Skip to content

தக்ஷ காண்டம் — கயமுகன் உற்பத்திப் படலம் · கயமுகன் உற்பத்திப் படலம்

kayamukaṉ uṟpattip paṭalam

kayamukaṉ uṟpattip paṭalam

kayamukaṉ uṟpattip paṭalam, from Takṣa Kāṇṭam; poems 6.908–6.1172.

265 versesTamil with transliteration

A spear and lotus for chapter 132 of Kanda Puranam.

பாக சாதனன் தொல்லைநாள் வானவப் படையோ டேகி யேயசு ரர்க்கிறை தன்னைவென் றிகலில் வாகை சூடியே விஞ்சையர் முதலினோர் வாழ்த்தப் போக மார்தரும் உலகிடை மீண்டுபோய்ப் புகுந்தான்.

pāka cātaṉaṉ tollaināḷ vāṉavap paṭaiyō ṭēki yēyacu rarkkiṟai taṉṉaiveṉ ṟikalil vākai cūṭiyē viñcaiyar mutaliṉōr vāḻttap pōka mārtarum ulakiṭai mīṇṭupōyp pukuntāṉ.

Report an error

பொன்ன கர்க்கிறை போதலும் பொறாமையிற் புழுங்கி வன்னி யுற்றிடும் அலங்கல்போ லுளநனி வாடி வென்ன ளித்திடும் அவுணர்தங் கோமகன் வினையேற் கென்னி னிச்செயல் எனப்பெரி துன்னியே இனைந்தான்.

poṉṉa karkkiṟai pōtalum poṟāmaiyiṟ puḻuṅki vaṉṉi yuṟṟiṭum alaṅkalpō luḷanaṉi vāṭi veṉṉa ḷittiṭum avuṇartaṅ kōmakaṉ viṉaiyēṟ keṉṉi ṉicceyal eṉapperi tuṉṉiyē iṉaintāṉ.

Report an error

பொன்ன கர்க்கிறை போதலும் பொறாமையிற் புழுங்கி வெருவ ரும்படி மலைந்திடும் அமரர்பான் மேவிப் பொருது வென்றிகொண் டேனக்குமப் பெரும்புகழ் புனைய ஒருவ ரெங்குலத் தில்லைகொ லோவென உரையாக் குருவி ருந்துழி அணுகியே வணங்கினன் கொடியோன்.

poṉṉa karkkiṟai pōtalum poṟāmaiyiṟ puḻuṅki veruva rumpaṭi malaintiṭum amararpāṉ mēvip porutu veṉṟikoṇ ṭēṉakkumap perumpukaḻ puṉaiya oruva reṅkulat tillaiko lōveṉa uraiyāk kuruvi runtuḻi aṇukiyē vaṇaṅkiṉaṉ koṭiyōṉ.

Report an error

பொன்ன கர்க்கிறை போதலும் பொறாமையிற் புழுங்கி பொற்றை யின்சிறை தடிந்தவன் கரரொடும் போர்மேல உற்ற காலையில் படையுடன் யான்பொரு துடைந்து மற்ற வற்குவென் னளித்தனன் நம்பெரு மரபிற் கொற்ற வீரர்க ளியாவரு முடிந்தனர் கூற்றால்.

poṉṉa karkkiṟai pōtalum poṟāmaiyiṟ puḻuṅki poṟṟai yiṉciṟai taṭintavaṉ kararoṭum pōrmēla uṟṟa kālaiyil paṭaiyuṭaṉ yāṉporu tuṭaintu maṟṟa vaṟkuveṉ ṉaḷittaṉaṉ namperu marapiṟ koṟṟa vīrarka ḷiyāvaru muṭintaṉar kūṟṟāl.

Report an error

கழிய மாசினை அடைந்தனம் இன்னலே கரையாம் பழிகொள் வேலையில் அழுந்தினம் உடைந்திடு பகைவர்க் கழிவும் உற்றனம் பெருந்திறல் அற்றம் அவுணர் ஒழியும் எல்லைவந் தெய்திய தோவிவண உரைத்தி.

kaḻiya māciṉai aṭaintaṉam iṉṉalē karaiyām paḻikoḷ vēlaiyil aḻuntiṉam uṭaintiṭu pakaivark kaḻivum uṟṟaṉam peruntiṟal aṟṟam avuṇar oḻiyum ellaivan teytiya tōvivaṇa uraitti.

Report an error

சிறுவ ராயினோர் பெருமையிற் பிழைப்பரேல் தெருட்டி உறுதி பற்பல கொளுத்திமற் றவர்தமை உயர்ந்த நெறியின் ஆக்குதல் குரவர்தங் கடனது நீயே அறிதி யாதலின் உய்யுமா றுரைத்தியென் றறைந்தான்.

ciṟuva rāyiṉōr perumaiyiṟ piḻaipparēl teruṭṭi uṟuti paṟpala koḷuttimaṟ ṟavartamai uyarnta neṟiyiṉ ākkutal kuravartaṅ kaṭaṉatu nīyē aṟiti yātaliṉ uyyumā ṟuraittiyeṉ ṟaṟaintāṉ.

Report an error

உரைத்த வாசகங் கேட்டலும் மன்னநீ உளத்தில் வருத்த முற்றிடல் என்னவே தேற்றிமேல் வருவ கருத்தி லுன்னினன் தெரிதலும் வெதும்பிய காயத் தரைத்த சாந்தினை அப்பினன் போலஒன் றறைந்தான்.

uraitta vācakaṅ kēṭṭalum maṉṉanī uḷattil varutta muṟṟiṭal eṉṉavē tēṟṟimēl varuva karutti luṉṉiṉaṉ teritalum vetumpiya kāyat taraitta cāntiṉai appiṉaṉ pōlaoṉ ṟaṟaintāṉ.

Report an error

ஆதியம் பரமன் தாளே அடைதரு புனிதன் தொல்லை வேதியர் தலைவ னான விரிஞ்சன்மெய் யுணர்விற் பூத்த காதலன் புலன்க ளாய பகைஞரைக் கடந்த காட்சி மாதவ முனிவர்க் கீசன் வசிட்டனென் றுரைக்கும் வள்ளல்.

ātiyam paramaṉ tāḷē aṭaitaru puṉitaṉ tollai vētiyar talaiva ṉāṉa viriñcaṉmey yuṇarviṟ pūtta kātalaṉ pulaṉka ḷāya pakaiñaraik kaṭanta kāṭci mātava muṉivark kīcaṉ vaciṭṭaṉeṉ ṟuraikkum vaḷḷal.

Report an error

அன்னவன் மரபின் வந்தோன் அறிஞர்க்கும் அறிஞன் மேலாய் மன்னிய நெறிக்கண் நின்றோன் மாகதன் என்னும் பேரோன் உன்னரு மறைகள் யாவும் உணர்ந்தவன் உயர்ந்த வீடு தன்னையிங் கடைவன் என்னாத் தவந்தனை இயற்ற லுற்றான்.

aṉṉavaṉ marapiṉ vantōṉ aṟiñarkkum aṟiñaṉ mēlāy maṉṉiya neṟikkaṇ niṉṟōṉ mākataṉ eṉṉum pērōṉ uṉṉaru maṟaikaḷ yāvum uṇarntavaṉ uyarnta vīṭu taṉṉaiyiṅ kaṭaivaṉ eṉṉāt tavantaṉai iyaṟṟa luṟṟāṉ.

Report an error

ஆயவன் தன்பால் இன்றோர் அசுரகன் னிகையைத் தேற்றி ஏயினை என்னின் அன்னாள் எய்தியே அவன்ற னோடு மேயின காலை ஆங்கோர் வேழமா முகத்தன் உங்கள் நாயகன் ஆகத் தோன்றி நற்றவம் புரிவன் அன்றே.

āyavaṉ taṉpāl iṉṟōr acurakaṉ ṉikaiyait tēṟṟi ēyiṉai eṉṉiṉ aṉṉāḷ eytiyē avaṉṟa ṉōṭu mēyiṉa kālai āṅkōr vēḻamā mukattaṉ uṅkaḷ nāyakaṉ ākat tōṉṟi naṟṟavam purivaṉ aṉṟē.

Report an error

நற்றவம் புரிதல் காணா நண்ணலர் புரங்கள் மூன்றுஞ் செற்றவன் மேவி மேலாஞ் செல்வமுந் திறலும் நல்க மற்றவன் வானோர் தொல்சீர் மாற்றியெவ் வுலகும் ஆளுங் கொற்றவ னாவன் என்று கூறினான் குரவ னானோன்.

naṟṟavam purital kāṇā naṇṇalar puraṅkaḷ mūṉṟuñ ceṟṟavaṉ mēvi mēlāñ celvamun tiṟalum nalka maṟṟavaṉ vāṉōr tolcīr māṟṟiyev vulakum āḷuṅ koṟṟava ṉāvaṉ eṉṟu kūṟiṉāṉ kurava ṉāṉōṉ.

Report an error

அவ்வுரை கேட்ட லோடும் அடித்துணை இறைஞ்சி ஈது செவ்விது செவ்வி தெந்தாய் செய்வல்நீ பணித்த தென்ன எவ்வமில் புகரும் அற்றே இயற்றிய சென்மோ என்ன மைவரை அனைய மேனி மன்னவன் கடிது மீண்டான்.

avvurai kēṭṭa lōṭum aṭittuṇai iṟaiñci ītu cevvitu cevvi tentāy ceyvalnī paṇitta teṉṉa evvamil pukarum aṟṟē iyaṟṟiya ceṉmō eṉṉa maivarai aṉaiya mēṉi maṉṉavaṉ kaṭitu mīṇṭāṉ.

Report an error

மீண்டுதன் னிருக்கை எய்தி விபுதையென் றொருத்தி அன்னாள் காண்டகும் எழிலின் மிக்க கன்னிதன் குலத்தில் வந்தாள் பூண்டகு நாணி னோடும் பொருந்தினள் அவளை எய்தி ஈண்டொரு மொழிகேட் டன்னாய் என்னிடர் சீர்த்தி யென்றான்.

mīṇṭutaṉ ṉirukkai eyti viputaiyeṉ ṟorutti aṉṉāḷ kāṇṭakum eḻiliṉ mikka kaṉṉitaṉ kulattil vantāḷ pūṇṭaku nāṇi ṉōṭum poruntiṉaḷ avaḷai eyti īṇṭoru moḻikēṭ ṭaṉṉāy eṉṉiṭar cīrtti yeṉṟāṉ.

Report an error

மன்னவர் மன்னன் கூறும் மாற்றமங் கதனைக் கேளாக் கன்னிகை யாகி நிற் காமரு வல்லி அன்னாள் நின்னடித் தொண்டு செய்யும் நிருதர்தங் குலத்து வந்தேன் என்னுனக் கியற்றுஞ் செய்கை இசைந்தன இசைத்தி என்றாள்.

maṉṉavar maṉṉaṉ kūṟum māṟṟamaṅ kataṉaik kēḷāk kaṉṉikai yāki niṟ kāmaru valli aṉṉāḷ niṉṉaṭit toṇṭu ceyyum nirutartaṅ kulattu vantēṉ eṉṉuṉak kiyaṟṟuñ ceykai icaintaṉa icaitti eṉṟāḷ.

Report an error

உரையென லோடு மன்னன் உன்குலத் தோரை விண்ணோர் பொருதுவென் கண்டு மீண்டு போனதை அறிதி அன்றே மருவருங் குழலாய் போரில் வானவர் தம்மை வெல்ல ஒருவரும் இல்லை நின்னால் உற்றிட வேண்டுங் கண்டாய்.

uraiyeṉa lōṭu maṉṉaṉ uṉkulat tōrai viṇṇōr porutuveṉ kaṇṭu mīṇṭu pōṉatai aṟiti aṉṟē maruvaruṅ kuḻalāy pōril vāṉavar tammai vella oruvarum illai niṉṉāl uṟṟiṭa vēṇṭuṅ kaṇṭāy.

Report an error

ஆங்கதற் கேதுக் கேட்டி அம்பொன்மால் வரைத்தெ னாது பாங்கரில் அரிய நோன்பு பயிலுமா கதன்பாற் சென்று நீங்கல்செல் லாது பன்னாள் நினைவறிந் தொழுகிக் காலந் தீங்கற நாடி அன்னான் செய்தவஞ் சிதைத்துச் சேர்தி.

āṅkataṟ kētuk kēṭṭi ampoṉmāl varaitte ṉātu pāṅkaril ariya nōṉpu payilumā kataṉpāṟ ceṉṟu nīṅkalcel lātu paṉṉāḷ niṉaivaṟin toḻukik kālan tīṅkaṟa nāṭi aṉṉāṉ ceytavañ citaittuc cērti.

Report an error

சேருதி யென்னின் அங்கோர் சிறுவன்நின் இடத்தில் தோன்றிப் பாருல கனைத்தும் மேலாம் பதங்களும் வலிதிற் கொண்டு வீரரில் வீர னாகி வெம்பகை வீட்டி எங்கள் ஆரஞர் துடைக்கும் அன்னாய் அன்னவா றமைதி என்றான்.

cēruti yeṉṉiṉ aṅkōr ciṟuvaṉniṉ iṭattil tōṉṟip pārula kaṉaittum mēlām pataṅkaḷum valitiṟ koṇṭu vīraril vīra ṉāki vempakai vīṭṭi eṅkaḷ ārañar tuṭaikkum aṉṉāy aṉṉavā ṟamaiti eṉṟāṉ.

Report an error

வேந்தன் துரையைக் கேட்ட விபுதையம் முனிவன் தன்பால் போந்துன தெண்ண முற்றப் புதல்வனை அளித்து மீள்வல் ஏந்தல்நீ இரங்கல் என்றே ஏகினள் இறைவன் வானோர் மாய்ந்தனர் இனியென் றுன்னி மகிழ்ச்சியோ டிருந்தான் அங்கண்.

vēntaṉ turaiyaik kēṭṭa viputaiyam muṉivaṉ taṉpāl pōntuṉa teṇṇa muṟṟap putalvaṉai aḷittu mīḷval ēntalnī iraṅkal eṉṟē ēkiṉaḷ iṟaivaṉ vāṉōr māyntaṉar iṉiyeṉ ṟuṉṉi makiḻcciyō ṭiruntāṉ aṅkaṇ.

Report an error

ஏகிய அசுர கன்னி ஏமமால் வரையின் சார்போய் மாகதன் பாற்சென் றன்னான் மாதவத் திறத்தை நோக்கி ஆகொடி திவனே அல்லா தாரிது புரியும் நீரார் மோகமிங் கிவனை யாக்கி முயங்குவ தெவ்வா றென்றாள்.

ēkiya acura kaṉṉi ēmamāl varaiyiṉ cārpōy mākataṉ pāṟceṉ ṟaṉṉāṉ mātavat tiṟattai nōkki ākoṭi tivaṉē allā tāritu puriyum nīrār mōkamiṅ kivaṉai yākki muyaṅkuva tevvā ṟeṉṟāḷ.

Report an error

நேமிகள் அனைத்தும் ஆர நிவந்தெழும் வடவை தன்னை மாமுகில் மாற்ற அற்றோ மாற்றவே வல்ல தென்னில் காமவேள் எடுத்த செய்ய கணையெலாம் ஒருங்கு சென்றித் தோமில்சீர் முனியை வாட்டித் துறவையும் மாற்றும் என்றாள்.

nēmikaḷ aṉaittum āra nivanteḻum vaṭavai taṉṉai māmukil māṟṟa aṟṟō māṟṟavē valla teṉṉil kāmavēḷ eṭutta ceyya kaṇaiyelām oruṅku ceṉṟit tōmilcīr muṉiyai vāṭṭit tuṟavaiyum māṟṟum eṉṟāḷ.

Report an error

வானுயர் தவத்தின் நிற்கும் மாகதன் யானே யல்ல மேனகை வரினும் நோக்கான் விண்ணவர் பகைஞர் தங்கள் கோனிஃ துணரான் போலுங் குறுகிநீ புணர்தி என்றால் நானதற் சிசைந்த வாறும் நன்றென நகைத்து நின்றாள்.

vāṉuyar tavattiṉ niṟkum mākataṉ yāṉē yalla mēṉakai variṉum nōkkāṉ viṇṇavar pakaiñar taṅkaḷ kōṉiḵ tuṇarāṉ pōluṅ kuṟukinī puṇarti eṉṟāl nāṉataṟ cicainta vāṟum naṉṟeṉa nakaittu niṉṟāḷ.

Report an error

போந்தனென் மீண்டும் என்னிற் போற்றலர்க் குடைந்து சோரும் வேந்தனென் னுற்றாய் என்று மீளவும் விடுப்பன் அம்மா ஏய்ந்தநே யத்தி லென்பால் எய்திமற் றிவனே எற்குக் காந்தனே யாக நோற்றுக் காலமும் பார்ப்பன் என்றாள்.

pōntaṉeṉ mīṇṭum eṉṉiṟ pōṟṟalark kuṭaintu cōrum vēntaṉeṉ ṉuṟṟāy eṉṟu mīḷavum viṭuppaṉ ammā ēyntanē yatti leṉpāl eytimaṟ ṟivaṉē eṟkuk kāntaṉē yāka nōṟṟuk kālamum pārppaṉ eṉṟāḷ.

Report an error

என்றிவை உன்னி உற்றோர்க் கினிதருள் புரியும் வெள்ளிக் குன்றுறை பெருமான் செய்ய குரைகழல் கருத்துட் கொண்டு வன்றிறல் நோன்பின் மிக்க மாகத முனிவன் நேரா நின்றருந் தவத்தை யாற்ற நெடும்பகல கழிந்த தன்றே.

eṉṟivai uṉṉi uṟṟōrk kiṉitaruḷ puriyum veḷḷik kuṉṟuṟai perumāṉ ceyya kuraikaḻal karuttuṭ koṇṭu vaṉṟiṟal nōṉpiṉ mikka mākata muṉivaṉ nērā niṉṟarun tavattai yāṟṟa neṭumpakala kaḻinta taṉṟē.

Report an error

மாதுசெய் தவத்தி னாலும் வரன்முறை வழாத ஊழின் ஏதுவி னாலும் அங்கண் இருங்களிற் றொருத்தல் ஒன்று காதலம் பிடியி னோடு கலந்துடன் புணரக் காணுஉ ஆதரம் பெருகப் பல்கால் நோக்கினன் அருந்த வத்தோன்.

mātucey tavatti ṉālum varaṉmuṟai vaḻāta ūḻiṉ ētuvi ṉālum aṅkaṇ iruṅkaḷiṟ ṟoruttal oṉṟu kātalam piṭiyi ṉōṭu kalantuṭaṉ puṇarak kāṇuu ātaram perukap palkāl nōkkiṉaṉ arunta vattōṉ.

Report an error

மறந்தனன் மனுவின் செய்கை மனப்படு பொருளை வாளா துறந்தனன் காமம் என்னுஞ் சூழவலைப் பட்டுச் சோர்வுற் றிறந்தனன் போல மாழ்கி இன்னுயிர் சுமந்தான் இன்று பிறந்தனன் இனைய கூட்டம் பெற்றிடு வேனேல் என்றான்.

maṟantaṉaṉ maṉuviṉ ceykai maṉappaṭu poruḷai vāḷā tuṟantaṉaṉ kāmam eṉṉuñ cūḻavalaip paṭṭuc cōrvuṟ ṟiṟantaṉaṉ pōla māḻki iṉṉuyir cumantāṉ iṉṟu piṟantaṉaṉ iṉaiya kūṭṭam peṟṟiṭu vēṉēl eṉṟāṉ.

Report an error

என்றிது புகன்று முன்செய் தவக்குறைக் கிரங்கி என்றும் நின்றது பழியே யேனும் நீடுமேற் காமச் சூர்நோய் தின்றுயிர் செகுக்கும் அந்தோ செய்வதிங் கெவனோ என்னா வென்றிகொள் முனிவன் தானும் மனத்தொடு வினவல் உற்றான்.

eṉṟitu pukaṉṟu muṉcey tavakkuṟaik kiraṅki eṉṟum niṉṟatu paḻiyē yēṉum nīṭumēṟ kāmac cūrnōy tiṉṟuyir cekukkum antō ceyvatiṅ kevaṉō eṉṉā veṉṟikoḷ muṉivaṉ tāṉum maṉattoṭu viṉaval uṟṟāṉ.

Report an error

தீவிடந் தலைக்கொண் டாங்கே தெறுதரு காமச் செந்தீ ஓய்வது சிறிதும் இன்றி உள்ளுயிர் அலைக்கும் வேலை யாவதென் றாக்கின் இன்னும் அருந்தவங் கூடும் ஆவி போவதிற் பயனியா தென்னாப் புணர்ச்சிமேற் புந்தி கொண்டான்.

tīviṭan talaikkoṇ ṭāṅkē teṟutaru kāmac centī ōyvatu ciṟitum iṉṟi uḷḷuyir alaikkum vēlai yāvateṉ ṟākkiṉ iṉṉum aruntavaṅ kūṭum āvi pōvatiṟ payaṉiyā teṉṉāp puṇarccimēṟ punti koṇṭāṉ.

