untiya nūṟṟu itaḻk kamalam attu iṉ , noytiṉ yāvaiyum tōṟṟuvittu utaviṭa , mutalvaṉ tōṉṟiṉāṉ . '

Report an error

'அன்று அவன் உலகினை அளிக்க , ஆகியது உன் தனிக் குலம் முதல் ; உள்ள வேந்தர்கள் இன்று அளவினும் முறை இகந்து உளார் இலை ; ஒன்று உளது உரை இனம் , உணரக் கேட்டி யால் . '

'aṉṟu avaṉ ulakiṉai aḷikka , ākiyatu uṉ taṉik kulam mutal ; uḷḷa vēntarkaḷ iṉṟu aḷaviṉum muṟai ikantu uḷār ilai ; oṉṟu uḷatu urai iṉam , uṇarak kēṭṭi yāl . '

Report an error

'இத இயல் இயற்றிய குரவர் யாரினும் மத இயல் களிற்றினாய் ! ''மறு இல் விஞ்சைகள் பதவிய இருமையும் பயக்கப் பண்பினால் உதவிய ஒருவனே உயரும் '' என்பரால் . '

'ita iyal iyaṟṟiya kuravar yāriṉum mata iyal kaḷiṟṟiṉāy ! ''maṟu il viñcaikaḷ pataviya irumaiyum payakkap paṇpiṉāl utaviya oruvaṉē uyarum '' eṉparāl . '

Report an error

'என்றலால் யான் உனை எடுத்து விஞ்சைகள் ஒன்று அலாதன பல உதவிற்று உண்மையால் , அன்று எனது , இன்று எனது ஆணை , ஐய ! நீ நன்று போந்து அளி , உனக்கு உரிய நாடு ' என்றான் .

'eṉṟalāl yāṉ uṉai eṭuttu viñcaikaḷ oṉṟu alātaṉa pala utaviṟṟu uṇmaiyāl , aṉṟu eṉatu , iṉṟu eṉatu āṇai , aiya ! nī naṉṟu pōntu aḷi , uṉakku uriya nāṭu ' eṉṟāṉ .

Report an error

'கூறிய முனிவனைக் குளிர்ந்த தாமரை சீறிய கைகளால் தொழுது , செங்கணான் , 'ஆறிய சிந்தனை அறிஞ ! ஒன்று உரை கூறுவது உளது ' எனக் கூறல் மேயினான் .

'kūṟiya muṉivaṉaik kuḷirnta tāmarai cīṟiya kaikaḷāl toḻutu , ceṅkaṇāṉ , 'āṟiya cintaṉai aṟiña ! oṉṟu urai kūṟuvatu uḷatu ' eṉak kūṟal mēyiṉāṉ .

Report an error

'சான்றவர் ஆக , தன் குரவர் ஆக , தாய் போன்றவர் ஆக , பொன் புதல்வர் ஆக தான் , தேன் தரு மலர் உளான் சிறுவ ! செய்வென் என்று ஏன்றபின் , அவ் உரை மறுக்கும் ஈட்டதோ ? '

'cāṉṟavar āka , taṉ kuravar āka , tāy pōṉṟavar āka , poṉ putalvar āka tāṉ , tēṉ taru malar uḷāṉ ciṟuva ! ceyveṉ eṉṟu ēṉṟapiṉ , av urai maṟukkum īṭṭatō ? '

Report an error

'தாய் பணித்து உவந்தன , தந்தை செய்கென ஏய , எ பொருள்களும் இறைஞ்சி மேல் கொளா தீய அப் புலையனின் , செய்கை தேர்கிலா நாய் எனத் திரிவது நல்லது அல்லதோ ? '

'tāy paṇittu uvantaṉa , tantai ceykeṉa ēya , e poruḷkaḷum iṟaiñci mēl koḷā tīya ap pulaiyaṉiṉ , ceykai tērkilā nāy eṉat tirivatu nallatu allatō ? '

Report an error

'முன் உறப் பணித்தவர் மொழியை யான் என சென்னியில் கொண்டு , ''அது செய்வென் '' என்றதன் பின் உறப் பணித்தனை , பெருமையோய் ! எனக்கு என் இனிச் செய்வகை ? உரைசெய் ஈங்கு ' என்றான் .

