Skip to content

கிட்கிந்தா காண்டம் — கார்காலப் படலம் · கிட்கிந்தா காண்டம் — கார்காலப் படலம்

Kishkindha Kandam — kārkālap paṭalam

kiṭkintā kāṇṭam — kārkālap paṭalam

The original Tamil verses of Kambar’s Ramayanam.

121 versesTamil with transliteration

A spreading tree, recalling the forest journeys in Kambar’s Ramayanam.

மா இயல் வட திசை நின்று மானவன் ஓவியமே என ஒளிக் கவின் குலாம் தேவியை நாடிய முந்தித் தென் திசைக்கு ஏவிய தூது என இரவி ஏகினான்.

mā iyal vaṭa ticai niṉṟu māṉavaṉ ōviyamē eṉa oḷik kaviṉ kulām tēviyai nāṭiya muntit teṉ ticaikku ēviya tūtu eṉa iravi ēkiṉāṉ.

Report an error

பை அணைப் பல தலை பாந்தள் ஏந்திய மொய்ந் நிலத் தகளியில் முழங்கு நீர்நெயின் வெய்யவன் விளக்கமா மேருப் பொன் திரி மை அடுத் தொத்தது மழைத்த வானமே.

pai aṇaip pala talai pāntaḷ ēntiya moyn nilat takaḷiyil muḻaṅku nīrneyiṉ veyyavaṉ viḷakkamā mērup poṉ tiri mai aṭut tottatu maḻaitta vāṉamē.

Report an error

நண்ணுதல் அருங் கடல் நஞ்சம் நுங்கிய கண் நுதல் கண்டத்தின் காட்சி ஆம் என விண் அகம் இருண்டது; வெயிலின் வெம் கதிர் தண்ணிய மெலிந்தன; தழைத்த மேகமே.

naṇṇutal aruṅ kaṭal nañcam nuṅkiya kaṇ nutal kaṇṭattiṉ kāṭci ām eṉa viṇ akam iruṇṭatu; veyiliṉ vem katir taṇṇiya melintaṉa; taḻaitta mēkamē.

Report an error

நஞ்சினின் நளிர் நெடுங்கடலின் நங்கையர் அஞ்சன நயனத்தின் அவிழ்ந்த கூந்தலின் வஞ்சனை அரக்கர்தம் வடிவின் செய்கையின் நெஞ்சினின் இருண்டது நீல வானமே.

nañciṉiṉ naḷir neṭuṅkaṭaliṉ naṅkaiyar añcaṉa nayaṉattiṉ aviḻnta kūntaliṉ vañcaṉai arakkartam vaṭiviṉ ceykaiyiṉ neñciṉiṉ iruṇṭatu nīla vāṉamē.

Report an error

நாட்களின் நளிர் கடல் நாரம் நா உற வேட்கையின் பருகிய மேகம் மின்னுவ வாள் கைகள் மயங்கிய செருவின் வார்மதப் பூட்கைகள் நிறைந்தபுண் திறப்ப போன்றவே.

nāṭkaḷiṉ naḷir kaṭal nāram nā uṟa vēṭkaiyiṉ parukiya mēkam miṉṉuva vāḷ kaikaḷ mayaṅkiya ceruviṉ vārmatap pūṭkaikaḷ niṟaintapuṇ tiṟappa pōṉṟavē.

Report an error

நீல்நிறப் பெரும் கரி நிரைத்த நீர்த்து என சூல்நிற முகில் குலம் துவன்றி சூழ்திரை மால்நிற நெடுங்கடல் வாரி மூரிவான் மேல் நிறைந்துளது என முழக்க மிக்கதே.

nīlniṟap perum kari niraitta nīrttu eṉa cūlniṟa mukil kulam tuvaṉṟi cūḻtirai mālniṟa neṭuṅkaṭal vāri mūrivāṉ mēl niṟaintuḷatu eṉa muḻakka mikkatē.

Report an error

அரிப்பெரும் பெயரவன் முதலினோர் அணி விரிப்பவும் ஒத்தன; வெற்புமீது தீ எரிப்பவும் ஒத்தன; ஏசு இல் ஆசைகள் சிரிப்பவும் ஒத்தன; தெரிந்த மின் எலாம்.

aripperum peyaravaṉ mutaliṉōr aṇi virippavum ottaṉa; veṟpumītu tī erippavum ottaṉa; ēcu il ācaikaḷ cirippavum ottaṉa; terinta miṉ elām.

Report an error

மாதிரக் கருமகன் மாரிக் கார்மழை யாதினும் இருண்ட விண் இருந்தைக் குப்பையின் கூதிர் வெங்கால் நெடுந் துருத்திக் கோள் அமைத்து ஊது வெங்கனல் உமிழ் உலையும் ஒத்தவே.

mātirak karumakaṉ mārik kārmaḻai yātiṉum iruṇṭa viṇ iruntaik kuppaiyiṉ kūtir veṅkāl neṭun turuttik kōḷ amaittu ūtu veṅkaṉal umiḻ ulaiyum ottavē.

Report an error

சூடின மணிமுடித் துகளில் விஞ்சையர் கூடு உறை நீக்கிய குருதி வாட்களும் ஆடுவ பெயர்தொறும் ஆசை யானையின் ஓடைகள் ஒளி பிறழ்வனவும் ஒத்தவே.

cūṭiṉa maṇimuṭit tukaḷil viñcaiyar kūṭu uṟai nīkkiya kuruti vāṭkaḷum āṭuva peyartoṟum ācai yāṉaiyiṉ ōṭaikaḷ oḷi piṟaḻvaṉavum ottavē.

Report an error

பிரிந்து உறை மகளிரும் பிலத்த பாந்தளும் எரிந்து உயிர் நடுங்கிட இரவியின் கதிர் அரிந்தன ஆம் என அசனி நா என விரிந்தன திசைதொறும் மிசையின் மின் எலாம்.

pirintu uṟai makaḷirum pilatta pāntaḷum erintu uyir naṭuṅkiṭa iraviyiṉ katir arintaṉa ām eṉa acaṉi nā eṉa virintaṉa ticaitoṟum micaiyiṉ miṉ elām.

Report an error

எண்வகை நாகங்கள் திசைகள் எட்டையும் நண்ணின நா வளைத்தனைய மின் நக; கண்ணன் மெய்வடிவு எனக் கருகு கார்விசும்பு உள்நிறை உயிர்ப்பு என ஊதை ஊதின.

eṇvakai nākaṅkaḷ ticaikaḷ eṭṭaiyum naṇṇiṉa nā vaḷaittaṉaiya miṉ naka; kaṇṇaṉ meyvaṭivu eṉak karuku kārvicumpu uḷniṟai uyirppu eṉa ūtai ūtiṉa.

Report an error

தலைமையும் கீழ்மையும் தவிர்தல் இன்றியே மலையினும் மரத்தினும் மற்றும் முற்றினும் விலை நினைந்து உளவழி விலங்கும் வேசையர் உலைவு உறும் மனம் என உலாய ஊதையே.

talaimaiyum kīḻmaiyum tavirtal iṉṟiyē malaiyiṉum marattiṉum maṟṟum muṟṟiṉum vilai niṉaintu uḷavaḻi vilaṅkum vēcaiyar ulaivu uṟum maṉam eṉa ulāya ūtaiyē.

Report an error

அழுங்குறு மகளிர் தம் அன்பர்த் தீர்ந்தவர் புழுங்குறு புணர்முலை கொதிப்பப் புக்கு உலாய் கொழுங்குறைத் தசை என ஈர்ந்து கொண்டு அது விழுங்குறு பேய் என வாடை வீங்கிற்றே.

aḻuṅkuṟu makaḷir tam aṉpart tīrntavar puḻuṅkuṟu puṇarmulai kotippap pukku ulāy koḻuṅkuṟait tacai eṉa īrntu koṇṭu atu viḻuṅkuṟu pēy eṉa vāṭai vīṅkiṟṟē.

Report an error

ஆர்த்து எழு துகள் விசும்பு அடைத்தலானும் மின் கூர்த்து எழு வாள் எனப் பிறழும் கொட்பினும் தார்ப் பெரும் பணையின் விண் தழங்கு தாவினும் போர்ப் பெருங் களம் எனப் பொலிந்தது உம்பரே.

ārttu eḻu tukaḷ vicumpu aṭaittalāṉum miṉ kūrttu eḻu vāḷ eṉap piṟaḻum koṭpiṉum tārp perum paṇaiyiṉ viṇ taḻaṅku tāviṉum pōrp peruṅ kaḷam eṉap polintatu umparē.

Report an error

இன் நகைச் சனகியைப்பிரிந்த ஏந்தல்மேல், மன்மதன் மலர்க் கணைவழங்கினான் எனப் பொன்நெடுங் குன்றின்மேல்பொழிந்த தாரைகள் மின்னொடுந் துவன்றினமேக ராசியே.

iṉ nakaic caṉakiyaippirinta ēntalmēl, maṉmataṉ malark kaṇaivaḻaṅkiṉāṉ eṉap poṉneṭuṅ kuṉṟiṉmēlpoḻinta tāraikaḷ miṉṉoṭun tuvaṉṟiṉamēka rāciyē.

Report an error

கல் இடைப்படும் துளி திவலை கார் இடு வில் இடைச்சரம் என விசையின் வீழ்ந்தன; செல் இடைப்பிறந்த செங்கனல்கள் சிந்தின அல் இடை மணி சிறந்து அழல் இயற்றல் போல்.

kal iṭaippaṭum tuḷi tivalai kār iṭu vil iṭaiccaram eṉa vicaiyiṉ vīḻntaṉa; cel iṭaippiṟanta ceṅkaṉalkaḷ cintiṉa al iṭai maṇi ciṟantu aḻal iyaṟṟal pōl.

