Skip to content

அசுர காண்டம் — பட்டாபிடேகப் படலம் · பட்டாபிடேகப் படலம்

paṭṭāpiṭēkap paṭalam

paṭṭāpiṭēkap paṭalam

paṭṭāpiṭēkap paṭalam, from Acura Kāṇṭam; poems 2.991–2.1004.

14 versesTamil with transliteration

A spear and lotus for chapter 49 of Kanda Puranam.

மற்றவ் வீர மகேந்திரம் நண்ணியே உற்று நாடியவ் வும்பர்தங் கம்மியன் கற்ற விஞ்சை வியந்து களிப்புறீஇக் கொற்ற நீடுதன் கோயிலை நண்ணினான்.

maṟṟav vīra makēntiram naṇṇiyē uṟṟu nāṭiyav vumpartaṅ kammiyaṉ kaṟṟa viñcai viyantu kaḷippuṟīik koṟṟa nīṭutaṉ kōyilai naṇṇiṉāṉ.

Report an error

நண்ணு கின்றுழி நான்முக னாதியாம் விண்ணு ளோர்கள் வியன்முடி சூட்டுதும் அண்ண லுக்கென் றவற்றிற்கு வேண்டிய எண்ணில் பல்பொருள் யாவுமுய்த் தாரரோ.

naṇṇu kiṉṟuḻi nāṉmuka ṉātiyām viṇṇu ḷōrkaḷ viyaṉmuṭi cūṭṭutum aṇṇa lukkeṉ ṟavaṟṟiṟku vēṇṭiya eṇṇil palporuḷ yāvumuyt tārarō.

Report an error

கோவில் நண்ணிய கொற்றவன் மற்றொரு தாவில் பீடிகை தன்மிசை வைகியே மாவு லாவிய மால்கடல் தெண்புனல் தேவர் ஆட்டச் சிறப்புடன் ஆடினான்.

kōvil naṇṇiya koṟṟavaṉ maṟṟoru tāvil pīṭikai taṉmicai vaikiyē māvu lāviya mālkaṭal teṇpuṉal tēvar āṭṭac ciṟappuṭaṉ āṭiṉāṉ.

Report an error

ஆடி யம்பொனின் ஆடையு டீஇமலர் சூடி ஒண்கலன் தூயன் பூண்டுபின் பீடு சேர்தரு பின்னவர் பால்வர நீடு காதல் நிருதர் புகழ்வே.

āṭi yampoṉiṉ āṭaiyu ṭīimalar cūṭi oṇkalaṉ tūyaṉ pūṇṭupiṉ pīṭu cērtaru piṉṉavar pālvara nīṭu kātal nirutar pukaḻvē.

Report an error

நிகரி லாத நிருதர்க் கிறைதொழப் புகரு மாமுனி வோரும் புகழ்ந்திட மிகந டுங்கிய விண்ணவர் போற்றிட மகப திக்கு மனந்தளர் வெய்தவே.

nikari lāta nirutark kiṟaitoḻap pukaru māmuṉi vōrum pukaḻntiṭa mikana ṭuṅkiya viṇṇavar pōṟṟiṭa makapa tikku maṉantaḷar veytavē.

Report an error

வந்து சீய மணித்தவி சேறினன் அந்த வெல்லையில் அச்சுதற் காமெனும் இந்தி ரத்திரு மாமுடி ஏந்தியே சுந்த ரத்தொடு நான்முகன் சூட்டினான்.

vantu cīya maṇittavi cēṟiṉaṉ anta vellaiyil accutaṟ kāmeṉum inti rattiru māmuṭi ēntiyē cunta rattoṭu nāṉmukaṉ cūṭṭiṉāṉ.

Report an error

கண்டு தானவர் காசிபன் காதலன் புண்ட ரீகப் பொலன்கழல் தாழ்ந்தெழா அண்டொ ணாமகிழ் வால்அடுந் தேறலை உண்ட ளாரின் உளங்களிப் பெய்தினார்.

kaṇṭu tāṉavar kācipaṉ kātalaṉ puṇṭa rīkap polaṉkaḻal tāḻnteḻā aṇṭo ṇāmakiḻ vālaṭun tēṟalai uṇṭa ḷāriṉ uḷaṅkaḷip peytiṉār.

Report an error

அன்ன வேலை அமரர் முனிவர்கள் பொன்ன வாநறும் போது கரங்கொடே மன்னர் மன்னன் மணிமுடி யின்மிசை முன்னி வாழ்த்தி முறைமுறை வீசினார்.

aṉṉa vēlai amarar muṉivarkaḷ poṉṉa vānaṟum pōtu karaṅkoṭē maṉṉar maṉṉaṉ maṇimuṭi yiṉmicai muṉṉi vāḻtti muṟaimuṟai vīciṉār.