Report an error

பேவதற் கெண்ணுப் போதில் பொருவில்சீர் அசுரர்க் கெல்லாங் காவலின் ஏவல் போற்றும் கன்னிகை முனிவன் காமத் தோய்வதும் பிறவும் எல்லாம் ஒருங்குடன் நோக்கி எண்ணம் யாவதும் முடிந்த தென்னா எல்லையில் மகிழ்ச்சி பெற்றாள்.

pēvataṟ keṇṇup pōtil poruvilcīr acurark kellāṅ kāvaliṉ ēval pōṟṟum kaṉṉikai muṉivaṉ kāmat tōyvatum piṟavum ellām oruṅkuṭaṉ nōkki eṇṇam yāvatum muṭinta teṉṉā ellaiyil makiḻcci peṟṟāḷ.

Report an error

ஈங்கிது கால மாகும் இடனுமாம் இதற்கு வேறு தீங்கிலை இனைய கூட்டஞ் செய்தவஞ் செய்த தென்னா வாங்கிய நுதலி னாளும் வல்விரைந் தெழுந்து தூயோன் பாங்கரின் அணுகிப் பொற்றாள் பணிந்தனள் பரிவு கூர.

īṅkitu kāla mākum iṭaṉumām itaṟku vēṟu tīṅkilai iṉaiya kūṭṭañ ceytavañ ceyta teṉṉā vāṅkiya nutali ṉāḷum valvirain teḻuntu tūyōṉ pāṅkariṉ aṇukip poṟṟāḷ paṇintaṉaḷ parivu kūra.

Report an error

மின்னிடை பணிந்து நிற்ப மெய்யுறுப் பனைத்தும் நோக்கிப் பின்னரும் மால்மீக் கொள்ளப் பித்தரின் மயங்கா நின்று கன்னியும் என்னை வெஃகுங் காந்தரு வத்தி னாளும் இன்னவ ளாயின் அன்றோ என்னுயிர் உய்யும் என்னா.

miṉṉiṭai paṇintu niṟpa meyyuṟup paṉaittum nōkkip piṉṉarum mālmīk koḷḷap pittariṉ mayaṅkā niṉṟu kaṉṉiyum eṉṉai veḵkuṅ kāntaru vatti ṉāḷum iṉṉava ḷāyiṉ aṉṟō eṉṉuyir uyyum eṉṉā.

Report an error

கருத்திடை உன்னி யார்நீ கன்னியோ என்ன லோடும் அருத்திகொள் முனியை நோக்கி அன்னதாம் என்ன நம்பால் வரத்தகுங் கருமம் என்கொல் வல்லையில் இயம்பு கென்றான் விரத்தரில் தலைவ னாகி வீடுபெற் றுய்ய நோற்றான்.

karuttiṭai uṉṉi yārnī kaṉṉiyō eṉṉa lōṭum aruttikoḷ muṉiyai nōkki aṉṉatām eṉṉa nampāl varattakuṅ karumam eṉkol vallaiyil iyampu keṉṟāṉ virattaril talaiva ṉāki vīṭupeṟ ṟuyya nōṟṟāṉ.

Report an error

முருந்தெனும் முறுவ லாளும் முனிவநீ கணவ னாக இருந்தவம் புரிந்தேன் பன்னாள் இன்றது முடிவ தாகப் பொருந்தினன் ஈண்டு நின்னைப் புல்லிய வந்தேன் என்ன வருந்துறா தமுதம் பெற்ற மாக்கள்போல் மகிழ்ச்சி உற்றான்.

murunteṉum muṟuva lāḷum muṉivanī kaṇava ṉāka iruntavam purintēṉ paṉṉāḷ iṉṟatu muṭiva tākap poruntiṉaṉ īṇṭu niṉṉaip pulliya vantēṉ eṉṉa varuntuṟā tamutam peṟṟa mākkaḷpōl makiḻcci uṟṟāṉ.

Report an error

என்பெருந் தவமும் பன்னாள் என்பொருட் டாக நோற்ற நின்பெருந் தவமும் அன்றோ நின்னுடன் என்னை ஈண்டே அன்புறக் கூட்டிற் றம்மா அடுகளி றென்னப் புல்லி இன்புற வேண்டும் நீயும் இரும்பிடி யாதி என்ன.

eṉperun tavamum paṉṉāḷ eṉporuṭ ṭāka nōṟṟa niṉperun tavamum aṉṟō niṉṉuṭaṉ eṉṉai īṇṭē aṉpuṟak kūṭṭiṟ ṟammā aṭukaḷi ṟeṉṉap pulli iṉpuṟa vēṇṭum nīyum irumpiṭi yāti eṉṉa.

Report an error

மெல்லியல் தானும் அங்கோர் வெம்பிடி யாகித் தோன்றி எல்லையில் காதல் பின்னும் ஈதலும் முனிவன் தானும் மல்லலங் களிற தாகி வானுயர் புழைக்கை நீட்டிப் புல்லினன் ஊற்றந் தானே புணர்ச்சியிற் சிறந்த தன்றே.

melliyal tāṉum aṅkōr vempiṭi yākit tōṉṟi ellaiyil kātal piṉṉum ītalum muṉivaṉ tāṉum mallalaṅ kaḷiṟa tāki vāṉuyar puḻaikkai nīṭṭip pulliṉaṉ ūṟṟan tāṉē puṇarcciyiṟ ciṟanta taṉṟē.

Report an error

நையுறும் உள்ளம் ஆதி நான்மையும் பொறியில் நண்ணி ஐயுறு புலனோர் ஐந்தும் ஆவியின் ஒருங்க அன்னாள் மெய்யுறு புணர்ச்சித் தாய வேட்கையின் மேவ லுற்லுச் செய்யுறு காம முற்றித் தீர்ந்திடு காலை தன்னில்.

naiyuṟum uḷḷam āti nāṉmaiyum poṟiyil naṇṇi aiyuṟu pulaṉōr aintum āviyiṉ oruṅka aṉṉāḷ meyyuṟu puṇarccit tāya vēṭkaiyiṉ mēva luṟluc ceyyuṟu kāma muṟṟit tīrntiṭu kālai taṉṉil.

Report an error

அயன்முதல் தலைவர் வானத் தமர்தரு புலவர் ஆற்றுஞ் செயன்முறைக் கடன்கள் யாவுஞ் சிந்தினன் சிதைக்கும் வண்ணம் வயமுகத் தடவு கொண்ட வயிர்த்திடு மருப்பின் நால்வாய்க் கயமுகத் தவுணன் ஆங்கே கதுமென உதயஞ் செய்தான்.

ayaṉmutal talaivar vāṉat tamartaru pulavar āṟṟuñ ceyaṉmuṟaik kaṭaṉkaḷ yāvuñ cintiṉaṉ citaikkum vaṇṇam vayamukat taṭavu koṇṭa vayirttiṭu maruppiṉ nālvāyk kayamukat tavuṇaṉ āṅkē katumeṉa utayañ ceytāṉ.

Report an error

பற்றிய பலகை ஒள்வாள் விதிர்த்தனன் பரவை ஞாலஞ் சுற்றினன் வரைகள் யாவுந் துகள்பத் துணைத்தாள் உந்தி எற்றினன் உருமே றஞ்ச இரட்டினன் உலக மெல்லாஞ் செற்றிடுங் கடுவ தென்னத் திரிந்தனன் சீற்றம் மிக்கான்.

paṟṟiya palakai oḷvāḷ vitirttaṉaṉ paravai ñālañ cuṟṟiṉaṉ varaikaḷ yāvun tukaḷpat tuṇaittāḷ unti eṟṟiṉaṉ urumē ṟañca iraṭṭiṉaṉ ulaka mellāñ ceṟṟiṭuṅ kaṭuva teṉṉat tirintaṉaṉ cīṟṟam mikkāṉ.

Report an error

அன்னதோர் பிடியு ரோமம் அளப்பில அவற்றில் ஆங்கே மின்னிலங் கெயிற்றுப் பேழ்வாய் விளங்கெழில் செக்கர் வாய்ந்த சென்னியங் குடுமி வீரர் தெழித்தெழீஇச் செங்கை தன்னில் துன்னிரும் படைக ளோடுந் தோன்றினர் தொகையில் ஆன்றோர்.

aṉṉatōr piṭiyu rōmam aḷappila avaṟṟil āṅkē miṉṉilaṅ keyiṟṟup pēḻvāy viḷaṅkeḻil cekkar vāynta ceṉṉiyaṅ kuṭumi vīrar teḻitteḻīic ceṅkai taṉṉil tuṉṉirum paṭaika ḷōṭun tōṉṟiṉar tokaiyil āṉṟōr.

Report an error

இன்னவ ரோடு கூடி இபமுகத் தவுணன் ஆர்ப்பத் தன்னையும் பயந்தோன் தானுந் தளர்ந்தனர் இரியல் போகி முன்னுறும் உருவங் கொள்ள முனிவரன் உணர்வு தோன்ற உன்னிநின் றிரங்கி யேங்கி ஊழ்முறை நினைந்து நைந்தான்.

iṉṉava rōṭu kūṭi ipamukat tavuṇaṉ ārppat taṉṉaiyum payantōṉ tāṉun taḷarntaṉar iriyal pōki muṉṉuṟum uruvaṅ koḷḷa muṉivaraṉ uṇarvu tōṉṟa uṉṉiniṉ ṟiraṅki yēṅki ūḻmuṟai niṉaintu naintāṉ.

Report an error

மாயமாங் காமம் என்னும் வலையிடைப் பட்டு நீங்குந் தூயவன் முன்னம் நின்ற தோகையைச் சுளித்து நோக்கி நீயெவர் குலத்தில் வந்தாய் நினைந்ததென் கழறு கென்னச் சேயிழை மரபும் வந்த செய்கையும் உணர்த்தி நின்றாள்.

māyamāṅ kāmam eṉṉum valaiyiṭaip paṭṭu nīṅkun tūyavaṉ muṉṉam niṉṟa tōkaiyaic cuḷittu nōkki nīyevar kulattil vantāy niṉaintateṉ kaḻaṟu keṉṉac cēyiḻai marapum vanta ceykaiyum uṇartti niṉṟāḷ.

Report an error

வரன்முறை ணர்த லோடும் மாகத முனிவன் யானே தரணியில் உயிர்க ளான சராசரந் தனக்கு மேலாஞ் சுரகுலந் தனக்கும் இன்றே துன்புறு வித்தேன் என்னா எரியுறு தளிர்போல் வாடி இன்னலங் கடலுட் பட்டான்.

varaṉmuṟai ṇarta lōṭum mākata muṉivaṉ yāṉē taraṇiyil uyirka ḷāṉa carācaran taṉakku mēlāñ curakulan taṉakkum iṉṟē tuṉpuṟu vittēṉ eṉṉā eriyuṟu taḷirpōl vāṭi iṉṉalaṅ kaṭaluṭ paṭṭāṉ.

Report an error

சிலபொழு திரங்கித் தேறிச் செயிழை மடந்தை நுங்கோன் மெலிவுநின் னெண்ணந் தோனும் வீடுபெற் றுய்ய யான்முன் பலபகல் புரிந்த நோன்பும் பாருல கனைத்தும் வானோர் உலகமு முடிந்த வேநீ ஒல்லையிற் போதி என்றான்.

cilapoḻu tiraṅkit tēṟic ceyiḻai maṭantai nuṅkōṉ melivuniṉ ṉeṇṇan tōṉum vīṭupeṟ ṟuyya yāṉmuṉ palapakal purinta nōṉpum pārula kaṉaittum vāṉōr ulakamu muṭinta vēnī ollaiyiṟ pōti eṉṟāṉ.

Report an error

போதிநீ என்ன லோடும் பொன்னடி வணங்கிச் சென்று தாதுலாந் தெரிய லாகத் தயித்தியர்க் கிறைபால் எய்தி ஈதெலாம் உரைத்த லோடும் எல்லையின் மகிழ்ச்சி யாகிக் காதல்கூர் தபனற் காணுங் காலையங் கமலம் போன்றான்.

pōtinī eṉṉa lōṭum poṉṉaṭi vaṇaṅkic ceṉṟu tātulān teriya lākat tayittiyark kiṟaipāl eyti ītelām uraitta lōṭum ellaiyiṉ makiḻcci yākik kātalkūr tapaṉaṟ kāṇuṅ kālaiyaṅ kamalam pōṉṟāṉ.

Report an error

தாங்கரும் உவகை யோடுந் தானவர்க் கரசன் நண்ண ஈங்குறு முனிவன் முன்போல் இனிதுநோன் பியற்றப் போனான் ஆங்கவண் உதித்த மைந்தர் அனைவரும் முதல்வன் தன்னோ டோங்கலின் குலங்கள் மேரு வுடன்நடந் தென்னச் சென்றார்.

tāṅkarum uvakai yōṭun tāṉavark karacaṉ naṇṇa īṅkuṟu muṉivaṉ muṉpōl iṉitunōṉ piyaṟṟap pōṉāṉ āṅkavaṇ utitta maintar aṉaivarum mutalvaṉ taṉṉō ṭōṅkaliṉ kulaṅkaḷ mēru vuṭaṉnaṭan teṉṉac ceṉṟār.

Report an error

சீற்றங்கெகள் தறுகண் நாகம் ஒருவழித் திரண்ட தென்னக் கூற்றம்பல் லுருவு கொண்டு குலாயகொட் பென்ன ஊழிக் காற்றெங்கும் பரவிற் றென்னக் கடலிடைப் பிறந்த நஞ்சம் ஊற்றங்கொண் டுலாய தென்ன உலகெலாந் திரிதந் துற்றார்.

cīṟṟaṅkekaḷ taṟukaṇ nākam oruvaḻit tiraṇṭa teṉṉak kūṟṟampal luruvu koṇṭu kulāyakoṭ peṉṉa ūḻik kāṟṟeṅkum paraviṟ ṟeṉṉak kaṭaliṭaip piṟanta nañcam ūṟṟaṅkoṇ ṭulāya teṉṉa ulakelān tiritan tuṟṟār.

Report an error

மலையினைப் பொடிப்பர் ஏனை மண்ணினை மறிப்பர் வாரி அலையினைக் குடிப்பர் கையால் ஆருயிர்த் தொகையை அள்ளி உலையினைப் பொருவு பேழ்வாய் ஓச்சுவர் பரிதி யோடு நிலையினைத் தடுப்பர் சேடன் நெறிதரப் பெயர்வர் மாதோ.

malaiyiṉaip poṭippar ēṉai maṇṇiṉai maṟippar vāri alaiyiṉaik kuṭippar kaiyāl āruyirt tokaiyai aḷḷi ulaiyiṉaip poruvu pēḻvāy ōccuvar pariti yōṭu nilaiyiṉait taṭuppar cēṭaṉ neṟitarap peyarvar mātō.

Report an error

தக்கதோர் அவுண ரோடுந் தந்திமா முகத்து வீரன் திக்கெலாம் உலவி யெல்லாத் தேயமும் ஒருங்கே சென்று மக்களே யாதி யான மன்னுயிர் வாரி நுங்கித் தொக்கதோர் செந்நீர் மாந்தித் துண்ணெனத் திரியும் அன்றே.

takkatōr avuṇa rōṭun tantimā mukattu vīraṉ tikkelām ulavi yellāt tēyamum oruṅkē ceṉṟu makkaḷē yāti yāṉa maṉṉuyir vāri nuṅkit tokkatōr cennīr māntit tuṇṇeṉat tiriyum aṉṟē.

Report an error

அத்திறம் வைகல் தோறும் அவுணரும் இறையும் ஏகிக் கைத்துறும் உயிர்கள் யாவுங் கவர்ந்தனர் மிரைந்தா ராகப் பொய்த்தவர் வெறுக்கை என்னப் பொயின உயிர்கள் சால எய்த்தனர் முனிவர் தேவர் இறந்தது மறையின் நீதி.

attiṟam vaikal tōṟum avuṇarum iṟaiyum ēkik kaittuṟum uyirkaḷ yāvuṅ kavarntaṉar miraintā rākap poyttavar veṟukkai eṉṉap poyiṉa uyirkaḷ cāla eyttaṉar muṉivar tēvar iṟantatu maṟaiyiṉ nīti.

Report an error

முகரிமை அடைந்த வன்தோன் முகத்தவன் அவுண ரோடும் அகலிட மிசையே இவ்வா றமர்தலும் அனைய தன்மை தகுவர்கள் முதல்வன் ஓர்ந்து தமதுதொல் குரவ னான புகரினை விடுப்ப அன்னான் போந்திவை புகலல் உற்றான்.

mukarimai aṭainta vaṉtōṉ mukattavaṉ avuṇa rōṭum akaliṭa micaiyē ivvā ṟamartalum aṉaiya taṉmai takuvarkaḷ mutalvaṉ ōrntu tamatutol kurava ṉāṉa pukariṉai viṭuppa aṉṉāṉ pōntivai pukalal uṟṟāṉ.

Report an error

ஒள்ளி தாகிய உங்குலத் துற்றுள மள்ளர் யார்க்குமொர் வான்குரு வாயினேன் தெள்ளு பன்மறைத் திட்பமுந் தேர்ந்துளேன் வெள்ளி என்பதொர் மேதகு பேரினேன்.

oḷḷi tākiya uṅkulat tuṟṟuḷa maḷḷar yārkkumor vāṉkuru vāyiṉēṉ teḷḷu paṉmaṟait tiṭpamun tērntuḷēṉ veḷḷi eṉpator mētaku pēriṉēṉ.

Report an error

உங்கு லத்துக் கொருமுத லாகிய சிங்க மன்ன திறலினன் உய்த்திட இங்கு நின்புடை எய்தினன் மேல்நெறி தங்கு நன்னயஞ் சாற்றுதற் கேயென்றான்.

uṅku lattuk korumuta lākiya ciṅka maṉṉa tiṟaliṉaṉ uyttiṭa iṅku niṉpuṭai eytiṉaṉ mēlneṟi taṅku naṉṉayañ cāṟṟutaṟ kēyeṉṟāṉ.

Report an error

குரவ னாகிக் குறுகிய சல்லியன் பரிவொ டீது பகர்தலும் ஆங்கவன் திருவ டித்துணை சென்று வணங்கியே கரிமு கத்தன் கழறுதல் மேயினான்.

kurava ṉākik kuṟukiya calliyaṉ parivo ṭītu pakartalum āṅkavaṉ tiruva ṭittuṇai ceṉṟu vaṇaṅkiyē karimu kattaṉ kaḻaṟutal mēyiṉāṉ.

Report an error

இறுவ தின்றிய எங்குலத் தோர்க்கெலாம் அறிவ நீஅரு ளால்அடி யேற்கிவண் உறுதி கூறுகின் றாய்இதன் ஊங்கினிப் பெறுவ தொன்றுள தேயெனப் பேசினான்.

iṟuva tiṉṟiya eṅkulat tōrkkelām aṟiva nīaru ḷālaṭi yēṟkivaṇ uṟuti kūṟukiṉ ṟāyitaṉ ūṅkiṉip peṟuva toṉṟuḷa tēyeṉap pēciṉāṉ.

Report an error

அந்த வேலை அவுணர்கள் யாவருஞ் சிந்தைமேல் கொண்ட தீதினை நீத்திடா எந்தை யார்தங் குரவர் இவரெனா வந்து பார்க்கவன் தாளில்வ ணங்கினார்.

anta vēlai avuṇarkaḷ yāvaruñ cintaimēl koṇṭa tītiṉai nīttiṭā entai yārtaṅ kuravar ivareṉā vantu pārkkavaṉ tāḷilva ṇaṅkiṉār.

Report an error

சீத வான்முகிற் கோள்எனுஞ் செவ்வியோன் ஆதி தன்னரு ளால்அவு ணர்க்கிறை போத கன்முகம் நோக்கிப் பொருவிலா ஓதி மாண்பின் இவையுரைக் கின்றனன்.

cīta vāṉmukiṟ kōḷeṉuñ cevviyōṉ āti taṉṉaru ḷālavu ṇarkkiṟai pōta kaṉmukam nōkkip poruvilā ōti māṇpiṉ ivaiyuraik kiṉṟaṉaṉ.

Report an error

மீயுயர் தவத்தை ஆற்றாய் விமலனை உணராய் ஒல்லார் மாயமுந் திறலுஞ் சீரும் வன்மையுஞ் சிறிதுந் தேராய் ஏயவிவ் வுடலம் நில்லா தென்பதுங் கருதாய் வாளா போயின பன்னாள் என்நீ புரிந்தனை புந்தி இல்லாய்.

mīyuyar tavattai āṟṟāy vimalaṉai uṇarāy ollār māyamun tiṟaluñ cīrum vaṉmaiyuñ ciṟitun tērāy ēyaviv vuṭalam nillā teṉpatuṅ karutāy vāḷā pōyiṉa paṉṉāḷ eṉnī purintaṉai punti illāy.

Report an error

முப்பகை கடந்து மற்றை முரட்பகை முடித்திட் டைம்பான் மெய்ப்பகை கடந்து நோற்று விழுத்தகும் ஆற்றல் பெற்றுத் துப்பகை தொண்டைச் செவ்வாய்ச் சூரொடு புணரும் வானாட் டப்பகை கடந்து தொல்சீர் அடைந்திலை போலும் அன்றே.

muppakai kaṭantu maṟṟai muraṭpakai muṭittiṭ ṭaimpāṉ meyppakai kaṭantu nōṟṟu viḻuttakum āṟṟal peṟṟut tuppakai toṇṭaic cevvāyc cūroṭu puṇarum vāṉāṭ ṭappakai kaṭantu tolcīr aṭaintilai pōlum aṉṟē.