Report an error

மள்ளர்கள் மறுபடை மான யானைமேல் வெள்ளிவேல் எறிவன போன்ற மேகங்கள்; தள்ளரும் துளிபடத் தகர்ந்து சாய்கிரி புள்ளி வெங் கடகரி புரள்வ போன்றவே.

maḷḷarkaḷ maṟupaṭai māṉa yāṉaimēl veḷḷivēl eṟivaṉa pōṉṟa mēkaṅkaḷ; taḷḷarum tuḷipaṭat takarntu cāykiri puḷḷi veṅ kaṭakari puraḷva pōṉṟavē.

Report an error

வானிடு தனு நெடுங் கருப்பு வில்; மழை மீன் இடு கொடியவன்; பகழி வீழ்துளி; தான் நெடுஞ் சார்துணை பிரிந்த தன்மையர் ஊனுடை உடம்பு எலாம் உகுத்தது ஒத்ததே.

vāṉiṭu taṉu neṭuṅ karuppu vil; maḻai mīṉ iṭu koṭiyavaṉ; pakaḻi vīḻtuḷi; tāṉ neṭuñ cārtuṇai pirinta taṉmaiyar ūṉuṭai uṭampu elām ukuttatu ottatē.

Report an error

தீர்த்தனும் கவிகளும் செறிந்து நம்பகை பேர்த்தனர் இனி எனப் பேசி வானவர் ஆர்த்து என ஆர்த்தன மேகம் ஆய்மலர் தூர்த்தன ஒத்தன துள்ளி வெள்ளமே.

tīrttaṉum kavikaḷum ceṟintu nampakai pērttaṉar iṉi eṉap pēci vāṉavar ārttu eṉa ārttaṉa mēkam āymalar tūrttaṉa ottaṉa tuḷḷi veḷḷamē.

Report an error

வண்ண வில் கர தலத்து அரக்கன் மண்ணொடு விண்ணிடைக் கடிது கொண்டு ஏகும் வேலையில் பெண்ணினுக்கு அருங்கலம் அனைய பெய்வளை கண் எனப் பொழிந்தது கால மாரியே.

vaṇṇa vil kara talattu arakkaṉ maṇṇoṭu viṇṇiṭaik kaṭitu koṇṭu ēkum vēlaiyil peṇṇiṉukku aruṅkalam aṉaiya peyvaḷai kaṇ eṉap poḻintatu kāla māriyē.

Report an error

பரஞ்சுடர்ப் பண்ணவன் பண்டு விண்தொடர் புரம்சுட விடுசரம் புரையும் மின் இனம் அரம் சுடப் பொறிநிமிர் அயிலின் ஆடவர் உரம் சுட உளைந்தனர் பிரிந்துளோர் எலாம்.

parañcuṭarp paṇṇavaṉ paṇṭu viṇtoṭar puramcuṭa viṭucaram puraiyum miṉ iṉam aram cuṭap poṟinimir ayiliṉ āṭavar uram cuṭa uḷaintaṉar pirintuḷōr elām.

Report an error

பொருள்தரப் போயினர்ப் பிரிந்த பொய் உடற்கு உருள்தரு தேர் மிசை உயிர்கொண்டு உய்த்தலால் மருள்தரு பிரிவின் நோய் மாசுணம் கெடக் கருடனைப் பொருவின கால மாரியே.

poruḷtarap pōyiṉarp pirinta poy uṭaṟku uruḷtaru tēr micai uyirkoṇṭu uyttalāl maruḷtaru piriviṉ nōy mācuṇam keṭak karuṭaṉaip poruviṉa kāla māriyē.

Report an error

முழங்கின முறை முறை மூரிமேகம் நீர் வழங்கின மிடைவன மான யானைகள். தழங்கின பொழிமதத் திவலை தாழ்தரப் புழுங்கின எதிர் எதிர் பொருவ போன்றவே.

muḻaṅkiṉa muṟai muṟai mūrimēkam nīr vaḻaṅkiṉa miṭaivaṉa māṉa yāṉaikaḷ. taḻaṅkiṉa poḻimatat tivalai tāḻtarap puḻuṅkiṉa etir etir poruva pōṉṟavē.

Report an error

விசைகொடு மாருதம் மறித்து வீசலால் அசைவுறு சிறுதுளி அப்பு மாரியின் இசையுற எய்வன இயைவவாய் இருந் திசையொடு திசை செருச் செய்தல் ஒத்தவே.

vicaikoṭu mārutam maṟittu vīcalāl acaivuṟu ciṟutuḷi appu māriyiṉ icaiyuṟa eyvaṉa iyaivavāy irun ticaiyoṭu ticai ceruc ceytal ottavē.

Report an error

விழைவுறு பொருள் தரப் பிரிந்த வேந்தர் வந்து உழை உற உயிர் உற உயிர்க்கும் மாதரின் மழை உற மா முகம் மலர்ந்து தோன்றின குழை உறப் பொலிந்தன உலவைக் கொம்பு எலாம்.

viḻaivuṟu poruḷ tarap pirinta vēntar vantu uḻai uṟa uyir uṟa uyirkkum mātariṉ maḻai uṟa mā mukam malarntu tōṉṟiṉa kuḻai uṟap polintaṉa ulavaik kompu elām.

Report an error

பாடலம் வறுமை கூரப்,பகலவன் பசுமை கூரக், கோடல்கள் பெருமை கூரக்,குவலயம் சிறுமை கூர ஆடின மயில்கள்; பேசாதுஅடங்கின குயில்கள் கேடுறத் தளர்ந்தார் போன்றும்,திரு உறக் கிளர்ந்தார் போன்றும்.

pāṭalam vaṟumai kūrap,pakalavaṉ pacumai kūrak, kōṭalkaḷ perumai kūrak,kuvalayam ciṟumai kūra āṭiṉa mayilkaḷ; pēcātuaṭaṅkiṉa kuyilkaḷ kēṭuṟat taḷarntār pōṉṟum,tiru uṟak kiḷarntār pōṉṟum.

Report an error

நால் நிறச் சுரும்பும் வண்டும்நவமணி அணியின் சாரத், தேன் உற மலர்ந்து அசைந்தசேயிதழ்க் காந்தள் செ ம்பூ, 'வேனிலை வென்றது அம்மா,கார்'என வியந்து நோக்கி, மா நிலக் கிழத்தி கைகள்மறித்தன போன்ற மன்னோ.

nāl niṟac curumpum vaṇṭumnavamaṇi aṇiyiṉ cārat, tēṉ uṟa malarntu acaintacēyitaḻk kāntaḷ ce mpū, 'vēṉilai veṉṟatu ammā,kār'eṉa viyantu nōkki, mā nilak kiḻatti kaikaḷmaṟittaṉa pōṉṟa maṉṉō.

Report an error

வாள் எயிற்று அரவம், தம்போல்வான் தலை தோன்ற வார்ந்த தாள் உடைக் கோடல் தம்மைத்தழீஇயன, காதல் தங்க மீளல; அவையும் அன்னவிழைவின உணர்வு வீந்த கோள் அரவு என்னப் பின்னிஅவற்றொடும் குழைந்து சாய்ந்த.

vāḷ eyiṟṟu aravam, tampōlvāṉ talai tōṉṟa vārnta tāḷ uṭaik kōṭal tammaittaḻīiyaṉa, kātal taṅka mīḷala; avaiyum aṉṉaviḻaiviṉa uṇarvu vīnta kōḷ aravu eṉṉap piṉṉiavaṟṟoṭum kuḻaintu cāynta.

Report an error

எள் இட இடனும் இன்றிஎழுந்தன இலங்கு கோபம் தள்ளுறத், தலைவர், தம்மைப்பிரிந்தவர் தழுவத் தூமக் கள் உடை ஓதியார்தம்கலவியில், பலகால் கான்ற வெள்ளடைத் தம்பல் குப்பைசிதர்ந்து என, விரிந்த மாதோ.

eḷ iṭa iṭaṉum iṉṟieḻuntaṉa ilaṅku kōpam taḷḷuṟat, talaivar, tammaippirintavar taḻuvat tūmak kaḷ uṭai ōtiyārtamkalaviyil, palakāl kāṉṟa veḷḷaṭait tampal kuppaicitarntu eṉa, virinta mātō.

Report an error

தீங்கனி நாவல் ஓங்கும்சேண் உயர் குன்றின், செம்பொன் வாங்கின கொண்டு, பாரில்மண்டும் மால் யாறு மான, வேங்கையின் மலரும், கொன்றைவிரிந்தன வீயும், ஈர்த்து, தாங்கின கலுழி, சென்றுதலைமயக் குறுவ தம்மில்.

tīṅkaṉi nāval ōṅkumcēṇ uyar kuṉṟiṉ, cempoṉ vāṅkiṉa koṇṭu, pārilmaṇṭum māl yāṟu māṉa, vēṅkaiyiṉ malarum, koṉṟaivirintaṉa vīyum, īrttu, tāṅkiṉa kaluḻi, ceṉṟutalaimayak kuṟuva tammil.

Report an error

நல்நெடுங் காந்தள் போதில்,நறை விரி கடுக்கை மென் பூ, துன்னிய கோபத் தோடும்தோன்றிய தோற்றம் தும்பி இன் இசை முரல்வ நோக்கி,இருநில மகள் கை ஏந்திப், பொன்னொடும் காசை நீட்டிக்கொடுப்பதே போன்றது அம்மா.

nalneṭuṅ kāntaḷ pōtil,naṟai viri kaṭukkai meṉ pū, tuṉṉiya kōpat tōṭumtōṉṟiya tōṟṟam tumpi iṉ icai muralva nōkki,irunila makaḷ kai ēntip, poṉṉoṭum kācai nīṭṭikkoṭuppatē pōṉṟatu ammā.

