Skip to content

அசுர காண்டம் — காசிபன் புலம்புறு படலம் · காசிபன் புலம்புறு படலம்

kācipaṉ pulampuṟu paṭalam

kācipaṉ pulampuṟu paṭalam

kācipaṉ pulampuṟu paṭalam, from Acura Kāṇṭam; poems 2.87–2.138.

52 versesTamil with transliteration

A spear and lotus for chapter 35 of Kanda Puranam.

தேனீர் மையெனப் புகல்வாள் சிறிதுந் தானீ ரமிலாள் தனிமா யவளே மானீர் உமதாம் வயின்உற் றனளோ ஏனீர் மொழியா திரிகின் றதுவே.

tēṉīr maiyeṉap pukalvāḷ ciṟitun tāṉī ramilāḷ taṉimā yavaḷē māṉīr umatām vayiṉuṟ ṟaṉaḷō ēṉīr moḻiyā tirikiṉ ṟatuvē.

Report an error

சிலைவா ணுதலாள் திறன்மா யையெனும் வலைவீ சியெனா ருயிர்வவ் வினளால் கலையீர் இவண்நீர் அதுகண் டனிரோ நிலையீர் வெருளா நெடிதோ டுதிரால்.

cilaivā ṇutalāḷ tiṟaṉmā yaiyeṉum valaivī ciyeṉā ruyirvav viṉaḷāl kalaiyīr ivaṇnīr atukaṇ ṭaṉirō nilaiyīr veruḷā neṭitō ṭutirāl.

Report an error

கடிதேர் களிறே கழிகா தலையாய்ப் பிடிதேர் பரிசாற் பெயர்வாய் தமியேன் நொடிதே தளரா நெறிநே டினையக் கொடியாள் தலையுங் கொணராய் கொணராய்.

kaṭitēr kaḷiṟē kaḻikā talaiyāyp piṭitēr paricāṟ peyarvāy tamiyēṉ noṭitē taḷarā neṟinē ṭiṉaiyak koṭiyāḷ talaiyuṅ koṇarāy koṇarāy.

Report an error

அருளால் உனையே அளியென் றனரால் பெரியார் அவர்சொற் பிழையா குவதோ தரியா அரியே தமியேன் உயிரைத் தெரிவான் நினைவோ திரிகின் றனேயே.

aruḷāl uṉaiyē aḷiyeṉ ṟaṉarāl periyār avarcoṟ piḻaiyā kuvatō tariyā ariyē tamiyēṉ uyirait terivāṉ niṉaivō tirikiṉ ṟaṉēyē.

Report an error

மேவிப் பிரிவாள் விழிபோல் அடுவாய் ஆவிக் குறவோ அலைமன் மதனப் பாவிக் கும்இனிப் படையாய் வருவாய் வாவிக் குவளாய் எனைவாட் டுதியோ.

mēvip pirivāḷ viḻipōl aṭuvāy āvik kuṟavō alaimaṉ mataṉap pāvik kumiṉip paṭaiyāy varuvāy vāvik kuvaḷāy eṉaivāṭ ṭutiyō.

Report an error

செந்தா மரைமேல் திருவாம் எனவே வந்தாள் தணியா மயல்செய் தகல்வாள் அந்தோ வினவா அவளைக் கொணர்வான் சந்தா கிலையென் சந்தே உரையாய்.

centā maraimēl tiruvām eṉavē vantāḷ taṇiyā mayalcey takalvāḷ antō viṉavā avaḷaik koṇarvāṉ cantā kilaiyeṉ cantē uraiyāy.

Report an error

பொன்னிற் பொலிவுற் றிடுபூங் கமலந் தன்னில் துணையோ டுதழீஇத் தணவா அன்னப் பெடைகாள் அறனோ புகலீர் என்னைத் தனிவைத் தவளே கியதே.

poṉṉiṟ polivuṟ ṟiṭupūṅ kamalan taṉṉil tuṇaiyō ṭutaḻīit taṇavā aṉṉap peṭaikāḷ aṟaṉō pukalīr eṉṉait taṉivait tavaḷē kiyatē.