Report an error

இம்மையில் இன்பந் தன்னைப் புகழொடும் இழத்தி மேலை அம்மையில் இன்பந் தானும் அகன்றஆ போலும் அன்றே உம்மையும் இன்பம் என்ப துற்றிலை என்னிற்பின்னை எம்மையில் இன்பந் துய்க்க இசைந்துநீ இருக்கின் றாயால்.

immaiyil iṉpan taṉṉaip pukaḻoṭum iḻatti mēlai ammaiyil iṉpan tāṉum akaṉṟaā pōlum aṉṟē ummaiyum iṉpam eṉpa tuṟṟilai eṉṉiṟpiṉṉai emmaiyil iṉpan tuykka icaintunī irukkiṉ ṟāyāl.

Report an error

ஆக்கமுந் திறலுஞ சீரும் ஆயுவும் நலனும் மேலாம் ஊக்கமும் வீடும் எல்லாம் தவத்தின தூற்றம அன்றோ நோக்குறும் இந்நாள் காறும் நோற்கலா தினை வெல்லாம் போக்குவ தென்னை கொல்லோ புகலுதி இகலும் வேலோய்.

ākkamun tiṟaluña cīrum āyuvum nalaṉum mēlām ūkkamum vīṭum ellām tavattiṉa tūṟṟama aṉṟō nōkkuṟum innāḷ kāṟum nōṟkalā tiṉai vellām pōkkuva teṉṉai kollō pukaluti ikalum vēlōy.

Report an error

ஆற்றிடு தருமம் விஞ்சை அரும்பெறல் மகவும் சீர்த்தி ஏற்றிடு கொற்றம் ஆற்றல் இருநிதி பெருமை இன்பம் நோற்றிடு விரதஞ் சீலம் நூவலரும் போதம் யாவுங் கூற்றுவன் கூவும் ஞான்று குறித்திடிற் கூடு மோதான்.

āṟṟiṭu tarumam viñcai arumpeṟal makavum cīrtti ēṟṟiṭu koṟṟam āṟṟal iruniti perumai iṉpam nōṟṟiṭu viratañ cīlam nūvalarum pōtam yāvuṅ kūṟṟuvaṉ kūvum ñāṉṟu kuṟittiṭiṟ kūṭu mōtāṉ.

Report an error

காலனா கியதோர் சேர்ப்பன் காலமாம் வலையை வீசி ஞாலமாந் தடத்தில் வைகும் நல்லுயிர் மீன்கள் வாரி ஏலவே ஈர்த்து நின்றான் இறுதியாங் கரைசேர் காலை மேலவன் கையுட் பட்டு மெலிவொடு வீடும் அன்றே.

kālaṉā kiyatōr cērppaṉ kālamām valaiyai vīci ñālamān taṭattil vaikum nalluyir mīṉkaḷ vāri ēlavē īrttu niṉṟāṉ iṟutiyāṅ karaicēr kālai mēlavaṉ kaiyuṭ paṭṭu melivoṭu vīṭum aṉṟē.

Report an error

சீரிர துடலம் என்கை தெரிந்திலை நிலைத்தல் செல்லா தாருயிர் வகையும் என்ப தறிந்திலை ஆயுட் பன்னாட் சாருதல் வேண்டு மென்னுந் தகைமையும் நினைத்தி அல்லை பாருயிர் இறப்ப நுங்கி இருப்பதோ பரிசு மாதோ.

cīrira tuṭalam eṉkai terintilai nilaittal cellā tāruyir vakaiyum eṉpa taṟintilai āyuṭ paṉṉāṭ cārutal vēṇṭu meṉṉun takaimaiyum niṉaitti allai pāruyir iṟappa nuṅki iruppatō paricu mātō.

Report an error

மந்திரம் இல்லை மாயம் இல்லையோர் வரமும் இல்லை தந்திரம் இல்லை மேலோர் தருகின்ற படையொன் றில்லை அந்தர வமர ரெல்லாம் அனிகமாய்ச் சூழ நின்மேல் இந்திரன் போருவான் செல்லின் யாதுநீ செய்தி மாதோ.

mantiram illai māyam illaiyōr varamum illai tantiram illai mēlōr tarukiṉṟa paṭaiyoṉ ṟillai antara vamara rellām aṉikamāyc cūḻa niṉmēl intiraṉ pōruvāṉ celliṉ yātunī ceyti mātō.

Report an error

சிறியதோர் பயனைத் தூக்கித் தீயவர் செய்யுஞ் சூழ்ச்சி அறிகில வாகி வீழவுற் றகப்படு மாவும் மீனும் பறவையும் என்ன எல்லார் புணர்ப்பினிற் படுதி இன்னே விறலொடு வலியுஞ் சீரும் மேன்மையும் இன்றி உற்றாய்.

ciṟiyatōr payaṉait tūkkit tīyavar ceyyuñ cūḻcci aṟikila vāki vīḻavuṟ ṟakappaṭu māvum mīṉum paṟavaiyum eṉṉa ellār puṇarppiṉiṟ paṭuti iṉṉē viṟaloṭu valiyuñ cīrum mēṉmaiyum iṉṟi uṟṟāy.

Report an error

ஆதலின் எவர்க்கும் மேலாம் அரன்றனை உன்னி ஆற்ற மாதவம் புரிதி அன்னான் வரம்பல கேட்ட வெல்லாந் தீதற உதவும் பின்னர்த் தேவர்உன் ஏவல் செய்வார் மேதகும் உலகுக் கெல்லாம் வேந்தனாய் இருத்தி என்றான்.

ātaliṉ evarkkum mēlām araṉṟaṉai uṉṉi āṟṟa mātavam puriti aṉṉāṉ varampala kēṭṭa vellān tītaṟa utavum piṉṉart tēvaruṉ ēval ceyvār mētakum ulakuk kellām vēntaṉāy irutti eṉṟāṉ.

Report an error

சொன்னவை கேட்ட லோடுந் தொழுதகை அவுணர் தோன்றல் முன்னிவை யாவ ரேனும் மொழிந்தனர் இல்லை யானும் இன்னவை புரிதல் தேற்றேன் இனித்தவம் இயற்று கின்றேன் அன்னவை புரியுந் தன்மை அருள்செயல் வேண்டும் என்றான்.

coṉṉavai kēṭṭa lōṭun toḻutakai avuṇar tōṉṟal muṉṉivai yāva rēṉum moḻintaṉar illai yāṉum iṉṉavai purital tēṟṟēṉ iṉittavam iyaṟṟu kiṉṟēṉ aṉṉavai puriyun taṉmai aruḷceyal vēṇṭum eṉṟāṉ.

Report an error

ஐயவினைசெய் பொறிகளெலாம் அரங்கமெனக் கறங்கும்அறி வடங்கு கின்ற மெய்வினைய மந்திரமுந் தந்திரமும் அங்கமுறு விதியி னோடு கைவினையும் உட்கோளும் புறங்காப்பும் விரதஞ்செய் கடனும் ஏனைச் செய்வினையும் உணர்வித்து மேருவின்பால் தவம்புரியச் செல்லு கென்றான்.

aiyaviṉaicey poṟikaḷelām araṅkameṉak kaṟaṅkumaṟi vaṭaṅku kiṉṟa meyviṉaiya mantiramun tantiramum aṅkamuṟu vitiyi ṉōṭu kaiviṉaiyum uṭkōḷum puṟaṅkāppum viratañcey kaṭaṉum ēṉaic ceyviṉaiyum uṇarvittu mēruviṉpāl tavampuriyac cellu keṉṟāṉ.

Report an error

ஏவுதலுங் கயமுகத்தோன் அவுணரொடும் புகரடியின் இறைங்சி அங்கண் மேவுவன்யான் எனவுரையா விடைகொண்டு நோற்றிடுவான் விரைவின் ஏகக் காவதமங் கோரிரண்டு கடப்பளவுந் தானின்று கண்ணின் நோக்கிப் போவனினி எனமகிழ்ந்து மீண்டுபோய் அவுணர்பதி புகுந்தான் அன்றே.

ēvutaluṅ kayamukattōṉ avuṇaroṭum pukaraṭiyiṉ iṟaiṅci aṅkaṇ mēvuvaṉyāṉ eṉavuraiyā viṭaikoṇṭu nōṟṟiṭuvāṉ viraiviṉ ēkak kāvatamaṅ kōriraṇṭu kaṭappaḷavun tāṉiṉṟu kaṇṇiṉ nōkkip pōvaṉiṉi eṉamakiḻntu mīṇṭupōy avuṇarpati pukuntāṉ aṉṟē.

Report an error

அக்காலத் தெதிர்வந்த இறைவனுடன் புகுந்தவெலாம் அறைய அன்னான் இக்காலந் தானன்றோ அருள்செய்தீர் எனவியம்ம்பி ஏத்தி அன்பால் முக்கால்வந் தனைசெய்து விடுத்திடப்போய்த் தன்பதத்தின் முன்ன மேபோல் மிக்கானும் வீற்றிருந்தான் கடவுளரும் புரந்தரனும் விழுமங் கொள்ள.

akkālat tetirvanta iṟaivaṉuṭaṉ pukuntavelām aṟaiya aṉṉāṉ ikkālan tāṉaṉṟō aruḷceytīr eṉaviyammpi ētti aṉpāl mukkālvan taṉaiceytu viṭuttiṭappōyt taṉpatattiṉ muṉṉa mēpōl mikkāṉum vīṟṟiruntāṉ kaṭavuḷarum purantaraṉum viḻumaṅ koḷḷa.

Report an error

மாண்டகுமவ் வலியகலன் மருப்பதனை எதிர்ந்துதொல்லை வைப்பின் ஈங்கு மீண்டியதிண் காழிரும்பின் எஃகமுதல் வியன்படைகள் இயற்சை என்னக் காண்டகைய தங்குரவ னானபுகர் உரையதனைக் கருத்துட் சேர்த்தி ஆண்டகைசேர் இபமுகத்தோன் அவுணருடன் தவம்புரிவான் அகலல் உற்றான்.

māṇṭakumav valiyakalaṉ maruppataṉai etirntutollai vaippiṉ īṅku mīṇṭiyatiṇ kāḻirumpiṉ eḵkamutal viyaṉpaṭaikaḷ iyaṟcai eṉṉak kāṇṭakaiya taṅkurava ṉāṉapukar uraiyataṉaik karuttuṭ cērtti āṇṭakaicēr ipamukattōṉ avuṇaruṭaṉ tavampurivāṉ akalal uṟṟāṉ.

Report an error

அங்கண்முகில் படிந்தறியா மேருவினுக் கொருசார்போய் அவுணர் வேந்தன் துங்கமிகு கருவிகளாய் வேண்டுவன கொணர்வித்துத் தூநீர் ஆடிச் செங்கதிரோன் தனைநோக்கி ஆற்றுகடன் முடித்துமுன்னைத் தீர்வு நேர்ந்து தங்கள்குர வன்பணித்த பெற்றியினால் மிக்கதவந் தன்னைச் செய்வான்.

aṅkaṇmukil paṭintaṟiyā mēruviṉuk korucārpōy avuṇar vēntaṉ tuṅkamiku karuvikaḷāy vēṇṭuvaṉa koṇarvittut tūnīr āṭic ceṅkatirōṉ taṉainōkki āṟṟukaṭaṉ muṭittumuṉṉait tīrvu nērntu taṅkaḷkura vaṉpaṇitta peṟṟiyiṉāl mikkatavan taṉṉaic ceyvāṉ.

Report an error

பொறியிலுறு புலனவித்து நவைநீக்கிக் கரணவியல் போக்கி ஆசான் குறிவழியே தலைநின்று மூலவெழுத் துடனைந்துங் கொளுவி எண்ணி அறிவுதனில் அறிவாகி உயிர்க்குயிராய்ப் பரம்பொருளாய் அமல மாகிச் செறிதருகண் ணுதற்கடவுள் அடிபோற்றி அவனுருவைச் சிந்தை செய்தான்.

poṟiyiluṟu pulaṉavittu navainīkkik karaṇaviyal pōkki ācāṉ kuṟivaḻiyē talainiṉṟu mūlaveḻut tuṭaṉaintuṅ koḷuvi eṇṇi aṟivutaṉil aṟivāki uyirkkuyirāyp paramporuḷāy amala mākic ceṟitarukaṇ ṇutaṟkaṭavuḷ aṭipōṟṟi avaṉuruvaic cintai ceytāṉ.

Report an error

ஆயிரம் ஆண்டுபுல் லடகு மேயினான் ஆயிர மாண்டுசில் புனல்அ ருந்தினான் ஆயிர மாண்டள வனிலம் நுங்கினான் மாயிரும் புவியுயிர் மடுக்கும் வாயினான்.

āyiram āṇṭupul laṭaku mēyiṉāṉ āyira māṇṭucil puṉala runtiṉāṉ āyira māṇṭaḷa vaṉilam nuṅkiṉāṉ māyirum puviyuyir maṭukkum vāyiṉāṉ.

Report an error

காலமூ வாயிரங் கழிந்த பின்முறை மாலுறு மருத்தெனும் மாவைத் தூண்டியே மூலவெங் கனலினை முடுக்கி மூட்டுறா மேலுறும் அமிர்தினை மிசைதல் மேயினான்.

kālamū vāyiraṅ kaḻinta piṉmuṟai māluṟu marutteṉum māvait tūṇṭiyē mūlaveṅ kaṉaliṉai muṭukki mūṭṭuṟā mēluṟum amirtiṉai micaital mēyiṉāṉ.

Report an error

கண்டனர் அதுசுரர் கவலுஞ் சிந்தையர் திண்டிறல் அவுணன்இச் செய்கை முற்றுமேல் அண்டமும் புவனமும் அலைக்கு மேயெனாக் கொண்டனர் தம்பதி அறியக் கூறினார்.

kaṇṭaṉar atucurar kavaluñ cintaiyar tiṇṭiṟal avuṇaṉic ceykai muṟṟumēl aṇṭamum puvaṉamum alaikku mēyeṉāk koṇṭaṉar tampati aṟiyak kūṟiṉār.

Report an error

கூறிய செயலினைத் தேர்ந்து கொற்றவன் ஆறிய வெகுட்சியன் அயர்ந்து சோர்வுறா வீறியல் வாய்மையும் விறலும் ஆண்மையும் மாறிய வோவெனா மறுக்கம் எய்தினான்.

kūṟiya ceyaliṉait tērntu koṟṟavaṉ āṟiya vekuṭciyaṉ ayarntu cōrvuṟā vīṟiyal vāymaiyum viṟalum āṇmaiyum māṟiya vōveṉā maṟukkam eytiṉāṉ.

Report an error

புலர்ந்தனன் இரங்கினன் பொருமல் எய்தினான் அலந்தனன் உயிர்த்தனன் அச்சங் கொண்டனன் உலந்தனன் போன்றனன் ஒடுங்கித் தன்னுளங் குலைந்தனன் அவன்செயல் கூறற் பாலதோ.

pularntaṉaṉ iraṅkiṉaṉ porumal eytiṉāṉ alantaṉaṉ uyirttaṉaṉ accaṅ koṇṭaṉaṉ ulantaṉaṉ pōṉṟaṉaṉ oṭuṅkit taṉṉuḷaṅ kulaintaṉaṉ avaṉceyal kūṟaṟ pālatō.

Report an error

ஈசனை யன்றுகா றெதிரக் கண்டிலன் காய்சினம் அகன்றிடு கயமு கத்தினான் தேசிகன் அருளினால் தீயின் கண்ணுறீஇ மாசறு தவஞ்செய மனத்து முன்னினான்.

īcaṉai yaṉṟukā ṟetirak kaṇṭilaṉ kāyciṉam akaṉṟiṭu kayamu kattiṉāṉ tēcikaṉ aruḷiṉāl tīyiṉ kaṇṇuṟīi mācaṟu tavañceya maṉattu muṉṉiṉāṉ.

Report an error

சுற்றுற நாற்கனல் சூழ நள்ளிடை மற்றொரு பேரழ வதிய அன்னதில் கொற்றவெங் கயமுகக் குரிசில் தாள்நிறீஇ நற்றவம் இயற்றினான் நாதற் போற்றியே.

cuṟṟuṟa nāṟkaṉal cūḻa naḷḷiṭai maṟṟoru pēraḻa vatiya aṉṉatil koṟṟaveṅ kayamukak kuricil tāḷniṟīi naṟṟavam iyaṟṟiṉāṉ nātaṟ pōṟṟiyē.

Report an error

மேயின கொழும்புகை மிசைக்கொண் டாலெனத் தீயழல் நடுவுறச் செந்நின் றையிரண் டாயிரம் ஆண்டையின் அவதி ஆருயிர் நோயுற இபமுகன் நோற்றல் ஓம்பினான்.

mēyiṉa koḻumpukai micaikkoṇ ṭāleṉat tīyaḻal naṭuvuṟac cenniṉ ṟaiyiraṇ ṭāyiram āṇṭaiyiṉ avati āruyir nōyuṟa ipamukaṉ nōṟṟal ōmpiṉāṉ.

Report an error

புழைக்கையின் முகத்தினன் புனித மார்தரு தழற்சிகை மீக்கொளத் தனது தாள்நிறீஇ விழுத்தக நோற்றலை வியந்து நோக்குறீஇ அழற்பெருங் கடவுளும் அருள்செய் தானரோ.

puḻaikkaiyiṉ mukattiṉaṉ puṉita mārtaru taḻaṟcikai mīkkoḷat taṉatu tāḷniṟīi viḻuttaka nōṟṟalai viyantu nōkkuṟīi aḻaṟperuṅ kaṭavuḷum aruḷcey tāṉarō.

Report an error

அன்னதோர் அமையில் அவுணன் மாசுடல் வன்னியில் உறுத்துகார் இரும்பின் மாண்டது பொன்னினும் மணியினும் பொலிந்து பூத்தது மின்னிவர் வச்சிர மிடலுஞ் சான்றதால்.

aṉṉatōr amaiyil avuṇaṉ mācuṭal vaṉṉiyil uṟuttukār irumpiṉ māṇṭatu poṉṉiṉum maṇiyiṉum polintu pūttatu miṉṉivar vaccira miṭaluñ cāṉṟatāl.

Report an error

ஏற்றநந் தொன்மர பியல்வ ழாமலே போற்றிய வருமிவன் பொறையும் மேன்மையும் நோற்றிடு திட்பமும் நுவலற் பாலவோ நூற்றுதும் அலரெனா அவுணர் தோன்றினார்.

ēṟṟanan toṉmara piyalva ḻāmalē pōṟṟiya varumivaṉ poṟaiyum mēṉmaiyum nōṟṟiṭu tiṭpamum nuvalaṟ pālavō nūṟṟutum alareṉā avuṇar tōṉṟiṉār.

Report an error

வீசினர் நறுமலர் வியப்பின் நன்மொழி பேசினர் புகழ்ந்தனர் பிறங்கும் ஆர்வத்தால் ஆசிகள் புகன்றனர் அமரர் தானையை ஏசினர் அவர்தம தின்னல் நோக்குவார்.

vīciṉar naṟumalar viyappiṉ naṉmoḻi pēciṉar pukaḻntaṉar piṟaṅkum ārvattāl ācikaḷ pukaṉṟaṉar amarar tāṉaiyai ēciṉar avartama tiṉṉal nōkkuvār.

Report an error

தளப்பெரும் பங்கயத் தவிசின் மீமிசை அளப்பருங் குணத்துடன் அமர்ந்த நாயகன் உளப்பட நோக்கினன் உவந்து பூமுடி துளக்கினன் அமரர்கள் துணுக்கம் எய்தினார்.

taḷapperum paṅkayat taviciṉ mīmicai aḷapparuṅ kuṇattuṭaṉ amarnta nāyakaṉ uḷappaṭa nōkkiṉaṉ uvantu pūmuṭi tuḷakkiṉaṉ amararkaḷ tuṇukkam eytiṉār.

Report an error

இன்னணம் அருந்தவம் இயற்றும் எல்லையில் பொன்னவிர் சடைமுடிப் புனித நாயகன் அன்னது நாடியே அவுண ருக்கிறை முன்னுற வந்தனன் மூரி யேற்றின்மேல்.

iṉṉaṇam aruntavam iyaṟṟum ellaiyil poṉṉavir caṭaimuṭip puṉita nāyakaṉ aṉṉatu nāṭiyē avuṇa rukkiṟai muṉṉuṟa vantaṉaṉ mūri yēṟṟiṉmēl.

Report an error

வந்து தோன்றலும் மற்றது நோக்கியத் தந்தி மாமுகத் தானவன் நோன்பொரீஇச் சிந்தை அன்பொடு சென்னியிற் கைதொழு தெந்தை தன்னை இறைஞ்சிநின் றேத்தினான்.

vantu tōṉṟalum maṟṟatu nōkkiyat tanti māmukat tāṉavaṉ nōṉporīic cintai aṉpoṭu ceṉṉiyiṟ kaitoḻu tentai taṉṉai iṟaiñciniṉ ṟēttiṉāṉ.