Report an error

கிளைத்துளை மழலை வண்டுகின்னரம் நிகர்த்த, மின்னும் துளிக் குரல் மேகம் வள் வார்த்தூரியம் துவைப்ப போன்ற; வளைக் கையர் போன்ற, மஞ்ஞை;தோன்றிகள் அரங்கின் மாடே விளக்கு இனம் ஒத்த; காண்போர்விழி ஒத்த, விளையின் மென்பூ.

kiḷaittuḷai maḻalai vaṇṭukiṉṉaram nikartta, miṉṉum tuḷik kural mēkam vaḷ vārttūriyam tuvaippa pōṉṟa; vaḷaik kaiyar pōṉṟa, maññai;tōṉṟikaḷ araṅkiṉ māṭē viḷakku iṉam otta; kāṇpōrviḻi otta, viḷaiyiṉ meṉpū.

Report an error

பேடையும் ஞிமிறும் பாயப்பெயர்வுறப் பிறக்கும் ஓசை ஊடுறத் தாக்கும் தோறும்ஒல் ஒலி பிறப்ப, நல்லார் ஆடு இயல் பாணிக்கு ஏற்கும்அரிய அவ் அமிழ்தப் பாடல் கோடியர் தாளம் கொட்டல்மலர்ந்த கூதாளம் ஒத்த.

pēṭaiyum ñimiṟum pāyappeyarvuṟap piṟakkum ōcai ūṭuṟat tākkum tōṟumol oli piṟappa, nallār āṭu iyal pāṇikku ēṟkumariya av amiḻtap pāṭal kōṭiyar tāḷam koṭṭalmalarnta kūtāḷam otta.

Report an error

வழைதுறு கான யாறு,மாநிலக் கிழத்தி மக்கட்கு உழைதுறு மலைமாக் கொங்கைசுரந்த பால் ஒழுக்கை ஒத்த; விழைவுறு வேட்கையோடும்வேண்டுநர்க்கு உதவ வேண்டிக், குழைதொறும் கனகம் தூங்கும்கற்பகம் நிகர்த்த, கொன்றை.

vaḻaituṟu kāṉa yāṟu,mānilak kiḻatti makkaṭku uḻaituṟu malaimāk koṅkaicuranta pāl oḻukkai otta; viḻaivuṟu vēṭkaiyōṭumvēṇṭunarkku utava vēṇṭik, kuḻaitoṟum kaṉakam tūṅkumkaṟpakam nikartta, koṉṟai.

Report an error

பூ இயல் புறவம் எங்கும்பொறி வரி வண்டு போர்ப்பத், தீவிய களிய வாகிச்செருக்கிய, காமச் செவ்வி, ஓவலில் மரங்கள் தோறும்உரைத்து அற உரிஞ்சி ஒண்கேழ் நாவிய செவ்வி நாறக்,கலையொடும் புலந்த நவ்வி.

pū iyal puṟavam eṅkumpoṟi vari vaṇṭu pōrppat, tīviya kaḷiya vākiccerukkiya, kāmac cevvi, ōvalil maraṅkaḷ tōṟumuraittu aṟa uriñci oṇkēḻ nāviya cevvi nāṟak,kalaiyoṭum pulanta navvi.

Report an error

தேரில் நல் நெடுந் திசை செலச்செருக்கு அழிந்து ஒடுங்கும் கூர் எயிற்றியர் கண் எனக்குவிந்தன குவளை, மாரன் அன்னவர் வரவு கண்டுஉவக்கின்ற மகளிர் மூரல் மென்குறு முறுவல் ஒத்துஅரும்பின, முல்லை.

tēril nal neṭun ticai celaccerukku aḻintu oṭuṅkum kūr eyiṟṟiyar kaṇ eṉakkuvintaṉa kuvaḷai, māraṉ aṉṉavar varavu kaṇṭuuvakkiṉṟa makaḷir mūral meṉkuṟu muṟuval ottuarumpiṉa, mullai.

Report an error

களிக்கும் மஞ்ஞை அக் கண்ணுளர்இனமெனக் கண்ணுற்று அளிக்கு மன்னரின் பொன்மழைவழங்கின அருவி; வெளிக்கண் வந்த கார் விருந்து என,விருந்து கண்டு உள்ளம் களிக்கும் மங்கையர் முகம் எனப்பொலிந்தன, கமலம்.

kaḷikkum maññai ak kaṇṇuḷariṉameṉak kaṇṇuṟṟu aḷikku maṉṉariṉ poṉmaḻaivaḻaṅkiṉa aruvi; veḷikkaṇ vanta kār viruntu eṉa,viruntu kaṇṭu uḷḷam kaḷikkum maṅkaiyar mukam eṉappolintaṉa, kamalam.

Report an error

சரத நாள் மலர் யாவையும்குடைந்தன, தடவிச், சுரத நூல் தெரி விடர் எனத்தேன் கொண்டு, தொகுப்பப், பரத நூல் முறை நாடகம்பயன் உறப் பகுப்பான், இரதம் ஈட்டுறும் கவிஞரைப்பொருவின தேனீ .

carata nāḷ malar yāvaiyumkuṭaintaṉa, taṭavic, curata nūl teri viṭar eṉattēṉ koṇṭu, tokuppap, parata nūl muṟai nāṭakampayaṉ uṟap pakuppāṉ, iratam īṭṭuṟum kaviñaraipporuviṉa tēṉī .

Report an error

"நோக்கினால் நமை நோக்குஅழிகண்ட நுண் மருங்குல் தாக்கு அணங்கு அருஞ் சீதைக்குத்தாங்கருந் துன்பம் ஆக்கினாம் உருவால்" எனும்அரும்பெறல் உவகை வாக்கினால் உரையாம் எனக்களித்தன, மான்கள்.

"nōkkiṉāl namai nōkkuaḻikaṇṭa nuṇ maruṅkul tākku aṇaṅku aruñ cītaikkuttāṅkarun tuṉpam ākkiṉām uruvāl" eṉumarumpeṟal uvakai vākkiṉāl uraiyām eṉakkaḷittaṉa, māṉkaḷ.

Report an error

நீடு நெஞ்சு உறு நேயத்தால்நெடிது உறப் பிரிந்து வாடுகின்றன, மருள் உறுகாதலின் மயங்கிக், கூடு நல் நதித் தடம்தொறும்குடைந்தன, படிவுற்று ஆடுகின்றன கொழுநரைப்பொருவின அன்னம்.

nīṭu neñcu uṟu nēyattālneṭitu uṟap pirintu vāṭukiṉṟaṉa, maruḷ uṟukātaliṉ mayaṅkik, kūṭu nal natit taṭamtoṟumkuṭaintaṉa, paṭivuṟṟu āṭukiṉṟaṉa koḻunaraipporuviṉa aṉṉam.

Report an error

கார் எனும் பெயர்க் கரியவன்மார்பினில் கதிர்முத்து ஆரம் ஆம் எனப் பொலிந்தனஅளக்கரும் அளக்கர் நீர் முகந்த மா மேகத்தின்அருகு உற நிரைத்துக் கூரும் வெண் நிறத் திரையெனப்பறப்பன குரண்டம்.

kār eṉum peyark kariyavaṉmārpiṉil katirmuttu āram ām eṉap polintaṉaaḷakkarum aḷakkar nīr mukanta mā mēkattiṉaruku uṟa niraittuk kūrum veṇ niṟat tiraiyeṉappaṟappaṉa kuraṇṭam.

Report an error

மருவி நீங்கல் செல்லா நெடுமாலைய, வானில் பருவ மேகத்தின் அருகு உறக்குருகினம் பறப்ப, 'திருவின் நாயகன் இவன்'எனத்தேமறை தெரிக்கும் ஒருவன் மார்பினின்உத்தரியத்தினை ஒத்த.

maruvi nīṅkal cellā neṭumālaiya, vāṉil paruva mēkattiṉ aruku uṟakkurukiṉam paṟappa, 'tiruviṉ nāyakaṉ ivaṉ'eṉattēmaṟai terikkum oruvaṉ mārpiṉiṉuttariyattiṉai otta.

Report an error

உற வெதுப்புறும் கொடுந் தொழில்வேனிலான் ஒழிய, திறம் நினைப்பருங் கார் எனும்செவ்வியோன் சேர, நிறை மனத்து உறு குளிர்ப்பினின்நெடுநில மடந்தை புற மயிர்த்தலம் பொடித்தனபோன்றன பசும்புல்.

uṟa vetuppuṟum koṭun toḻilvēṉilāṉ oḻiya, tiṟam niṉaipparuṅ kār eṉumcevviyōṉ cēra, niṟai maṉattu uṟu kuḷirppiṉiṉneṭunila maṭantai puṟa mayirttalam poṭittaṉapōṉṟaṉa pacumpul.

Report an error

தேன் அவாம் மலர்த் திசைமுகன்முதலினர் தெளிந்தோர் ஞான நாயகன் நவை உற,நோக்கின நல்கக் கானம் யாவையும் பரப்பியகண்ணின் அச் சனகன் மானை நாடி நின்று அழைப்பனபோன்றன மஞ்ஞை .

tēṉ avām malart ticaimukaṉmutaliṉar teḷintōr ñāṉa nāyakaṉ navai uṟa,nōkkiṉa nalkak kāṉam yāvaiyum parappiyakaṇṇiṉ ac caṉakaṉ māṉai nāṭi niṉṟu aḻaippaṉapōṉṟaṉa maññai .

Report an error

செஞ் செ(வ்) வேலவர், செறிசிலைக்குரிசிலர், இருண்ட குஞ்சி சேயொளி கதுவுறப்புதுநிறம் கொடுக்கும் பஞ்சி போர்த்த மெல் அடி எனப்பொலிந்தன பதுமம்; வஞ்சி போலியர் மருங்கு எனநுடங்கின, வல்லி.

ceñ ce(v) vēlavar, ceṟicilaikkuricilar, iruṇṭa kuñci cēyoḷi katuvuṟapputuniṟam koṭukkum pañci pōrtta mel aṭi eṉappolintaṉa patumam; vañci pōliyar maruṅku eṉanuṭaṅkiṉa, valli.

