Skip to content

பாயிரம் / உற்பத்திக் காண்டம் — சரவணப் படலம் · சரவணப் படலம்

caravaṇap paṭalam

caravaṇap paṭalam

caravaṇap paṭalam, from Pāyiram and Uṟpatti Kāṇṭam; poems 1.1015–1.1051.

37 versesTamil with transliteration

A spear and lotus for chapter 20 of Kanda Puranam.

ஏற்ற மானவர் ஒன்றொழி பதின்மரோ டிலக்கர் தோற்ற மெய்திய தன்மையை இத்துணை சொற்றாம் ஆற்றல் சேர்புனற் சரவணத் தடந்தனில் அறுவர் போற்ற வைகினோன் கயிலையிற் புகுந்தமை புகல்வாம்.

ēṟṟa māṉavar oṉṟoḻi patiṉmarō ṭilakkar tōṟṟa meytiya taṉmaiyai ittuṇai coṟṟām āṟṟal cērpuṉaṟ caravaṇat taṭantaṉil aṟuvar pōṟṟa vaikiṉōṉ kayilaiyiṟ pukuntamai pukalvām.

Report an error

தருப்ப மிக்குளார் காணுறாத் தாவில்சீர் வெள்ளிப் பொருப்பி லுற்றிடு பரம்பொருள் கருணையாற் பொறைகூர் கருப்ப மற்றுயிர் முழுவதுந் தந்திடுங் கன்னிப் பருப்ப தக்கொடிக் கவ்வழி இனையன பகர்வான்.

taruppa mikkuḷār kāṇuṟāt tāvilcīr veḷḷip poruppi luṟṟiṭu paramporuḷ karuṇaiyāṟ poṟaikūr karuppa maṟṟuyir muḻuvatun tantiṭuṅ kaṉṉip paruppa takkoṭik kavvaḻi iṉaiyaṉa pakarvāṉ.

Report an error

பொம்ம லுற்றிடு நான்முக னாதியோர் புந்தி விம்ம லற்றிட முந்துநம் விழியிடைத் தோன்றிச் செம்ம லர்ப்பெருஞ் சரவணத் திருந்தநின் சேயை இம்ம லைக்கணே உய்க்குதும் வருகென இசைத்தான்.

pomma luṟṟiṭu nāṉmuka ṉātiyōr punti vimma laṟṟiṭa muntunam viḻiyiṭait tōṉṟic cemma larpperuñ caravaṇat tiruntaniṉ cēyai imma laikkaṇē uykkutum varukeṉa icaittāṉ.

Report an error

செமபுலி யதளினான் செப்பிற் றோர்தலும் அம்பிகை யுவகையோ டன்பு கொண்டேழீஇ நம்பெரு மதலையை நாங்கொண் டேகுதும் எம்பெரு முதல்வநீ யெழுதி யாலென்றாள்.

cemapuli yataḷiṉāṉ ceppiṟ ṟōrtalum ampikai yuvakaiyō ṭaṉpu koṇṭēḻīi namperu matalaiyai nāṅkoṇ ṭēkutum emperu mutalvanī yeḻuti yāleṉṟāḷ.

Report an error

கொம்மைவெம் முலையினால் குறிப டுத்திய அம்மையீ துரைத்துழி அருளி னாலெழா மைம்மலி மிடறுவடை வான நாயகன் இம்மென அவளொடும் ஏற தேறினான்.

kommaivem mulaiyiṉāl kuṟipa ṭuttiya ammaiyī turaittuḻi aruḷi ṉāleḻā maimmali miṭaṟuvaṭai vāṉa nāyakaṉ immeṉa avaḷoṭum ēṟa tēṟiṉāṉ.

Report an error

நந்தியின் எருத்தமேல் நங்கை யாளொடு நந்திவந் திடுதலும் நாக மேலுளார் நந்திய வினைத்தொகை நந்திற் றென்றிடா நந்திதன் கணத்தொடு நண்ணிப் போற்றினார்.

nantiyiṉ eruttamēl naṅkai yāḷoṭu nantivan tiṭutalum nāka mēluḷār nantiya viṉaittokai nantiṟ ṟeṉṟiṭā nantitaṉ kaṇattoṭu naṇṇip pōṟṟiṉār.