Report an error

பாங்குறு தவிசின் பாலில் துணைவர்பங் கயன்மால் தம்மை ஈங்கினி திருத்திர் என்ன இருந்தனர் ஏவ லாலே ஓங்கிய மகவான் கொண்டான் களாசிஒண் ணிதியின் கோமான் தாங்கினன் அடைப்பை மற்றச் சமீரணர் கவரி கொண்டார்.

pāṅkuṟu taviciṉ pālil tuṇaivarpaṅ kayaṉmāl tammai īṅkiṉi tiruttir eṉṉa iruntaṉar ēva lālē ōṅkiya makavāṉ koṇṭāṉ kaḷācioṇ ṇitiyiṉ kōmāṉ tāṅkiṉaṉ aṭaippai maṟṟac camīraṇar kavari koṇṭār.

Report an error

நிருதர்தங் குரிசி லான நெடுந்தகை யுடைவாள் கொண்டான் பரிதியும் மதியும் அங்கட் பனிக்குடை நிழற்றி நின்றார் வருணனும் மகாரும் ஆல வட்டம்வீ சினர்யாழ வல்ல கருடர்கந் தருவர் சித்தர் கானமங் கிசையா நின்றார்.

nirutartaṅ kurici lāṉa neṭuntakai yuṭaivāḷ koṇṭāṉ paritiyum matiyum aṅkaṭ paṉikkuṭai niḻaṟṟi niṉṟār varuṇaṉum makārum āla vaṭṭamvī ciṉaryāḻa valla karuṭarkan taruvar cittar kāṉamaṅ kicaiyā niṉṟār.

Report an error

முத்தலை அயில்வே லேந்தி முறைநெறி ஆற்றுங் கூற்று மெய்த்தழற் கடவுள் தானும் வேத்திர மேந்தி யாண்டும் எத்திறத் தவரும் நீங்க எரிவிழித் திடியி னார்த்துப் பத்தியின் நிறுவிச் சூரன் பல்புகழ் பரவி நின்றார்.

muttalai ayilvē lēnti muṟaineṟi āṟṟuṅ kūṟṟu meyttaḻaṟ kaṭavuḷ tāṉum vēttira mēnti yāṇṭum ettiṟat tavarum nīṅka eriviḻit tiṭiyi ṉārttup pattiyiṉ niṟuvic cūraṉ palpukaḻ paravi niṉṟār.

Report an error

குரைகழல் நிருதி என்போல் கோடிக மதுகைக் கொண்டான் இருமைசேர் குரவர் தாமும் எல்லைதீர் முனிவர் யாருந் திரைகெழு கங்கைத் தூநீர் செம்பொனங் கலசஞ் சேர்த்துத் துருவையின் மறையால் வாங்கித் துவலைதூர்த் தாசி சொற்றார்.

kuraikaḻal niruti eṉpōl kōṭika matukaik koṇṭāṉ irumaicēr kuravar tāmum ellaitīr muṉivar yārun tiraikeḻu kaṅkait tūnīr cempoṉaṅ kalacañ cērttut turuvaiyiṉ maṟaiyāl vāṅkit tuvalaitūrt tāci coṟṟār.

Report an error

அரம்பைமே னகையே மிக்க உருப்பசி யாதி யாகி வரம்பறும் அமரர் மாதர் வரன்முறை விதியின் நாடி நரம்பியல் சுருதி பாடல் இயத்தொடு படிந்து நண்ணித் திரம்பயில் நடனம் மூன்றுஞ் செவ்விதிற் புரிய லுற்றார்.

arampaimē ṉakaiyē mikka uruppaci yāti yāki varampaṟum amarar mātar varaṉmuṟai vitiyiṉ nāṭi narampiyal curuti pāṭal iyattoṭu paṭintu naṇṇit tirampayil naṭaṉam mūṉṟuñ cevvitiṟ puriya luṟṟār.

Report an error

இத்திறம் அமரர் யாரும் ஏனையர் தாமும் ஈண்டித் தத்தம துரிமை தன்னைத் தவாநெறி தலைக்கொண் டாற்ற மைத்தகு சூர பன்மன் மடங்கலந் தவிசின் மீதே மெய்த்திரு நிகழ மன்னிப் பின்னிவை விளம்ப லுற்றான்.

ittiṟam amarar yārum ēṉaiyar tāmum īṇṭit tattama turimai taṉṉait tavāneṟi talaikkoṇ ṭāṟṟa maittaku cūra paṉmaṉ maṭaṅkalan taviciṉ mītē meyttiru nikaḻa maṉṉip piṉṉivai viḷampa luṟṟāṉ.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).