Skip to content

தக்ஷ காண்டம் — உபதேசப் படலம் · உபதேசப் படலம்

upatēcap paṭalam

upatēcap paṭalam

upatēcap paṭalam, from Takṣa Kāṇṭam; poems 6.1–6.32.

32 versesTamil with transliteration

A spear and lotus for chapter 119 of Kanda Puranam.

மாயையின் வலியோ னாகி மான்முத லோரை வென்றே ஆயிரத் தோரெட் டண்டம் அரசுசெய் துகநூற் றெட்டுக் காயம தழிவின் றாகிக் கடவுளர்க் கலக்கண் செய்த தீயசூர் முதலைச் செற்ற குமரன்றான் சென்னி வைப்பாம்.

māyaiyiṉ valiyō ṉāki māṉmuta lōrai veṉṟē āyirat tōreṭ ṭaṇṭam aracucey tukanūṟ ṟeṭṭuk kāyama taḻiviṉ ṟākik kaṭavuḷark kalakkaṇ ceyta tīyacūr mutalaic ceṟṟa kumaraṉṟāṉ ceṉṉi vaippām.

Report an error

உலகினுள் மேல தாகி ஓங்குபே ரொளியாய் வான்மேல் தலைமைய தாகி வைகுஞ் சத்திய வுலகந் தன்னில் புலனுணர் முனிவர் தேவர் புதல்வர்கள் புடையிற் போற்ற மலரயன் தனது கோயில் மன்றில்வீற் றிருந்தான் அன்றே.

ulakiṉuḷ mēla tāki ōṅkupē roḷiyāy vāṉmēl talaimaiya tāki vaikuñ cattiya vulakan taṉṉil pulaṉuṇar muṉivar tēvar putalvarkaḷ puṭaiyiṟ pōṟṟa malarayaṉ taṉatu kōyil maṉṟilvīṟ ṟiruntāṉ aṉṟē.

Report an error

இருந்திடு காலை வேதா யாவையும் அளிப்ப மேனாள் தெரிந்தருள் பதின்ம ராகுஞ் சீர்கெழு குமரர் தம்முட் பொருந்திய தக்கன் என்னும் புந்தியின் மேலோன் முன்செய் அருந்தவ நெறியால் ஈதொன் றையனை வினவ லுற்றான்.

iruntiṭu kālai vētā yāvaiyum aḷippa mēṉāḷ terintaruḷ patiṉma rākuñ cīrkeḻu kumarar tammuṭ poruntiya takkaṉ eṉṉum puntiyiṉ mēlōṉ muṉcey aruntava neṟiyāl ītoṉ ṟaiyaṉai viṉava luṟṟāṉ.

Report an error

தேவரின் முதல்வ ராகிச் சிற்குணத் தலைவ ராகி மூவரில் உயர்ந்தோ ராகி முடிவிலா ஒருவ ராகி ஓவற வுயிர்கள் தோறும் உயிரென வுறைவோ ராகி மேவினர் தம்மைத் தேற விளம்புதி மேலோ யென்றான்.

tēvariṉ mutalva rākic ciṟkuṇat talaiva rāki mūvaril uyarntō rāki muṭivilā oruva rāki ōvaṟa vuyirkaḷ tōṟum uyireṉa vuṟaivō rāki mēviṉar tammait tēṟa viḷamputi mēlō yeṉṟāṉ.

Report an error

என்றுதன் மைந்தன் இவ்வா றியம்பலும் மலரோன் கேளா நன்றிது மொழிவன் கேட்டி நாரணன் தானும் யானும் அன்றமர் இயற்றும் எல்லை அழலென எழுந்து வானில் சென்றதோர் சிவனே யார்க்கு மேலவன் தெளீநீ என்றான்.

eṉṟutaṉ maintaṉ ivvā ṟiyampalum malarōṉ kēḷā naṉṟitu moḻivaṉ kēṭṭi nāraṇaṉ tāṉum yāṉum aṉṟamar iyaṟṟum ellai aḻaleṉa eḻuntu vāṉil ceṉṟatōr civaṉē yārkku mēlavaṉ teḷīnī eṉṟāṉ.