Report an error

தணியா வகைமால் தமியேற் கருளித் துணியா அகல்வாள் படர்தொல் நெறியைக் குணியா வுரைசெய் குதியென் றிடினுங் கணியாய் இதுவோ கணிதன் இயல்பே.

taṇiyā vakaimāl tamiyēṟ karuḷit tuṇiyā akalvāḷ paṭartol neṟiyaik kuṇiyā vuraicey kutiyeṉ ṟiṭiṉuṅ kaṇiyāy ituvō kaṇitaṉ iyalpē.

Report an error

படைவேள் கணையே பரிதிக் குறவே படவார் முகமே மதியின் பகையே விடமே புரையும் விழிமெல் லியல்நின் னிடமே வருவாள் ஒளியா திசையாய்.

paṭaivēḷ kaṇaiyē paritik kuṟavē paṭavār mukamē matiyiṉ pakaiyē viṭamē puraiyum viḻimel liyalniṉ ṉiṭamē varuvāḷ oḷiyā ticaiyāy.

Report an error

நின்றீர் மிகவுந் நெடியீர் பெரியீர் இன்றீ ரமிலா தெனைநீங் கினள்முன் சென்றீ ரவள்போஞ் செயல்கா ணுதிர்செய் குன்றீர் மொழியீர் குறைசெய் துளனோ.

niṉṟīr mikavun neṭiyīr periyīr iṉṟī ramilā teṉainīṅ kiṉaḷmuṉ ceṉṟī ravaḷpōñ ceyalkā ṇutircey kuṉṟīr moḻiyīr kuṟaicey tuḷaṉō.

Report an error

மயிலே ரியலாள் ஒருமா யவளே இயலே தறியேன் இவண்நின் றனளோ பயிலே சிலநீ பகர்வாய் அதனால் குயிலே எனதா ருயிர்கொள் ளுதியோ.

mayilē riyalāḷ orumā yavaḷē iyalē taṟiyēṉ ivaṇniṉ ṟaṉaḷō payilē cilanī pakarvāy ataṉāl kuyilē eṉatā ruyirkoḷ ḷutiyō.

Report an error

நின்பால் வரவே நினைவாய் மொழிவாள் என்பால் இலையிவ் வழியே கினளால் மென்பா லெனமே வியமா ருதமே தென்பால் வருவாய் செயல்கூ றுதிநீ.

niṉpāl varavē niṉaivāy moḻivāḷ eṉpāl ilaiyiv vaḻiyē kiṉaḷāl meṉpā leṉamē viyamā rutamē teṉpāl varuvāy ceyalkū ṟutinī.

Report an error

ஆரத் தடமே அருள்நீ ரினைஉன் ளீரத் தினையென் றெவரும் புகல்வார் சாரிற் சுடுவாய் தளரேல் எனவே சோர்வுற் றிடுமென் துயர்தீர்க் கிலையே.

ārat taṭamē aruḷnī riṉaiuṉ ḷīrat tiṉaiyeṉ ṟevarum pukalvār cāriṟ cuṭuvāy taḷarēl eṉavē cōrvuṟ ṟiṭumeṉ tuyartīrk kilaiyē.

Report an error

களிசேர் மயிலே கவிரா கியவாய்க் கிளியே குயிலே கிளைதான் அலவோ தளரா வகைநீர் தகவே மொழியா அளியேன் உயிருக் கரணா குதிரால்.

kaḷicēr mayilē kavirā kiyavāyk kiḷiyē kuyilē kiḷaitāṉ alavō taḷarā vakainīr takavē moḻiyā aḷiyēṉ uyiruk karaṇā kutirāl.

Report an error

அறவே துயர்செய் தணுகா திகலித் துறவே துணிவாள் தொடர்புந் தொடர்போ உறவே யினிநீர் உவள்போம் நெறியைப் புறவே தமியேன் பெறவே புகல்வீர்.

aṟavē tuyarcey taṇukā tikalit tuṟavē tuṇivāḷ toṭarpun toṭarpō uṟavē yiṉinīr uvaḷpōm neṟiyaip puṟavē tamiyēṉ peṟavē pukalvīr.

Report an error

எனவே பலவும் இயல்சேர் முனிவன் மனமால் கொடுசொற் றிடமற் றதனை வினவா மகிழா வியன்மெய்ம் மறையா அனமே யனையாள் அவணுற் றிடலும்.

eṉavē palavum iyalcēr muṉivaṉ maṉamāl koṭucoṟ ṟiṭamaṟ ṟataṉai viṉavā makiḻā viyaṉmeym maṟaiyā aṉamē yaṉaiyāḷ avaṇuṟ ṟiṭalum.