Report an error

அந்தமில் விடத்தினை யடக்கு கையுடைச் கந்தர னாதியாந் தொல்க ணத்தினோர் எந்தைதன் உருவுகொண் டிருந்த மேலவர் வந்திரு மருங்குமாய் வழுத்தி ஈண்டினார்.

antamil viṭattiṉai yaṭakku kaiyuṭaic kantara ṉātiyān tolka ṇattiṉōr entaitaṉ uruvukoṇ ṭirunta mēlavar vantiru maruṅkumāy vaḻutti īṇṭiṉār.

Report an error

ஆன்முக நந்தியெம் மடிகள் உய்த்திடத் தேன்முக நறுமலர் சிதறிச் செங்கையால் கான்முறை வணங்கியே கமலக் கண்ணவன் நான்முகன் மகபதி பிறரும் நண்ணினார்.

āṉmuka nantiyem maṭikaḷ uyttiṭat tēṉmuka naṟumalar citaṟic ceṅkaiyāl kāṉmuṟai vaṇaṅkiyē kamalak kaṇṇavaṉ nāṉmukaṉ makapati piṟarum naṇṇiṉār.

Report an error

சல்லரி வயிர்துடி தடாரி சச்சரி கல்லென இரங்குறு கரடி காகளஞ் செல்லுறழ் பேரிகை திமிலை யாதியாம் பல்லியம் இயம்பின பாரி டங்களே.

callari vayirtuṭi taṭāri caccari kalleṉa iraṅkuṟu karaṭi kākaḷañ celluṟaḻ pērikai timilai yātiyām palliyam iyampiṉa pāri ṭaṅkaḷē.

Report an error

வேத நான்குங் குடிலையும் வேறுள பேத மாய கலைகளும் பேரிசை நாத மோடு நணுகின விஞ்சையர் கீதம் யாவும் இசைத்துக் கெழுமினார்.

vēta nāṉkuṅ kuṭilaiyum vēṟuḷa pēta māya kalaikaḷum pēricai nāta mōṭu naṇukiṉa viñcaiyar kītam yāvum icaittuk keḻumiṉār.

Report an error

வள்ளல் வேணியின் மாமதி ஈண்டியே பிள்ளை வெண்பிறை யைப்படர் பேரராக் கொள்ளு மென்று குறித்தது போற்றல்போல் வெள்ளி வெண்குடை வெய்யவர் ஏந்தினார்.

vaḷḷal vēṇiyiṉ māmati īṇṭiyē piḷḷai veṇpiṟai yaippaṭar pērarāk koḷḷu meṉṟu kuṟittatu pōṟṟalpōl veḷḷi veṇkuṭai veyyavar ēntiṉār.

Report an error

சகர ரென்னுந் தலைவர்கள் தம்வழிப் பகிர தப்பெயர்ப் பார்த்திவன் வேண்டலும் நிகரி லோன்அருள் நீத்தத் தொழுக்கெனப் புகரில் சாமரம் பூதர்கள் வீசினர்.

cakara reṉṉun talaivarkaḷ tamvaḻip pakira tappeyarp pārttivaṉ vēṇṭalum nikari lōṉaruḷ nīttat toḻukkeṉap pukaril cāmaram pūtarkaḷ vīciṉar.

Report an error

சீறு மால்கரி சீயம் வயல்புலி ஏறு பூட்கை இரலையெண் கேமுதல் வேறு கொண்ட வியன்முகச் சாரதர் நூறு கோடியர் நொய்தெனச் சுற்றினர்.

cīṟu mālkari cīyam vayalpuli ēṟu pūṭkai iralaiyeṇ kēmutal vēṟu koṇṭa viyaṉmukac cāratar nūṟu kōṭiyar noyteṉac cuṟṟiṉar.

Report an error

இமிலு டைப்பல ஏற்றிருங் கேதனந் திமில விண்புனல் நக்கிச் சிதறுவ அமல னைத்தொழு தாற்றுமெய் யன்பினால் கமலம் உய்த்திடுங் காட்சியர் போன்றவே.

imilu ṭaippala ēṟṟiruṅ kētaṉan timila viṇpuṉal nakkic citaṟuva amala ṉaittoḻu tāṟṟumey yaṉpiṉāl kamalam uyttiṭuṅ kāṭciyar pōṉṟavē.

