Kamba Ramayanam 6.14.220
ஓதம் ஒத்தனன் மாருதி; அதன் அகத்து உறையும் நாதன் ஒத்தனன் என்னினோ, துயில்கிலன் நம்பன்; வேதம் ஒத்தனன் மாருதி; வேதத்தின் சிரத்தின் போதம் ஒத்தனன் இராமன்; வேறு இதின் இலை பொருவே.
ōtam ottaṉaṉ māruti; ataṉ akattu uṟaiyum nātaṉ ottaṉaṉ eṉṉiṉō, tuyilkilaṉ nampaṉ; vētam ottaṉaṉ māruti; vētattiṉ cirattiṉ pōtam ottaṉaṉ irāmaṉ; vēṟu itiṉ ilai poruvē.