Report an error

'நீயிர் அன்னவள் குதலையிர்ஆதலின் நேடிப் போய தையலைத் தருதிர்'என்று,இராகவன் புகலத் தேயம் எங்கணும் திரிந்தனபோந்து இடைத் தேடிக், கூய ஆய், குரல் குறைந்தகுறைந்தன - குயில்கள்.

'nīyir aṉṉavaḷ kutalaiyirātaliṉ nēṭip pōya taiyalait tarutir'eṉṟu,irākavaṉ pukalat tēyam eṅkaṇum tirintaṉapōntu iṭait tēṭik, kūya āy, kural kuṟaintakuṟaintaṉa - kuyilkaḷ.

Report an error

பொழிந்த மாநிலம் புல்தரக்குமட்டிய புனிற்றா எழுந்த ஆம்பிகள் இடறின,செறிதயிர் ஏய்ந்த; மொழிந்த தேன் உடை முகிழ்முலைஆய்ச்சியர் முழவில் பிழிந்த பால்வழி நுரையினைப்பொருவின பிடவம்.

poḻinta mānilam pultarakkumaṭṭiya puṉiṟṟā eḻunta āmpikaḷ iṭaṟiṉa,ceṟitayir ēynta; moḻinta tēṉ uṭai mukiḻmulaiāycciyar muḻavil piḻinta pālvaḻi nuraiyiṉaipporuviṉa piṭavam.

Report an error

வேங்கை நாறின, கொடிச்சியர்வடிக் குழல், விரை வண்டு ஏங்க; நாகமும் நாறின,நுளைச்சியர் ஐம்பால்; ஆங்கு நாள் முல்லை நாறினஆய்ச்சியர் ஓதி; ஞாங்கர் உற்பலம் உழத்தியர்பித்திகை நாற.

vēṅkai nāṟiṉa, koṭicciyarvaṭik kuḻal, virai vaṇṭu ēṅka; nākamum nāṟiṉa,nuḷaicciyar aimpāl; āṅku nāḷ mullai nāṟiṉaāycciyar ōti; ñāṅkar uṟpalam uḻattiyarpittikai nāṟa.

Report an error

தேரைக் கொண்ட பேர் அல்குலாள்திரு முகம் காணான் ஆரைக் கண்டு உயிர் ஆற்றுவான்?நல் உணர்வு அழிந்தான்; மாரற்கு எண் இல் பல் ஆயிரம்மலர்க் கணை வகுத்த காரைக் கண்டனன்; வெந் துயர்க்குஒருகரை காணான்.

tēraik koṇṭa pēr alkulāḷtiru mukam kāṇāṉ āraik kaṇṭu uyir āṟṟuvāṉ?nal uṇarvu aḻintāṉ; māraṟku eṇ il pal āyirammalark kaṇai vakutta kāraik kaṇṭaṉaṉ; ven tuyarkkuorukarai kāṇāṉ.

Report an error

அளவு இல் கார் எனும் அப்பெரும்பருவம் வந்து அணைந்தால் தளர்வர் என்பது தவம் புரிவோருக்கும்தகுமால்; கிளவி தேனினும் அமிழ்தினும்குழைத்தவள் வளைத் தோள் வளவி உண்டவன் வருந்தும் என்றால்அது வருத்தோ?

aḷavu il kār eṉum apperumparuvam vantu aṇaintāl taḷarvar eṉpatu tavam purivōrukkumtakumāl; kiḷavi tēṉiṉum amiḻtiṉumkuḻaittavaḷ vaḷait tōḷ vaḷavi uṇṭavaṉ varuntum eṉṟālatu varuttō?

Report an error

காவியும், கருங்குவளையும்,நெய்தலும், காயாம் பூவையும் பொருவான் அவன்,புலம்பினன் தளர்வான், 'ஆவியும் சிறிது உண்டு கொலாம்'என அயர்ந்தான், தூவி அன்னம் அன்னாள் திறத்துஇவை இவை சொல்லும்.

kāviyum, karuṅkuvaḷaiyum,neytalum, kāyām pūvaiyum poruvāṉ avaṉ,pulampiṉaṉ taḷarvāṉ, 'āviyum ciṟitu uṇṭu kolām'eṉa ayarntāṉ, tūvi aṉṉam aṉṉāḷ tiṟattuivai ivai collum.

Report an error

வார் ஏர் முலையாளை மறைக்குநர் வாழ் ஊரே அறியேன்; உயிரோடு உழல்வேன்; நீரே உடையாய்? அருள் நின் இலையோ? காரே! எனது ஆவி கலக்குதியோ?

vār ēr mulaiyāḷai maṟaikkunar vāḻ ūrē aṟiyēṉ; uyirōṭu uḻalvēṉ; nīrē uṭaiyāy? aruḷ niṉ ilaiyō? kārē! eṉatu āvi kalakkutiyō?

Report an error

'வெப்பு ஆர் நெடு மின்னின் எயிற்றை; வெகுண்டு எப் பாலும் விசும்பின் இருண்டு எழுவாய்; அப் பாதக வஞ்ச அரக்கரையே ஒப்பாய்; உயிர்கொண்டு அலது ஓவலையோ?

'veppu ār neṭu miṉṉiṉ eyiṟṟai; vekuṇṭu ep pālum vicumpiṉ iruṇṭu eḻuvāy; ap pātaka vañca arakkaraiyē oppāy; uyirkoṇṭu alatu ōvalaiyō?

Report an error

'அயில் ஏய் விழியார் விளை ஆர் அமிழ்தின் குயில் ஏய் மொழியார்க் கொணராய்; கொடியாய்! துயிலேன் ஒருவேன் உயிர் சோர்வு உணர்வாய்; மயிலே! எனைநீ வலி ஆடுதியோ?

'ayil ēy viḻiyār viḷai ār amiḻtiṉ kuyil ēy moḻiyārk koṇarāy; koṭiyāy! tuyilēṉ oruvēṉ uyir cōrvu uṇarvāy; mayilē! eṉainī vali āṭutiyō?

Report an error

'மழை வாடையொடு ஆடி வலிந்து உயிர் மேல் நுழைவாய்; மலர்வாய் நொடியாய் கொடியே! இழை வாள் நுதலாள் இடைபோல் இடையே குழைவாய்; எனது ஆவி குழைக்குதியோ?

'maḻai vāṭaiyoṭu āṭi valintu uyir mēl nuḻaivāy; malarvāy noṭiyāy koṭiyē! iḻai vāḷ nutalāḷ iṭaipōl iṭaiyē kuḻaivāy; eṉatu āvi kuḻaikkutiyō?

Report an error

'விழையேன்; விழை வானருள் மெய்ம்மையின் நின்று இழையேன்; உணர்வேன்; நவை இன்மையினால் பிழையேன்; உயிரோடு பிரிந்தனரால் உழையே அவர் எவ் உழையார்? உரையாய்!

'viḻaiyēṉ; viḻai vāṉaruḷ meymmaiyiṉ niṉṟu iḻaiyēṉ; uṇarvēṉ; navai iṉmaiyiṉāl piḻaiyēṉ; uyirōṭu pirintaṉarāl uḻaiyē avar ev uḻaiyār? uraiyāy!

Report an error

'பயில் பாடக மெல் அடி பஞ்சு அனையார் செயிர் ஏதும் இலாரொடு தீருதியோ? அயிராது உடனே அகல்வாய் அலையோ? உயிரே! கெடுவாய்! உறவு ஓர்கிலையே!

'payil pāṭaka mel aṭi pañcu aṉaiyār ceyir ētum ilāroṭu tīrutiyō? ayirātu uṭaṉē akalvāy alaiyō? uyirē! keṭuvāy! uṟavu ōrkilaiyē!

Report an error

'ஒன்றைப் பகராய்! குழலுக்கு உடைவாய் வன் தைப்புறு நீள் வயிரத் தினையோ? கொன்றைக் கொடியாய்! கொணர்கிற்றிலையோ? என்றைக்கு உறவாக இருந்தனையே?

'oṉṟaip pakarāy! kuḻalukku uṭaivāy vaṉ taippuṟu nīḷ vayirat tiṉaiyō? koṉṟaik koṭiyāy! koṇarkiṟṟilaiyō? eṉṟaikku uṟavāka iruntaṉaiyē?

Report an error

குரா அரும்பு அனைய கூர்வாள்எயிற்று வெங் குருளை நாகம், விராவு வெங் கடுவின் கொல்லும்;மெல் இணர் முல்லை, வெய்தின் உரா அருந் துயரம் ஊட்டிஉலைவு உற மலைவது ஒன்றோ? இராவண கோபம் நிற்க,இந்திர கோபம் ஒன்றோ?

kurā arumpu aṉaiya kūrvāḷeyiṟṟu veṅ kuruḷai nākam, virāvu veṅ kaṭuviṉ kollum;mel iṇar mullai, veytiṉ urā arun tuyaram ūṭṭiulaivu uṟa malaivatu oṉṟō? irāvaṇa kōpam niṟka,intira kōpam oṉṟō?

Report an error

'ஓடை வாள் நுதலினாளைஒளிக்கலாம் உபாயம் உன்னி, நாடி, மாரீசனார் ஓர்ஆடகம் நவ்வி ஆனார்; வாடையாய்க், கூற்றினாரும்,உருவினை மாற்றி வந்தார்; கேடு சூழ்வார்க்கும் வேண்டும்உருக்கொளக் கிடைத்த

'ōṭai vāḷ nutaliṉāḷaioḷikkalām upāyam uṉṉi, nāṭi, mārīcaṉār ōrāṭakam navvi āṉār; vāṭaiyāyk, kūṟṟiṉārum,uruviṉai māṟṟi vantār; kēṭu cūḻvārkkum vēṇṭumurukkoḷak kiṭaitta

Report an error

'அருவினை அரக்கர் என்ன,அந்தரம் அதனில் யாரும் வெருவர, முழங்குகின்றமேகமே! மின்னுகின்றாய்; 'தருவல்'என்று இரங்கினாயோ?தாமரை மறந்த தையல் உருவினைக் காட்டிக் காட்டிஒளிக்கின்றாய், ஒளிக்கின்றாயால்!'