Report an error

போற்று கின்றுழிப் புங்கவன் இன்றுகா றாற்று நோன்பில் அயர்ந்தனை நீயினிப் பேற்றை வேண்டுவ பேசினை கொள்கெனத் தேற்ற மிக்கவன் செப்புதல் மேயினான்.

pōṟṟu kiṉṟuḻip puṅkavaṉ iṉṟukā ṟāṟṟu nōṉpil ayarntaṉai nīyiṉip pēṟṟai vēṇṭuva pēciṉai koḷkeṉat tēṟṟa mikkavaṉ cepputal mēyiṉāṉ.

Report an error

மாலயன் இந்திரன் முதல்வ ரம்பிலோர் மேலுறு தகையினர் வெய்ய போரிடை ஏலுவர் என்னினும் எனக்கு வென்னிட ஆலமர் கடவுள்நீ அருளல் வேண்டுமால்

mālayaṉ intiraṉ mutalva rampilōr mēluṟu takaiyiṉar veyya pōriṭai ēluvar eṉṉiṉum eṉakku veṉṉiṭa ālamar kaṭavuḷnī aruḷal vēṇṭumāl

Report an error

எற்றுவ வெறிகுவ ஈர்வ எய்குவ குற்றுவ முதலிய குழுக்கொள் வான்படை முற்றுற வரினும்யான் முடிவு றாவகை அற்றமில் பெருமிடல் அளித்தல் வேண்டுமால்.

eṟṟuva veṟikuva īrva eykuva kuṟṟuva mutaliya kuḻukkoḷ vāṉpaṭai muṟṟuṟa variṉumyāṉ muṭivu ṟāvakai aṟṟamil perumiṭal aḷittal vēṇṭumāl.

Report an error

மிக்கதோர் அமரரால் வியப்பின் மானுட மக்களால் அவுணரால் மற்றை யோர்களால் தொக்குறு விலங்கினால் துஞ்சி டாவகை இக்கணந் தமியனேற் கீதல் வேண்டுமால்.

mikkatōr amararāl viyappiṉ māṉuṭa makkaḷāl avuṇarāl maṟṟai yōrkaḷāl tokkuṟu vilaṅkiṉāl tuñci ṭāvakai ikkaṇan tamiyaṉēṟ kītal vēṇṭumāl.

Report an error

என்னிக ராகிவந் தொருவன் என்னொடு முன்னுற வெஞ்சமர் முயலும் என்னினும் அன்னவன் படையினும் அழிவு றாவகை பொன்னவிர் வேணியாய் புரிதல் வேண்டுமால்.

eṉṉika rākivan toruvaṉ eṉṉoṭu muṉṉuṟa veñcamar muyalum eṉṉiṉum aṉṉavaṉ paṭaiyiṉum aḻivu ṟāvakai poṉṉavir vēṇiyāy purital vēṇṭumāl.

Report an error

வரந்தரு கடவுளர் முனிவர் மற்றையோர் இருந்திடும் உலகெலாம் என்ன தாணையில் திரிந்திடும் ஆழியுங் கோலுஞ் சென்றிடப் புரிந்திடும் அரசியல் புரிதல் வேண்டுமால்.

varantaru kaṭavuḷar muṉivar maṟṟaiyōr iruntiṭum ulakelām eṉṉa tāṇaiyil tirintiṭum āḻiyuṅ kōluñ ceṉṟiṭap purintiṭum araciyal purital vēṇṭumāl.

Report an error

அன்றியும் ஒன்றுள தடியன் சூழ்ச்சியால் பொன்றினும் பிறவியுட் புகாமை வேண்டுமால் என்றலு நோற்றவர்க் கேதும் ஈபவன் நன்றவை பெறுகென நல்கி யேகினான்.

aṉṟiyum oṉṟuḷa taṭiyaṉ cūḻcciyāl poṉṟiṉum piṟaviyuṭ pukāmai vēṇṭumāl eṉṟalu nōṟṟavark kētum īpavaṉ naṉṟavai peṟukeṉa nalki yēkiṉāṉ.

Report an error

பெற்றனன் படைகளும் பிறவுந் தன்புறஞ் சுற்றிடு கிளையெலாந் தொடர்ந்து சூழ்தர உற்றனன் காண்டகும் உம்பர் உங்குவன் மற்றொரு கயமுகன் என்று மாழ்கினார்.

peṟṟaṉaṉ paṭaikaḷum piṟavun taṉpuṟañ cuṟṟiṭu kiḷaiyelān toṭarntu cūḻtara uṟṟaṉaṉ kāṇṭakum umpar uṅkuvaṉ maṟṟoru kayamukaṉ eṉṟu māḻkiṉār.

Report an error

காழுறு பெருந்தரு நாறு காசினி வீழுறு தூரொடு மெலிந்து நின்றன ஊழுறு பருவம்வந் துற்ற காலையில் சூழுறு தொன்னிலை என்னத் தோன்றினான்.

kāḻuṟu peruntaru nāṟu kāciṉi vīḻuṟu tūroṭu melintu niṉṟaṉa ūḻuṟu paruvamvan tuṟṟa kālaiyil cūḻuṟu toṉṉilai eṉṉat tōṉṟiṉāṉ.

Report an error

அற்புதம் எய்தினன் அலைகொள் வாரியில் புற்புத மாமெனப் புளகம் பூத்துளான் சொற்பகர் வரியதோர் மதர்ப்பின் சும்மையான் சிற்பரன் கருணையில் திளைத்தல் மேயினான்.

aṟputam eytiṉaṉ alaikoḷ vāriyil puṟputa māmeṉap puḷakam pūttuḷāṉ coṟpakar variyatōr matarppiṉ cummaiyāṉ ciṟparaṉ karuṇaiyil tiḷaittal mēyiṉāṉ.

Report an error

அன்னது தேர்வுறீஇ அவுணர் தொல்குல மன்னனும் வெள்ளியும் மதங்க மாமுகன் தன்னைவந் தெய்தியே சயமுண் டாகெனப் பன்னரும் ஆசிகள் பகர்ந்து மேயினார்.

aṉṉatu tērvuṟīi avuṇar tolkula maṉṉaṉum veḷḷiyum mataṅka māmukaṉ taṉṉaivan teytiyē cayamuṇ ṭākeṉap paṉṉarum ācikaḷ pakarntu mēyiṉār.

Report an error

தண்ணளி யில்லதோர் தந்தி மாமுகன் அண்ணலங் கடகளிற் றமரர் கோனையும் விண்ணவர் பிறரையும் வென்று மீண்டுபின் மண்ணுல கதனிடை வல்லை எய்தினான்.

taṇṇaḷi yillatōr tanti māmukaṉ aṇṇalaṅ kaṭakaḷiṟ ṟamarar kōṉaiyum viṇṇavar piṟaraiyum veṉṟu mīṇṭupiṉ maṇṇula kataṉiṭai vallai eytiṉāṉ.

Report an error

புவனி தன்னிடைப் போந்துபின், அவுணர் கம்மிய அறிஞனை, நுவலும் அன்பொடு நோக்குறா, உவகை யால்இவை யுரைசெய்வான்.

puvaṉi taṉṉiṭaip pōntupiṉ, avuṇar kammiya aṟiñaṉai, nuvalum aṉpoṭu nōkkuṟā, uvakai yālivai yuraiceyvāṉ.

Report an error

நாவ லந்தரு நண்ணுமத், தீவின் மேதகு தென்றிசைப், பூவி லோர்நகர் புரிதியால், மேவ வென்று விளம்பவே.

nāva lantaru naṇṇumat, tīviṉ mētaku teṉṟicaip, pūvi lōrnakar puritiyāl, mēva veṉṟu viḷampavē.

Report an error

பூவின் மேல்வரு புங்கவத், தேவு நாணுறு செய்கையில், காவன் மாநகர் கண்டதிற், கோவி லொன்று குயிற்றினான்.

pūviṉ mēlvaru puṅkavat, tēvu nāṇuṟu ceykaiyil, kāvaṉ mānakar kaṇṭatiṟ, kōvi loṉṟu kuyiṟṟiṉāṉ.

Report an error

வெங்கண் மேதகு வேழமு கத்தனைத் தங்கள் தொல்பகை தாங்குவ தாமெனச் சிங்க மாற்றுந் திருமணிப் பீடமொன் றங்கவன் வைக ஆற்றினன் அவ்விடை.

veṅkaṇ mētaku vēḻamu kattaṉait taṅkaḷ tolpakai tāṅkuva tāmeṉac ciṅka māṟṟun tirumaṇip pīṭamoṉ ṟaṅkavaṉ vaika āṟṟiṉaṉ avviṭai.

Report an error

இனைத்தி யாவும் இமைப்பினில் கம்மியன் நினைப்பி னில்செய் நிலைமையை நோக்கியே சினத்தின் நீங்கிய செய்தவத் தேசிகன் மனத்தி னூடு மகிழ்ச்சியின் மேயினான்.

iṉaitti yāvum imaippiṉil kammiyaṉ niṉaippi ṉilcey nilaimaiyai nōkkiyē ciṉattiṉ nīṅkiya ceytavat tēcikaṉ maṉatti ṉūṭu makiḻcciyiṉ mēyiṉāṉ.

Report an error

காமர் தங்கிய காப்பியன் அந்நகர் தூம தங்கெழு தோல்முகற் காதலான் மாம தங்க புரம்என மற்றொரு நாமம் அங்கதற் கெய்திட நாட்டினான்.

kāmar taṅkiya kāppiyaṉ annakar tūma taṅkeḻu tōlmukaṟ kātalāṉ māma taṅka purameṉa maṟṟoru nāmam aṅkataṟ keytiṭa nāṭṭiṉāṉ.

Report an error

அந்த மாநகர் ஐதெனக் கம்மியன் சிந்தை நாடினன் செய்திடு காலையில் தந்தி மாமுகத் தானவன் கண்ணுறீஇ அந்தம் இல்லதொ ரார்வமொ டேகினான்.

anta mānakar aiteṉak kammiyaṉ cintai nāṭiṉaṉ ceytiṭu kālaiyil tanti māmukat tāṉavaṉ kaṇṇuṟīi antam illato rārvamo ṭēkiṉāṉ.

Report an error

காத மங்கொரு பத்தெனக் கற்றவர் ஓதுகின்ற ஒழுக்கமும் ஒன்றெனும் பாதி யெல்லைப் பரப்பும் பெறுநகர் வீதி நோக்னின் விம்மிதம் எய்தினான்.

kāta maṅkoru patteṉak kaṟṟavar ōtukiṉṟa oḻukkamum oṉṟeṉum pāti yellaip parappum peṟunakar vīti nōkṉiṉ vimmitam eytiṉāṉ.

Report an error

அரக்கர் தொல்லை அவுணர்க் கரசொடு தருக்கு தானவர் தம்முடன் எய்தியே பெருக்க முற்றதன் பின்னவர் இன்னவர் இருக்க நல்கினன் இந்நகர் யாவையும்.

arakkar tollai avuṇark karacoṭu tarukku tāṉavar tammuṭaṉ eytiyē perukka muṟṟataṉ piṉṉavar iṉṉavar irukka nalkiṉaṉ innakar yāvaiyum.

Report an error

அங்கண் மேவும் அணிமணிக் கோயிலின் மங்க லத்தொடு வல்லையின் ஏகியே சிங்க ஏற்றின் சிரங்கெழு பீடமேல் வெங்கை மாமுகன் வீற்றிருந் தானரோ.

aṅkaṇ mēvum aṇimaṇik kōyiliṉ maṅka lattoṭu vallaiyiṉ ēkiyē ciṅka ēṟṟiṉ ciraṅkeḻu pīṭamēl veṅkai māmukaṉ vīṟṟirun tāṉarō.

Report an error

போந்து பின்னர்ப் பொருவருந் தானவர் வேந்தன் மாமக ளான விசித்திர காந்தி தன்னைக் கருதுநன் னாளினில் ஏந்தல் முன்வரைந் தின்புற மேவினான்.

pōntu piṉṉarp poruvarun tāṉavar vēntaṉ māmaka ḷāṉa vicittira kānti taṉṉaik karutunaṉ ṉāḷiṉil ēntal muṉvarain tiṉpuṟa mēviṉāṉ.

Report an error

விண்ணின் மாந்தர்கள் மேதகு தன்குலம் நண்ணு மாதர்கள் நாகர்தம் மாதர்கள் வண்ண விஞ்சையர் மாதர்க ளாதியாம் எண்ணில் மாதரைப் பின்வரைந் தெய்தினான்.

viṇṇiṉ māntarkaḷ mētaku taṉkulam naṇṇu mātarkaḷ nākartam mātarkaḷ vaṇṇa viñcaiyar mātarka ḷātiyām eṇṇil mātaraip piṉvarain teytiṉāṉ.

Report an error

பொன்ன கர்க்கும் பொலங்கெழு புட்பக மன்ந கர்க்குமவ் வானவர் ஈண்டிய எந்ந கர்க்கும் இலாவளம் எய்திய அந்ந கர்க்கண் அமர்ந்திடல் மேயினான்.

poṉṉa karkkum polaṅkeḻu puṭpaka maṉna karkkumav vāṉavar īṇṭiya enna karkkum ilāvaḷam eytiya anna karkkaṇ amarntiṭal mēyiṉāṉ.

Report an error

சூழும் வானவர் தானவர் துன்னியே தாழ ஏழுல குந்தன தாணையால் வாழி சேர்கொடுங் கோலொடு மன்னுபேர் ஆழி செல்ல அரசுசெய் தானவன்.

cūḻum vāṉavar tāṉavar tuṉṉiyē tāḻa ēḻula kuntaṉa tāṇaiyāl vāḻi cērkoṭuṅ kōloṭu maṉṉupēr āḻi cella aracucey tāṉavaṉ.

Report an error

ஆவுஞ் சங்கமும் அம்புய மும்மலர்க் காவும் மாமணி யுங்கம லாலயத் தேவும் பின்வருந் தேவரும் மாதரும் ஏவல் செய்ய இனிதிருந தானரோ.

āvuñ caṅkamum ampuya mummalark kāvum māmaṇi yuṅkama lālayat tēvum piṉvarun tēvarum mātarum ēval ceyya iṉitiruna tāṉarō.

Report an error

புந்தி மிக்க புகரும் புகருடன் அந்த மற்ற அவுணர்கள் மன்னனும் தந்தி யின்முகத் தானவ னுக்குநன் மந்தி ரத்துணை யாய்அவண் வைகினார்.

punti mikka pukarum pukaruṭaṉ anta maṟṟa avuṇarkaḷ maṉṉaṉum tanti yiṉmukat tāṉava ṉukkunaṉ manti rattuṇai yāyavaṇ vaikiṉār.

Report an error

அன்ன காலை அடுகரி மாமுக மன்னன் முன்வரும் வாசவ னாதியாந் துன்னு வானவர் சூழலை நோக்கியே இன்ன தொன்றை இயம்புதல் மேயினான்.

aṉṉa kālai aṭukari māmuka maṉṉaṉ muṉvarum vācava ṉātiyān tuṉṉu vāṉavar cūḻalai nōkkiyē iṉṉa toṉṟai iyamputal mēyiṉāṉ.

Report an error

வைக லும்மிவண் வந்துழி நுங்கள்தம் மொய்கொள் சென்னியில் மும்முறை தாக்கியே கைகள் காதுறக் கால்கொடு தாழ்ந்தெழீஇச் செய்க நம்பணி தேவர்கள் நீர்என்றான்.

vaika lummivaṇ vantuḻi nuṅkaḷtam moykoḷ ceṉṉiyil mummuṟai tākkiyē kaikaḷ kātuṟak kālkoṭu tāḻnteḻīic ceyka nampaṇi tēvarkaḷ nīreṉṟāṉ.

Report an error

அன்ன தோதலும் அண்டர்கள் யாவரும் மன்னன் தானும் மறுப்பதை அஞ்சியே முன்னரே நின்று மொய்ம்புடைத் தோல்முகன் சொன்ன தோர்புன் தொழின்முறை ஆற்றினார்.

aṉṉa tōtalum aṇṭarkaḷ yāvarum maṉṉaṉ tāṉum maṟuppatai añciyē muṉṉarē niṉṟu moympuṭait tōlmukaṉ coṉṉa tōrpuṉ toḻiṉmuṟai āṟṟiṉār.

Report an error

எழிலி யூர்தியும் ஏனைய வானவர் குழுவி னோர்களுங் குஞ்சர மாமுகத் தழித கன்பணி அல்கலும் ஆற்றியே பழியெ னும்பர வைப்படிந் தாரரோ.

eḻili yūrtiyum ēṉaiya vāṉavar kuḻuvi ṉōrkaḷuṅ kuñcara māmukat taḻita kaṉpaṇi alkalum āṟṟiyē paḻiye ṉumpara vaippaṭin tārarō.

Report an error

கரிமு கத்துக் கயவன தேவலால் பருவ ரற்பழி மூழ்குறு பான்மையைச் சுரர்க ளுக்கிறை தொல்லைவி ரிஞ்சன்மால் இருவ ருக்கும் இயம்பி இரங்கினான்.

karimu kattuk kayavaṉa tēvalāl paruva raṟpaḻi mūḻkuṟu pāṉmaiyaic curarka ḷukkiṟai tollaivi riñcaṉmāl iruva rukkum iyampi iraṅkiṉāṉ.

Report an error

இரங்கும் எல்லையில் இந்திர முற்றுளந் தரங்க மெய்தித் தளர்ந்திடல் நீயெனா உரங்கொள் பான்மை உணர்த்தி அவனொடும் புரங்கள் அட்டவன் பொற்றையிற் போயினார்.

iraṅkum ellaiyil intira muṟṟuḷan taraṅka meytit taḷarntiṭal nīyeṉā uraṅkoḷ pāṉmai uṇartti avaṉoṭum puraṅkaḷ aṭṭavaṉ poṟṟaiyiṟ pōyiṉār.

Report an error

மாகர் யாவரும் வாசவ னும்புடை யாக வந்திட அம்புயன் மாலுமை பாகன் மேய பனிவரைக் கோயிலுள் ஏகி னார்நந்தி எந்தை விடுப்பவே.

mākar yāvarum vācava ṉumpuṭai yāka vantiṭa ampuyaṉ mālumai pākaṉ mēya paṉivaraik kōyiluḷ ēki ṉārnanti entai viṭuppavē.

Report an error

கண்டு நாதன் கழலிணை தாழ்ந்துநல் தொண்டு காணத் துதித்தலும் ஆங்கவன் அண்ட ரோடும் அலமரல் எய்தியே வண்டு ழாய்முடி வந்ததென் னென்னவே.

kaṇṭu nātaṉ kaḻaliṇai tāḻntunal toṇṭu kāṇat tutittalum āṅkavaṉ aṇṭa rōṭum alamaral eytiyē vaṇṭu ḻāymuṭi vantateṉ ṉeṉṉavē.

Report an error

ஆனதோர் பொழுதின்மால் அரனை நோக்கியோர் தானவன் கயமுகன் என்னுந் தன்மையான் வானவர் தமையெலாம் வருத்தி னானவன் ஊனமில் தவம்புரிந் துடைய வன்மையால்.

āṉatōr poḻutiṉmāl araṉai nōkkiyōr tāṉavaṉ kayamukaṉ eṉṉun taṉmaiyāṉ vāṉavar tamaiyelām varutti ṉāṉavaṉ ūṉamil tavampurin tuṭaiya vaṉmaiyāl.

Report an error

வெங்கய முகத்தினன் விறலை நீக்குதல் எங்களுக் கரியதால் எவர்க்கும் ஆதியாம் புங்கவ நினக்கது பொருளன் றாகையால் அங்கவன் உயிர்தொலைத் தருள வேண்டுநீ.

veṅkaya mukattiṉaṉ viṟalai nīkkutal eṅkaḷuk kariyatāl evarkkum ātiyām puṅkava niṉakkatu poruḷaṉ ṟākaiyāl aṅkavaṉ uyirtolait taruḷa vēṇṭunī.

Report an error

என்றுரை செய்தலும் ஈசன் யாமிவண் ஒன்றொரு புதல்வனை யுதவித் தோல்முக வன்றிறல் அவுணனை மாய்த்து மற்றவன் வென்றிகொண் டேகுவான் விடுத்துமேல் என்றான்.

eṉṟurai ceytalum īcaṉ yāmivaṇ oṉṟoru putalvaṉai yutavit tōlmuka vaṉṟiṟal avuṇaṉai māyttu maṟṟavaṉ veṉṟikoṇ ṭēkuvāṉ viṭuttumēl eṉṟāṉ.

Report an error

வீடிய பற்றுடை விரதர்க் கென்னினும் நாடிய அரியவன் நவின்ற வாய்மையைச் சூடினர் சென்னிமேல் தொழுத கையராய் ஆடினர் பாடினர் அமரர் யாருமே.

vīṭiya paṟṟuṭai viratark keṉṉiṉum nāṭiya ariyavaṉ naviṉṟa vāymaiyaic cūṭiṉar ceṉṉimēl toḻuta kaiyarāy āṭiṉar pāṭiṉar amarar yārumē.

Report an error

பாங்கரில் அனையரைப் பரிந்து நோக்கியே ஈங்கினி நும்பதிக் கேகு வீரென ஆங்கவர் எம்பிரான் அடியில் வீழ்ந்தனர் வீங்குறு காதலால் விடைகொண் டேகினார்.

pāṅkaril aṉaiyaraip parintu nōkkiyē īṅkiṉi numpatik kēku vīreṉa āṅkavar empirāṉ aṭiyil vīḻntaṉar vīṅkuṟu kātalāl viṭaikoṇ ṭēkiṉār.