Report an error

நோற்குறு முனிவன் தன்பால் நொய்தென மாயை யெய்தித் தீர்க்கலா மையல் பூட்டிச் செய்தவம் அழித்தாள் அந்தோ பார்க்கிலன் இதனை யென்னாப் பரிவுசெய் தகன்றான் போலக் கார்க்கடல் வரைப்பின் ஏகிக் கதிரவன் கரந்தான் அன்றே.

nōṟkuṟu muṉivaṉ taṉpāl noyteṉa māyai yeytit tīrkkalā maiyal pūṭṭic ceytavam aḻittāḷ antō pārkkilaṉ itaṉai yeṉṉāp parivucey takaṉṟāṉ pōlak kārkkaṭal varaippiṉ ēkik katiravaṉ karantāṉ aṉṟē.

Report an error

தந்தைகா சிபன்என் றோதுந் தவமுனி யவன்பாற் சார வந்துளாள் யாயே அன்றோ மற்றியவர் தலைப்பெய் கின்ற முந்துறு புணர்ச்சி காண்டல்முறைகொலோ புதல்வற் கென்னாச் சிந்தைசெய் தகன்றான் போன்று தினகரக் கடவுள் சென்றான்.

tantaikā cipaṉeṉ ṟōtun tavamuṉi yavaṉpāṟ cāra vantuḷāḷ yāyē aṉṟō maṟṟiyavar talaippey kiṉṟa muntuṟu puṇarcci kāṇṭalmuṟaikolō putalvaṟ keṉṉāc cintaicey takaṉṟāṉ pōṉṟu tiṉakarak kaṭavuḷ ceṉṟāṉ.

Report an error

அந்தமில் நிருதர் என்னும் அளவைதீர் பானாட் கங்குல் வந்திடு மின்னே யென்னா வல்லையின் மதித்து வானத் திந்திரன் ஆணை போற்றும் இலங்கெழில் நேமிப் புத்தேள் சிந்துவிற் கரத்தல் போன்று செங்கதிர்ச் செல்வன் போனான்.

antamil nirutar eṉṉum aḷavaitīr pāṉāṭ kaṅkul vantiṭu miṉṉē yeṉṉā vallaiyiṉ matittu vāṉat tintiraṉ āṇai pōṟṟum ilaṅkeḻil nēmip puttēḷ cintuviṟ karattal pōṉṟu ceṅkatirc celvaṉ pōṉāṉ.

Report an error

வேலையின் இரவி செல்ல விண்ணவர் யாருங் கொண்ட வாலிய திருவுஞ் சீரும் வன்மையும் அகல மாயை பாலுறும் அவுணர் தானைப் பல்குழுப் பரவிற் றென்ன மாலையும் இருளின் சூழ்வும் வல்லைவந் திறுத்த வன்றே.

vēlaiyiṉ iravi cella viṇṇavar yāruṅ koṇṭa vāliya tiruvuñ cīrum vaṉmaiyum akala māyai pāluṟum avuṇar tāṉaip palkuḻup paraviṟ ṟeṉṉa mālaiyum iruḷiṉ cūḻvum vallaivan tiṟutta vaṉṟē.

Report an error

மாகமேல் நிமிர்ந்த செக்கர் மாலையம் பொழுது நல்கூர்ந் திகெனா இரக்கும் நீரார்க் கிம்மியின் துணைய தேனும் ஓகையால் வழங்கா நீதி ஒன்னலான் ஒருவன் செல்வம் போகுமா றென்ன வாளா பொள்ளெனப் போயிற் றாமால்.

mākamēl nimirnta cekkar mālaiyam poḻutu nalkūrn tikeṉā irakkum nīrārk kimmiyiṉ tuṇaiya tēṉum ōkaiyāl vaḻaṅkā nīti oṉṉalāṉ oruvaṉ celvam pōkumā ṟeṉṉa vāḷā poḷḷeṉap pōyiṟ ṟāmāl.