'aruviṉai arakkar eṉṉa,antaram ataṉil yārum veruvara, muḻaṅkukiṉṟamēkamē! miṉṉukiṉṟāy; 'taruval'eṉṟu iraṅkiṉāyō?tāmarai maṟanta taiyal uruviṉaik kāṭṭik kāṭṭioḷikkiṉṟāy, oḷikkiṉṟāyāl!'

Report an error

உள் நிறைந்து உயிர்க்கும் வெம்மைஉயிர் சுட உலைவேன் உள்ளம் புண் உற வாளி தூர்த்தல்பழுது இனிப், போதி; மார! எண் உறு கல்வி உள்ளத்துஇளையவன், இன்னே, உன்னைக் கண்ணுறும் ஆயின், பின்னை,யார், அவன் சீற்றம் காப்பார்?

uḷ niṟaintu uyirkkum vemmaiuyir cuṭa ulaivēṉ uḷḷam puṇ uṟa vāḷi tūrttalpaḻutu iṉip, pōti; māra! eṇ uṟu kalvi uḷḷattuiḷaiyavaṉ, iṉṉē, uṉṉaik kaṇṇuṟum āyiṉ, piṉṉai,yār, avaṉ cīṟṟam kāppār?

Report an error

'வில்லும், வெங்கணையும், வீரர்,வெஞ்சமத்து அஞ்சினார் மேல் புல்லுந அல்ல; ஆற்றல்போற்றலர்க் குறித்தல் போலாம்; அல்லும் நன் பகலும் நீங்காய்அனங்க! நீ அருளில் தீர்ந்தாய் 'செல்லும்'என்று எளிவந்தோர் மேல்செலுத்தலும் சீர்மைத்து ஆமோ?

'villum, veṅkaṇaiyum, vīrar,veñcamattu añciṉār mēl pulluna alla; āṟṟalpōṟṟalark kuṟittal pōlām; allum naṉ pakalum nīṅkāyaṉaṅka! nī aruḷil tīrntāy 'cellum'eṉṟu eḷivantōr mēlceluttalum cīrmaittu āmō?

Report an error

என்ன இத்தகைய பன்னி,ஈடு அழிந்து, இரங்குகின்ற தன்னை ஒப்பானை நோக்கித்,தகை அழிந்து அயர்ந்த தம்பி, 'நின்னை எத்தகையை ஆகநினைந்தனை? நெடியோய்! என்னாச் சென்னியில் சுமந்த கையன்தேற்றுவான், செப்பல் உற்றான்.

eṉṉa ittakaiya paṉṉi,īṭu aḻintu, iraṅkukiṉṟa taṉṉai oppāṉai nōkkit,takai aḻintu ayarnta tampi, 'niṉṉai ettakaiyai ākaniṉaintaṉai? neṭiyōy! eṉṉāc ceṉṉiyil cumanta kaiyaṉtēṟṟuvāṉ, ceppal uṟṟāṉ.

Report an error

"காலம் நீளிது காரும்; மாரியும்வந்தது; " என்ற கவற்சியோ? நீல மேனி அரக்கர் வீரம்நினைந்து அழுங்கிய நீர்மையோ? வாலி சேனை மடந்தை வைகு இடம்நாட வாரல் இலாமையோ? சால நூல் உணர் கேள்வி வீர!தளர்ந்தது என்னை? தவத்தினோய்!

"kālam nīḷitu kārum; māriyumvantatu; " eṉṟa kavaṟciyō? nīla mēṉi arakkar vīramniṉaintu aḻuṅkiya nīrmaiyō? vāli cēṉai maṭantai vaiku iṭamnāṭa vāral ilāmaiyō? cāla nūl uṇar kēḷvi vīra!taḷarntatu eṉṉai? tavattiṉōy!

Report an error

'மறை துளங்கினும், மதி துளங்கினும்;வானும், ஆழ் கடல் வையமும் நிறை துளங்கினும், நிலை துளங்குறுநிலைமை நின் வயின் நிற்குமோ? பிறை துளங்குவ அனைய பேர் எயிறுஉடைய பேதையர் பெருமை, நின் இறை துளங்குறு புருவ மென்சிலைஇடை துளங்குற இசையுமோ?'

'maṟai tuḷaṅkiṉum, mati tuḷaṅkiṉum;vāṉum, āḻ kaṭal vaiyamum niṟai tuḷaṅkiṉum, nilai tuḷaṅkuṟunilaimai niṉ vayiṉ niṟkumō? piṟai tuḷaṅkuva aṉaiya pēr eyiṟuuṭaiya pētaiyar perumai, niṉ iṟai tuḷaṅkuṟu puruva meṉcilaiiṭai tuḷaṅkuṟa icaiyumō?'

Report an error

'அனுமன் என்பவன் அளவு அறிந்தனம்;அறிஞ! அங்கதன் ஆதியோர் எனையர் என்பது ஓர் இறுதி கண்டிலம்;எழுபது என்று எணும் இயல்பினார், வினையின் வெந்துயர் விரவு திங்களும்,விரைவு சென்றன, எளிதின், நின் தனு எனும் திரு நுதலி வந்தனள்;சரதம்; வன் துயர் தவிர்தியே.

'aṉumaṉ eṉpavaṉ aḷavu aṟintaṉam;aṟiña! aṅkataṉ ātiyōr eṉaiyar eṉpatu ōr iṟuti kaṇṭilam;eḻupatu eṉṟu eṇum iyalpiṉār, viṉaiyiṉ ventuyar viravu tiṅkaḷum,viraivu ceṉṟaṉa, eḷitiṉ, niṉ taṉu eṉum tiru nutali vantaṉaḷ;caratam; vaṉ tuyar tavirtiyē.

Report an error

'மறை அறிந்தவர் வரவு கண்டு, "உமைவலியும் வஞ்சகர் வழியொடும் குறைய வென்று, இடர்களைவென்" என்றனை,குறை முடிந்தது; விதியினால், இறைவ! அங்கு அவர் இறுதி கண்டு, இனிதுஇசை புனைந்து, இமையவர்கள்தாம், உறையும் உம்பரும் உதவி நின்று அருள்;உணர்வு அழிந்திடல் உறுதியோ?'

'maṟai aṟintavar varavu kaṇṭu, "umaivaliyum vañcakar vaḻiyoṭum kuṟaiya veṉṟu, iṭarkaḷaiveṉ" eṉṟaṉai,kuṟai muṭintatu; vitiyiṉāl, iṟaiva! aṅku avar iṟuti kaṇṭu, iṉituicai puṉaintu, imaiyavarkaḷtām, uṟaiyum umparum utavi niṉṟu aruḷ;uṇarvu aḻintiṭal uṟutiyō?'

Report an error

'காது கொற்றம் நினக்கு அலாதுபிறர்க்கு எவ்வாறு கலக்குமோ? வேதனைக்கு இடம் ஆதல் வீரதைஅன்று; பேதைமை ஆம் அரோ; போது பிற்படல் உண்டு; இது ஓர் பொருள்அன்று; நின்று புணர்த்தியேல் யாது உனக்கு இயலாதது? எந்தை!வருந்தல்'என்ன இயம்பினான்.

'kātu koṟṟam niṉakku alātupiṟarkku evvāṟu kalakkumō? vētaṉaikku iṭam ātal vīrataiaṉṟu; pētaimai ām arō; pōtu piṟpaṭal uṇṭu; itu ōr poruḷaṉṟu; niṉṟu puṇarttiyēl yātu uṉakku iyalātatu? entai!varuntal'eṉṉa iyampiṉāṉ.

Report an error

சொற்ற தம்பி உரைக்கு உணர்ந்து, உயிர்சோர்வு ஒடுங்கிய தொல்லையோன், இற்ற இன்னல் இயக்கம் எய்திட,வைகல் பற்பல ஏக, மேல் உற்று நின்ற வினைக் கொடும் பிணிஒன்றின்மேல் உடன் ஒன்று உராய், மற்று வெம் பிணி பற்றினாலென,வந்து எதிர்ந்தது மாரியே.

coṟṟa tampi uraikku uṇarntu, uyircōrvu oṭuṅkiya tollaiyōṉ, iṟṟa iṉṉal iyakkam eytiṭa,vaikal paṟpala ēka, mēl uṟṟu niṉṟa viṉaik koṭum piṇioṉṟiṉmēl uṭaṉ oṉṟu urāy, maṟṟu vem piṇi paṟṟiṉāleṉa,vantu etirntatu māriyē.

Report an error

நிறைந்தன நெடுங்குளம்; நெருங்கின தரங்கம்; குறைந்தன கருங்குயில்; குளிர்ந்த உயர் குன்றம்; மறைந்தன நெடுந்திசை; வருந்தினர் பிரிந்தார்; உறைந்தன மகன்றில் உடன் அன்றில் உயிர் ஒன்றி.

niṟaintaṉa neṭuṅkuḷam; neruṅkiṉa taraṅkam; kuṟaintaṉa karuṅkuyil; kuḷirnta uyar kuṉṟam; maṟaintaṉa neṭunticai; varuntiṉar pirintār; uṟaintaṉa makaṉṟil uṭaṉ aṉṟil uyir oṉṟi.

Report an error

பாசிழை மடந்தையர் பழிப்பு இல் அகல் அல்குல் தூசு தொடர் ஊசல் நனி வெம்மை தொடர்வுற்றே வீசியது வாடை எரி வெந்த விரி புண் வீழ் ஆசு இல் அயில் வாளி என ஆசை புரிவார்மேல்.

pāciḻai maṭantaiyar paḻippu il akal alkul tūcu toṭar ūcal naṉi vemmai toṭarvuṟṟē vīciyatu vāṭai eri venta viri puṇ vīḻ ācu il ayil vāḷi eṉa ācai purivārmēl.

