நீளுந் தகைசேர் நிலமா மகள்தன் கோளுந் தியபூங் குழல்வார்ந் தெனலாய் நாளுந் தியவீ நணுகிக் கரிதாங் காளிந் தியெனும் கடிமா நதியே.
nīḷun takaicēr nilamā makaḷtaṉ kōḷun tiyapūṅ kuḻalvārn teṉalāy nāḷun tiyavī naṇukik karitāṅ kāḷin tiyeṉum kaṭimā natiyē.
தக்ஷ காண்டம் — காளிந்திப் படலம் · காளிந்திப் படலம்
kāḷintip paṭalam
kāḷintip paṭalam, from Takṣa Kāṇṭam; poems 6.243–6.262.
20 versesTamil with transliteration
நீளுந் தகைசேர் நிலமா மகள்தன் கோளுந் தியபூங் குழல்வார்ந் தெனலாய் நாளுந் தியவீ நணுகிக் கரிதாங் காளிந் தியெனும் கடிமா நதியே.
nīḷun takaicēr nilamā makaḷtaṉ kōḷun tiyapūṅ kuḻalvārn teṉalāy nāḷun tiyavī naṇukik karitāṅ kāḷin tiyeṉum kaṭimā natiyē.
முத்துங் கதிரும் முழுமா மணியுந் தொத்துந் தியசெந் துகிரும் மகிலும் நத்தும் பிறவுந் நனிநல் குவபோல் ஒத்துந் துவதவ் வொலிநீர் நதியே.
muttuṅ katirum muḻumā maṇiyun tottun tiyacen tukirum makilum nattum piṟavun naṉinal kuvapōl ottun tuvatav volinīr natiyē.
எண்மேல் நிமிரும் மிருநீர் பெருகி விண்மேல் உலவா விரிகின் றதொரீஇ மண்மேல் ஒலியா மலிகார் தழுவிக் கொண்மூ வரவொத் துளதக் குடிஞை.
eṇmēl nimirum mirunīr peruki viṇmēl ulavā virikiṉ ṟatorīi maṇmēl oliyā malikār taḻuvik koṇmū varavot tuḷatak kuṭiñai.
மீனார் விழிமங் கையர்விண் ணுறைவோர் வானார் செலவின் வருநீள் இடையில் கானா மெனவுங் கடலா மெனவுந் தானா குவதத் தடமா நதியே.
mīṉār viḻimaṅ kaiyarviṇ ṇuṟaivōr vāṉār celaviṉ varunīḷ iṭaiyil kāṉā meṉavuṅ kaṭalā meṉavun tāṉā kuvatat taṭamā natiyē.
பாரின் புடையே படரந் நதியை நேரும் படியோர் நெடுநீ ருளதோ காருந் தெளீயாக் கடலீ தெனவே யாரும் பெருமைத் தஃதா யிடவே.
pāriṉ puṭaiyē paṭaran natiyai nērum paṭiyōr neṭunī ruḷatō kārun teḷīyāk kaṭalī teṉavē yārum perumait taḵtā yiṭavē.
துப்பா யினதாய்த் துவரத் தகைசேர் அப்பா யுவரற் றழிவில் பொருளின் வைப்பா யருளால் வருமவ் வொலியற் கொப்பா குவதோ உவரா ழியதே.
tuppā yiṉatāyt tuvarat takaicēr appā yuvaraṟ ṟaḻivil poruḷiṉ vaippā yaruḷāl varumav voliyaṟ koppā kuvatō uvarā ḻiyatē.
பாலோங் கியவிற் பணிலம் படர்வாள் நீலோங் கியஅம் பொடுநே மியெலாம் மேலோங் கியதன் மையின்மெய்த் துயில்கூர் மாலோன் றனையொத் ததுமற் றதுவே.
pālōṅ kiyaviṟ paṇilam paṭarvāḷ nīlōṅ kiyaam poṭunē miyelām mēlōṅ kiyataṉ maiyiṉmeyt tuyilkūr mālōṉ ṟaṉaiyot tatumaṟ ṟatuvē.
மீன்பட் டமையால் விரியுந் தொழுதிக் கான்பட் டிடவுங் கழுநீ ருறலால் தேன்பட் டிடவுந் திரைபட் டிடவும் வான்பட் டிடுமோ சைமலிந் ததுவே.
mīṉpaṭ ṭamaiyāl viriyun toḻutik kāṉpaṭ ṭiṭavuṅ kaḻunī ruṟalāl tēṉpaṭ ṭiṭavun tiraipaṭ ṭiṭavum vāṉpaṭ ṭiṭumō caimalin tatuvē.
ஊன்பெற் றலகில் உயிர்பெற் றகிலம் வான்பெற் றவள்வால் வளையா யுறவெங் கோன்பெற் றிடுமக் கொடிமெய் யுருவந் தான்பெற் றதையொத் தமுமா நதியே.