Report an error

இரும்பிறை உருவின் எஃகார் கூர்ங்குயத் தினுமீர்க் கல்லா வரம்பறும் இருளின் கற்றை கணங்களும் மருளு நிராற் பரம்பிய தியாண்டு மாகிப் பாரெனப் பட்ட மாது கரும்படாம் ஒன்று மேற்கோள் காட்சியைப் போன்ற தன்றே.

irumpiṟai uruviṉ eḵkār kūrṅkuyat tiṉumīrk kallā varampaṟum iruḷiṉ kaṟṟai kaṇaṅkaḷum maruḷu nirāṟ parampiya tiyāṇṭu mākip pāreṉap paṭṭa mātu karumpaṭām oṉṟu mēṟkōḷ kāṭciyaip pōṉṟa taṉṟē.

Report an error

வண்டுழாய் மோலி மைந்தன் மாலிருட் கங்குல் வேழத் தெண்டரு வதனம் பட்ட இரும்புகர்ப் புள்ளி யென்ன அண்டர்தந் தருக்கள் சிந்தும் அணிமல ரென்ன வான்றோய் கொண்டலிற் படுமுத் தென்னத் தாரகை குலவிற் றன்றே.

vaṇṭuḻāy mōli maintaṉ māliruṭ kaṅkul vēḻat teṇṭaru vataṉam paṭṭa irumpukarp puḷḷi yeṉṉa aṇṭartan tarukkaḷ cintum aṇimala reṉṉa vāṉṟōy koṇṭaliṟ paṭumut teṉṉat tārakai kulaviṟ ṟaṉṟē.

Report an error

துண்ணென உலக முற்றுஞ் சூழ்ந்தபே ரிருளா நஞ்சைத் தெண்ணில வாகி யுள்ள செங்கையால் வாரி நுங்கி விண்ணவர் புகழ நீல வியன்நிறந் தன்பாற் காட்டுங் கண்ணுதல் போன்று முந்நீர்த் தோன்றினன் கதிர்வெண் டிங்கள்.

tuṇṇeṉa ulaka muṟṟuñ cūḻntapē riruḷā nañcait teṇṇila vāki yuḷḷa ceṅkaiyāl vāri nuṅki viṇṇavar pukaḻa nīla viyaṉniṟan taṉpāṟ kāṭṭuṅ kaṇṇutal pōṉṟu munnīrt tōṉṟiṉaṉ katirveṇ ṭiṅkaḷ.

Report an error

அழுந்துறு பாலின் வேலை அமரர்கள் கடைந்த காலைச் செழுந்துளி மணிக ளொடுந் தெறித்தென உடுக்கள் தோன்றக் கழுந்துறும் அவுணர் என்னுங் காரிருள் தொலைய அங்கண் எழுந்ததோ ரமுதம் போன்றும் இலங்கினன் இந்து வென்பான்.

aḻuntuṟu pāliṉ vēlai amararkaḷ kaṭainta kālaic ceḻuntuḷi maṇika ḷoṭun teṟitteṉa uṭukkaḷ tōṉṟak kaḻuntuṟum avuṇar eṉṉuṅ kāriruḷ tolaiya aṅkaṇ eḻuntatō ramutam pōṉṟum ilaṅkiṉaṉ intu veṉpāṉ.

Report an error

இரவெனும் வல்லோன் ஞால மென்பதோர் உலையில் வேலைக் கரியுறு வடவைத் தீயில் களங்கொடு வெண்பொன் சேர்த்தி விரைவொடு செம்மை செய்து மீட்டுமோர் மருந்தால் தொல்லை உருவுசெய் தென்னச் செங்கேழ் ஒளிமதி வெளிய னானான்.

iraveṉum vallōṉ ñāla meṉpatōr ulaiyil vēlaik kariyuṟu vaṭavait tīyil kaḷaṅkoṭu veṇpoṉ cērtti viraivoṭu cemmai ceytu mīṭṭumōr maruntāl tollai uruvucey teṉṉac ceṅkēḻ oḷimati veḷiya ṉāṉāṉ.