Report an error

அன்ன காலை அகிலமும் ஈன்றருள் கன்னி தன்னொடு காமர்வெள் ளேற்றின்மேல் மன்னி வைகு மதிமுடி வானவன் தன்ன தாலயத் தைத்தணந் தேகினான்.

aṉṉa kālai akilamum īṉṟaruḷ kaṉṉi taṉṉoṭu kāmarveḷ ḷēṟṟiṉmēl maṉṉi vaiku matimuṭi vāṉavaṉ taṉṉa tālayat taittaṇan tēkiṉāṉ.

Report an error

தன்ன தாலயம் நீங்கியே கயிலையைத் தணந்து பொன்னின் நீடிய இமையமால் வரைப்புறத் தேகி அன்ன மாடுறுஞ் சரவணப் பொய்கையை யடைந்தான் என்னை யாளுடை நாயகன் இறைவியுந் தானும்.

taṉṉa tālayam nīṅkiyē kayilaiyait taṇantu poṉṉiṉ nīṭiya imaiyamāl varaippuṟat tēki aṉṉa māṭuṟuñ caravaṇap poykaiyai yaṭaintāṉ eṉṉai yāḷuṭai nāyakaṉ iṟaiviyun tāṉum.

Report an error

பிறையு லாஞ்சடைத் தேவனும் அவன்றனைப் பிரிய துறையும் மாதுமோ ரறுவகை உருவுகொண் டுற்ற சிறுவன் நீர்மையை நோக்கியே திருவருள் செய்து நிறையும் வான்புனற் பொய்கையங் கரையிடை நின்றார்.

piṟaiyu lāñcaṭait tēvaṉum avaṉṟaṉaip piriya tuṟaiyum mātumō raṟuvakai uruvukoṇ ṭuṟṟa ciṟuvaṉ nīrmaiyai nōkkiyē tiruvaruḷ ceytu niṟaiyum vāṉpuṉaṟ poykaiyaṅ karaiyiṭai niṉṟār.

Report an error

முண்ட கச்சர வணந்தனில் மூவிரு வடிவங் கொண்டு லாவிவீற் றிருந்திடும் ஒருபெருங் குமரன் அண்டர் நாயகன் தன்னுடன் அகிலமீன் றாளைக் கண்டு மாமுக மலர்ந்தனன் தனதுளங் களித்தான்.

muṇṭa kaccara vaṇantaṉil mūviru vaṭivaṅ koṇṭu lāvivīṟ ṟiruntiṭum oruperuṅ kumaraṉ aṇṭar nāyakaṉ taṉṉuṭaṉ akilamīṉ ṟāḷaik kaṇṭu māmuka malarntaṉaṉ taṉatuḷaṅ kaḷittāṉ.

Report an error

அந்த வேலையிற் கவுரியை நோக்கியெம் மையன் இந்த நின்மகன் றனைக்கொடு வருகென இயம்பச் சுந்த ரங்கெழு விடையினுந் துண்ணென இழிந்து சிந்தை கொண்டபே ராதரந் தன்னொடுஞ் சென்றாள்.

anta vēlaiyiṟ kavuriyai nōkkiyem maiyaṉ inta niṉmakaṉ ṟaṉaikkoṭu varukeṉa iyampac cunta raṅkeḻu viṭaiyiṉun tuṇṇeṉa iḻintu cintai koṇṭapē rātaran taṉṉoṭuñ ceṉṟāḷ.

Report an error

சரவ ணந்தனில் தனதுசேய் ஆறுருத் தனையும் இருக ரங்களால் அன்புடன் எடுத்தனள் புல்லித் திருமு கங்களோ ராறுபன் னிருபுயஞ் சேர்ந்த உருவம் ஒன்றெனச் செய்தனள் உலகமீன் றுடையாள்.

carava ṇantaṉil taṉatucēy āṟurut taṉaiyum iruka raṅkaḷāl aṉpuṭaṉ eṭuttaṉaḷ pullit tirumu kaṅkaḷō rāṟupaṉ ṉirupuyañ cērnta uruvam oṉṟeṉac ceytaṉaḷ ulakamīṉ ṟuṭaiyāḷ.