'muṉ uṟap paṇittavar moḻiyai yāṉ eṉa ceṉṉiyil koṇṭu , ''atu ceyveṉ '' eṉṟataṉ piṉ uṟap paṇittaṉai , perumaiyōy ! eṉakku eṉ iṉic ceyvakai ? uraicey īṅku ' eṉṟāṉ .

Report an error

முனிவனும் 'உரைப்பது ஓர் முறைமை கண்டிலம் இனி ' என இருந்தனன் ; இளைய மைந்தனும் , 'அனையதேல் ஆள்பவர் ஆள்க நாடு ; நான் பனி படர் காடு உடன் படர்தல் மெய் ' என்றான் .

muṉivaṉum 'uraippatu ōr muṟaimai kaṇṭilam iṉi ' eṉa iruntaṉaṉ ; iḷaiya maintaṉum , 'aṉaiyatēl āḷpavar āḷka nāṭu ; nāṉ paṉi paṭar kāṭu uṭaṉ paṭartal mey ' eṉṟāṉ .

Report an error

அ வழி இமையவர் அறிந்து கூடினார் , 'இ வழி இராமனை இவன் கொண்டு ஏகுமேல் , செம் வழித்து அன்று நம் செயல் ' என்று எண்ணினார் , கவ்வையர் , விசும்பு இடை கழறல் மேயினார் .

a vaḻi imaiyavar aṟintu kūṭiṉār , 'i vaḻi irāmaṉai ivaṉ koṇṭu ēkumēl , cem vaḻittu aṉṟu nam ceyal ' eṉṟu eṇṇiṉār , kavvaiyar , vicumpu iṭai kaḻaṟal mēyiṉār .

Report an error

'ஏத்தரும் பெரும் குணத்து இராமன் இவ் வழி போத்து அரும் தாதை சொல் புரக்கும் பூட்சியான் ஆத்த ஆண்டு ஏழினோடு ஏழும் அந் நிலம் காத்தல் உன் கடன் ; இவை கடமை ' என்றனர் .

'ēttarum perum kuṇattu irāmaṉ iv vaḻi pōttu arum tātai col purakkum pūṭciyāṉ ātta āṇṭu ēḻiṉōṭu ēḻum an nilam kāttal uṉ kaṭaṉ ; ivai kaṭamai ' eṉṟaṉar .

Report an error

வானவர் உரைத்தலும் , 'மறுக்கற்பாலது அன்று ; யான் உனை இரந்தனென் , இனி என் ஆணையால் ஆனது ஓர் அமைதியின் அளித்தி பார் ' எனா , தான் அவன் துணை மலர்த் தடக்கை பற்றினான் .

vāṉavar uraittalum , 'maṟukkaṟpālatu aṉṟu ; yāṉ uṉai irantaṉeṉ , iṉi eṉ āṇaiyāl āṉatu ōr amaitiyiṉ aḷitti pār ' eṉā , tāṉ avaṉ tuṇai malart taṭakkai paṟṟiṉāṉ .

Report an error

'ஆம் எனில் , ஏழ் இரண்டு ஆண்டில் , ஐய ! நீ நாம நீர் நெடு நகர் நண்ணி நானிலம் கோ முறை புரிகிலை என்னின் , கூர் எரிச் சாம் , இது சரதம் ! நின் ஆணை சாற்றினேன் ! '

'ām eṉil , ēḻ iraṇṭu āṇṭil , aiya ! nī nāma nīr neṭu nakar naṇṇi nāṉilam kō muṟai purikilai eṉṉiṉ , kūr eric cām , itu caratam ! niṉ āṇai cāṟṟiṉēṉ ! '

Report an error

என்பது சொல்லிய பரதன் , யாதும் ஓர் துன்பிலன் அவனது துணிவை நோக்கினான் ; அன்பினன் , உருகினன் , 'அன்னது ஆக ' என்றான் , தன்புகழ் தன்னினும் பெரிய தன்மையான் .

eṉpatu colliya parataṉ , yātum ōr tuṉpilaṉ avaṉatu tuṇivai nōkkiṉāṉ ; aṉpiṉaṉ , urukiṉaṉ , 'aṉṉatu āka ' eṉṟāṉ , taṉpukaḻ taṉṉiṉum periya taṉmaiyāṉ .