Report an error

அண்டருங் ககன மென்னும் அகலிருந் தடத்திற் பூத்த விண்டதோர் குவளை ஆம்பல் போலுமால் மீன்கள் வெள்ளைப் புண்டரீ கத்தைப் போலும் புதுமதி அதன்கட் டேனார் வண்டினம் ஒப்ப தன்றே மாசுதோய் களங்க மாதோ.

aṇṭaruṅ kakaṉa meṉṉum akalirun taṭattiṟ pūtta viṇṭatōr kuvaḷai āmpal pōlumāl mīṉkaḷ veḷḷaip puṇṭarī kattaip pōlum putumati ataṉkaṭ ṭēṉār vaṇṭiṉam oppa taṉṟē mācutōy kaḷaṅka mātō.

Report an error

அலைதரு நேமி என்னும் ஆன்றதோர் தடத்தின் பாலாம் நிலவெனும் வலையை யோச்சி நிழல்மதிப் பரதன் ஈர்த்துப் பலநிறங் கொண்ட மீன்கள் பன்முறை கவர்ந்து வான்மேற் புலருற விரித்த தேபோற் பொலிந்தன உடுவின் பொம்மல்.

alaitaru nēmi eṉṉum āṉṟatōr taṭattiṉ pālām nilaveṉum valaiyai yōcci niḻalmatip parataṉ īrttup palaniṟaṅ koṇṭa mīṉkaḷ paṉmuṟai kavarntu vāṉmēṟ pularuṟa viritta tēpōṟ polintaṉa uṭuviṉ pommal.

Report an error

கழிதரும் உவரி நீத்தங் கையகப் படுத்து மாந்தி எழிலிகள் வான மீப்போய் இருநிலத் துதவல் காணூஉப் பழிதவிர் மதியப் புத்தேள் பாற்கடல் பருகி யாண்டும் பொழிதரும் அமிர்தம் என்னப் புதுநிலாப் பூத்த தன்றே.

kaḻitarum uvari nīttaṅ kaiyakap paṭuttu mānti eḻilikaḷ vāṉa mīppōy irunilat tutaval kāṇūup paḻitavir matiyap puttēḷ pāṟkaṭal paruki yāṇṭum poḻitarum amirtam eṉṉap putunilāp pūtta taṉṟē.

Report an error

மலர்ந்திடுங் கடவுட் டிங்கள் வாணிலாக் கற்றை எங்குங் கலந்தன உலகில் யாருங் களித்தனர் குமுத மாதி அலர்ந்தன தளிர்த்த சோலை அம்புயப் போது செல்வி புலர்ந்தன ஒடுங்கு கின்ற புகைந்தன பிரிந்தோர் புந்தி.

malarntiṭuṅ kaṭavuṭ ṭiṅkaḷ vāṇilāk kaṟṟai eṅkuṅ kalantaṉa ulakil yāruṅ kaḷittaṉar kumuta māti alarntaṉa taḷirtta cōlai ampuyap pōtu celvi pularntaṉa oṭuṅku kiṉṟa pukaintaṉa pirintōr punti.

Report an error

அல்லவை புரியா ரேனும் அறிவினிற் பெரியா ரேனும் எல்லவர் தமக்கு நண்பாய் இனியவே புரிதற் பாற்றோ பல்லுயிர்த் தொகைக்கும் இன்பம் பயந்திடு மதிகண் டன்றோ புல்லிய கமல மெல்லாம் பொலிவழிந் திட்ட வன்றே.

allavai puriyā rēṉum aṟiviṉiṟ periyā rēṉum ellavar tamakku naṇpāy iṉiyavē puritaṟ pāṟṟō palluyirt tokaikkum iṉpam payantiṭu matikaṇ ṭaṉṟō pulliya kamala mellām polivaḻin tiṭṭa vaṉṟē.

Report an error

திங்களின் மலர்ந்த செல்வித் தேன்முரல் குமுதம் எங்கோன் பங்கமுற் றார்கண் மேவான் பதுமம்ஏன் ஒடுங்கிற் றென்னாத் தங்களில் உரைத்தல் போலாஞ்சசிக்கது உண்மை எம்பால் இங்கிலை யென்ப போன்ற இசையளி பொதிந்த கஞ்சம்.

tiṅkaḷiṉ malarnta celvit tēṉmural kumutam eṅkōṉ paṅkamuṟ ṟārkaṇ mēvāṉ patumamēṉ oṭuṅkiṟ ṟeṉṉāt taṅkaḷil uraittal pōlāñcacikkatu uṇmai empāl iṅkilai yeṉpa pōṉṟa icaiyaḷi potinta kañcam.