Report an error

வேலை நிறைவுற்றன; வெயில் கதிர் வெதுப்பும் சீலம் அழிவுற்ற; புனல் உற்று உருவு செப்பின் காலம் அறிவுற்று உணர்தல் கன்னல் அளவு அல்லால் மாலை பகல் உற்றது என ஓர்வு அரிது மாதோ.

vēlai niṟaivuṟṟaṉa; veyil katir vetuppum cīlam aḻivuṟṟa; puṉal uṟṟu uruvu ceppiṉ kālam aṟivuṟṟu uṇartal kaṉṉal aḷavu allāl mālai pakal uṟṟatu eṉa ōrvu aritu mātō.

Report an error

நெல் கிழிய நெற் பொதி நிரம்பின நிரம்பாச் சொற்கு இழிய நல்கிளிகள்; தோகையவர் தூய்மென் பற்கு இழி மணிப்படர் திரைப் பரதர் முன்றில் பொன் கிழி விரித்தன சினைப் பொதுளு புன்னை.

nel kiḻiya neṟ poti nirampiṉa nirampāc coṟku iḻiya nalkiḷikaḷ; tōkaiyavar tūymeṉ paṟku iḻi maṇippaṭar tiraip paratar muṉṟil poṉ kiḻi virittaṉa ciṉaip potuḷu puṉṉai.

Report an error

நிறம் கருகு கங்குல், பகல்,நின்ற நிலை நீவா அறம் கருது சிந்தை முனிஅந்தணரின், ஆலிப் பிறங்கு அரு நெடுந் துளிபடப்,பெயர்வில் குன்றின், உறங்கல பிறங்கல் அயல்நின்ற உயர் வேழம்.

niṟam karuku kaṅkul, pakal,niṉṟa nilai nīvā aṟam karutu cintai muṉiantaṇariṉ, ālip piṟaṅku aru neṭun tuḷipaṭap,peyarvil kuṉṟiṉ, uṟaṅkala piṟaṅkal ayalniṉṟa uyar vēḻam.

Report an error

சந்தின் அடையின் படலை வேதிகை தடந்தோறு அந்தி இடு அகில் புகை நுழைந்த குளிர் அன்னம்; மந்தி துயில் உற்ற முழை; வன் கடுவன் அங்கத்து இந்தியம் அவித்த தனி யோகியின் இருந்த.

cantiṉ aṭaiyiṉ paṭalai vētikai taṭantōṟu anti iṭu akil pukai nuḻainta kuḷir aṉṉam; manti tuyil uṟṟa muḻai; vaṉ kaṭuvaṉ aṅkattu intiyam avitta taṉi yōkiyiṉ irunta.

Report an error

ஆசு இல் சுனை, வால் அருவி,ஆய் இழையர் ஐம்பால் வாச மணம் நாறல் இலஆன; மணி வன் கால் ஊசல் வறிது ஆன; இதண்ஒள் மணிகள் விண்மேல் வீசல் இலவான; நெடும்மாரி துளி வீச.

ācu il cuṉai, vāl aruvi,āy iḻaiyar aimpāl vāca maṇam nāṟal ilaāṉa; maṇi vaṉ kāl ūcal vaṟitu āṉa; itaṇoḷ maṇikaḷ viṇmēl vīcal ilavāṉa; neṭummāri tuḷi vīca.

Report an error

கருந்தகைய தண்சினைய கைதை மடல் காதல் தருந்தகைய போது கிளையின் புடை தயங்கப் பெருந்தகைய பொன் சிறகு ஒடுக்கி உடல் பேராது இருந்த குருகின் பெடை பிரிந்தவரக்ள் என்ன.

karuntakaiya taṇciṉaiya kaitai maṭal kātal taruntakaiya pōtu kiḷaiyiṉ puṭai tayaṅkap peruntakaiya poṉ ciṟaku oṭukki uṭal pērātu irunta kurukiṉ peṭai pirintavarakḷ eṉṉa.

Report an error

பதங்கம் முழவு ஒத்த; இசை பல் ஞிமிறு பன்ன விதங்களின் நடித்திடு விகற்ப வழி மேவும் மதங்கியரை ஒத்த மயில்; வைகும் மர மூலத்து ஒதுங்கின உழைக்குலம்; மழைக்குலம் உழக்க.

pataṅkam muḻavu otta; icai pal ñimiṟu paṉṉa vitaṅkaḷiṉ naṭittiṭu vikaṟpa vaḻi mēvum mataṅkiyarai otta mayil; vaikum mara mūlattu otuṅkiṉa uḻaikkulam; maḻaikkulam uḻakka.

Report an error

விளக்கு ஒளி அகில் புகைவிழுங்கு அமளி, மென் கொம்பு இளைக்கும் இடை மங்கையரும்,மைந்தர்களும், ஏற, தளத்தகும் மலர்த் தவிசு இகந்து,நகு சந்தின் தொளைத் துயில் உவந்து,துயில்வுற்ற, குளிர் தும்பி.

viḷakku oḷi akil pukaiviḻuṅku amaḷi, meṉ kompu iḷaikkum iṭai maṅkaiyarum,maintarkaḷum, ēṟa, taḷattakum malart tavicu ikantu,naku cantiṉ toḷait tuyil uvantu,tuyilvuṟṟa, kuḷir tumpi.

Report an error

தாமரை மலர்த் தவிசு இகந்து தகை அன்னம் மாமரன் நிரைத் தொகு பொதும்பர் உழை வைக; தேமரன் அடுக்கு இதண் இடைச் செறி குரம்பைத் தூமருவு எயிற்றியரொடு அன்பர் துயில்வுற்றார்.

tāmarai malart tavicu ikantu takai aṉṉam māmaraṉ nirait toku potumpar uḻai vaika; tēmaraṉ aṭukku itaṇ iṭaic ceṟi kurampait tūmaruvu eyiṟṟiyaroṭu aṉpar tuyilvuṟṟār.

Report an error

வள்ளி புடை சுற்றி உயர் சிறு இலை மரம் தோறு எள்ளரு மறிக் குருளொடு அண்டர்கள் இருந்தார்; கள்ளரின் ஒளித்து உழல் நெடுங் கழுது ஒடுங்கி முள் எயிறு தின்று பசி மூழ்கிட இருந்த.

vaḷḷi puṭai cuṟṟi uyar ciṟu ilai maram tōṟu eḷḷaru maṟik kuruḷoṭu aṇṭarkaḷ iruntār; kaḷḷariṉ oḷittu uḻal neṭuṅ kaḻutu oṭuṅki muḷ eyiṟu tiṉṟu paci mūḻkiṭa irunta.

Report an error

சரம் பயில் நெடுந் துளி நிரந்த புயல் சார உரம் பெயர்வு இல் வன் கரி கரந்து உற ஒடுங்கா வரம்பு அகல் நெடும் பிரசம் வைகல் பல வைகும் முரம்பினில் நிரம்பல முழைஞ்சு இடை நுழைந்த.

caram payil neṭun tuḷi niranta puyal cāra uram peyarvu il vaṉ kari karantu uṟa oṭuṅkā varampu akal neṭum piracam vaikal pala vaikum murampiṉil nirampala muḻaiñcu iṭai nuḻainta.

Report an error

இத்தகைய மாரி இடை துன்னி இருள் எய்த மத்தக மணிக் குறுநகைச் சனகன் மான்மேல் உய்த்த உணர்வத்தினன் நெருப்பு இடை உயிர்ப்பான் வித்தகன் இலக்குவனை முன்னினன் விளம்பும்.

ittakaiya māri iṭai tuṉṉi iruḷ eyta mattaka maṇik kuṟunakaic caṉakaṉ māṉmēl uytta uṇarvattiṉaṉ neruppu iṭai uyirppāṉ vittakaṉ ilakkuvaṉai muṉṉiṉaṉ viḷampum.

Report an error

'மழைக் கரு மின் எயிற்று அரக்கன் வஞ்சனை இழைப்ப (அ)ருங் கொங்கையும் எதிர்வுற்று இன்னலின் உழைத்தனள் உலைந்து உயிர் உலக்கும்; ஒன்றினும் பிழைப்பு அரிது எனக்கும்; ஈது என்ன பெற்றியோ?

'maḻaik karu miṉ eyiṟṟu arakkaṉ vañcaṉai iḻaippa (a)ruṅ koṅkaiyum etirvuṟṟu iṉṉaliṉ uḻaittaṉaḷ ulaintu uyir ulakkum; oṉṟiṉum piḻaippu aritu eṉakkum; ītu eṉṉa peṟṟiyō?

Report an error

'தூநிறச் சுடுசரம் தூணி தூங்கிட வான் உறப் பிறங்கிய வயிரத் தோளொடும் யான் உறக் கடவதே இதுவும்? இந்நிலை வேல் நிறத்து உற்றது ஒத்துழியும் வீகிலேன்.

'tūniṟac cuṭucaram tūṇi tūṅkiṭa vāṉ uṟap piṟaṅkiya vayirat tōḷoṭum yāṉ uṟak kaṭavatē ituvum? innilai vēl niṟattu uṟṟatu ottuḻiyum vīkilēṉ.

Report an error

'தெரி கணை மலரொடு திறந்த நெஞ்சொடும் அரிய வன் துயரொடும் யானும் வைகுவேன்; எரியும் மின்மினி மணிவிளக்கின் இன் துணை குரீஇ இனம் பெடையொடும் துயிலக் கூட்டினுள்.

'teri kaṇai malaroṭu tiṟanta neñcoṭum ariya vaṉ tuyaroṭum yāṉum vaikuvēṉ; eriyum miṉmiṉi maṇiviḷakkiṉ iṉ tuṇai kurīi iṉam peṭaiyoṭum tuyilak kūṭṭiṉuḷ.

Report an error

'வானகம் மின்னினும் மழை முழங்கினும் யான் அகம் மெலிகுவென் எயிற்று அரா எனக்; கானகம் புகுந்து யான் முடித்த காரியம் மேல் நகும்; கீழ் நகும்; இனி என் வேண்டுமால்?