Report an error

தருசெயல் வல்லோன் ஈது சாற்றலுஞ் செயலோர் மூன்றின் இருசெயல் புரியும் நீவிர் ஏதில ராகப் பின்னர் ஒருசெயல் புரியும் ஈசன் உங்களுக் கிறைவ னாகி வருசெயல் என்னே சிந்தை மயக்கற வுரைத்தி யென்றான்.

taruceyal vallōṉ ītu cāṟṟaluñ ceyalōr mūṉṟiṉ iruceyal puriyum nīvir ētila rākap piṉṉar oruceyal puriyum īcaṉ uṅkaḷuk kiṟaiva ṉāki varuceyal eṉṉē cintai mayakkaṟa vuraitti yeṉṟāṉ.

Report an error

தற்புகழ் கருத்தின் மிக்க தக்கன்ஈ துரைத்த லோடுஞ் சிற்பரன் நிலைமை அன்னான் அருளினால் தெரிந்த வேதாச் சொற்படு மறைகள் முன்நீ துகளறக் கற்றுத் தூய நற்பொருள் தெரிந்த வாறு நன்றுநன் றென்ன நக்கான்.

taṟpukaḻ karuttiṉ mikka takkaṉī turaitta lōṭuñ ciṟparaṉ nilaimai aṉṉāṉ aruḷiṉāl terinta vētāc coṟpaṭu maṟaikaḷ muṉnī tukaḷaṟak kaṟṟut tūya naṟporuḷ terinta vāṟu naṉṟunaṉ ṟeṉṉa nakkāṉ.

Report an error

பின்னுற முடிப்பான் தன்னைப் பிரானெனத் தேற்றுந் தன்மை என்னென வுரைத்தி மைந்த எங்களைச் சுரரை ஏனைத் துன்னிய வுயிர்கள் தம்மைத் தொலைவுசெய் திடுவன் ஈற்றில் அன்னவர் என்னில் முன்னம் அளித்தவன் அவனே அன்றோ.

piṉṉuṟa muṭippāṉ taṉṉaip pirāṉeṉat tēṟṟun taṉmai eṉṉeṉa vuraitti mainta eṅkaḷaic curarai ēṉait tuṉṉiya vuyirkaḷ tammait tolaivucey tiṭuvaṉ īṟṟil aṉṉavar eṉṉil muṉṉam aḷittavaṉ avaṉē aṉṟō.

Report an error

அந்தநாள் ஒருவ னாகி ஆருயிர்த் தொகையைத் தொன்னாள் வந்தவா றொடுங்கச் செய்து மன்னியே மீட்டும் அன்னை தந்தையாய் உயிர்கட் கேற்ற தனுமுதல் அளிக்கும் முக்கண் எந்தைதன் செய்கை முற்றும் இனையதென் றிசைக்கற் பாற்றோ.

antanāḷ oruva ṉāki āruyirt tokaiyait toṉṉāḷ vantavā ṟoṭuṅkac ceytu maṉṉiyē mīṭṭum aṉṉai tantaiyāy uyirkaṭ kēṟṟa taṉumutal aḷikkum mukkaṇ entaitaṉ ceykai muṟṟum iṉaiyateṉ ṟicaikkaṟ pāṟṟō.

Report an error

செங்கண்மால் தன்னை என்னைத் திண்டிறல் மொய்ம்பின் நல்கி அங்கண்மா ஞாலங் காப்பும் அளிப்பதும் உதவி யாமும் உங்கள்பால் இருத்து மென்றெம் முயிருள்நின் றியற்றா நின்றான் எங்களால் முடியுஞ் செய்கை யாவதும் இல்லை கண்டாய்.

ceṅkaṇmāl taṉṉai eṉṉait tiṇṭiṟal moympiṉ nalki aṅkaṇmā ñālaṅ kāppum aḷippatum utavi yāmum uṅkaḷpāl iruttu meṉṟem muyiruḷniṉ ṟiyaṟṟā niṉṟāṉ eṅkaḷāl muṭiyuñ ceykai yāvatum illai kaṇṭāy.