Report an error

கங்குல்வந் திறுத்த காலைக் கடிமனைக் கதவம் பூட்டிச் செங்கண்மால் தன்னைப் புல்லித் திருமகள் இருந்தா ளென்னக் கொங்கவிழ் கின்ற செங்கேழ்க் கோகன தங்கள் எல்லாம் பொங்கிசை மணிவண் டோடும் பொதிந்தன பொய்கை யெங்கும்.

kaṅkulvan tiṟutta kālaik kaṭimaṉaik katavam pūṭṭic ceṅkaṇmāl taṉṉaip pullit tirumakaḷ iruntā ḷeṉṉak koṅkaviḻ kiṉṟa ceṅkēḻk kōkaṉa taṅkaḷ ellām poṅkicai maṇivaṇ ṭōṭum potintaṉa poykai yeṅkum.

Report an error

ஆனதோர் காலையில் அமரர் தம்மையுந் தானவர் தம்மையுந் தந்த காசிபன் வானகம் எழுதரும் மதியின் தெண்ணிலா மேனிய தடைதலும் வெதும்பி னானரோ.

āṉatōr kālaiyil amarar tammaiyun tāṉavar tammaiyun tanta kācipaṉ vāṉakam eḻutarum matiyiṉ teṇṇilā mēṉiya taṭaitalum vetumpi ṉāṉarō.

Report an error

குலைந்தனன் தன்னுளங் குறைந்த வன்மையன் அலந்தனன் ஒடுங்கினன் புலம்பி அங்கண்வான் நிலந்தனில் எழுதரு விலவை நோக்கினான்.

kulaintaṉaṉ taṉṉuḷaṅ kuṟainta vaṉmaiyaṉ alantaṉaṉ oṭuṅkiṉaṉ pulampi aṅkaṇvāṉ nilantaṉil eḻutaru vilavai nōkkiṉāṉ.

Report an error

காலையில் எழுந்தசெங் கதிரின் நாயகன் மாலையம் பொழுதினில் மறைந்து கீழ்த்திசை வேலையில் விரைவுடன் மீண்டும் வந்துளான் போலும்அந் தோவிது புதுமையோ வென்பான்.

kālaiyil eḻuntaceṅ katiriṉ nāyakaṉ mālaiyam poḻutiṉil maṟaintu kīḻtticai vēlaiyil viraivuṭaṉ mīṇṭum vantuḷāṉ pōluman tōvitu putumaiyō veṉpāṉ.

Report an error

ஞாயிறும் அன்றெனில் நடுவ ணாகியே பாயிரும் புணரியுட் பயின்று தோன்றலால் ஏயென உலகட எண்ணி யாண்டுறுந் தீயெனுங் கடவுளே திங்கள்அன் றென்பான்.

ñāyiṟum aṉṟeṉil naṭuva ṇākiyē pāyirum puṇariyuṭ payiṉṟu tōṉṟalāl ēyeṉa ulakaṭa eṇṇi yāṇṭuṟun tīyeṉuṅ kaṭavuḷē tiṅkaḷaṉ ṟeṉpāṉ.

Report an error

இந்துவென் றுலகெலாம் இசைப்ப நின்றதோர் செந்தழற் கடவுள்இத் திசையிற் செல்வுழி வந்ததோர் சோதிகொல் வானம் எங்கணும் அந்தியஞ் செக்கரென் றடைந்தவா றென்பான்.

intuveṉ ṟulakelām icaippa niṉṟatōr centaḻaṟ kaṭavuḷit ticaiyiṟ celvuḻi vantatōr cōtikol vāṉam eṅkaṇum antiyañ cekkareṉ ṟaṭaintavā ṟeṉpāṉ.

Report an error

காண்டகு மதியெனக் கழறுஞ் செந்தழல் மூண்டிடு புகைகொலோ முன்னம் வானமும் ஈண்டுறு தரணியுந் திசையும் எங்குமாய் நீண்டதோர் இருளென நிமிர்ந்தவா றென்பான்.

kāṇṭaku matiyeṉak kaḻaṟuñ centaḻal mūṇṭiṭu pukaikolō muṉṉam vāṉamum īṇṭuṟu taraṇiyun ticaiyum eṅkumāy nīṇṭatōr iruḷeṉa nimirntavā ṟeṉpāṉ.