Report an error

ஏகிய எல்லையில் எண்ணி லாவிதி சேகரம் மிலைச்சிய சென்னி வானவன் பாகமுற் றுலகெலாம் பயந்த சுந்தரத் தோகையை நோக்கியே இதனைச் சொல்லுவான்.

ēkiya ellaiyil eṇṇi lāviti cēkaram milaicciya ceṉṉi vāṉavaṉ pākamuṟ ṟulakelām payanta cuntarat tōkaiyai nōkkiyē itaṉaic colluvāṉ.

Report an error

யாம்பெரு விருபபுடன் இயற்று வித்திடுந் தேம்படு தருவனந் தெரித்துஞ் செல்கென வாம்பரி சருளினை வருவன் ஆங்கெனாக் காம்படு தோளுடைக் கவுரி கூறினாள்.

yāmperu virupapuṭaṉ iyaṟṟu vittiṭun tēmpaṭu taruvaṉan terittuñ celkeṉa vāmpari caruḷiṉai varuvaṉ āṅkeṉāk kāmpaṭu tōḷuṭaik kavuri kūṟiṉāḷ.

Report an error

ஆயது கேட்டனன் அகிலம் யாவையுந் தாயென அருளுமத் தையல் தன்னொடுஞ் சேயுயர் விசும்பினைச் செறிதண் சோலையில் போயினன் மறைக்கெலாம் பொருள தாயினான்.

āyatu kēṭṭaṉaṉ akilam yāvaiyun tāyeṉa aruḷumat taiyal taṉṉoṭuñ cēyuyar vicumpiṉaic ceṟitaṇ cōlaiyil pōyiṉaṉ maṟaikkelām poruḷa tāyiṉāṉ.

Report an error

நீணுதற் கனல்விழி நிமலத் தேவெனுந் தாணுவைப் போலவே தனது பாதமுஞ் சேணுடைச் சென்னியுந் தேவர் யாரினுங் காணுதற் கரியதக் கடிகொள் சோலையே.

nīṇutaṟ kaṉalviḻi nimalat tēveṉun tāṇuvaip pōlavē taṉatu pātamuñ cēṇuṭaic ceṉṉiyun tēvar yāriṉuṅ kāṇutaṟ kariyatak kaṭikoḷ cōlaiyē.

Report an error

தேசுடைத் தருநிரை திருமென் போதொடு பாசடைத் தொகுதியும் பரித்து நிற்பன ஈசனுக் கருச்சனை இயல்பின் ஆற்றிட நேசமுற் றுடையவர் நிலைய தொக்குமால்.

tēcuṭait tarunirai tirumeṉ pōtoṭu pācaṭait tokutiyum parittu niṟpaṉa īcaṉuk karuccaṉai iyalpiṉ āṟṟiṭa nēcamuṟ ṟuṭaiyavar nilaiya tokkumāl.

Report an error

பாலுற வருவதோர் பரைதன் மெய்யொளி மேலுறு பைங்கொடி வேத நாயகன் ஏலுறு தாருக வனத்தில் எய்தமுன் மாலுறு மங்கையர் வடிவம் போலுமால்.

pāluṟa varuvatōr paraitaṉ meyyoḷi mēluṟu paiṅkoṭi vēta nāyakaṉ ēluṟu tāruka vaṉattil eytamuṉ māluṟu maṅkaiyar vaṭivam pōlumāl.

Report an error

கொடிகளுந் தருக்களின் குழுவு மாதுடன் அடிகளங் கேகலும் அனையர் செம்மையுஞ் சுடர்கெழு பசுமையந் துவன்றி அன்னதோர் வடிவுகொண் டிருந்திடும் வண்ணம் போலுமால்.

koṭikaḷun tarukkaḷiṉ kuḻuvu mātuṭaṉ aṭikaḷaṅ kēkalum aṉaiyar cemmaiyuñ cuṭarkeḻu pacumaiyan tuvaṉṟi aṉṉatōr vaṭivukoṇ ṭiruntiṭum vaṇṇam pōlumāl.

Report an error

பூந்தரு நிரைகளில் பொருவில் கோட்டிடைச் சேந்திடு நனைபல திகழ்வ பார்ப்பதி காந்தனை அன்பொடு கண்டு பாங்குளார் ஏந்திய தீபிகை என்ன லானவே.

pūntaru niraikaḷil poruvil kōṭṭiṭaic cēntiṭu naṉaipala tikaḻva pārppati kāntaṉai aṉpoṭu kaṇṭu pāṅkuḷār ēntiya tīpikai eṉṉa lāṉavē.

Report an error

வான்தரு ஓர்சில மலரின் கண்டொறுந் தேன்றுளி விடுவன சிவனைக் கண்டுழி ஆன்றதோர் அன்பினார் அகம்நெ கிழ்ந்துகட் கான்றதோர் புனலெனக் கவின்று காட்டிய.

vāṉtaru ōrcila malariṉ kaṇṭoṟun tēṉṟuḷi viṭuvaṉa civaṉaik kaṇṭuḻi āṉṟatōr aṉpiṉār akamne kiḻntukaṭ kāṉṟatōr puṉaleṉak kaviṉṟu kāṭṭiya.

Report an error

வண்தரு ஓர்சில மருப்பில் வானிறங் கொண்டிடு மதுமலர் குழுமி யுற்றன எண்டிரு மலையிடை வீழுங் கங்கையில் தண்டுளி சிதறிய தன்மை போன்றவே.

vaṇtaru ōrcila maruppil vāṉiṟaṅ koṇṭiṭu matumalar kuḻumi yuṟṟaṉa eṇṭiru malaiyiṭai vīḻuṅ kaṅkaiyil taṇṭuḷi citaṟiya taṉmai pōṉṟavē.

Report an error

கற்றையஞ் சுடர்மணி கனகம் ஏனைய பிற்றையென் னாதருள் பெரியர் வண்மைபோல் மற்றவ ணுள்ளபவன் மரமுந் தம்பயன் எற்றையும் உலப்புறா தீகை சான்றவே.

kaṟṟaiyañ cuṭarmaṇi kaṉakam ēṉaiya piṟṟaiyeṉ ṉātaruḷ periyar vaṇmaipōl maṟṟava ṇuḷḷapavaṉ maramun tampayaṉ eṟṟaiyum ulappuṟā tīkai cāṉṟavē.

Report an error

காவதன் இயல்பினைக் கண்டு தன்னொரு தேவியொ டேயருள் செய்து சிற்பரன் ஆவியுள் ளுணர்வென அதனுள் வைகுமோர் ஓவிய மன்றிடை ஒல்லை ஏகினான்.

kāvataṉ iyalpiṉaik kaṇṭu taṉṉoru tēviyo ṭēyaruḷ ceytu ciṟparaṉ āviyuḷ ḷuṇarveṉa ataṉuḷ vaikumōr ōviya maṉṟiṭai ollai ēkiṉāṉ.

Report an error

எண்டகு பெருநசை எய்தி ஐம்புலன் விண்டிடல் இன்றியே விழியின் பாற்படக் கண்டனள் கவுரிஅக் கடிகொள் மண்டபங் கொண்டிடும் ஓவியக் கோலம் யாவுமே.

eṇṭaku perunacai eyti aimpulaṉ viṇṭiṭal iṉṟiyē viḻiyiṉ pāṟpaṭak kaṇṭaṉaḷ kavuriak kaṭikoḷ maṇṭapaṅ koṇṭiṭum ōviyak kōlam yāvumē.

Report an error

பாங்கரில் வருவதொர் பரமன் ஆணையால் ஆங்கதன் நடுவணில் ஆதி யாகியே ஓங்கிய தனியெழுத் தொன்றி ரண்டதாய்த் தூங்குகைம் மலைகளில் தோன்றிற் றென்பவே.

pāṅkaril varuvator paramaṉ āṇaiyāl āṅkataṉ naṭuvaṇil āti yākiyē ōṅkiya taṉiyeḻut toṉṟi raṇṭatāyt tūṅkukaim malaikaḷil tōṉṟiṟ ṟeṉpavē.

Report an error

அன்னவை உமையவள் காண ஆங்கவை முன்னுறு புணர்ச்சியின் முயற்சி செய்தலும் என்னைகொல் இதுவென எண்ணித் தன்னொடு மன்னிய முதல்வனை வணங்கிக் கூறுவாள்.

aṉṉavai umaiyavaḷ kāṇa āṅkavai muṉṉuṟu puṇarcciyiṉ muyaṟci ceytalum eṉṉaikol ituveṉa eṇṇit taṉṉoṭu maṉṉiya mutalvaṉai vaṇaṅkik kūṟuvāḷ.

Report an error

மூலமாம் எழுத்திவை முயங்கி மால்கரிக் கோலமாய்ப் புணர்வதென் கூறு கென்றலும் ஏலவார் கருங்குழல் இறைவி கேளென ஆலமார் களத்தினன் அருள்செய் கின்றனன்.

mūlamām eḻuttivai muyaṅki mālkarik kōlamāyp puṇarvateṉ kūṟu keṉṟalum ēlavār karuṅkuḻal iṟaivi kēḷeṉa ālamār kaḷattiṉaṉ aruḷcey kiṉṟaṉaṉ.

Report an error

முன்புநீ காண்டலின் மூலமாய் உடையதோர் மன்பெருந் தொல்பொறி மருவியீர் உருவுறீஇ அன்பினால் ஆனைபோற் புணருமால் ஆகையால் நின்பெருந் தகவினை நினைகிலாய் நீயுமே.

muṉpunī kāṇṭaliṉ mūlamāy uṭaiyatōr maṉperun tolpoṟi maruviyīr uruvuṟīi aṉpiṉāl āṉaipōṟ puṇarumāl ākaiyāl niṉperun takaviṉai niṉaikilāy nīyumē.

Report an error

காட்சியால் இதுசெயுங் காரணம் பெற்றநின் மாட்சிதான் யாமலான் மற்றியார் உணர்குவார் ஆட்சியாய் உற்றதொல் அருமறைக் காயினுஞ் சேட்செலா நிற்குநின் திருவருட் செய்கையே.

kāṭciyāl ituceyuṅ kāraṇam peṟṟaniṉ māṭcitāṉ yāmalāṉ maṟṟiyār uṇarkuvār āṭciyāy uṟṟatol arumaṟaik kāyiṉuñ cēṭcelā niṟkuniṉ tiruvaruṭ ceykaiyē.

Report an error

என்னவே முகமனால் எம்பிரான் அம்பிகை தன்னொடே மொழியஅத் தந்தியும் பிடியுமாய்த் துன்னியே புணர்வுறுந் தூயசெய் தொழில்விடா முன்னமே போன்றதால் முடிவிலாக் குடிலையே.

eṉṉavē mukamaṉāl empirāṉ ampikai taṉṉoṭē moḻiyaat tantiyum piṭiyumāyt tuṉṉiyē puṇarvuṟun tūyacey toḻilviṭā muṉṉamē pōṉṟatāl muṭivilāk kuṭilaiyē.

Report an error

அக்கணத் தாயிடை ஐங்கரத் தவன்அருள் முக்கண்நால் வாயினான் மும்மதத் தாறுபாய் மைக்கருங் களிறெனும் மாமுகத் தவன்மதிச் செக்கர்வார் சடையன்ஓர் சிறுவன்வந் தருளினான்.

akkaṇat tāyiṭai aiṅkarat tavaṉaruḷ mukkaṇnāl vāyiṉāṉ mummatat tāṟupāy maikkaruṅ kaḷiṟeṉum māmukat tavaṉmatic cekkarvār caṭaiyaṉōr ciṟuvaṉvan taruḷiṉāṉ.

Report an error

ஒருமையால் உணருவோர் உணர்வினுக் குணர்வதாம் பெருமைதயான் எங்கணும் பிரிவரும் பெற்றியான் அருமையான் ஏவரும் அடிதொழுந் தன்மையான் இருமையாம் ஈசனே என்னநின் றருளுவான்.

orumaiyāl uṇaruvōr uṇarviṉuk kuṇarvatām perumaitayāṉ eṅkaṇum pirivarum peṟṟiyāṉ arumaiyāṉ ēvarum aṭitoḻun taṉmaiyāṉ irumaiyām īcaṉē eṉṉaniṉ ṟaruḷuvāṉ.

Report an error

மருளறப் புகலுநான் மறைகளில் திகழுமெய்ப் பொருளெனப் படுமவன் புவனமுற் றவர்கள்தம் இருளறுத் தவர்மனத் திடர்தவிர்த் தருளவோர் அருளுருத் தனைஎடுத் தவதரித் துளனவன்.

maruḷaṟap pukalunāṉ maṟaikaḷil tikaḻumeyp poruḷeṉap paṭumavaṉ puvaṉamuṟ ṟavarkaḷtam iruḷaṟut tavarmaṉat tiṭartavirt taruḷavōr aruḷurut taṉaieṭut tavatarit tuḷaṉavaṉ.

Report an error

வந்துமுன் னிருவர்தம் மலரடித் தலமிசைச் சிந்தையார் வத்தொடுஞ சென்னிதாழ்த் திடுதலுந் தந்தையுந் தாயுமுன் தழுவிமார் புறவணைத் தந்தமில் கருணைசெய் தருளினார் அவ்வழி.

vantumuṉ ṉiruvartam malaraṭit talamicaic cintaiyār vattoṭuña ceṉṉitāḻt tiṭutalun tantaiyun tāyumuṉ taḻuvimār puṟavaṇait tantamil karuṇaicey taruḷiṉār avvaḻi.

Report an error

என்னரே யாயினும் யாவதொன் றெண்ணுதல் முன்னரே உனதுதாள் முடியுறப் பணிவரேல் அன்னர்தஞ் சிந்தைபோல் ஆக்குதி அலதுனை உன்னலார் செய்கையை ஊறுசெய் திடுதிநீ.

eṉṉarē yāyiṉum yāvatoṉ ṟeṇṇutal muṉṉarē uṉatutāḷ muṭiyuṟap paṇivarēl aṉṉartañ cintaipōl ākkuti alatuṉai uṉṉalār ceykaiyai ūṟucey tiṭutinī.

Report an error

சேயநன் மலர்மிசைத் திசைமுகன் மால்முதல் ஆயபண் ணவர்தமக் காருயிர்த் தொகையினுக் கேயபல் கணவருக் கெத்திறத் தோர்க்குநீ நாயகம் புரிதியால் நல்லருட் டன்மையால்.

cēyanaṉ malarmicait ticaimukaṉ mālmutal āyapaṇ ṇavartamak kāruyirt tokaiyiṉuk kēyapal kaṇavaruk kettiṟat tōrkkunī nāyakam puritiyāl nallaruṭ ṭaṉmaiyāl.

Report an error

கானுறுங் கரடவெங் கயமுகத் தவனெனுந் தானவன் வன்மையைச் சாடியே தண்டுழாய் வானவன் சிறுமையும் மாற்றியே வருகெனா ஆனையின் முகவனுக் கைம்முகன் அருள்செய்தான்.

kāṉuṟuṅ karaṭaveṅ kayamukat tavaṉeṉun tāṉavaṉ vaṉmaiyaic cāṭiyē taṇṭuḻāy vāṉavaṉ ciṟumaiyum māṟṟiyē varukeṉā āṉaiyiṉ mukavaṉuk kaimmukaṉ aruḷceytāṉ.

Report an error

மோனமே குறியதா முதலெழுத் தருளிய ஞானமா மதலைபால் நண்ணவே பூதவெஞ் சேனையா யினஅருள் செய்துசிற் பரையொடும் ஆனைமா முகனொடும் அமலன்மீண் டருளினான்.

mōṉamē kuṟiyatā mutaleḻut taruḷiya ñāṉamā matalaipāl naṇṇavē pūtaveñ cēṉaiyā yiṉaaruḷ ceytuciṟ paraiyoṭum āṉaimā mukaṉoṭum amalaṉmīṇ ṭaruḷiṉāṉ.

Report an error

புங்கவர்க் கிறைவனாம் புதல்வனை நோக்கிடா நங்கடைத் தலையினில் நாயகம் புரிகெனா அங்கருத் தியொடிருத் தினன்அணிக் கோயிலுட் சங்கரக் கடவுள்சுந் தரியொடு மருவினான்.

puṅkavark kiṟaivaṉām putalvaṉai nōkkiṭā naṅkaṭait talaiyiṉil nāyakam purikeṉā aṅkarut tiyoṭirut tiṉaṉaṇik kōyiluṭ caṅkarak kaṭavuḷcun tariyoṭu maruviṉāṉ.

Report an error

தந்திமா முகமுடைத் தனயன்அங் கணுகியே முந்துபா ரிடமெலாம் மொய்த்துமுன் சூழ்தர நந்திவந் தனைசெய நான்முகன் முதலினோர் வந்துவந் தடிதொழ மகிழ்வொடே வைகினான்.

tantimā mukamuṭait taṉayaṉaṅ kaṇukiyē muntupā riṭamelām moyttumuṉ cūḻtara nantivan taṉaiceya nāṉmukaṉ mutaliṉōr vantuvan taṭitoḻa makiḻvoṭē vaikiṉāṉ.

Report an error

அன்னதற் பின்னரே ஆயிரம் பெயருடைப் பொன்னுலாம் நேமியான் புனிதனைக் காணிய மின்னுதண் சுடர்விடும் வெள்ளிமால் வரைமிசைக் துன்னினான் ஆலயச் சூழல்முன் அணுகினான்.

aṉṉataṟ piṉṉarē āyiram peyaruṭaip poṉṉulām nēmiyāṉ puṉitaṉaik kāṇiya miṉṉutaṇ cuṭarviṭum veḷḷimāl varaimicaik tuṉṉiṉāṉ ālayac cūḻalmuṉ aṇukiṉāṉ.

Report an error

அந்தியார் சடைமுடி அண்ணல்தன் அருளினால் நந்திதே வுய்த்திட நங்கையோர் பங்கனாம் எந்தைபா லெய்தியே இணைமலர்த் தாள்தொழாப் புந்தியார் வத்தொடும் போற்றிசெய் தருளவே.

antiyār caṭaimuṭi aṇṇaltaṉ aruḷiṉāl nantitē vuyttiṭa naṅkaiyōr paṅkaṉām entaipā leytiyē iṇaimalart tāḷtoḻāp puntiyār vattoṭum pōṟṟicey taruḷavē.

Report an error

நிருத்தனவ் விடைதனில் நேமி யான்தனை இருத்தியென் றருள்புரிந் திடத்தின் மேவிய ஒருத்தியை நோக்கிஒன் றுரைப்பங் கேளெனா அருத்திசெய் ஆடல்ஒன் றருளிற் கூறுவான்.

niruttaṉav viṭaitaṉil nēmi yāṉtaṉai iruttiyeṉ ṟaruḷpurin tiṭattiṉ mēviya oruttiyai nōkkioṉ ṟuraippaṅ kēḷeṉā arutticey āṭaloṉ ṟaruḷiṟ kūṟuvāṉ.

Report an error

சூதனை எம்மொடே பொருதி தோற்றனை ஆதியேல் நீபுனை அணிகள் யாவையும் ஈதியால் வென்றனை என்னின் எம்மொரு பாதியாஞ் சசிமுதற் கலவுங் கோடியால்.

cūtaṉai emmoṭē poruti tōṟṟaṉai ātiyēl nīpuṉai aṇikaḷ yāvaiyum ītiyāl veṉṟaṉai eṉṉiṉ emmoru pātiyāñ cacimutaṟ kalavuṅ kōṭiyāl.

Report an error

என்னலும் உமையவள் இசைவு கோடலும் அன்னதொ ரெல்லையின் அரியை நோக்கியே தன்னிகர் இல்லவன் இதற்குச் சான்றென மன்னினை இருத்தியான் மாயநீ என்றான்.

eṉṉalum umaiyavaḷ icaivu kōṭalum aṉṉato rellaiyiṉ ariyai nōkkiyē taṉṉikar illavaṉ itaṟkuc cāṉṟeṉa maṉṉiṉai iruttiyāṉ māyanī eṉṟāṉ.

Report an error

பற்றிகல் இன்றியே பழவி னைப்பயன் முற்றுணர்ந் துயிர்களை முறையின் வைப்பவன் மற்றிது புகறலும் வனசக் கண்ணினான் நற்றிறம் இஃதென நவின்று வைகினான்.

paṟṟikal iṉṟiyē paḻavi ṉaippayaṉ muṟṟuṇarn tuyirkaḷai muṟaiyiṉ vaippavaṉ maṟṟitu pukaṟalum vaṉacak kaṇṇiṉāṉ naṟṟiṟam iḵteṉa naviṉṟu vaikiṉāṉ.

Report an error

இந்தவா றாயிடை நிகழும் எல்லையில் சுந்தரன் முதலிய உழையர் சுற்றினோர் அந்தமில் பெருங்குணத் தாதி ஏவலில் தந்தனர் காசொடு பலகை தன்னையே.

intavā ṟāyiṭai nikaḻum ellaiyil cuntaraṉ mutaliya uḻaiyar cuṟṟiṉōr antamil peruṅkuṇat tāti ēvalil tantaṉar kācoṭu palakai taṉṉaiyē.