Report an error

விம்மினன் பரதனும் , வேறு செய்வது ஒன்று இன்மையின் , 'அரிது ' என எண்ணி ஏங்குவான் , 'செம்மையின் திரு வடி தலம் தந்தீக ' என எம்மையும் தருவன இரண்டும் நல்கினான் .

vimmiṉaṉ parataṉum , vēṟu ceyvatu oṉṟu iṉmaiyiṉ , 'aritu ' eṉa eṇṇi ēṅkuvāṉ , 'cemmaiyiṉ tiru vaṭi talam tantīka ' eṉa emmaiyum taruvaṉa iraṇṭum nalkiṉāṉ .

Report an error

அடி தலம் இரண்டையும் அழுத கண்ணினான் , முடி தலம் இவை என முறையின் சூடினான் ; படி தலம் அத்து இறைஞ்சினன் , பரதன் போயினான் , பொடித்தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான் .

aṭi talam iraṇṭaiyum aḻuta kaṇṇiṉāṉ , muṭi talam ivai eṉa muṟaiyiṉ cūṭiṉāṉ ; paṭi talam attu iṟaiñciṉaṉ , parataṉ pōyiṉāṉ , poṭittalam ilaṅkuṟu polam koḷ mēṉiyāṉ .

Report an error

ஈன்றவர் முதலிய எண் இல் சுற்றமும் , சான்றவர் குழுவொடு தவம் அத்து உளோர்கள் உம் , வான் தரு சேனையும் , மற்றும் சுற்றுற , மூன்று நூல் கிடந்த தோள் முனியும் போயினான் .

īṉṟavar mutaliya eṇ il cuṟṟamum , cāṉṟavar kuḻuvoṭu tavam attu uḷōrkaḷ um , vāṉ taru cēṉaiyum , maṟṟum cuṟṟuṟa , mūṉṟu nūl kiṭanta tōḷ muṉiyum pōyiṉāṉ .

Report an error

பண்டை நூல் தெரி பரத்துவனும் போயினான் ; மண்டு நீர் நெடு நகர் மாந்தர் போயினார் ; விண்டு உறை தேவரும் விலகிப் போயினார் ; கொண்டல் தன் ஆணையால் குகனும் போயினான் .

paṇṭai nūl teri parattuvaṉum pōyiṉāṉ ; maṇṭu nīr neṭu nakar māntar pōyiṉār ; viṇṭu uṟai tēvarum vilakip pōyiṉār ; koṇṭal taṉ āṇaiyāl kukaṉum pōyiṉāṉ .

Report an error

பாதுகம் தலைக்கொடு பரதன் பைம் புனல் மோது கங்கையின் கரை கடந்து முந்தினான் , போது உகும் கடி பொழில் அயோத்தி புக்கிலன் , ஓது கங்குலில் நெடிது உறக்கம் நீங்கினான் .

pātukam talaikkoṭu parataṉ paim puṉal mōtu kaṅkaiyiṉ karai kaṭantu muntiṉāṉ , pōtu ukum kaṭi poḻil ayōtti pukkilaṉ , ōtu kaṅkulil neṭitu uṟakkam nīṅkiṉāṉ .

Report an error

நந்தி அம் பதி இடை , நாதன் பாதுகம் செந் தனிக் கோல் முறை செலுத்தச் சிந்தையான் இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான் , அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான் .

nanti am pati iṭai , nātaṉ pātukam cen taṉik kōl muṟai celuttac cintaiyāṉ intiyaṅkaḷai avittu iruttal mēyiṉāṉ , antiyum pakalum nīr aṟāta kaṇṇiṉāṉ .

Report an error

'குன்றினில் இருந்தனன் என்னும் கொள்கையால் நின்றவர் நலிவரால் நேயம் அத்து ஆல் ' எனாத் தன் துணைத் தம்பியும் , தானும் , தையலும் , தென் திசை நெறியினைச் சேறல் மேயினான் . அயோத்தியா காண்டம் முற்றிற்று

'kuṉṟiṉil iruntaṉaṉ eṉṉum koḷkaiyāl niṉṟavar nalivarāl nēyam attu āl ' eṉāt taṉ tuṇait tampiyum , tāṉum , taiyalum , teṉ ticai neṟiyiṉaic cēṟal mēyiṉāṉ . ayōttiyā kāṇṭam muṟṟiṟṟu

Report an error

Illustration: Verse & Place (Project-owned).