Report an error

தெண்டிசைப் பிறந்திடுந் திங்கட் செந்தழல் கொண்டது வாலிதாங் கோலங் காரிடைக் கண்டனன் இத்திறங் கரையில் ஆவிகள் உண்டதிற் பெற்றதிவ் வுருவமே யென்பான்.

teṇṭicaip piṟantiṭun tiṅkaṭ centaḻal koṇṭatu vālitāṅ kōlaṅ kāriṭaik kaṇṭaṉaṉ ittiṟaṅ karaiyil āvikaḷ uṇṭatiṟ peṟṟativ vuruvamē yeṉpāṉ.

Report an error

ஊனமில் செக்கராய் உதித்துப் பின்னரே வானிற னாகிய மதியத் தீத்தரத் தானிறை புலிங்கமே அலது தாரகை மீனெனப் படுவது வேறுண் டோவென்பான்.

ūṉamil cekkarāy utittup piṉṉarē vāṉiṟa ṉākiya matiyat tīttarat tāṉiṟai puliṅkamē alatu tārakai mīṉeṉap paṭuvatu vēṟuṇ ṭōveṉpāṉ.

Report an error

மால்கடல் அதனிடை வந்த பான்மையால் ஆலமி தாகுமால் அமரர்க் கன்றெழு நீலமெய் யுருவினை நீத்துத் திங்களின் கோலமொ டின்றிவட் குறுகிற் றோவென்பான்.

mālkaṭal ataṉiṭai vanta pāṉmaiyāl ālami tākumāl amarark kaṉṟeḻu nīlamey yuruviṉai nīttut tiṅkaḷiṉ kōlamo ṭiṉṟivaṭ kuṟukiṟ ṟōveṉpāṉ.

Report an error

இங்கிவை யாவுமன் றேர்கொள் வேலையில் வெங்கனல் முழுவதும் விடமும் ஆர்ந்தெழீஇ மங்குலிற் சிதறிட வானிற் புக்கனன் திங்களே யாமிது திண்ணம்என் கின்றான்.

iṅkivai yāvumaṉ ṟērkoḷ vēlaiyil veṅkaṉal muḻuvatum viṭamum ārnteḻīi maṅkuliṟ citaṟiṭa vāṉiṟ pukkaṉaṉ tiṅkaḷē yāmitu tiṇṇameṉ kiṉṟāṉ.

Report an error

இனையன மருட்கையால் இசைத்த காசிப முனிவரன் என்பவன் முன்னை மாயையை நினைபவ னாகியே நெடிது காதலால் அனையவள் தனைவிளித் தரற்றல் மேயினான்.

iṉaiyaṉa maruṭkaiyāl icaitta kācipa muṉivaraṉ eṉpavaṉ muṉṉai māyaiyai niṉaipava ṉākiyē neṭitu kātalāl aṉaiyavaḷ taṉaiviḷit taraṟṟal mēyiṉāṉ.

Report an error

கொங்குண் கோதைத் தாழ்குழல் நல்லீர் கொடியேன்முன் எங்கு மெங்குங் காணுறு கின்றீர் எழின்மின்னின் பொங்குஞ் சோதி போலெதிர் புல்லும் படிநில்லீர் மங்கும் போதோ சேருதிர் நெஞ்சம் வலியீரே.

koṅkuṇ kōtait tāḻkuḻal nallīr koṭiyēṉmuṉ eṅku meṅkuṅ kāṇuṟu kiṉṟīr eḻiṉmiṉṉiṉ poṅkuñ cōti pōletir pullum paṭinillīr maṅkum pōtō cērutir neñcam valiyīrē.

Report an error

முன்னஞ் செய்தீர் காதலை நோன்பை முதஅ லாடும் பின்னஞ் செய்தீர் மாரனை ஏவிப் பிழைசெய்தீர் சின்னஞ் செய்தீர் நல்லுணர் வெல்லாஞ் சிறியேனுக் கின்னஞ் செய்யும் பெற்றியும் உண்டேல் இசையீரே.

muṉṉañ ceytīr kātalai nōṉpai mutaa lāṭum piṉṉañ ceytīr māraṉai ēvip piḻaiceytīr ciṉṉañ ceytīr nalluṇar vellāñ ciṟiyēṉuk kiṉṉañ ceyyum peṟṟiyum uṇṭēl icaiyīrē.