Report an error

உயிருள்நின் றியற்றல் அன்றி உற்றநஞ் சிந்தை உள்ளும் இயன்முறை வழாது காப்போன் இருவிழி யகத்து மானான் மயலுறு பொழுதும் எம்பால் வந்தருள் செய்வன் தானோர் செயல்புரி கின்றான் போல எம்மொடு செறிவன் அன்றே.

uyiruḷniṉ ṟiyaṟṟal aṉṟi uṟṟanañ cintai uḷḷum iyaṉmuṟai vaḻātu kāppōṉ iruviḻi yakattu māṉāṉ mayaluṟu poḻutum empāl vantaruḷ ceyvaṉ tāṉōr ceyalpuri kiṉṟāṉ pōla emmoṭu ceṟivaṉ aṉṟē.

Report an error

எள்ளுறும் எண்ணெய் என்ன எறிமணி அரவ மென்னக் கள்ளுறு போது கான்ற கடியெனச் சலாகை தன்னில் தள்ளுற அரிய சோதி தானென உலக மெங்கும் உள்ளொடு புறமு மாகி ஒருமையாற் பரவும் அன்றே.

eḷḷuṟum eṇṇey eṉṉa eṟimaṇi arava meṉṉak kaḷḷuṟu pōtu kāṉṟa kaṭiyeṉac calākai taṉṉil taḷḷuṟa ariya cōti tāṉeṉa ulaka meṅkum uḷḷoṭu puṟamu māki orumaiyāṟ paravum aṉṟē.

Report an error

வேதமே முதலா வுள்ள வியன்கலை அனைத்துந் தொன்னாள் ஓதினான் அவனே எங்கட் குரைத்திட உணர்ந்தா மன்றே ஈதுநீ அவற்றிற் காண்டி யாருமொன் றாகக் கொண்டாய் பேதையோ பெரிது மென்னப் பிதாமகன் இனைய சொற்றான்.

vētamē mutalā vuḷḷa viyaṉkalai aṉaittun toṉṉāḷ ōtiṉāṉ avaṉē eṅkaṭ kuraittiṭa uṇarntā maṉṟē ītunī avaṟṟiṟ kāṇṭi yārumoṉ ṟākak koṇṭāy pētaiyō peritu meṉṉap pitāmakaṉ iṉaiya coṟṟāṉ.

Report an error

அவனிது புகற லோடும் அருள்மகன் இசைப்பான் மேலாஞ் சிவனருள் வேதம் பூதத் திறத்தையும் உயிர்க ளோடும் எவரையும் பிர மென்றே இசைப்பதென் எனது நெஞ்சங் கவலுறு கின்ற தெந்தை கழறுதி கடிதின் என்றான்.

avaṉitu pukaṟa lōṭum aruḷmakaṉ icaippāṉ mēlāñ civaṉaruḷ vētam pūtat tiṟattaiyum uyirka ḷōṭum evaraiyum pira meṉṟē icaippateṉ eṉatu neñcaṅ kavaluṟu kiṉṟa tentai kaḻaṟuti kaṭitiṉ eṉṟāṉ.

Report an error

என்னலுங் கமலத் தண்ண லியாவருந் தெரிதல் தேற்றா உன்னரும் பெற்றி ஈதென் றுணர்தரக் கேட்டி அன்னான் சொன்னதோர் மறைகள் தம்மில் துணிபுகேள் இறுதி யில்லா முன்னவற் காத லுண்மை ஒழிந்தன முகம னாமால்.

eṉṉaluṅ kamalat taṇṇa liyāvarun terital tēṟṟā uṉṉarum peṟṟi īteṉ ṟuṇartarak kēṭṭi aṉṉāṉ coṉṉatōr maṟaikaḷ tammil tuṇipukēḷ iṟuti yillā muṉṉavaṟ kāta luṇmai oḻintaṉa mukama ṉāmāl.

Report an error

ஆதலால் ஈசன் அல்லா அனைவர்க்கும் உயிர்க்கும் ஐந்தாம் பூதமா னவைக்கும் ஏற்றம் புகலுதல் முகமா னாகும் ஒதலா மேல தாக ஒருபொருள் புகழ வேண்டின் வேதபா ரகரை அன்றோ யானென விளம்பு கின்றார்.

