Kamba Ramayanam 6.14.132
சுடுகணை படுதலோடும் துளங்கினான்; துளங்கா முன்னம் குட திசை வாயில் நின்ற மாருதி, புகுந்த கொள்கை உடன் இருந்து அறிந்தான் என்ன, ஓர் இமை ஒடுங்கா முன்னர், வட திசை வாயில் நின்ற மன்னவன் முன்னன் ஆனான்.
cuṭukaṇai paṭutalōṭum tuḷaṅkiṉāṉ; tuḷaṅkā muṉṉam kuṭa ticai vāyil niṉṟa māruti, pukunta koḷkai uṭaṉ iruntu aṟintāṉ eṉṉa, ōr imai oṭuṅkā muṉṉar, vaṭa ticai vāyil niṉṟa maṉṉavaṉ muṉṉaṉ āṉāṉ.