Report an error

வாகாய் நின்ற குன்றமும் யாவும் வருவித்தீர் ஏகா நின்றீர் இவ்விடை தன்னில் ஏனைநீங்கிப் போகா நின்றீர் வல்லையின் மீண்டும் புவியெங்கும் ஆகா நின்றீர் நுஞ்செயல் யாரே அறிகிற்பார்.

vākāy niṉṟa kuṉṟamum yāvum varuvittīr ēkā niṉṟīr ivviṭai taṉṉil ēṉainīṅkip pōkā niṉṟīr vallaiyiṉ mīṇṭum puviyeṅkum ākā niṉṟīr nuñceyal yārē aṟikiṟpār.

Report an error

பற்றே நும்பால் ஆயினன் முன்னம் பயில்செய்கை அற்றேன் வேளால் ஆற்றவும் நொந்தேன் அஃதொயும் உற்றேன் அல்லேன் உம்மொடும் இன்னும் உழல்கின்றேன் பெற்றேன் வாளா மாய்ந்தனன் என்னும் பிழையொன்றே.

paṟṟē numpāl āyiṉaṉ muṉṉam payilceykai aṟṟēṉ vēḷāl āṟṟavum nontēṉ aḵtoyum uṟṟēṉ allēṉ ummoṭum iṉṉum uḻalkiṉṟēṉ peṟṟēṉ vāḷā māyntaṉaṉ eṉṉum piḻaiyoṉṟē.

Report an error

நேயங் கொண்டீ ராமென வந்தீர் நெறிநில்லா மாயங் கொண்டீர் வன்றிறல் கொண்டீர் மயல்செய்யுங் காயங் கொண்டீர் ஆருயிர் நிற்கக் கருதீரேல் தாயம் கொண்டீர் கூற்றொடு போலுந் தனிவந்தீர்.

nēyaṅ koṇṭī rāmeṉa vantīr neṟinillā māyaṅ koṇṭīr vaṉṟiṟal koṇṭīr mayalceyyuṅ kāyaṅ koṇṭīr āruyir niṟkak karutīrēl tāyam koṇṭīr kūṟṟoṭu pōlun taṉivantīr.

Report an error

வேண்டேன் வேறோர் மாதரை நும்பால் வியன்மோகம் பூண்டேன் உம்மை மாயவ ரென்னும் பொருள்கண்டேன் ஈண்டே சென்றீர் போல்கர வுற்றீர் எய்தீரேல் மாண்டேன் இன்னே ஆருயிர் நிற்பான் வருவீரே.

vēṇṭēṉ vēṟōr mātarai numpāl viyaṉmōkam pūṇṭēṉ ummai māyava reṉṉum poruḷkaṇṭēṉ īṇṭē ceṉṟīr pōlkara vuṟṟīr eytīrēl māṇṭēṉ iṉṉē āruyir niṟpāṉ varuvīrē.

Report an error

ஒன்றே யாகும் மாயம தால்நீ ருலகெல்லாம் வென்றே செல்வீர் என்னுயிர் கொள்வான் விழைவீரேல் நன்றே நன்றே நல்குவன் யானே நனிநண்பால் சென்றே யோர்கால் மாமயல் தீரச் சேர்வீரே.

oṉṟē yākum māyama tālnī rulakellām veṉṟē celvīr eṉṉuyir koḷvāṉ viḻaivīrēl naṉṟē naṉṟē nalkuvaṉ yāṉē naṉinaṇpāl ceṉṟē yōrkāl māmayal tīrac cērvīrē.

Report an error

என்னா வென்னா இத்தகை பன்னி இடராழித் துன்னா மாழ்கிச் சோர்தரும் எல்லைத் துகடீரும் மின்னா கின்ற மாயவள் அன்னான் விழிகாண முன்னாய் நின்றாள் எவ்வினை கட்கு முதலானாள்.

eṉṉā veṉṉā ittakai paṉṉi iṭarāḻit tuṉṉā māḻkic cōrtarum ellait tukaṭīrum miṉṉā kiṉṟa māyavaḷ aṉṉāṉ viḻikāṇa muṉṉāy niṉṟāḷ evviṉai kaṭku mutalāṉāḷ.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).