'vāṉakam miṉṉiṉum maḻai muḻaṅkiṉum yāṉ akam melikuveṉ eyiṟṟu arā eṉak; kāṉakam pukuntu yāṉ muṭitta kāriyam mēl nakum; kīḻ nakum; iṉi eṉ vēṇṭumāl?

Report an error

'மறந்து இருந்து உய்கலேன்; மாரி ஈது எனின் இறந்து விண் சேர்வது சரதம்; இப்பழி பிறந்து பின் தீர்வலோ? பின்னர் அன்னது துறந்து சென்று உறுவலோ? துயரின் வைகுவேன்!

'maṟantu iruntu uykalēṉ; māri ītu eṉiṉ iṟantu viṇ cērvatu caratam; ippaḻi piṟantu piṉ tīrvalō? piṉṉar aṉṉatu tuṟantu ceṉṟu uṟuvalō? tuyariṉ vaikuvēṉ!

Report an error

'ஈண்டு நின்று அரக்கர்தம் இருக்கை யாம் இனிக் காண்டலின் பற்பல காலம் காண்டுமால்; வேண்டுவது அன்று இது; வீர! "நோய் தறெ மாண்டனன் " என்றது மாட்சிப் பாலது ஆம்.

'īṇṭu niṉṟu arakkartam irukkai yām iṉik kāṇṭaliṉ paṟpala kālam kāṇṭumāl; vēṇṭuvatu aṉṟu itu; vīra! "nōy taṟe māṇṭaṉaṉ " eṉṟatu māṭcip pālatu ām.

Report an error

செப்பு உருக்கு அனைய இம் மாரிச் சீகரம் வெப்பு உறப் புரம் சுட வெந்து வீவதோ அப்பு உருக் கொண்ட வாள் நெடுங் கண் ஆய் இழை துப்பு உருக் குமுத வாய் அமுதம் துய்த்த யான்?

ceppu urukku aṉaiya im māric cīkaram veppu uṟap puram cuṭa ventu vīvatō appu uruk koṇṭa vāḷ neṭuṅ kaṇ āy iḻai tuppu uruk kumuta vāy amutam tuytta yāṉ?

Report an error

நெய் அடை தீ எதிர் நிறுவி "நிற்கு இவள் கை அடை " என்ற அச் சனகன் கட்டுரை பொய் அடை ஆக்கிய பொறி இலேனொடு மெய் அடையாது; இனி விளிதல் நன்று அரோ.

ney aṭai tī etir niṟuvi "niṟku ivaḷ kai aṭai " eṉṟa ac caṉakaṉ kaṭṭurai poy aṭai ākkiya poṟi ilēṉoṭu mey aṭaiyātu; iṉi viḷital naṉṟu arō.

Report an error

'தேற்றுவாய் நீ உளையாகத் தேறி நின்று ஆற்றுவேன் நான் உளனாக ஆய்வளை தோற்றுவாள் அல்லள்; இத் துன்பம் ஆர் இனி மாற்றுவார்? துயர்க்கு ஒரு வரம்பு உண்டாகுமோ?

'tēṟṟuvāy nī uḷaiyākat tēṟi niṉṟu āṟṟuvēṉ nāṉ uḷaṉāka āyvaḷai tōṟṟuvāḷ allaḷ; it tuṉpam ār iṉi māṟṟuvār? tuyarkku oru varampu uṇṭākumō?

Report an error

'விட்ட போர் வாளிகள் விரிஞ்சன் விண்ணையும் சுட்டபோது இமையவர் முதல தொல்லையோர் பட்டபோது உலகமும் உயிரும் பற்று அறக் கட்டபோது அல்லது மயிலைக் காண்குமோ?

'viṭṭa pōr vāḷikaḷ viriñcaṉ viṇṇaiyum cuṭṭapōtu imaiyavar mutala tollaiyōr paṭṭapōtu ulakamum uyirum paṟṟu aṟak kaṭṭapōtu allatu mayilaik kāṇkumō?

Report an error

'தருமம் என்றொரு பொருள் தன்னை அஞ்சி யான் தெருமருகின்றது; செறுநர் தேவரோடு ஒருமையின் வந்தனரேனும் உய்கலார்; உரும் என ஒலி படும் உர விலோய்!'என்றான்.

'tarumam eṉṟoru poruḷ taṉṉai añci yāṉ terumarukiṉṟatu; ceṟunar tēvarōṭu orumaiyiṉ vantaṉarēṉum uykalār; urum eṉa oli paṭum ura vilōy!'eṉṟāṉ.

Report an error

இளவலும் உரை செய்வான் எண்ணும் நாள் இனும் உள அல; கூதிரும் இறுதி உற்றதால்; களவு செய்தவன் உறை காணும் காலம் வந்து அளவியது; அயர்வது என்? ஆணை ஆயியாய்!

iḷavalum urai ceyvāṉ eṇṇum nāḷ iṉum uḷa ala; kūtirum iṟuti uṟṟatāl; kaḷavu ceytavaṉ uṟai kāṇum kālam vantu aḷaviyatu; ayarvatu eṉ? āṇai āyiyāy!

Report an error

திரை செய் அத் திண்கடல் அமிய்தம் செங்கணான் உரை செயத் தரினும் அத்தொழில் உவந்திலன்; வரை முதல் கலப்பைகள் மாடு நாட்டித் தன் குரை மலர்த் தடக்கையால் கடைந்து கொண்டனன்.

tirai cey at tiṇkaṭal amiytam ceṅkaṇāṉ urai ceyat tariṉum attoḻil uvantilaṉ; varai mutal kalappaikaḷ māṭu nāṭṭit taṉ kurai malart taṭakkaiyāl kaṭaintu koṇṭaṉaṉ.

Report an error

மனத்தினின் உலகு எலாம் வகுத்து வாய்ப் பெயும் நினைப்பினன் ஆயினும் நேமியான் நெடும் எனை பல படைக்கலம் ஏந்தி யாரையும் வினைப் பெரும் சூழ்ச்சியின் பொருது வெல்லுமால்.

maṉattiṉiṉ ulaku elām vakuttu vāyp peyum niṉaippiṉaṉ āyiṉum nēmiyāṉ neṭum eṉai pala paṭaikkalam ēnti yāraiyum viṉaip perum cūḻcciyiṉ porutu vellumāl.

Report an error

கண் உடை நுதலினன் கணிச்சி வானவன் விண் இடைப் புரம் சுட வெகுண்ட மேலைநாள் எண்ணிய சூழ்ச்சியும் ஈட்டிக் கொண்டவும் அண்ணலே! ஒருவரால் அறியற் பாலவோ?

kaṇ uṭai nutaliṉaṉ kaṇicci vāṉavaṉ viṇ iṭaip puram cuṭa vekuṇṭa mēlaināḷ eṇṇiya cūḻcciyum īṭṭik koṇṭavum aṇṇalē! oruvarāl aṟiyaṟ pālavō?

Report an error

ஆகுநர் யாரையும் துணைவர் ஆக்கிப் பின் ஏகுறு நாளிடை எய்தி எண்ணுவ சேகு உறப் பல்முறை தெருட்டிச் செய்தபின் வாகை என்று ஒரு பொருள் வழுவற் பாலதோ?

ākunar yāraiyum tuṇaivar ākkip piṉ ēkuṟu nāḷiṭai eyti eṇṇuva cēku uṟap palmuṟai teruṭṭic ceytapiṉ vākai eṉṟu oru poruḷ vaḻuvaṟ pālatō?

Report an error

அறம் துறை திறம்பினர் அரக்கர் ஆற்றலர்; 'மறத் துறை நமக்கு'என வலிக்கும் வன்மையோர்; திறத் துறை நல் நெறி திறம்பல் உண்டு எனின் புறத்து இனி யார் திறம் புகழும் வாகையும்?

aṟam tuṟai tiṟampiṉar arakkar āṟṟalar; 'maṟat tuṟai namakku'eṉa valikkum vaṉmaiyōr; tiṟat tuṟai nal neṟi tiṟampal uṇṭu eṉiṉ puṟattu iṉi yār tiṟam pukaḻum vākaiyum?

Report an error

'பைந் தொடிக்கு இடர் களை பருவம் பையவே வந்து அடுத்து உளது; இனி வருத்தம் நீங்குவாய்! அந்தணர்க்கு ஆகும் நாம் அரக்கர்க்கு ஆதுமோ? சுந்தரத் தனு வலாய்! சொல்லு நீ'என்றான்.

'pain toṭikku iṭar kaḷai paruvam paiyavē vantu aṭuttu uḷatu; iṉi varuttam nīṅkuvāy! antaṇarkku ākum nām arakkarkku ātumō? cuntarat taṉu valāy! collu nī'eṉṟāṉ.

Report an error

உறுதி அஃதே என உணர்ந்த ஊழியான் 'இறுதி உண்டே கொல் இம் மாரிக்கு?'என்பது ஓர் தெறு துயர் உழந்தனன் தேயத் தேய்வு சென்று அறுதியை அடைந்தது அப் பருவம் ஆண்டு போய்.

uṟuti aḵtē eṉa uṇarnta ūḻiyāṉ 'iṟuti uṇṭē kol im mārikku?'eṉpatu ōr teṟu tuyar uḻantaṉaṉ tēyat tēyvu ceṉṟu aṟutiyai aṭaintatu ap paruvam āṇṭu pōy.

Report an error

மள்கல் இல் பெரும் கொடை மருவி மண்ணுளோர் உள்கிய பொருள் எலாம் உதவி அற்ற போது எள்கல் இல் இரவலர்க்கு ஈவது இன்மையால் வெள்கிய மாந்தரின் வெளுத்த மேகமே.

maḷkal il perum koṭai maruvi maṇṇuḷōr uḷkiya poruḷ elām utavi aṟṟa pōtu eḷkal il iravalarkku īvatu iṉmaiyāl veḷkiya māntariṉ veḷutta mēkamē.