Report an error

அதுபொழு தண்ணலும் அரியை நோக்கியிம் முதிர்தரு கருவியை முறையின் வைக்கெனக் கதுமென வைத்தலுங் கவுரி நீநமக் கெதிருறு கென்றுமுன் னிருத்தி னானரோ.

atupoḻu taṇṇalum ariyai nōkkiyim mutirtaru karuviyai muṟaiyiṉ vaikkeṉak katumeṉa vaittaluṅ kavuri nīnamak ketiruṟu keṉṟumuṉ ṉirutti ṉāṉarō.

Report an error

கவற்றினை முன்னரே உய்ப்பக் கண்ணுதல் அவற்றினைப் பின்னுற அவளும் உய்த்தனள் தவற்றியல் பல்லதோர் வல்ல சாரியால் எவற்றினும் மேலையோர் இனிதின் நாடினார்.

kavaṟṟiṉai muṉṉarē uyppak kaṇṇutal avaṟṟiṉaip piṉṉuṟa avaḷum uyttaṉaḷ tavaṟṟiyal pallatōr valla cāriyāl evaṟṟiṉum mēlaiyōr iṉitiṉ nāṭiṉār.

Report an error

பஞ்சென வுரைசெய்வர் பாலை என்பர்ஈர் அஞ்சென மொழிவர் அஞ்சென்பர் அன்றியுந் துஞ்சலின் நடம்என்பர் துருத்தியீ தென்பர் விஞ்சிய மகிழ்வொடு வெடியென் றோதுவார்.

pañceṉa vuraiceyvar pālai eṉparīr añceṉa moḻivar añceṉpar aṉṟiyun tuñcaliṉ naṭameṉpar turuttiyī teṉpar viñciya makiḻvoṭu veṭiyeṉ ṟōtuvār.

Report an error

அடியிது பொட்டைஈ தென்பர் அஃதென முடிவில குழூஉக்குறி முறையின் முந்துறக் கடிதினில் கழறினர் கவறு சிந்தினார் நொடிதரு கருவிகள் எதிரிகள் நூக்கினார்.

aṭiyitu poṭṭaiī teṉpar aḵteṉa muṭivila kuḻūukkuṟi muṟaiyiṉ muntuṟak kaṭitiṉil kaḻaṟiṉar kavaṟu cintiṉār noṭitaru karuvikaḷ etirikaḷ nūkkiṉār.

Report an error

ஏற்றா னவன்எய்திய இன்னருள் யாவ தேயோ தேற்றாம் அஃதியார்க்கு மளப்பருஞ செய்கை யாலே மேற்றான் எதிராவுடன் ஆடிய மெல்லி யற்குத் தோற்றான் நெடுமாலயன் நாடவுந் தோற்றி லாதான்.

ēṟṟā ṉavaṉeytiya iṉṉaruḷ yāva tēyō tēṟṟām aḵtiyārkku maḷapparuña ceykai yālē mēṟṟāṉ etirāvuṭaṉ āṭiya melli yaṟkut tōṟṟāṉ neṭumālayaṉ nāṭavun tōṟṟi lātāṉ.

Report an error

ஒன்றாய பரஞ்சுட ரோன்உமை தன்னை நோக்கி நன்றா யதுநின் வலியென்று நகைத்து நம்மை வென்றா யலைதோற் றனைமுன்னர் விளம்பு மாற்றால் நின்றா ரொடுபூணும் எமக்கினி நேர்தி என்றான்.

oṉṟāya parañcuṭa rōṉumai taṉṉai nōkki naṉṟā yatuniṉ valiyeṉṟu nakaittu nammai veṉṟā yalaitōṟ ṟaṉaimuṉṉar viḷampu māṟṟāl niṉṟā roṭupūṇum emakkiṉi nērti eṉṟāṉ.

Report an error

மூன்றாம் உலகங்களும் ஆருயிர் முற்று முன்னம் ஈன்றாள் அதுகேட்டலுந் தான்இகல் ஆடல் அஞ்சி வான்றா வியபே ரடிமாயனை வல்லை நோக்கிச் சான்றா மெனவை கினைநீயிது சாற்று கென்றாள்.

mūṉṟām ulakaṅkaḷum āruyir muṟṟu muṉṉam īṉṟāḷ atukēṭṭalun tāṉikal āṭal añci vāṉṟā viyapē raṭimāyaṉai vallai nōkkic cāṉṟā meṉavai kiṉainīyitu cāṟṟu keṉṟāḷ.

Report an error

சொல்லும் அளவிற் சுடர்நேமியன் சூது டைப்போர் வெல்லுந் தகையோன் பரனென்று விளம்ப லோடும் நல்லுண்மை சொற்றாய் திறநன்றிது நன்றி தென்னாச் செல்லுண்ட ஐம்பால் உமைஆற்றச் சினம்பு ரிந்தாள்.

collum aḷaviṟ cuṭarnēmiyaṉ cūtu ṭaippōr vellun takaiyōṉ paraṉeṉṟu viḷampa lōṭum nalluṇmai coṟṟāy tiṟanaṉṟitu naṉṟi teṉṉāc celluṇṭa aimpāl umaiāṟṟac ciṉampu rintāḷ.

Report an error

பாராயலை கண்ணனு மாயினை பாலி னுற்றாய் தேராதது ஒன்றிலை யாவருந் தேர ஒண்ணாப் பேராதி யோன்நவை கூறினும்நீயிது பேச லாமோ காராமெய் என்பர் மனமுங்கரி யாய்கொல் மன்னோ.

pārāyalai kaṇṇaṉu māyiṉai pāli ṉuṟṟāy tērātatu oṉṟilai yāvarun tēra oṇṇāp pērāti yōṉnavai kūṟiṉumnīyitu pēca lāmō kārāmey eṉpar maṉamuṅkari yāykol maṉṉō.

Report an error

ஏம்பா லிதுசொற் றனைஆதலின் என்று மாயை ஓம்பா வருவா யுறுகைதவத் தூற்ற மிக்காய் பாம்பாதி யென்னப் பகர்ந்தாள் பகர்கின்ற எல்லை ஆம்பால் உருவம் அஃதங்கண் அடைந்த தன்றே.

ēmpā litucoṟ ṟaṉaiātaliṉ eṉṟu māyai ōmpā varuvā yuṟukaitavat tūṟṟa mikkāy pāmpāti yeṉṉap pakarntāḷ pakarkiṉṟa ellai āmpāl uruvam aḵtaṅkaṇ aṭainta taṉṟē.

Report an error

அவ்வா றவன்பால் அணைகின்றதொர் போழ்தில் ஆழிக் கைவா னவனும் அதுகண்டு கவற்சி எய்திச் செவ்வான் உறழும் முடியோன்அடி சென்று தாழா எவ்வா றெனக்கிவ் வுருநீங்கும் இசைத்தி என்றான்.

avvā ṟavaṉpāl aṇaikiṉṟator pōḻtil āḻik kaivā ṉavaṉum atukaṇṭu kavaṟci eytic cevvāṉ uṟaḻum muṭiyōṉaṭi ceṉṟu tāḻā evvā ṟeṉakkiv vurunīṅkum icaitti eṉṟāṉ.

Report an error

காலாய் வெளியாய்ப் புனலாய்க் கனலோடு பாராய் மேலாகி யுள்ள பொருளாய்எவற் றிற்கும் வித்தாய் நாலாய வேதப் பொருளாகி நண்ணுற்ற நாதன் மாலா யவனுக் கிஃதொன்று வகுத்து ரைப்பான்.

kālāy veḷiyāyp puṉalāyk kaṉalōṭu pārāy mēlāki yuḷḷa poruḷāyevaṟ ṟiṟkum vittāy nālāya vētap poruḷāki naṇṇuṟṟa nātaṉ mālā yavaṉuk kiḵtoṉṟu vakuttu raippāṉ.

Report an error

என்பால் வருமன்பின் இசைத்தனை ஈது பெற்றாய் நின்பால் வருமின் னலைநீக்குவன் நீங்கு கின்றாய் தென்பா லுலகந்தனில் அன்னதொர் தேய மீதில் முன்பால வனம்மென ஒன்றுள மொய்ம்பின் மிக்காய்.

eṉpāl varumaṉpiṉ icaittaṉai ītu peṟṟāy niṉpāl varumiṉ ṉalainīkkuvaṉ nīṅku kiṉṟāy teṉpā lulakantaṉil aṉṉator tēya mītil muṉpāla vaṉammeṉa oṉṟuḷa moympiṉ mikkāy.

Report an error

ஆங்கே யினிநீ கடிதேகினை அன்ன கானில் பாங்கே ஒருதொன்மரம் நின்றது பார்த்த துண்டே ஊங்கே பராரையின் மேயபொந் தொன்றி னூடு தீங்கே குறப்போய்ப் பெருமாதவஞ செய்து சேர்தி.

āṅkē yiṉinī kaṭitēkiṉai aṉṉa kāṉil pāṅkē orutoṉmaram niṉṟatu pārtta tuṇṭē ūṅkē parāraiyiṉ mēyapon toṉṟi ṉūṭu tīṅkē kuṟappōyp perumātavaña ceytu cērti.

Report an error

அஞ்சேல் அவண்நீ உறைகின்றதொர் காலை யானே எஞ்சே யவனாங் கயமாமுகன் எய்து வானச் செஞ்சே வகனுக் கெதிர்கொண்டனை சென்று காண்டி மஞ்சே யனையாய் உனக்கிவ்வுரு மாறும் அன்றே.

añcēl avaṇnī uṟaikiṉṟator kālai yāṉē eñcē yavaṉāṅ kayamāmukaṉ eytu vāṉac ceñcē vakaṉuk ketirkoṇṭaṉai ceṉṟu kāṇṭi mañcē yaṉaiyāy uṉakkivvuru māṟum aṉṟē.

Report an error

என்னுமள வில்தொழுதி றைஞ்சிஇனி தேத்தி அன்னதொர் வனத்திடை அமர்ந்ததொன் மரத்தில் துன்னுவன் எனக்கடிது சொல்லுதலும் யார்க்கும் முன்னவ னுமேகென முராரியை விடுத்தான்.

eṉṉumaḷa viltoḻuti ṟaiñciiṉi tētti aṉṉator vaṉattiṭai amarntatoṉ marattil tuṉṉuvaṉ eṉakkaṭitu collutalum yārkkum muṉṉava ṉumēkeṉa murāriyai viṭuttāṉ.

Report an error

விட்டிடுத லுங்கயிலை நீங்கினன் விரைந்தே கட்டழகின் மேதகைய காமனது தாதை சிட்டர்கள் பயின்றுறை தெனாதுபுலம நண்ணி மட்டொழுகு தொன்மர வனத்தினிடை உற்றான்.

viṭṭiṭuta luṅkayilai nīṅkiṉaṉ viraintē kaṭṭaḻakiṉ mētakaiya kāmaṉatu tātai ciṭṭarkaḷ payiṉṟuṟai teṉātupulama naṇṇi maṭṭoḻuku toṉmara vaṉattiṉiṭai uṟṟāṉ.

Report an error

நன்மதி யுடைப்புலவர் நால்வர்களும் உய்யச் சின்மயம் உணர்த்தியருள் தேவன்அமர் தாருத் தன்மையது பெற்றுநனி தண்ணிழல் பரப்புந் தொன்மர வியற்கைஅத னிற்சிறிது சொல்வாம்.

naṉmati yuṭaippulavar nālvarkaḷum uyyac ciṉmayam uṇarttiyaruḷ tēvaṉamar tārut taṉmaiyatu peṟṟunaṉi taṇṇiḻal parappun toṉmara viyaṟkaiata ṉiṟciṟitu colvām.

Report an error

பசுந்தழை மிடைந்தஉல வைத்திரள் பரப்பி விசும்பளவு நீடியுயர் வீழினிரை தூங்கத் தசும்பனைய தீங்கனிகள் தாங்கியது தாளால் வசுந்தரை அளந்தநெடு மாயவனை மானும்.

pacuntaḻai miṭaintaula vaittiraḷ parappi vicumpaḷavu nīṭiyuyar vīḻiṉirai tūṅkat tacumpaṉaiya tīṅkaṉikaḷ tāṅkiyatu tāḷāl vacuntarai aḷantaneṭu māyavaṉai māṉum.

Report an error

அண்டநடு வாயவுல கேழினையும் அந்நாள் உண்டருளி ஒல்லைதனில் ஓர்சிறுவ னாகிப் பண்டுகரி யோன்தயில்கொள் பாசடைகள் தன்பாற் கொண்டவட மன்னதொரு கொள்கைய துடைத்தால்.

aṇṭanaṭu vāyavula kēḻiṉaiyum annāḷ uṇṭaruḷi ollaitaṉil ōrciṟuva ṉākip paṇṭukari yōṉtayilkoḷ pācaṭaikaḷ taṉpāṟ koṇṭavaṭa maṉṉatoru koḷkaiya tuṭaittāl.

Report an error

மழைத்தபசு மேனியது மாதிர வரைப்பில் விழுத்தகைய வீழினிரை வீசுவட தாருத் தழைக்குல மருப்புமிசை தாங்கியிடை தூங்கும் புழைக்கைகொடு மால்களிறு நாடுகரி போலும்.

maḻaittapacu mēṉiyatu mātira varaippil viḻuttakaiya vīḻiṉirai vīcuvaṭa tārut taḻaikkula maruppumicai tāṅkiyiṭai tūṅkum puḻaikkaikoṭu mālkaḷiṟu nāṭukari pōlum.

Report an error

பாசடை தொடுக்கப்பட லைப்பழு மரத்தின் வீசிநிமிர் கின்றபல வீழின்விரி கற்றை பூசலிடு கூளியொடு பூதநிரை பற்றி ஊசல்பல ஆடியென ஊக்கியன அன்றே.

pācaṭai toṭukkappaṭa laippaḻu marattiṉ vīcinimir kiṉṟapala vīḻiṉviri kaṟṟai pūcaliṭu kūḷiyoṭu pūtanirai paṟṟi ūcalpala āṭiyeṉa ūkkiyaṉa aṉṟē.

Report an error

ஆல்வரையின் வீழ்நிரைகள் ஆசுகம் உடற்றப் பால்வரையின் எற்றிவரு மாறிரவி பாகன் கால்வரையின் ஏகவெழு கந்துகம தென்னும் மால்வரையின் வீசுபல மத்திகைய தொத்த.

ālvaraiyiṉ vīḻniraikaḷ ācukam uṭaṟṟap pālvaraiyiṉ eṟṟivaru māṟiravi pākaṉ kālvaraiyiṉ ēkaveḻu kantukama teṉṉum mālvaraiyiṉ vīcupala mattikaiya totta.

Report an error

ஆசறுதெ னாதுதிசை ஆளுமிறை எண்ணில் பாசமொடு நின்றதொரு பான்மையஃ தன்றேல் வாசவனும் ஆகமிசை மாலிகையு மாமால் வீசுபழு மாமர விலங்கலும்அவ் வீழும்.

ācaṟute ṉātuticai āḷumiṟai eṇṇil pācamoṭu niṉṟatoru pāṉmaiyaḵ taṉṟēl vācavaṉum ākamicai mālikaiyu māmāl vīcupaḻu māmara vilaṅkalumav vīḻum.

Report an error

மாநிலமெ லாந்தனை வழுத்தவரு மன்னற் கூனமுறு காலைதனில் ஒண்குருதி வாரி வானமுகில் கான்றனைய மாண்டதொன் மரத்தின் மேனிதரு செய்யபல வீழின்விரி மாலை.

mānilame lāntaṉai vaḻuttavaru maṉṉaṟ kūṉamuṟu kālaitaṉil oṇkuruti vāri vāṉamukil kāṉṟaṉaiya māṇṭatoṉ marattiṉ mēṉitaru ceyyapala vīḻiṉviri mālai.

Report an error

இரும்பறை ஆலமிசை எம்முருவு கொள்ளா வம்புலவு தண்டுவள மாயன்வரும் என்னா வெம்பணிகள் தம்பதியின் மேவுவன போலாம் தம்பமென வேதரை புகுந்ததனி வீழ்கள்.

irumpaṟai ālamicai emmuruvu koḷḷā vampulavu taṇṭuvaḷa māyaṉvarum eṉṉā vempaṇikaḷ tampatiyiṉ mēvuvaṉa pōlām tampameṉa vētarai pukuntataṉi vīḻkaḷ.

Report an error

கடித்தன எயிற்றின்அழல் காலவர வின்மேல் நடிக்குமொரு கட்செவி நமைக்குறுகும் என்னாத் துடித்தன எனத்தலை துளக்கின உரோமம் பொடித்தன நிகர்த்துள புனிற்றினுறு புன்காய்.

kaṭittaṉa eyiṟṟiṉaḻal kālavara viṉmēl naṭikkumoru kaṭcevi namaikkuṟukum eṉṉāt tuṭittaṉa eṉattalai tuḷakkiṉa urōmam poṭittaṉa nikarttuḷa puṉiṟṟiṉuṟu puṉkāy.

Report an error

கிளர்ப்புறு கவட்டிலை கிடைத்த கிளையாவும் அளப்பில்புகை சுற்றிட அனற்கெழுவு கற்றை துளக்குறு தரக்குழுவு தோன்றியது போன்ற விளக்கழல் நிகர்த்துள விரிந்தமுகை யெல்லாம்.

kiḷarppuṟu kavaṭṭilai kiṭaitta kiḷaiyāvum aḷappilpukai cuṟṟiṭa aṉaṟkeḻuvu kaṟṟai tuḷakkuṟu tarakkuḻuvu tōṉṟiyatu pōṉṟa viḷakkaḻal nikarttuḷa virintamukai yellām.

Report an error

செருப்புகு சினத்தெதிர் செறுத்தமத வெற்பின் மருப்பின் ஒசிப்பவன் வரத்தினியல் காணா விருப்பமலி வுற்றதன் விழித்தொகைகள் எங்கும் பரப்பிய நிகர்த்துள பயங்ககெழுவு பைங்காய்.

ceruppuku ciṉattetir ceṟuttamata veṟpiṉ maruppiṉ ocippavaṉ varattiṉiyal kāṇā viruppamali vuṟṟataṉ viḻittokaikaḷ eṅkum parappiya nikarttuḷa payaṅkakeḻuvu paiṅkāy.

Report an error

வெள்ளிபடு கின்றமதி விண்படர் விமானங் கள்ளிபடு பால்கெழு கவட்டினிடை தேய்ப்பத் துள்ளிபடு கின்றளவி லோர்திவலை தொத்தப் புள்ளிபடு மாறுமுயல் என்பர் புவிமேலோர்.

veḷḷipaṭu kiṉṟamati viṇpaṭar vimāṉaṅ kaḷḷipaṭu pālkeḻu kavaṭṭiṉiṭai tēyppat tuḷḷipaṭu kiṉṟaḷavi lōrtivalai tottap puḷḷipaṭu māṟumuyal eṉpar puvimēlōr.

Report an error

காவதமொ ரேழுள பராரை கணிப்பின்றால் தாவறும் உயர்ச்சியத னுக்குமதி சான்றே பூவுலகம் எங்குநிழல் போக்கிநெடி தோம்புங் கோவதென நின்றதுயர் கோளியெனுங் குன்றம்.

kāvatamo rēḻuḷa parārai kaṇippiṉṟāl tāvaṟum uyarcciyata ṉukkumati cāṉṟē pūvulakam eṅkuniḻal pōkkineṭi tōmpuṅ kōvateṉa niṉṟatuyar kōḷiyeṉuṅ kuṉṟam.

Report an error

அவ்வகைய தாருவினை நோக்கினன் அணைந்தான் பவ்வநிற வண்ணல் துயில் பாசடை கள்தம்மோ டெவ்வகை கமத்திரென வேவினவ என்றே வெவ்வரவி னுக்கிறைவன் மேவியது மான.

avvakaiya tāruviṉai nōkkiṉaṉ aṇaintāṉ pavvaniṟa vaṇṇal tuyil pācaṭai kaḷtammō ṭevvakai kamattireṉa vēviṉava eṉṟē vevvaravi ṉukkiṟaivaṉ mēviyatu māṉa.

Report an error

அந்தமில் பெருங்கடல் வளாகம்அனைத் துந்தன் உந்தியில் அடைந்ததென ஓங்கல்கெழும் ஒள்வாள் வந்துறை யினிற்புகுவ தென்ன வடதாருப் பொந்தினிடை யேயணுகி னான்உலகு பூத்தோன்.

antamil peruṅkaṭal vaḷākamaṉait tuntaṉ untiyil aṭaintateṉa ōṅkalkeḻum oḷvāḷ vantuṟai yiṉiṟpukuva teṉṉa vaṭatārup pontiṉiṭai yēyaṇuki ṉāṉulaku pūttōṉ.

Report an error

சத்தியுரை யால்அரி தனிப்பணிய தான இத்திறமி சைத்தனம் இனிச்சுரரை வாட்டும் அத்திமுக வெய்யவனை ஆதியருள் செய்யும் வித்தக முதற்புதல்வன் வென்றமை உரைப்பாம்.

cattiyurai yālari taṉippaṇiya tāṉa ittiṟami caittaṉam iṉiccurarai vāṭṭum attimuka veyyavaṉai ātiyaruḷ ceyyum vittaka mutaṟputalvaṉ veṉṟamai uraippām.