ūṉpeṟ ṟalakil uyirpeṟ ṟakilam vāṉpeṟ ṟavaḷvāl vaḷaiyā yuṟaveṅ kōṉpeṟ ṟiṭumak koṭimey yuruvan tāṉpeṟ ṟataiyot tamumā natiyē.
நஞ்செனக் கொலைசெய் கூர்ங்கண் நங்கையர் குடையக் கூந்தல் விஞ்சிய நானச் சேறும் விரைகெழு சாந்தும் ஆர்ந்து தஞ்செனக் கொண்ட நீலத் தன்மை குன்றாது மேலோர் அங்சனப் போர்வை போர்த்தால் அன்னதால் அனைய நீத்தம்.
nañceṉak kolaicey kūrṅkaṇ naṅkaiyar kuṭaiyak kūntal viñciya nāṉac cēṟum viraikeḻu cāntum ārntu tañceṉak koṇṭa nīlat taṉmai kuṉṟātu mēlōr aṅcaṉap pōrvai pōrttāl aṉṉatāl aṉaiya nīttam.
இவ்வுல கத்தோர் உள்ளத் தெய்திய இருளும் அன்னார் வெவ்வினை இருளுந் தன்பால் வீழ்த்தியே விளங்கி ஏக அவ்விருள் அனைத்துந் தான்பெற் றணைந்தென அங்கங் காராய்ச் செவ்விதின் ஒழுகிற் றம்மா சீர்தகழ் யமுனை யாறே.
ivvula kattōr uḷḷat teytiya iruḷum aṉṉār vevviṉai iruḷun taṉpāl vīḻttiyē viḷaṅki ēka avviruḷ aṉaittun tāṉpeṟ ṟaṇainteṉa aṅkaṅ kārāyc cevvitiṉ oḻukiṟ ṟammā cīrtakaḻ yamuṉai yāṟē.
எத்திறத் தோரும் அஞ்ச எழுந்துமால் வரையிற் சார்ந்து மெய்த்தலை பலவும் நீடி விரிகதிர் மணிகள் கான்றிட் டொத்திடு கால்கண் மேவி ஒலிகெழு செலவிற் றாகி மைத்துறு புனற்கா ளிந்தி வாசுகி நிகர்த்த தன்றே.
ettiṟat tōrum añca eḻuntumāl varaiyiṟ cārntu meyttalai palavum nīṭi virikatir maṇikaḷ kāṉṟiṭ ṭottiṭu kālkaṇ mēvi olikeḻu celaviṟ ṟāki maittuṟu puṉaṟkā ḷinti vācuki nikartta taṉṟē.
நிலமகள் உரோம வல்லி நிலையென நகிலின் நாப்பண் இலகிய மணித்தார் என்ன இருங்கடற் கேள்வன் வெஃகுங் குலமகள் என்ன நீலக் கோலவா ரமுத மென்ன உலவிய யமுனை எம்மால் உரைக்கலாந் தகைமைத் தாமோ.
nilamakaḷ urōma valli nilaiyeṉa nakiliṉ nāppaṇ ilakiya maṇittār eṉṉa iruṅkaṭaṟ kēḷvaṉ veḵkuṅ kulamakaḷ eṉṉa nīlak kōlavā ramuta meṉṉa ulaviya yamuṉai emmāl uraikkalān takaimait tāmō.
இன்னபல் வகைத்தாய் நீடும் இரும்புனல் யமுனை யின்கண் மன்னிய நெறிசேர் மாசி மகப்புன லாட வேண்டி அந்நிலத் தவர்கள் யாரும் அடைந்தனர் உலக மெல்லாந் தன்னிகர் இன்றி யாளுந் தக்கன்இத் தன்மை தேர்ந்தான்.
iṉṉapal vakaittāy nīṭum irumpuṉal yamuṉai yiṉkaṇ maṉṉiya neṟicēr māci makappuṉa lāṭa vēṇṭi annilat tavarkaḷ yārum aṭaintaṉar ulaka mellān taṉṉikar iṉṟi yāḷun takkaṉit taṉmai tērntāṉ.
மெய்ப்பயன் எய்து கின்ற வினைப்படும் ஊழின் பாலால் அப்பெரு நதியில் அஞ்ஞான் றாடலை வெஃகித் தக்கன் மைப்படுங் கூர்ங்கண் வேத வல்லையை மகளி ரோடும் ஒப்பில்பல் சனத்தி னோடும் ஒல்லைமுன் செல்ல உய்த்தான்.
meyppayaṉ eytu kiṉṟa viṉaippaṭum ūḻiṉ pālāl apperu natiyil aññāṉ ṟāṭalai veḵkit takkaṉ maippaṭuṅ kūrṅkaṇ vēta vallaiyai makaḷi rōṭum oppilpal caṉatti ṉōṭum ollaimuṉ cella uyttāṉ.