Report an error

எந்தை சத்திகள் உயிரெலாம் ஒடுங்குறு மெல்லை முந்து போலஒன் றாகியே கூடிய முறைபோல் அந்த மில்லதோர் மூவிரு வடிவுமொன்றாகிக் கந்தன் என்றுபேர் பெற்றனன் கவுரிதன் குமரன்.

entai cattikaḷ uyirelām oṭuṅkuṟu mellai muntu pōlaoṉ ṟākiyē kūṭiya muṟaipōl anta millatōr mūviru vaṭivumoṉṟākik kantaṉ eṉṟupēr peṟṟaṉaṉ kavuritaṉ kumaraṉ.

Report an error

முன்பு புல்லிய குமரவேள் முடிதொறும் உயிர்த்து மின்பி றங்கிய புறந்தனை நீவலும் விமலை தன்பெ ருந்தனஞ் சுரந்துபால் சொரிந்தன தலையாம் அன்பெ னப்படு கின்றதித் தன்மையே அன்றோ.

muṉpu pulliya kumaravēḷ muṭitoṟum uyirttu miṉpi ṟaṅkiya puṟantaṉai nīvalum vimalai taṉpe runtaṉañ curantupāl corintaṉa talaiyām aṉpe ṉappaṭu kiṉṟatit taṉmaiyē aṉṟō.

Report an error

ஆதி நாயகன் கருணையாய் அமலமாய்ப் பரம போத நீரதாய் இருந்ததன் கொங்கையிற் பொழிபால் ஏதி லாததோர் குருமணி வள்ளமீ தேற்றுக் காதல் மாமகற் கன்பினால் அருத்தினாள் கவுரி.

āti nāyakaṉ karuṇaiyāy amalamāyp parama pōta nīratāy iruntataṉ koṅkaiyiṟ poḻipāl ēti lātatōr kurumaṇi vaḷḷamī tēṟṟuk kātal māmakaṟ kaṉpiṉāl aruttiṉāḷ kavuri.

Report an error

கொங்கை யூறுபால் அருத்தியே குமரனைக் கொடுசென் றெங்கள் நாயகன் முன்னரே இறைஞ்சுவித் திடலும் அங்கை யாலவன் றனைஎடுத் தகலமேல் அணைத்துப் பொங்கு பேரருள் நீர்மையா லிருத்தினன் புடையில்.

koṅkai yūṟupāl aruttiyē kumaraṉaik koṭuceṉ ṟeṅkaḷ nāyakaṉ muṉṉarē iṟaiñcuvit tiṭalum aṅkai yālavaṉ ṟaṉaieṭut takalamēl aṇaittup poṅku pēraruḷ nīrmaiyā liruttiṉaṉ puṭaiyil.

Report an error

அருத்தி தந்திடு குமரவேள் ஒருபுடை அமரப் பெருத்த மன்னுயிர் யாவையும் முன்னரே பெற்ற ஒருத்தி தன்னையுங் கையினா லொய்யென வாங்கி இருத்தி னான்தன தடந்தனில் எம்மையாள் இறைவன்.

arutti tantiṭu kumaravēḷ orupuṭai amarap perutta maṉṉuyir yāvaiyum muṉṉarē peṟṟa orutti taṉṉaiyuṅ kaiyiṉā loyyeṉa vāṅki irutti ṉāṉtaṉa taṭantaṉil emmaiyāḷ iṟaivaṉ.

Report an error

கூல வார்குழல் இறைவிக்கும் எம்பிரான் றனக்கும் பால னாகிய குமரவேள் நடுவுறும் பான்மை ஞால மேலுறும் இரவொடு பகலுக்கும் நடுவாய் மாலை யானதொன் றழிவின்றி வைகுமா றொக்கும்.

kūla vārkuḻal iṟaivikkum empirāṉ ṟaṉakkum pāla ṉākiya kumaravēḷ naṭuvuṟum pāṉmai ñāla mēluṟum iravoṭu pakalukkum naṭuvāy mālai yāṉatoṉ ṟaḻiviṉṟi vaikumā ṟokkum.