Report an error

முந்து வேழ முகத்தவன் ஏவலால் நொந்து சிந்தை நுணங்கிய தேவரும் இந்தி ராதிபர் யாவரும் ஐங்கரன் வந்த தோர்ந்து மகிழச்சியின் மேயினார்.

muntu vēḻa mukattavaṉ ēvalāl nontu cintai nuṇaṅkiya tēvarum inti rātipar yāvarum aiṅkaraṉ vanta tōrntu makiḻacciyiṉ mēyiṉār.

Report an error

ஏத மில்மகிழ் வெய்திய இந்திரன் ஆதி யோர்கயி லாயத் தணுகியே போத கத்துப் புகர்முகப் புங்கவன் பாத முற்றுப் பணிந்து பரவினார்.

ēta milmakiḻ veytiya intiraṉ āti yōrkayi lāyat taṇukiyē pōta kattup pukarmukap puṅkavaṉ pāta muṟṟup paṇintu paraviṉār.

Report an error

பரவல் செய்திடுக பான்மையை நோக்கியே கருணை செய்த கயமுகத் தெம்பிரான் உரையும் நுங்கட் குறுகுறை என்றலும் வரன்மு றைப்பட வாசவன் கூறுவான்.

paraval ceytiṭuka pāṉmaiyai nōkkiyē karuṇai ceyta kayamukat tempirāṉ uraiyum nuṅkaṭ kuṟukuṟai eṉṟalum varaṉmu ṟaippaṭa vācavaṉ kūṟuvāṉ.

Report an error

தொல்லை நாண்மதி சூடிய சோதிபால் எல்லை நீங்கும் வரந்தனை எய்தினான் கல்லென் வெஞ்சொற் கயாசுரன் என்பவன் அல்லல் செய்தனன் ஆற்றவும் எங்களை.

tollai nāṇmati cūṭiya cōtipāl ellai nīṅkum varantaṉai eytiṉāṉ kalleṉ veñcoṟ kayācuraṉ eṉpavaṉ allal ceytaṉaṉ āṟṟavum eṅkaḷai.

Report an error

பின்னும் நங்களைப் பீடற வைகலுந் தன்னை வந்தனை செய்யவுஞ் சாற்றினான் அன்ன செய்தனம் அன்றியும் எங்கள் பால் மன்ன வேபுதி தொன்று வகுத்தனன்.

piṉṉum naṅkaḷaip pīṭaṟa vaikalun taṉṉai vantaṉai ceyyavuñ cāṟṟiṉāṉ aṉṉa ceytaṉam aṉṟiyum eṅkaḷ pāl maṉṉa vēputi toṉṟu vakuttaṉaṉ.

Report an error

கிட்டித் தன்முன் கிடைத்துழி நெற்றியிற் குட்டிக் கொண்டு குழையிணை யிற்கரந் தொட்டுத் தாழ்ந்தெழச் சொற்றனன் ஆங்கதும் பட்டுப் பட்டுப் பழியிடை மூழ்கினேம்.

kiṭṭit taṉmuṉ kiṭaittuḻi neṟṟiyiṟ kuṭṭik koṇṭu kuḻaiyiṇai yiṟkaran toṭṭut tāḻnteḻac coṟṟaṉaṉ āṅkatum paṭṭup paṭṭup paḻiyiṭai mūḻkiṉēm.

Report an error

கறுத்து மற்றவன் கட்டுரைக் கின்றசொல் மறுத்த லஞ்சி வரும்பழி தன்னையும் பொறுத்து நாணமும் போகஇன் றந்தமுஞ் சிறப்பி லாவச் சிறுதொழில் செய்தனம்.

kaṟuttu maṟṟavaṉ kaṭṭuraik kiṉṟacol maṟutta lañci varumpaḻi taṉṉaiyum poṟuttu nāṇamum pōkaiṉ ṟantamuñ ciṟappi lāvac ciṟutoḻil ceytaṉam.

Report an error

ஆங்க வன்தன் தாவியொ டெங்குறை நீங்கு வித்திட நீவரு வாயென ஓங்கல் நல்கும் உமையவள் தன்னொரு பாங்கர் வைகும் பராபரன் கூறினான்.

āṅka vaṉtaṉ tāviyo ṭeṅkuṟai nīṅku vittiṭa nīvaru vāyeṉa ōṅkal nalkum umaiyavaḷ taṉṉoru pāṅkar vaikum parāparaṉ kūṟiṉāṉ.

Report an error

ஆத லால்நின் னடைந்தனம் எம்முடை ஏத மாற்றுதி என்று வழிபடீஇ மோத காதிகள் முன்னுற வார்த்திடப் பூத நாதன் அருளில் புகலுவான்.

āta lālniṉ ṉaṭaintaṉam emmuṭai ēta māṟṟuti eṉṟu vaḻipaṭīi mōta kātikaḷ muṉṉuṟa vārttiṭap pūta nātaṉ aruḷil pukaluvāṉ.

Report an error

அஞ்சல் அஞ்சல் அவுணர்க் கரசனாம் விஞ்சு வேழ முகமுடை வீரனைத் துஞ்சு வித்துந் துயர்தவிர்ப் போமெனாக் குஞ்ச ரத்திரு மாமுகன் கூறவே.

añcal añcal avuṇark karacaṉām viñcu vēḻa mukamuṭai vīraṉait tuñcu vittun tuyartavirp pōmeṉāk kuñca rattiru māmukaṉ kūṟavē.

Report an error

இறைவ னோடும் இமையவர் எம்முடைச் சிறுமை நீங்கின செல்லலும் நீங்கின மறுமை இன்பமும் வந்தன வால்இனிப் பெறுவ தொன்றுள தோவெனப் பேசினார்.

iṟaiva ṉōṭum imaiyavar emmuṭaic ciṟumai nīṅkiṉa cellalum nīṅkiṉa maṟumai iṉpamum vantaṉa vāliṉip peṟuva toṉṟuḷa tōveṉap pēciṉār.

Report an error

துன்பினை உழந்திடு சுரர்கள் இவ்வகை இன்புறு காலையில் ஈசன் தந்திடும் அன்புடை முன்னவன் ஆனை மாமுக முன்பனை யடுவது முன்னி னானரோ.

tuṉpiṉai uḻantiṭu curarkaḷ ivvakai iṉpuṟu kālaiyil īcaṉ tantiṭum aṉpuṭai muṉṉavaṉ āṉai māmuka muṉpaṉai yaṭuvatu muṉṉi ṉāṉarō.

Report an error

பொருக்கெனத் தவிசினின் றெழுந்து பூதர்கள் நெருக்குறு வாய்தலின் எய்தி நீள்கதிர் அருக்கனின் இலகிய அசலன் என்பவன் தருக்கிய புயத்தின்மேற் சரண்வைத் தேறினான்.

porukkeṉat taviciṉiṉ ṟeḻuntu pūtarkaḷ nerukkuṟu vāytaliṉ eyti nīḷkatir arukkaṉiṉ ilakiya acalaṉ eṉpavaṉ tarukkiya puyattiṉmēṟ caraṇvait tēṟiṉāṉ.

Report an error

ஏறியங் கசலன்மே லிருந்து செல்லுழிக் காறொடர் முகிலினங் கவைஇய காட்சிபோல் மாறில்வெம் பூதர்கள் வந்து சுற்றியே கூறினர் அவன்புகழ் குலாய கொள்கையார்.

ēṟiyaṅ kacalaṉmē liruntu celluḻik kāṟoṭar mukiliṉaṅ kavaiiya kāṭcipōl māṟilvem pūtarkaḷ vantu cuṟṟiyē kūṟiṉar avaṉpukaḻ kulāya koḷkaiyār.

Report an error

சாமரை வீசினர் தணப்பில் பன்மணிக் காமரு தண்ணிழல் கவிகை ஏந்தினர் பூமரு மதுமலர் பொழிதல் மேயினர் ஏமரு பூதரில் எண்ணி லோர்களே.

cāmarai vīciṉar taṇappil paṉmaṇik kāmaru taṇṇiḻal kavikai ēntiṉar pūmaru matumalar poḻital mēyiṉar ēmaru pūtaril eṇṇi lōrkaḷē.

Report an error

துடியொடு சல்லரி தோமில் தண்ணுமை கடிபடு கரடிகை கணையம் சல்லிகை இடியுறழ் பேரிகை இரலை காகளங் குடமுழ வியம்பினர் கோடி சாரதர்.

tuṭiyoṭu callari tōmil taṇṇumai kaṭipaṭu karaṭikai kaṇaiyam callikai iṭiyuṟaḻ pērikai iralai kākaḷaṅ kuṭamuḻa viyampiṉar kōṭi cāratar.

Report an error

சிந்தையில் உன்னினர் தீமை தீர்ப்பவன் வந்திடு காலையின் மகத்தின் வேந்தனும் அந்தர அமரரும் அடைந்து போற்றியே புந்திகொள் உவகையால் போதல் மேயினார்.

cintaiyil uṉṉiṉar tīmai tīrppavaṉ vantiṭu kālaiyiṉ makattiṉ vēntaṉum antara amararum aṭaintu pōṟṟiyē puntikoḷ uvakaiyāl pōtal mēyiṉār.

Report an error

தாருவின் நறுமலர் தத்தங் கைகொடு பேரருள் நுதல்விழிப் பிள்ளை மீமிசை சேருற வீசியே புடையிற் சென்றனர் காரினை யடைதரு கடவுள் வில்லென.

tāruviṉ naṟumalar tattaṅ kaikoṭu pēraruḷ nutalviḻip piḷḷai mīmicai cēruṟa vīciyē puṭaiyiṟ ceṉṟaṉar kāriṉai yaṭaitaru kaṭavuḷ villeṉa.

Report an error

விரைந்தெழு சாரத வெள்ளம் எண்ணில நிரந்தன சூழ்தர நிமலன் மாமகன் பெருந்தரை ஏகியே பிறங்கு தோல்முகன் புரந்திடு மதங்கமா புரமுன் போயினான்.

virainteḻu cārata veḷḷam eṇṇila nirantaṉa cūḻtara nimalaṉ māmakaṉ peruntarai ēkiyē piṟaṅku tōlmukaṉ purantiṭu mataṅkamā puramuṉ pōyiṉāṉ.

Report an error

ஆயது கயமுகத் தவுணர் கோடியே வேயினர் புகறலும் வெகுட்சி கொண்டெழீஇ ஏயதன் படையெலாம் எடுத்து மற்றவன் சேயுயர் தனதுபொற் றேரில் ஏறினான்.

āyatu kayamukat tavuṇar kōṭiyē vēyiṉar pukaṟalum vekuṭci koṇṭeḻīi ēyataṉ paṭaiyelām eṭuttu maṟṟavaṉ cēyuyar taṉatupoṟ ṟēril ēṟiṉāṉ.

Report an error

பல்லியம் இயம்பின பரிகள் சுற்றின சில்லிகொள் ஆழியந் தேர்கள் சூழ்ந்தன எல்லையில் இபநிரை யாவும் மொய்த்தன வல்லியல் அவுணர்கள் வரம்பின் றீண்டினார்.

palliyam iyampiṉa parikaḷ cuṟṟiṉa cillikoḷ āḻiyan tērkaḷ cūḻntaṉa ellaiyil ipanirai yāvum moyttaṉa valliyal avuṇarkaḷ varampiṉ ṟīṇṭiṉār.

Report an error

ஆயிர வெள்ளமாம் அனிகஞ் சுற்றிடக் காய்கனல் விழியுடைக் கயமு காசுரன் ஏயெனும் அளவையில் ஏகிக் கண்ணுதல் நாயகன் மதலைதன் படைமுன் நண்ணினான்.

āyira veḷḷamām aṉikañ cuṟṟiṭak kāykaṉal viḻiyuṭaik kayamu kācuraṉ ēyeṉum aḷavaiyil ēkik kaṇṇutal nāyakaṉ matalaitaṉ paṭaimuṉ naṇṇiṉāṉ.

Report an error

நண்ணிய காலையின் நவையில் பூதரும் அண்ணலங் கழலடி அவுண ருங்கெழீஇப் பண்ணினர் பெருஞசமர் படையின் வன்மையால் விண்ணவர் யாவரும் வியந்து நோக்கவே.

naṇṇiya kālaiyiṉ navaiyil pūtarum aṇṇalaṅ kaḻalaṭi avuṇa ruṅkeḻīip paṇṇiṉar peruñacamar paṭaiyiṉ vaṉmaiyāl viṇṇavar yāvarum viyantu nōkkavē.

Report an error

புதிதெழு வெயிலுடன் பொங்கு பேரிருள் எதிர்பொரு மாறுபோல் இனங்கொள் தானவர் அதிர்கழற் பூதரோ டமர்செய் தாற்றலர் கதுமென அழிந்தனர் கலங்கி ஓடினார்.

putiteḻu veyiluṭaṉ poṅku pēriruḷ etirporu māṟupōl iṉaṅkoḷ tāṉavar atirkaḻaṟ pūtarō ṭamarcey tāṟṟalar katumeṉa aḻintaṉar kalaṅki ōṭiṉār.

Report an error

ஓடினர் அளப்பிலர் உயிரைச் சிந்தியே வீடினர் அளப்பிலர் மெய்கு றைந்துபின் ஆடினர் அளப்பிலர் அகலு தற்கிடந் தேடினர் அளப்பிலர் தியக்கம் எய்தினார்.

ōṭiṉar aḷappilar uyiraic cintiyē vīṭiṉar aḷappilar meyku ṟaintupiṉ āṭiṉar aḷappilar akalu taṟkiṭan tēṭiṉar aḷappilar tiyakkam eytiṉār.

Report an error

ஒழிந்தன கரிபரி உலப்பில் தேர்நிரை அழிந்தன இத்திறம் அவுணர் தம்படை குழிந்திடு கண்ணுடைக் குறள்வெம் பூதர்கள் மொழிந்திட அரியதோர் விசய முற்றினார்.

oḻintaṉa karipari ulappil tērnirai aḻintaṉa ittiṟam avuṇar tampaṭai kuḻintiṭu kaṇṇuṭaik kuṟaḷvem pūtarkaḷ moḻintiṭa ariyatōr vicaya muṟṟiṉār.

Report an error

உயர்தரு தானவர் உடைந்த தன்மையும் புயவலி கொண்டுள பூதர் யாவருஞ் சயமுடன் மேல்வரு தகவு நோக்கியே கயமுக அவுணர்கோன் கனலிற் சீறினான்.

uyartaru tāṉavar uṭainta taṉmaiyum puyavali koṇṭuḷa pūtar yāvaruñ cayamuṭaṉ mēlvaru takavu nōkkiyē kayamuka avuṇarkōṉ kaṉaliṟ cīṟiṉāṉ.

Report an error

உளத்தினில் வெகுண்டுசென் றொருதன் கைக்சிலை வளைத்தனன் அத்துணை வளைத்துப் பேரமர் விளைத்தனர் பூதர்கள் அனையர் மெய்யெலாந் துளைத்தனன் கணைமழை சொரிந்து துண்ணென.

uḷattiṉil vekuṇṭuceṉ ṟorutaṉ kaikcilai vaḷaittaṉaṉ attuṇai vaḷaittup pēramar viḷaittaṉar pūtarkaḷ aṉaiyar meyyelān tuḷaittaṉaṉ kaṇaimaḻai corintu tuṇṇeṉa.

Report an error

அரந்தெறு பகழிகள் ஆகம் போழ்தலும் வருந்தினர் திறலொடு வன்மை நீங்கினர் இரிந்தனர் பூதர்கள் யாரும் ஓடினார் புரந்தரன் இமையவர் பொருமல் எய்தவே.

aranteṟu pakaḻikaḷ ākam pōḻtalum varuntiṉar tiṟaloṭu vaṉmai nīṅkiṉar irintaṉar pūtarkaḷ yārum ōṭiṉār purantaraṉ imaiyavar porumal eytavē.

Report an error

கணநிரை சாய்தலுங் கண்டு மற்றது மணிகிளர் கிம்புரி மருப்பு மாமுகன் இணையறும் அசலன்மேல் ஏகி வல்லையில் அணுகினன் இபமுகத் தவுணர் கோனையே.

kaṇanirai cāytaluṅ kaṇṭu maṟṟatu maṇikiḷar kimpuri maruppu māmukaṉ iṇaiyaṟum acalaṉmēl ēki vallaiyil aṇukiṉaṉ ipamukat tavuṇar kōṉaiyē.

Report an error

காருடை இபமுகக் கடவுள் மேலையோன் ஏருற வருதலும் நின்ற தூதரைச் சீருறு கயமுகத் தீயன் நோக்கியே யாரிவண் பொருவதற் கணுகுற் றானென.

kāruṭai ipamukak kaṭavuḷ mēlaiyōṉ ēruṟa varutalum niṉṟa tūtaraic cīruṟu kayamukat tīyaṉ nōkkiyē yārivaṇ poruvataṟ kaṇukuṟ ṟāṉeṉa.

Report an error

பரவிய ஒற்றர்கள் பணைம ருப்புடைக் காரிமுக முடையன்முக் கண்ணன் ஐங்கரன் உருகெழு பூதன்மேல் உறுகின் றான்சிவன் பெருமக னாகும்இப் பிள்ளைதான் என்றார்.

paraviya oṟṟarkaḷ paṇaima ruppuṭaik kārimuka muṭaiyaṉmuk kaṇṇaṉ aiṅkaraṉ urukeḻu pūtaṉmēl uṟukiṉ ṟāṉcivaṉ perumaka ṉākumip piḷḷaitāṉ eṉṟār.

Report an error

அன்னது கேட்டலும் அவணன் சீறியே பன்னருங் கலைதெரி பாகை நோக்கிநம் பொன்னி ரதத்தினை புழைக்கை மாமுகன் முன்னுறக் கடவுதி மொய்ம்ப என்னவே.

aṉṉatu kēṭṭalum avaṇaṉ cīṟiyē paṉṉaruṅ kalaiteri pākai nōkkinam poṉṉi ratattiṉai puḻaikkai māmukaṉ muṉṉuṟak kaṭavuti moympa eṉṉavē.

Report an error

கேட்டிடு கலவையோன் கிஞ்சு கக்குரத் தாட்டிறற் பரியினந் தன்னின் மத்திகை காட்டினன் தவறிலாக் கனகத் தேரினை ஓட்டினன் ஐங்கரத் தொருவன் முன்னுற.

kēṭṭiṭu kalavaiyōṉ kiñcu kakkurat tāṭṭiṟaṟ pariyiṉan taṉṉiṉ mattikai kāṭṭiṉaṉ tavaṟilāk kaṉakat tēriṉai ōṭṭiṉaṉ aiṅkarat toruvaṉ muṉṉuṟa.

Report an error

ஆயிடைக் கரிமுகத் தவுணன் ஐங்கரத் தூயனை யழல்விழ சுழல நோக்கியே காயெரி எயிறுகக் கறைகொள் பற்களால் சேயிதழ் அதுக்கியே இனைய செப்புவான்.

āyiṭaik karimukat tavuṇaṉ aiṅkarat tūyaṉai yaḻalviḻa cuḻala nōkkiyē kāyeri eyiṟukak kaṟaikoḷ paṟkaḷāl cēyitaḻ atukkiyē iṉaiya ceppuvāṉ.

Report an error

நுந்தையென் மாதவம் நோக்கி முன்னரே தந்திடு பெருவரந் தன்னைத் தேர்கிலை உய்ந்தனை போதிநின் னுயிர்கொண் டென்னெதிர் வந்தனை இறையது மதியி லாய்கொலோ.

nuntaiyeṉ mātavam nōkki muṉṉarē tantiṭu peruvaran taṉṉait tērkilai uyntaṉai pōtiniṉ ṉuyirkoṇ ṭeṉṉetir vantaṉai iṟaiyatu matiyi lāykolō.

Report an error

அன்றிநீ யமர்செய அமைதி யென்னினும் வன்றிறல் உனக்கிலை மைந்த என்னெதிர் பொன்றினர் அல்லது போர்செய் தென்னைமுன் வென்றவர் இவரென விளம்ப வல்லையோ.

aṉṟinī yamarceya amaiti yeṉṉiṉum vaṉṟiṟal uṉakkilai mainta eṉṉetir poṉṟiṉar allatu pōrcey teṉṉaimuṉ veṉṟavar ivareṉa viḷampa vallaiyō.

Report an error

தேன்பெறு தருநிழல் திருவின் வைகிய வான்பெறு தேவரால் மக்க ளாலவர் ஊன்பெறு படைகளால் ஒழிந்தி டேன்இது நான்பெறு வரத்தியல் நவிலக் கேட்டியேல்.

tēṉpeṟu taruniḻal tiruviṉ vaikiya vāṉpeṟu tēvarāl makka ḷālavar ūṉpeṟu paṭaikaḷāl oḻinti ṭēṉitu nāṉpeṟu varattiyal navilak kēṭṭiyēl.

Report an error

பின்னரும் பலவுள பெற்ற தொல்வரம் என்னைவெல் பவர்எவர் இந்தி ராதிபர் தன்னிடர் தணிப்பவர் போலச் சார்ந்தனை உன்னைவென் றன்னவர் உயிரும் உண்பனால்.

piṉṉarum palavuḷa peṟṟa tolvaram eṉṉaivel pavarevar inti rātipar taṉṉiṭar taṇippavar pōlac cārntaṉai uṉṉaiveṉ ṟaṉṉavar uyirum uṇpaṉāl.