Report an error

தீவினை நல்வினை என்னத் தேற்றிய பேய் வினை பொருள்தனை அறிந்து பெற்றது ஓர் ஆய்வினை மெய்யுணர்வு அணுக ஆசு அறும் மாயையின் மாய்ந்தது மாரிப் பேர் இருள்.

tīviṉai nalviṉai eṉṉat tēṟṟiya pēy viṉai poruḷtaṉai aṟintu peṟṟatu ōr āyviṉai meyyuṇarvu aṇuka ācu aṟum māyaiyiṉ māyntatu mārip pēr iruḷ.

Report an error

மூள் அமர் தொலைவுற முரசு அவிந்த போல் கோள் அமை கணம் முகில் குமுறல் ஓவின; நீள் அடு கணை எனத் துளியும் நீங்கின; வாள் உறை உற்று என மறைந்த மின்னெலாம்.

mūḷ amar tolaivuṟa muracu avinta pōl kōḷ amai kaṇam mukil kumuṟal ōviṉa; nīḷ aṭu kaṇai eṉat tuḷiyum nīṅkiṉa; vāḷ uṟai uṟṟu eṉa maṟainta miṉṉelām.

Report an error

தடுத்த தாள் நெடுந் தடம் கிரிகள் தாழ்வரை அடுத்த நீர் ஒழிந்தன அருவி தூங்கின எடுத்த நூல் உத்தரியத்தொடு எய்தி நின்று உடுத்த வால் நிறத் துகில் ஒழிந்த போன்றவே.

taṭutta tāḷ neṭun taṭam kirikaḷ tāḻvarai aṭutta nīr oḻintaṉa aruvi tūṅkiṉa eṭutta nūl uttariyattoṭu eyti niṉṟu uṭutta vāl niṟat tukil oḻinta pōṉṟavē.

Report an error

மேகம் மாமலைகளின் புறத்து வீதலால் மாக யாறு யாவையும் வாரி அற்றன; ஆகையால் தகவு இழந்து அழிவில் நல் பொருள் போக ஆறு ஒழுகலான் செல்வம் போலவே.

mēkam māmalaikaḷiṉ puṟattu vītalāl māka yāṟu yāvaiyum vāri aṟṟaṉa; ākaiyāl takavu iḻantu aḻivil nal poruḷ pōka āṟu oḻukalāṉ celvam pōlavē.

Report an error

கடம் திறந்து எழுகளிறுஅனைய கார்முகில் இடம் திறந்து ஏகலின்பொலிந்தது இந்துவும்; நடம் திறன் நவில்வுறுநங்கைமார் முகம் படம் திறந்து ஒருவலின்பொலியும் பான்மைபோல்.

kaṭam tiṟantu eḻukaḷiṟuaṉaiya kārmukil iṭam tiṟantu ēkaliṉpolintatu intuvum; naṭam tiṟaṉ navilvuṟunaṅkaimār mukam paṭam tiṟantu oruvaliṉpoliyum pāṉmaipōl.

Report an error

பாசிழை மடந்தையர் பகட்டு வெம் முலை பூசிய சந்தனம் புழுகு குங்குமம் மூசின முயங்கு சேறு உலா மொண்டு உற வீசின நறும்பொடி விண்டு வாடையே.

pāciḻai maṭantaiyar pakaṭṭu vem mulai pūciya cantaṉam puḻuku kuṅkumam mūciṉa muyaṅku cēṟu ulā moṇṭu uṟa vīciṉa naṟumpoṭi viṇṭu vāṭaiyē.

Report an error

மன்னவன் தலைமகன் வருத்தம் மாற்றுவான் நன்னெடும் பருவமும் நணுகிற்று ஆதலால் "பொன்னினை நாடிய போதும் என்ப போல் அன்னமும் திசைதிசை அகன்ற விண்ணின் வாய்."

maṉṉavaṉ talaimakaṉ varuttam māṟṟuvāṉ naṉṉeṭum paruvamum naṇukiṟṟu ātalāl "poṉṉiṉai nāṭiya pōtum eṉpa pōl aṉṉamum ticaiticai akaṉṟa viṇṇiṉ vāy."

Report an error

தம் சிறை ஒடுக்கின தழுவும் இன்னல நெஞ்சு உறு மம்மரும் நினைப்பும் நீண்டன மஞ்சு உறு நெடு மழை பிரிந்த மாமயில் எஞ்சின மிதிலை நாட்டு அன்னம் என்னவே.

tam ciṟai oṭukkiṉa taḻuvum iṉṉala neñcu uṟu mammarum niṉaippum nīṇṭaṉa mañcu uṟu neṭu maḻai pirinta māmayil eñciṉa mitilai nāṭṭu aṉṉam eṉṉavē.

Report an error

வஞ்சனைத் தீவினை மறந்த மாதவர் நெஞ்சு எனத் தெளிந்தன நீரம் நீர்தொறும் 'பஞ்சு'எனச் சிவக்கும் மென் பாதப் பேதையர் அஞ்சனக் கண் எனப் பிறழ்ந்த ஆடல் மீன்.

vañcaṉait tīviṉai maṟanta mātavar neñcu eṉat teḷintaṉa nīram nīrtoṟum 'pañcu'eṉac civakkum meṉ pātap pētaiyar añcaṉak kaṇ eṉap piṟaḻnta āṭal mīṉ.

Report an error

ஊடிய மடந்தையர் வதனம் ஒத்தன தாள்தொறும் மலர்ந்தன முதிர்ந்த தாமரை; கூடினர் துவர் இதழ்க் கோலம் கொண்டன சேடு உறு நறு முகை விரிந்த செங்கிடை.

ūṭiya maṭantaiyar vataṉam ottaṉa tāḷtoṟum malarntaṉa mutirnta tāmarai; kūṭiṉar tuvar itaḻk kōlam koṇṭaṉa cēṭu uṟu naṟu mukai virinta ceṅkiṭai.

Report an error

கல்வியின் திகழ் கணக்காயர் கம்பலைப் பல்விதச் சிறார் எனப் பகர்வ பல்லரி செல் இடத்து அல்லது ஒன்று உரைத்தல் செய்கலா நல் அறிவாளரின் அவிந்த நா எலாம்.

kalviyiṉ tikaḻ kaṇakkāyar kampalaip palvitac ciṟār eṉap pakarva pallari cel iṭattu allatu oṉṟu uraittal ceykalā nal aṟivāḷariṉ avinta nā elām.

Report an error

செறிபுனல் பூந் துகில் திரைக் கையால் திரைத்து உறுதுணைக் கால்மடுத்து ஓடி ஓத நீர் எறுழ்வலிக் கணவனை எய்தி ஆறு எலாம் முறுவலிக்கின்றன போன்ற முத்தினால்.

ceṟipuṉal pūn tukil tiraik kaiyāl tiraittu uṟutuṇaik kālmaṭuttu ōṭi ōta nīr eṟuḻvalik kaṇavaṉai eyti āṟu elām muṟuvalikkiṉṟaṉa pōṉṟa muttiṉāl.

Report an error

சொல் நிறை கேள்வியின் தொடர்ந்த மாந்தரின் இல் நிறம் பசலை உற்று இருந்த மாதரின் தன் நிறம் பயப்பய நீங்கித் தள்ளரும் பொன் நிறம் பொருந்தின பூகத் தாறு எலாம்.

col niṟai kēḷviyiṉ toṭarnta māntariṉ il niṟam pacalai uṟṟu irunta mātariṉ taṉ niṟam payappaya nīṅkit taḷḷarum poṉ niṟam poruntiṉa pūkat tāṟu elām.

Report an error

பயின்று உடல் குளிர்ப்பவும் பழனம் நீத்து அவண் இயன்றன இள வெயில் ஏய்ந்த மெய்யின வயின்தொறும் வயின்தொறும் மடித்த வாயின துயின்றன இடங்கர் மா தடங்கள் தோறுமே.

payiṉṟu uṭal kuḷirppavum paḻaṉam nīttu avaṇ iyaṉṟaṉa iḷa veyil ēynta meyyiṉa vayiṉtoṟum vayiṉtoṟum maṭitta vāyiṉa tuyiṉṟaṉa iṭaṅkar mā taṭaṅkaḷ tōṟumē.

Report an error

கொஞ்சுறு கிளி நெடுங் குதலை கூடின அம் சிறை அறுபத்து அளக ஓளிய எஞ்சல் இல் குழையன இடை நுடங்குவ வஞ்சிகள் பொலிந்தன மகளிர் மானவே.

koñcuṟu kiḷi neṭuṅ kutalai kūṭiṉa am ciṟai aṟupattu aḷaka ōḷiya eñcal il kuḻaiyaṉa iṭai nuṭaṅkuva vañcikaḷ polintaṉa makaḷir māṉavē.

Report an error

அளித்தன முத்து இனம் தோற்ப மான் அனார் வெளித்து எதிர் விழிக்கவும் வெள்கி மேன்மையால் ஒளித்தன ஆம் என ஒடுங்கு கண்ணன குளித்தன மண்ணிடை கூனல் நந்து எலாம்.

aḷittaṉa muttu iṉam tōṟpa māṉ aṉār veḷittu etir viḻikkavum veḷki mēṉmaiyāl oḷittaṉa ām eṉa oṭuṅku kaṇṇaṉa kuḷittaṉa maṇṇiṭai kūṉal nantu elām.

Report an error

மழைபடப் பொதுளிய மருதத் தாமரை தழைபடப் பேரிலைப் புரையில் தங்குவ இழைபடு பெடையொடும் எள்ளில் நள்ளிகள் புழை அடைத்து ஒடுங்கின பொச்சை மாக்கள் போல்.

maḻaipaṭap potuḷiya marutat tāmarai taḻaipaṭap pērilaip puraiyil taṅkuva iḻaipaṭu peṭaiyoṭum eḷḷil naḷḷikaḷ puḻai aṭaittu oṭuṅkiṉa poccai mākkaḷ pōl.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).