Report an error

விடையுற்றிடு பரமற்குமவ் விமலைக்கும் விறற்சேய் இடையுற்றது கண்டார்அயன் மகவான்முத லிமையோர் கடையுற்றிடு கடலாமெனக் கல்லென்றிரைத் தணுகாப் புடையுற்றனர் எதிருற்றனர் புறனுற்றனர் புகழ்வார்.

viṭaiyuṟṟiṭu paramaṟkumav vimalaikkum viṟaṟcēy iṭaiyuṟṟatu kaṇṭārayaṉ makavāṉmuta limaiyōr kaṭaiyuṟṟiṭu kaṭalāmeṉak kalleṉṟirait taṇukāp puṭaiyuṟṟaṉar etiruṟṟaṉar puṟaṉuṟṟaṉar pukaḻvār.

Report an error

காமாரிதன் விழிதந்திடு கழிகாதல ஒழியாத் தோமாரில் புளனாகிய சூரன்கொடுந் தொழிலால் யாமாரினும் இழுக்குற்றனனம் எமையாள்இனி யென்னாப் பூமாரிகள பொழிந்தார்பணிந் தெழுந்தாசிகள் புகன்றார்.

kāmāritaṉ viḻitantiṭu kaḻikātala oḻiyāt tōmāril puḷaṉākiya cūraṉkoṭun toḻilāl yāmāriṉum iḻukkuṟṟaṉaṉam emaiyāḷiṉi yeṉṉāp pūmārikaḷa poḻintārpaṇin teḻuntācikaḷ pukaṉṟār.

Report an error

வாரற்பத முறவீங்கிய வன்னத்தன முருந்தின் மூரற்பவ ளச்சேயிதழ் முழுமாமதி வதனத் தாரற்பெயர் பெறுமங்கையர் அதுகாலையில் அரன்முன் பேரற்பொடு பணிந்தேயெழப் பெருந்தண்ணளி புரிந்தான்.

vāraṟpata muṟavīṅkiya vaṉṉattaṉa muruntiṉ mūraṟpava ḷaccēyitaḻ muḻumāmati vataṉat tāraṟpeyar peṟumaṅkaiyar atukālaiyil araṉmuṉ pēraṟpoṭu paṇintēyeḻap peruntaṇṇaḷi purintāṉ.

Report an error

கந்தன்றனை நீர்போற்றிய கடனால்இவன் உங்கள் மைந்தன்எனும் பெயராகுக மகிழ்வால்எவ ரேனும் நுந்தம்பக லிடைஇன்னவன் நோன்றாள்வழி படுவோர் தந்தங்குறை முடித்தேபரந் தனைநல்குவம் என்றான்.

kantaṉṟaṉai nīrpōṟṟiya kaṭaṉālivaṉ uṅkaḷ maintaṉeṉum peyarākuka makiḻvāleva rēṉum nuntampaka liṭaiiṉṉavaṉ nōṉṟāḷvaḻi paṭuvōr tantaṅkuṟai muṭittēparan taṉainalkuvam eṉṟāṉ.

Report an error

என்னாவருள் புரிகின்றுழி இமையத்தவள் சேயைத் தன்னாரரு ளொடுசென்றெதிர் தழுவித்தனத் திழிபால் பொன்னார்மணி வள்ளத்துமுன் பூரித்தருத் திடவே அன்னாள்முலை அமுதுக்கவை யாறொத்தொழு கினவே.

eṉṉāvaruḷ purikiṉṟuḻi imaiyattavaḷ cēyait taṉṉāraru ḷoṭuceṉṟetir taḻuvittaṉat tiḻipāl poṉṉārmaṇi vaḷḷattumuṉ pūrittarut tiṭavē aṉṉāḷmulai amutukkavai yāṟottoḻu kiṉavē.