Report an error

பொருதெனை வென்றனை போக வல்லையேல் வருதியென் றுரைத்தலும் வானு லாவிய புரமெரி படுத்தவன் புதல்வன் அவ்விடை அருளுட னொருமொழி அறைவ தாயினான்.

poruteṉai veṉṟaṉai pōka vallaiyēl varutiyeṉ ṟuraittalum vāṉu lāviya purameri paṭuttavaṉ putalvaṉ avviṭai aruḷuṭa ṉorumoḻi aṟaiva tāyiṉāṉ.

Report an error

நிரந்தபல் படையும் நாளும் நிலைபெற நினக்குத் தொன்னாள் வரந்தரு கின்ற எந்தை வல்லைநின் னுயிரை வவ்விப் புரந்தரன் முதவி னோர்க்குப் பொன்னினா டுதவி அன்னார் அரந்தையும் அகற்றிச் செல்கென் றருளினன் எனக்கும் அன்றே.

nirantapal paṭaiyum nāḷum nilaipeṟa niṉakkut toṉṉāḷ varantaru kiṉṟa entai vallainiṉ ṉuyirai vavvip purantaraṉ mutavi ṉōrkkup poṉṉiṉā ṭutavi aṉṉār arantaiyum akaṟṟic celkeṉ ṟaruḷiṉaṉ eṉakkum aṉṟē.

Report an error

உன்னுயிர் காத்தி என்னின் உறுதியொன் றுரைப்பன் கேண்மோ பொன்னக ரதனை இந்தப் புரந்தரன் புரக்க நல்கி இந்நிலத் தரசு செய்தே இருத்தியஃ திசையா தென்னின் நின்னுயிர் முடிப்பான் நேர்ந்து நின்றனன் இனைவென் னென்றான்.

uṉṉuyir kātti eṉṉiṉ uṟutiyoṉ ṟuraippaṉ kēṇmō poṉṉaka rataṉai intap purantaraṉ purakka nalki innilat taracu ceytē iruttiyaḵ ticaiyā teṉṉiṉ niṉṉuyir muṭippāṉ nērntu niṉṟaṉaṉ iṉaiveṉ ṉeṉṟāṉ.

Report an error

என்னலும் அவுணன் பொங்கி எரியுக விழிழிழிழித்துச் சென்றோர் பொன்னெடுஞ் சிலையை வாங்கிப் பொருக்கெனப் புரிநாண் ஏற்றி மின்னுடை வடிம்பின் வாளி வீசலும் விமலன் நல்கும் முன்னவன் எழுவொன் றேந்தி முரணொடு சிந்தி நின்றான்.

eṉṉalum avuṇaṉ poṅki eriyuka viḻiḻiḻiḻittuc ceṉṟōr poṉṉeṭuñ cilaiyai vāṅkip porukkeṉap purināṇ ēṟṟi miṉṉuṭai vaṭimpiṉ vāḷi vīcalum vimalaṉ nalkum muṉṉavaṉ eḻuvoṉ ṟēnti muraṇoṭu cinti niṉṟāṉ.

Report an error

பொற்றனு முரிந்து வீழப புழைக்கையிற் பிடித்த தண்டால் எற்றினன் அனைய காலை இபமுகத் தசுரன் என்போன் மற்றொரு சிலையைக் கையால் வாங்கினன் வாங்கு முன்னர்ச் செற்றனன் அதனை மைந்தன் திசைமுகன் முதலோர் ஆர்ப்ப.

poṟṟaṉu murintu vīḻapa puḻaikkaiyiṟ piṭitta taṇṭāl eṟṟiṉaṉ aṉaiya kālai ipamukat tacuraṉ eṉpōṉ maṟṟoru cilaiyaik kaiyāl vāṅkiṉaṉ vāṅku muṉṉarc ceṟṟaṉaṉ ataṉai maintaṉ ticaimukaṉ mutalōr ārppa.

Report an error

திண்டிறல் பெற்ற வீரச் சிலைமுரிந் திட்ட பின்னர்த் தண்டமொன் றேந்தி ஈசன் தனயனோ டெதிர்த லோடும் விண்டது சோரும் வண்ணம் வெய்தெனப் புடைத்து மாயாக் கண்டகன் உரத்தில் தாக்கக் கையற வெய்தி நின்றான்.

tiṇṭiṟal peṟṟa vīrac cilaimurin tiṭṭa piṉṉart taṇṭamoṉ ṟēnti īcaṉ taṉayaṉō ṭetirta lōṭum viṇṭatu cōrum vaṇṇam veyteṉap puṭaittu māyāk kaṇṭakaṉ urattil tākkak kaiyaṟa veyti niṉṟāṉ.

Report an error

நடுங்கினன் சிந்தை ஒன்று நவில்கிலன் நாணத் தாலே ஒடுங்கினன் கயவெஞ் சூரன் உலந்தனன் போல நின்றான் அடும்பரி களிறு திண்டேர் அணிகெழு தானை பாரிற் படும்படி நினைந்து முன்னோன் பாரம்ஒன் றுய்த்தான் அன்றே.

naṭuṅkiṉaṉ cintai oṉṟu navilkilaṉ nāṇat tālē oṭuṅkiṉaṉ kayaveñ cūraṉ ulantaṉaṉ pōla niṉṟāṉ aṭumpari kaḷiṟu tiṇṭēr aṇikeḻu tāṉai pāriṟ paṭumpaṭi niṉaintu muṉṉōṉ pāramoṉ ṟuyttāṉ aṉṟē.

Report an error

விட்டவெம் பாசம் அங்கண் வெய்யதோர் சேனை முற்றுங் கட்டிய தாக மைந்தன் கணிச்சியும் அதற்பின் ஏவ அட்டதால் அதனை நோக்கி ஆடினர் அமரர் தானை பட்டன உணர்ந்து தீயோன் பதைபதைத் துயிர்த்து நொந்தான்.

viṭṭavem pācam aṅkaṇ veyyatōr cēṉai muṟṟuṅ kaṭṭiya tāka maintaṉ kaṇicciyum ataṟpiṉ ēva aṭṭatāl ataṉai nōkki āṭiṉar amarar tāṉai paṭṭaṉa uṇarntu tīyōṉ pataipatait tuyirttu nontāṉ.

Report an error

முந்துதன் கரத்தி லுள்ள முரண்கெழு படைகள் யாவுஞ் சிந்தினன் அவைகள் எல்லாஞ் சேர்ந்தன திங்கள் சூடும் எந்தையை வலஞ்செய் தேத்தி ஏவலின் இயன்ற மாதோ வெந்திறல் அவுணன் மேன்மேல் வெகுளித்தீக் கனல நின்றான்.

muntutaṉ karatti luḷḷa muraṇkeḻu paṭaikaḷ yāvuñ cintiṉaṉ avaikaḷ ellāñ cērntaṉa tiṅkaḷ cūṭum entaiyai valañcey tētti ēvaliṉ iyaṉṟa mātō ventiṟal avuṇaṉ mēṉmēl vekuḷittīk kaṉala niṉṟāṉ.

Report an error

நின்றவன் தன்னை நோக்கி நெடியபல் படைகள் ஏவில் சென்றிவன் தன்னைக் கொல்லா சிவனருள் வரத்தின் சீரால் இன்றினிச் செய்வ தென்னென் றிறைவரை உன்னி எந்தை யூன்றிருக் கோட்டில் ஒன்று தடக்கையின் முரித்துக் கொண்டான்.

niṉṟavaṉ taṉṉai nōkki neṭiyapal paṭaikaḷ ēvil ceṉṟivaṉ taṉṉaik kollā civaṉaruḷ varattiṉ cīrāl iṉṟiṉic ceyva teṉṉeṉ ṟiṟaivarai uṉṉi entai yūṉṟiruk kōṭṭil oṉṟu taṭakkaiyiṉ murittuk koṇṭāṉ.

Report an error

தடக்கையி லேந்து கோட்டைத் தந்தியாம் அவுணன் மீது விடுத்தலும் அனையன் மார்வை வெய்தெனக் கீண்டு போகி உடல்படி மிசையே வீழ்த்தி ஒல்லையில் ஓடித் தெண்ணீர்க் கடல்படிந் தமலன் மைந்தன் கரத்தில்வந் திருந்த தன்றே.

taṭakkaiyi lēntu kōṭṭait tantiyām avuṇaṉ mītu viṭuttalum aṉaiyaṉ mārvai veyteṉak kīṇṭu pōki uṭalpaṭi micaiyē vīḻtti ollaiyil ōṭit teṇṇīrk kaṭalpaṭin tamalaṉ maintaṉ karattilvan tirunta taṉṟē.

Report an error

புயலினத் தொகுதி ஒன்றிப் புவிமிசை வழுக்கிற் றென்னக் கயமுகத் தவுணன் முந்நீர்க் கடலுடைந் தென்ன ஆர்த்திட் டியலுடைத் தேர்மேல் வீழா எய்த்தனன் அவன்தன் மார்பில் வியனதித் தாரை என்ன விரிந்தன குருதி வெள்ளம்.

puyaliṉat tokuti oṉṟip puvimicai vaḻukkiṟ ṟeṉṉak kayamukat tavuṇaṉ munnīrk kaṭaluṭain teṉṉa ārttiṭ ṭiyaluṭait tērmēl vīḻā eyttaṉaṉ avaṉtaṉ mārpil viyaṉatit tārai eṉṉa virintaṉa kuruti veḷḷam.

Report an error

ஏடவிழ் அலங்கல் திண்டோள் இபமுகத் தவுணன் மார்பின் நீடிய குருதிச் செந்நீர் நீத்தமாய் ஒழுகும் வேலைப் பாடுற வருங்கான் ஒன்றில் பரத்தலின் அதுவே செய்ய காடெனப் பெயர்பெற் றின்னுங் காண்டக இருந்த தம்மா.

ēṭaviḻ alaṅkal tiṇṭōḷ ipamukat tavuṇaṉ mārpiṉ nīṭiya kurutic cennīr nīttamāy oḻukum vēlaip pāṭuṟa varuṅkāṉ oṉṟil parattaliṉ atuvē ceyya kāṭeṉap peyarpeṟ ṟiṉṉuṅ kāṇṭaka irunta tammā.

Report an error

ஆய்ந்தநல் லுணர்வின் மேலோர் அறிவினும் அணுகா அண்ணல் ஈந்ததொல் வரத்தால் மாயா இபமுகத் தவுணன் வீழ்ந்து வீந்தனன் போன்று தொல்லை மெய்யொரீஇ விண்ணும் மண்ணுந் தீந்திட எரிகண் சிந்தைச் சீற்றத்தோ ராகு வானான்.

āyntanal luṇarviṉ mēlōr aṟiviṉum aṇukā aṇṇal īntatol varattāl māyā ipamukat tavuṇaṉ vīḻntu vīntaṉaṉ pōṉṟu tollai meyyorīi viṇṇum maṇṇun tīntiṭa erikaṇ cintaic cīṟṟattō rāku vāṉāṉ.

Report an error

தேக்கிய நதிசேர் கின்ற சென்னியன் செம்மல் தன்னைத் தாக்கிய வருத லோடுஞ் சாரதன் தோளின் நீங்கி நீக்கருந் துப்பின் தாக்கி நீநமைச் சுமத்தி என்று மேக்குயர் பிடரில் தாவி வீற்றிருந் தூர்தல் உற்றான்.

tēkkiya naticēr kiṉṟa ceṉṉiyaṉ cemmal taṉṉait tākkiya varuta lōṭuñ cārataṉ tōḷiṉ nīṅki nīkkarun tuppiṉ tākki nīnamaic cumatti eṉṟu mēkkuyar piṭaril tāvi vīṟṟirun tūrtal uṟṟāṉ.

Report an error

மற்றது கண்ட தேவர் வாசவன் முதலோர் யாரும் இற்றனன் கயவெஞ் சூரன் எம்மிடர் போயிற் றன்றே அற்றதெம் பகையும் என்னா ஆடினர் பாடா நின்றார் சுற்றிய கலிங்கம் வீசித் துண்ணென விசும்பு தூர்த்தார்.

maṟṟatu kaṇṭa tēvar vācavaṉ mutalōr yārum iṟṟaṉaṉ kayaveñ cūraṉ emmiṭar pōyiṟ ṟaṉṟē aṟṟatem pakaiyum eṉṉā āṭiṉar pāṭā niṉṟār cuṟṟiya kaliṅkam vīcit tuṇṇeṉa vicumpu tūrttār.

Report an error

காமரு புயலின் தோற்றங் காண்டலுங் களிப்பின் மூழ்கி ஏமரு கலாப மஞ்ஞை இனமெனக் குலவு கின்றார் தேமரும் இதழி அண்ணல் சிறுவனைத் தெரியா வண்ணம பூமலர் பொழிந்து நின்று புகழினைப் போற்றல் உற்றார்.

kāmaru puyaliṉ tōṟṟaṅ kāṇṭaluṅ kaḷippiṉ mūḻki ēmaru kalāpa maññai iṉameṉak kulavu kiṉṟār tēmarum itaḻi aṇṇal ciṟuvaṉait teriyā vaṇṇama pūmalar poḻintu niṉṟu pukaḻiṉaip pōṟṟal uṟṟār.

Report an error

காப்பவன் அருளும் மேலோன் கண்ணகல் ஞாலம் யாவுந் தீப்பவன் ஏனைச் செய்கை செய்திடும் அவனும் நீயே ஏப்படுஞ் செய்கை யென்ன எமதுளம் வெதும்பும் இன்னல் நீப்பது கருதி யன்றோ நீயருள் வடிவங் கொண்டாய்.

kāppavaṉ aruḷum mēlōṉ kaṇṇakal ñālam yāvun tīppavaṉ ēṉaic ceykai ceytiṭum avaṉum nīyē ēppaṭuñ ceykai yeṉṉa ematuḷam vetumpum iṉṉal nīppatu karuti yaṉṟō nīyaruḷ vaṭivaṅ koṇṭāy.

Report an error

உன்னிடைப் பிறந்த வேதம் உன்பெரு நிலைமை தன்னை இன்னதென் றுணர்ந்த தில்லை யாமுனை அறிவ தெங்ஙன் அன்னையும் பயந்தோன் தானும் ஆயினை அதனால் மைந்தர் பன்னிய புகழ்ச்சி யாவும் பரிவுடன் கேட்டி போலாம்.

uṉṉiṭaip piṟanta vētam uṉperu nilaimai taṉṉai iṉṉateṉ ṟuṇarnta tillai yāmuṉai aṟiva teṅṅaṉ aṉṉaiyum payantōṉ tāṉum āyiṉai ataṉāl maintar paṉṉiya pukaḻcci yāvum parivuṭaṉ kēṭṭi pōlām.

Report an error

என்றிவர் எகினம் ஊரும் இறையொடும் இறைஞ்சி ஏத்தி நன்றிகொள் சிந்தை யோடு நகையொளி முகத்த ராகி மன்றவர் குமரன் தன்பால் வந்தனர் சூழ்த லோடும் ஒன்றிய கருணை நோக்கால் உலப்பிலா அருள்பு ரிந்தான்.

eṉṟivar ekiṉam ūrum iṟaiyoṭum iṟaiñci ētti naṉṟikoḷ cintai yōṭu nakaiyoḷi mukatta rāki maṉṟavar kumaraṉ taṉpāl vantaṉar cūḻta lōṭum oṉṟiya karuṇai nōkkāl ulappilā aruḷpu rintāṉ.

Report an error

உய்ந்தனம் இனிநாம் என்னா ஓதிமம் உயர்த்தோன் வெள்ளைத் தந்தியன் யாரும் பேற்றிச் சார்தலுஞ சமரின் முன்னம் வெந்தொழில் அவுணன் காயம் வீந்திடு பூதர் தம்மை எந்தையங் கினிது நோக்கி எழுதிரென் றருளிச் செய்தான்.

uyntaṉam iṉinām eṉṉā ōtimam uyarttōṉ veḷḷait tantiyaṉ yārum pēṟṟic cārtaluña camariṉ muṉṉam ventoḻil avuṇaṉ kāyam vīntiṭu pūtar tammai entaiyaṅ kiṉitu nōkki eḻutireṉ ṟaruḷic ceytāṉ.

Report an error

அவ்வகை அருள லோடும் அரவென எழுந்து போற்றி மைவரை மிடற்றுப் புத்தேள் மைந்தனை வணங்கி ஏத்தி எவ்வமில் பூதர் யாரும் ஈண்டினர் இனைய எல்லாஞ் செவ்விதில் உணர்ந்து கொண்டான் தேசிலா நிருதர்க் கீசன்.

avvakai aruḷa lōṭum araveṉa eḻuntu pōṟṟi maivarai miṭaṟṟup puttēḷ maintaṉai vaṇaṅki ētti evvamil pūtar yārum īṇṭiṉar iṉaiya ellāñ cevvitil uṇarntu koṇṭāṉ tēcilā nirutark kīcaṉ.

Report an error

மந்திரி யோடுஞ் சூழ்ந்து வருந்தினன் புலம்பி மாழகி உய்ந்தனன் போவல் யானென் றுன்னிஓர் பறவை யாகி அந்தரத் திறந்த புள்ளோ டணுகியப் பதியை நீங்கிச் சிந்தையிற் செல்லல் கூரச் செம்பொன்மால் வரையிற் சென்றான்.

mantiri yōṭuñ cūḻntu varuntiṉaṉ pulampi māḻaki uyntaṉaṉ pōval yāṉeṉ ṟuṉṉiōr paṟavai yāki antarat tiṟanta puḷḷō ṭaṇukiyap patiyai nīṅkic cintaiyiṟ cellal kūrac cempoṉmāl varaiyiṟ ceṉṟāṉ.

Report an error

தாழுறு சார லூடு தபனனும் உணராத் தாருச் சூழலொன் றுண்டால் அங்கட் சுருங்கையோ டிருந்த சேமப் புழையுட் புலம்பி உற்றான் பொன்னகர் இறைக்கும் அங்கண் ஊழிவெங் காலிற் சூழும் உலப்பில்பூ தர்க்கும் அஞ்சி.

tāḻuṟu cāra lūṭu tapaṉaṉum uṇarāt tāruc cūḻaloṉ ṟuṇṭāl aṅkaṭ curuṅkaiyō ṭirunta cēmap puḻaiyuṭ pulampi uṟṟāṉ poṉṉakar iṟaikkum aṅkaṇ ūḻiveṅ kāliṟ cūḻum ulappilpū tarkkum añci.

Report an error

வானவர் பகைஞன் அந்த மதங்கமா புரியை நீங்கிப் போனதோர் காலை மற்றைப் புகருமோர் புள்ள தாகித் தானுறை உலகு நண்ணித் தவமறைந் தல்ல தாற்றி ஊனுட லோம்பு வார்போல் ஒருப்படா யோகில் உற்றான்.

vāṉavar pakaiñaṉ anta mataṅkamā puriyai nīṅkip pōṉatōr kālai maṟṟaip pukarumōr puḷḷa tākit tāṉuṟai ulaku naṇṇit tavamaṟain talla tāṟṟi ūṉuṭa lōmpu vārpōl oruppaṭā yōkil uṟṟāṉ.

Report an error

பூதரும் அன்ன வேலைப் புரிசைசூழ் நகரம் போகி நீதியில் அவுண ராகி நிறங்கிளர் படைகொண் டோரைக் காதிவெஞ் சினப்போர் முற்றிக் களத்திடை வருத லோடும் ஆதிதந் தருளும் மைந்தன் அவ்விடை அகன்று மீண்டான்.

pūtarum aṉṉa vēlaip puricaicūḻ nakaram pōki nītiyil avuṇa rāki niṟaṅkiḷar paṭaikoṇ ṭōraik kātiveñ ciṉappōr muṟṟik kaḷattiṭai varuta lōṭum ātitan taruḷum maintaṉ avviṭai akaṉṟu mīṇṭāṉ.

Report an error

மீண்டுசெங் காட்டி லோர்சார் மேவிமெய்ஞ் ஞானத் தும்பர் தாண்டவம் புரியுந் தாதை தன்னுருத் தாபித் தேத்திப் பூண்டபே ரன்பிற் பூசை புரிந்தனன் புவியு ளோர்க்குக் காண்டகும் அனைய தானங் கணபதீச் சரம தென்பார்.

mīṇṭuceṅ kāṭṭi lōrcār mēvimeyñ ñāṉat tumpar tāṇṭavam puriyun tātai taṉṉurut tāpit tēttip pūṇṭapē raṉpiṟ pūcai purintaṉaṉ puviyu ḷōrkkuk kāṇṭakum aṉaiya tāṉaṅ kaṇapatīc carama teṉpār.

Report an error

புரமெரி படுத்தோன் தன்னைப் பூசனை புரிந்த பின்னர் எரிவிழி சிதறும் ஆகு எருத்தமேல் இனிதின் ஏறிச் சுரபதி அயன்விண் ணோர்கள் தொழுதுடன் சூழந்து போற்ற அரவென மாலோன் வைகும் ஆலமா வனத்திற் புக்கான்.

purameri paṭuttōṉ taṉṉaip pūcaṉai purinta piṉṉar eriviḻi citaṟum āku eruttamēl iṉitiṉ ēṟic curapati ayaṉviṇ ṇōrkaḷ toḻutuṭaṉ cūḻantu pōṟṟa araveṉa mālōṉ vaikum ālamā vaṉattiṟ pukkāṉ.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).