Kamba Ramayanam 5.11.36
வாளாலே பொரல் உற்றான்; இற்று அது மண் சேராதமுன், வயிரத் திண் தோளாலே பொர முடுகிப் புக்கு, இடை தழுவிக் கொண்டலும், உடல் முற்றும் நீள் ஆர் அயில் என மயிர் தைத்தன; மணி நெடு வால் அவன் உடல் நிமிர்வு உற்று மீளாவகை புடை சுற்றிக்கொண்டது; பற்றிக்கொண்டனன் மேல் ஆனான்.
vāḷālē poral uṟṟāṉ; iṟṟu atu maṇ cērātamuṉ, vayirat tiṇ tōḷālē pora muṭukip pukku, iṭai taḻuvik koṇṭalum, uṭal muṟṟum nīḷ ār ayil eṉa mayir taittaṉa; maṇi neṭu vāl avaṉ uṭal nimirvu uṟṟu mīḷāvakai puṭai cuṟṟikkoṇṭatu; paṟṟikkoṇṭaṉaṉ mēl āṉāṉ.