மாற்றமர் செம்பொற் போயில் வயப்புலித் தவிசின் மீதாய் வீற்றிருந் தருடல் நீங்கி விரிஞ்சமு முனிவர் யாரும் ஏற்றதோர் ஆசி கூற இமையவர் கணமா யுள்ளோர் போற்றிட யமுனை யென்னும் புனலியா றதன்கட் போனான்.
māṟṟamar cempoṟ pōyil vayappulit taviciṉ mītāy vīṟṟirun taruṭal nīṅki viriñcamu muṉivar yārum ēṟṟatōr āci kūṟa imaiyavar kaṇamā yuḷḷōr pōṟṟiṭa yamuṉai yeṉṉum puṉaliyā ṟataṉkaṭ pōṉāṉ.
போனதொர் தக்கன் என்போன் புரைதவிர் புனற்கா ளிந்தித் தூநதி யிடைபோய் மூழ்கித் துண்ணென வரலும் ஓர்பால் தேனிமிர் கமல மொன்றிற் சிவனிடத் திருந்த தெய்வ வானிமிர் பணிலம் வைக மற்றவன் அதுகண் ணுற்றான்.
pōṉator takkaṉ eṉpōṉ puraitavir puṉaṟkā ḷintit tūnati yiṭaipōy mūḻkit tuṇṇeṉa varalum ōrpāl tēṉimir kamala moṉṟiṟ civaṉiṭat tirunta teyva vāṉimir paṇilam vaika maṟṟavaṉ atukaṇ ṇuṟṟāṉ.
கண்ணுறுவான் நனிமகிழ்ந்தே கையினையுய்த் தெடுத்திடுங்காற் காமர் பெற்ற பெண்ணுருவத் தொரு குழவி யாதலும்விம் மிதப்பட்டுப் பிறைவாழ் வேணி அண்ணலருள் புரிவரத்தாற் கவுரியே நம்புதல்வி யானாள் என்னா உண்ணிகழ்பே ருணர்ச்சினாற் காணுற்றுத் தேவர்குழாம் ஒருவிப் போனான்.
kaṇṇuṟuvāṉ naṉimakiḻntē kaiyiṉaiyuyt teṭuttiṭuṅkāṟ kāmar peṟṟa peṇṇuruvat toru kuḻavi yātalumvim mitappaṭṭup piṟaivāḻ vēṇi aṇṇalaruḷ purivarattāṟ kavuriyē namputalvi yāṉāḷ eṉṉā uṇṇikaḻpē ruṇarcciṉāṟ kāṇuṟṟut tēvarkuḻām oruvip pōṉāṉ.
அந்நதியின் பால்முன்னர் அவன்பணியாற் சசிமுதலாம் அணங்கி னோர்கள் துன்னினராய் வாழத்தெடுப்பத் துவன்றுபெருங் கிளைஞரொடுந் தூநீ ராடி மன்னுமகன் கரைஅணுகி மறையிசைகேட் டமர்வேத வல்லி யென்னும் பன்னிதனை யெய்தியவள் கரத்தளித்தான் உலகீன்ற பாவை தன்னை.
annatiyiṉ pālmuṉṉar avaṉpaṇiyāṟ cacimutalām aṇaṅki ṉōrkaḷ tuṉṉiṉarāy vāḻatteṭuppat tuvaṉṟuperuṅ kiḷaiñaroṭun tūnī rāṭi maṉṉumakaṉ karaiaṇuki maṟaiyicaikēṭ ṭamarvēta valli yeṉṉum paṉṉitaṉai yeytiyavaḷ karattaḷittāṉ ulakīṉṟa pāvai taṉṉai.
ஏந்துதனிக் குழவியினைத் தழீஇக்கொண்டு மகிழ்ந்துகுயத் திழிபா லார்த்திக் காந்தண்மலர் புரைசெங்கைச் சூர்மகளிர் போற்றிசைப்பக் கடிதின் ஏகி வாய்ந்ததன திருக்கையிடைப் புக்கனளால் தக்கன் அங்கண் வானோ ரோடும் போந்துமணிக் கோயில்புக்குத் தொன்முறைபோல் அரசியற்கை புரிந்தி ருந்தான்.
ēntutaṉik kuḻaviyiṉait taḻīikkoṇṭu makiḻntukuyat tiḻipā lārttik kāntaṇmalar puraiceṅkaic cūrmakaḷir pōṟṟicaippak kaṭitiṉ ēki vāyntataṉa tirukkaiyiṭaip pukkaṉaḷāl takkaṉ aṅkaṇ vāṉō rōṭum pōntumaṇik kōyilpukkut toṉmuṟaipōl araciyaṟkai purinti runtāṉ.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).