ātalāl īcaṉ allā aṉaivarkkum uyirkkum aintām pūtamā ṉavaikkum ēṟṟam pukalutal mukamā ṉākum otalā mēla tāka oruporuḷ pukaḻa vēṇṭiṉ vētapā rakarai aṉṟō yāṉeṉa viḷampu kiṉṟār.

Report an error

யாதொரு பொருளை யாவர் இறைஞ்சினும் அதுபோய் முக்கண் ஆதியை அடையும் அம்மா அங்கது போலத் தொல்லை வேதம துரைக்க நின்ற வியன்புகழ அனைத்தும் மேலாம் நாதனை அணுகும் எல்லா நதிகளுங் கடல்சென் றென்ன.

yātoru poruḷai yāvar iṟaiñciṉum atupōy mukkaṇ ātiyai aṭaiyum ammā aṅkatu pōlat tollai vētama turaikka niṉṟa viyaṉpukaḻa aṉaittum mēlām nātaṉai aṇukum ellā natikaḷuṅ kaṭalceṉ ṟeṉṉa.

Report an error

கேளினி மைந்த வேதக் கிளையெலாம் இயம்பு கின்ற சூளுரை சிவனே யெல்லாந் தோற்றுவித் தளித்து மாற்றி மீளவுந் தருகின் றானும் வியனுயிர்க் கருளை நல்கி ஆளும்நா யகனும் ஆதி அந்தமி லோனும் என்னும்.

kēḷiṉi mainta vētak kiḷaiyelām iyampu kiṉṟa cūḷurai civaṉē yellān tōṟṟuvit taḷittu māṟṟi mīḷavun tarukiṉ ṟāṉum viyaṉuyirk karuḷai nalki āḷumnā yakaṉum āti antami lōṉum eṉṉum.

Report an error

அத்தனும் பகவன் தானும் அருவமும் உருவு மாகுஞ் சுத்தனும் உணர்தற் கொண்ணாச் சோதியு மியாண்டு மேவுஞ் சித்தனும் அநாதி தானுந் தேவர்கள் தேவு மென்று நித்தனும் உயிர்க்குள் நீங்கா நிருத்தனும் அவனே என்னும்.

attaṉum pakavaṉ tāṉum aruvamum uruvu mākuñ cuttaṉum uṇartaṟ koṇṇāc cōtiyu miyāṇṭu mēvuñ cittaṉum anāti tāṉun tēvarkaḷ tēvu meṉṟu nittaṉum uyirkkuḷ nīṅkā niruttaṉum avaṉē eṉṉum.

Report an error

மூன்றெனும் உலகந் தன்னில் முளைத்திடு பொருளை யெல்லாம் ஈன்றருள் புரியுந் தாதை எனுந்திரயம் பகனும் யார்க்குஞ் சான்றென நிற்கின் றோனும் தாணுவும் பரனுந் தன்னைப் போன்றவர் உயர்ந்தோர் இல்லாப் புங்கவன் தானும் என்னும்.

mūṉṟeṉum ulakan taṉṉil muḷaittiṭu poruḷai yellām īṉṟaruḷ puriyun tātai eṉuntirayam pakaṉum yārkkuñ cāṉṟeṉa niṟkiṉ ṟōṉum tāṇuvum paraṉun taṉṉaip pōṉṟavar uyarntōr illāp puṅkavaṉ tāṉum eṉṉum.

Report an error

அண்ணலும் ஏகன் தானும் அளப்பருங் குணத்தி னானும் கண்ணனும் அயனுந் தம்மால் காணிய நில்லான் தானும் பெண்ணொடாண் அலிய தென்னும் பெற்றியி லோனும் யாரும் எண்ணிய எண்ணி யாங்கே ஈபவன் தானும் என்னும்.

aṇṇalum ēkaṉ tāṉum aḷapparuṅ kuṇatti ṉāṉum kaṇṇaṉum ayaṉun tammāl kāṇiya nillāṉ tāṉum peṇṇoṭāṇ aliya teṉṉum peṟṟiyi lōṉum yārum eṇṇiya eṇṇi yāṅkē īpavaṉ tāṉum eṉṉum.