Report an error

வானார்சுர நதிபோற்சர வணத்தூடவை புகலுந் தூநான்மறை கரைகண்டவன் முதல்வந்திடு துணைவ ரானாஅறு சிறுவோர்தமை அளித்தோன்சபித் திடலால் மீனாயவண் வதிகின்றவர் புகும்பாலினை மிசைந்தார்.

vāṉārcura natipōṟcara vaṇattūṭavai pukalun tūnāṉmaṟai karaikaṇṭavaṉ mutalvantiṭu tuṇaiva rāṉāaṟu ciṟuvōrtamai aḷittōṉcapit tiṭalāl mīṉāyavaṇ vatikiṉṟavar pukumpāliṉai micaintār.

Report an error

கயிலைக்கிறை யவள்மெய்த்தன கலசத்தினும் உகுபால் அயிலுற்றிடு பொழுதத்தினில் அறலிற்புடை பெயரும் அயிலைத்தனு வொருவித்தவ வடிவுற்றெழு தருவார் துயிலுற்றுணர் பவரொத்தனர் மயலற்றிடு தொடர்பால்.

kayilaikkiṟai yavaḷmeyttaṉa kalacattiṉum ukupāl ayiluṟṟiṭu poḻutattiṉil aṟaliṟpuṭai peyarum ayilaittaṉu voruvittava vaṭivuṟṟeḻu taruvār tuyiluṟṟuṇar pavarottaṉar mayalaṟṟiṭu toṭarpāl.

Report an error

அன்னாரறு வருமாயெழுந் தகன்பொய்கைவிட் டமலன் முன்னாய்வணங் கினர்போற்றலும் முனிமைந்தர்கள் பரங்கோ டென்னாவுரை பெறுகுன்றிடை இருந்தேதவம் புரிமின் சின்னாள்மிசை இவன்வந்தருள் செயுமென்றருள் செய்தான்.

aṉṉāraṟu varumāyeḻun takaṉpoykaiviṭ ṭamalaṉ muṉṉāyvaṇaṅ kiṉarpōṟṟalum muṉimaintarkaḷ paraṅkō ṭeṉṉāvurai peṟukuṉṟiṭai iruntētavam purimiṉ ciṉṉāḷmicai ivaṉvantaruḷ ceyumeṉṟaruḷ ceytāṉ.

Report an error

நன்றாலெனத் தொழுதன்னவர் நாதன் விடை பெற்றே சென்றார்உடு மடவாரொடு திருமாலயன் முதலா நின்றார்தமக் கருள்செய்தவர் நிலயம்புக அருளிப் பொன்றாழ்சடை யினன்வெள்ளியம் பொருப்பின்றலை புக்கான்.

naṉṟāleṉat toḻutaṉṉavar nātaṉ viṭai peṟṟē ceṉṟāruṭu maṭavāroṭu tirumālayaṉ mutalā niṉṟārtamak karuḷceytavar nilayampuka aruḷip poṉṟāḻcaṭai yiṉaṉveḷḷiyam poruppiṉṟalai pukkāṉ.

Report an error

அடையார்புர மெரிசெய்திடும் அமலன்கயி லையிற்போய் விடையூர்தியின் இழிந்தெதனி விறற்சேயொடும் வெற்பின் மடவாளொடு நடவாப்பொலன் மாமந்திரத் தலையின் இடையாரரி யணைமீமிசை இருந்தான் அருள் புரிந்தே.

aṭaiyārpura mericeytiṭum amalaṉkayi laiyiṟpōy viṭaiyūrtiyiṉ iḻintetaṉi viṟaṟcēyoṭum veṟpiṉ maṭavāḷoṭu naṭavāppolaṉ māmantirat talaiyiṉ iṭaiyārari yaṇaimīmicai iruntāṉ aruḷ purintē.

Report an error

சேயோனெனும் முன்னோன் றனைச் சிலம்பின்வரும் ஒன்பான் மாயோர்உத வியமைந்தரும் மற்றுள்ளஇ லக்கத் தூயோர்களுந் தொழுதேமலர் தூவிப்பணிந் தேத்தி ஆயோர்தம துயிரேயென அவனைக்குறித் தணைந்தார்.

cēyōṉeṉum muṉṉōṉ ṟaṉaic cilampiṉvarum oṉpāṉ māyōruta viyamaintarum maṟṟuḷḷai lakkat tūyōrkaḷun toḻutēmalar tūvippaṇin tētti āyōrtama tuyirēyeṉa avaṉaikkuṟit taṇaintār.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).