Report an error

விதிமுதல் உரைக்க நின்ற வியனுயிர்த் தொகைகட் கெல்லாம் பதியென அருளுந் தொன்மைப் பசுபதி தானும் அன்னோர்க் கதிகனென் றெவருந் தேற ஆங்கவர் துஞ்ச வெந்த பொதிதரு பலியும் என்பும் புனைபவன் தானும் என்னும்.

vitimutal uraikka niṉṟa viyaṉuyirt tokaikaṭ kellām patiyeṉa aruḷun toṉmaip pacupati tāṉum aṉṉōrk katikaṉeṉ ṟevarun tēṟa āṅkavar tuñca venta potitaru paliyum eṉpum puṉaipavaṉ tāṉum eṉṉum.

Report an error

ஊன்புகும் எவரை யுந்தன் ஒண்குணத் தொடுக்கித் தானே வான்புக லாகி நின்று மற்றவர் குணங்க ளூடு தான்புக லில்லா தோனுந் தன்னியல் இனைய தென்றே யான்புக லரிய தேவும் ஈசனும் அவனே என்னும்.

ūṉpukum evarai yuntaṉ oṇkuṇat toṭukkit tāṉē vāṉpuka lāki niṉṟu maṟṟavar kuṇaṅka ḷūṭu tāṉpuka lillā tōṉun taṉṉiyal iṉaiya teṉṟē yāṉpuka lariya tēvum īcaṉum avaṉē eṉṉum.

Report an error

அன்றியும் ஒன்று கேண்மோ அம்புய னாதி யாகி நின்றவர் தம்மை யெல்லாம் நீக்கியச் சிவனென் றுள்ள ஒன்றொரு முதல்வன் தானே உய்த்திடு முத்தி வேண்டின் என்றும்அஃ தியம்பிற் றென்னின் யாவரே தேவர் ஆவார்.

aṉṟiyum oṉṟu kēṇmō ampuya ṉāti yāki niṉṟavar tammai yellām nīkkiyac civaṉeṉ ṟuḷḷa oṉṟoru mutalvaṉ tāṉē uyttiṭu mutti vēṇṭiṉ eṉṟumaḵ tiyampiṟ ṟeṉṉiṉ yāvarē tēvar āvār.

Report an error

பரசிவன் உணர்ச்சி யின்றிப் பல்லுயிர்த் தொகையு மென்றும் விரவிய துயர்க்கீ றெய்தி வீடுபே றடைதும் என்றல் உருவமில் விசும்பின் தோலை உரித்துடுப் பதற்கொப் பென்றே பெருமறை இயம்பிற் றென்னில் பின்னுமோர் சான்றும் உண்டோ.

paracivaṉ uṇarcci yiṉṟip palluyirt tokaiyu meṉṟum viraviya tuyarkkī ṟeyti vīṭupē ṟaṭaitum eṉṟal uruvamil vicumpiṉ tōlai urittuṭup pataṟkop peṉṟē perumaṟai iyampiṟ ṟeṉṉil piṉṉumōr cāṉṟum uṇṭō.

Report an error

இன்னமும் பலவுண் டன்னாற் கியம்பிய மறையின் வாய்மை அன்னதை எனக்கும் உன்னி அறையொணா தறைவன் என்னில் பன்னெடுங் காலந் தேயும் பகரினும் உவலா தென்பால் முன்னமீ துணர்ந்தா யேனும் மோகமுற் றாய்கொல் ஐயா.

iṉṉamum palavuṇ ṭaṉṉāṟ kiyampiya maṟaiyiṉ vāymai aṉṉatai eṉakkum uṉṉi aṟaiyoṇā taṟaivaṉ eṉṉil paṉṉeṭuṅ kālan tēyum pakariṉum uvalā teṉpāl muṉṉamī tuṇarntā yēṉum mōkamuṟ ṟāykol aiyā.

Report an error

காரெழில் புரையும் மேனிக் கண்ணனை என்னைப் பின்னை ஆரையும் புகழும் வேதம் அரன்றனைத் துதித்த தேபோல் ஓருரை விளம்பிற் றுண்டோ உரைத்தது முகமன் என்றே பேருல கறிய முன்னும் பின்னரும் விலக்கிற் றன்றே.

kāreḻil puraiyum mēṉik kaṇṇaṉai eṉṉaip piṉṉai āraiyum pukaḻum vētam araṉṟaṉait tutitta tēpōl ōrurai viḷampiṟ ṟuṇṭō uraittatu mukamaṉ eṉṟē pērula kaṟiya muṉṉum piṉṉarum vilakkiṟ ṟaṉṟē.

Report an error

நான்மறை தனிலோர் பாகம் நாரமார் கடவுட் சென்னி மேன்மைய தியம்பும் எம்மை விண்ணவர் தம்மை ஏனைப் பான்மைகொள் பூதந் தன்னைப் பல்பொருள் தனையும் பாதி தான்மொழிந் திடுமால் ஈது தவறல உணர்தி தக்கோய்.

nāṉmaṟai taṉilōr pākam nāramār kaṭavuṭ ceṉṉi mēṉmaiya tiyampum emmai viṇṇavar tammai ēṉaip pāṉmaikoḷ pūtan taṉṉaip palporuḷ taṉaiyum pāti tāṉmoḻin tiṭumāl ītu tavaṟala uṇarti takkōy.

Report an error

நம்மையும் பரமென் றுன்னி நாதனிற் சிறப்புச் செய்யும் வெம்மைகொள் நெஞ்சமர் தீரா விழுமவெந் நிரயம் வீழ்வர் தம்மையஃ தெடுத்தல் செய்யா சமமெனப் புகல்கிற் போர்கள் எம்மையுந் துயர மென்னும் இருங்கடற் படுப்பர் அன்றே.

nammaiyum parameṉ ṟuṉṉi nātaṉiṟ ciṟappuc ceyyum vemmaikoḷ neñcamar tīrā viḻumaven nirayam vīḻvar tammaiyaḵ teṭuttal ceyyā camameṉap pukalkiṟ pōrkaḷ emmaiyun tuyara meṉṉum iruṅkaṭaṟ paṭuppar aṉṟē.

Report an error

கானுறு புலித்தோ லாடைக் கண்ணுதற் கடவுட் கன்பர் ஆனவ ரென்றும் அன்னாற் கடித்தொழில் புரிந்து வாழும் வானவ ரென்றும் எம்மை வழுத்தினர்க் கருள்வோம் அல்லா ஏனையர் தம்மைத் தெவ்வென் றெண்ணியே இருந்தும் யாமே.

kāṉuṟu pulittō lāṭaik kaṇṇutaṟ kaṭavuṭ kaṉpar āṉava reṉṟum aṉṉāṟ kaṭittoḻil purintu vāḻum vāṉava reṉṟum emmai vaḻuttiṉark karuḷvōm allā ēṉaiyar tammait tevveṉ ṟeṇṇiyē iruntum yāmē.

Report an error

பதியரன் பாசந் தன்னில் பட்டுழல் பசுநாம் என்றே விதியொடு மறைகள் கூறும் மெய்ம்மையைத் தெளீய வேண்டின் இதுவென வுரைப்பன் யாங்கள் இவ்வர சியற்ற ஈசன் அதிர்கழல் அருச்சித் தேத்தும் ஆலயம் பலவுங் காண்டி.

patiyaraṉ pācan taṉṉil paṭṭuḻal pacunām eṉṟē vitiyoṭu maṟaikaḷ kūṟum meymmaiyait teḷīya vēṇṭiṉ ituveṉa vuraippaṉ yāṅkaḷ ivvara ciyaṟṟa īcaṉ atirkaḻal aruccit tēttum ālayam palavuṅ kāṇṭi.

Report an error

அவனருள் பெறாது முத்தி அடைந்தனர் இல்லை அல்லால் அவனருள் இன்றி வாழும் அமரரும் யாரு மில்லை அவனருள் எய்தின் எய்தா அரும்பொருள் இல்லை ஆணை அவனல திறைவன் இல்லை அவனைநீ யடைதி என்றான்.

avaṉaruḷ peṟātu mutti aṭaintaṉar illai allāl avaṉaruḷ iṉṟi vāḻum amararum yāru millai avaṉaruḷ eytiṉ eytā arumporuḷ illai āṇai avaṉala tiṟaivaṉ illai avaṉainī yaṭaiti eṉṟāṉ.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).