Skip to content

அசுர காண்டம் — சூரன் தண்டஞ்செய் படலம் · சூரன் தண்டஞ்செய் படலம்

cūraṉ taṇṭañcey paṭalam

cūraṉ taṇṭañcey paṭalam

cūraṉ taṇṭañcey paṭalam, from Acura Kāṇṭam; poems 2.1718–2.1788.

71 versesTamil with transliteration

A spear and lotus for chapter 75 of Kanda Puranam.

என்று பற்பல உரைத்தனள் ஆவலித் திரங்கிப் பின்றொ டர்ந்திடு துன்முகி தன்னொடும் பெயரா மன்றின் மேவரு சூரபன் மாவெனும் வலியோன் பொன்ற டங்கழல் முன்னரே வீழ்ந்துபோய்ப் புரண்டாள்.

eṉṟu paṟpala uraittaṉaḷ āvalit tiraṅkip piṉṟo ṭarntiṭu tuṉmuki taṉṉoṭum peyarā maṉṟiṉ mēvaru cūrapaṉ māveṉum valiyōṉ poṉṟa ṭaṅkaḻal muṉṉarē vīḻntupōyp puraṇṭāḷ.

Report an error

புரண்டு மற்றவள் சகடையிற் பெயர்ந்திடும் போழ்தின் மருண்டு பேரவை யகத்தினோர் அஞ்சினர் மறுக அரண்ட ருங்கழற் சூரபன் மாவெனும் அவுணன் இரண்டு நோக்கினுந் தீயெழ விழித்திவை இசைப்பான்.

puraṇṭu maṟṟavaḷ cakaṭaiyiṟ peyarntiṭum pōḻtiṉ maruṇṭu pēravai yakattiṉōr añciṉar maṟuka araṇṭa ruṅkaḻaṟ cūrapaṉ māveṉum avuṇaṉ iraṇṭu nōkkiṉun tīyeḻa viḻittivai icaippāṉ.

Report an error

என்னை யோவிவட் புலம்புதி அசமுகத் திளையோய் உன்னை யோர்கிலா தென்னையும் நினைகிலா துன்கை தன்னை யும்மிவள் கரத்தையும் வாளினால் தடிந்து முன்னை யோரென இருந்துளார் யாரென மொழிந்தான்.

eṉṉai yōvivaṭ pulamputi acamukat tiḷaiyōy uṉṉai yōrkilā teṉṉaiyum niṉaikilā tuṉkai taṉṉai yummivaḷ karattaiyum vāḷiṉāl taṭintu muṉṉai yōreṉa iruntuḷār yāreṉa moḻintāṉ.

Report an error

புரந்த ரன்புணர் புலோமசை புவியிலோர் புறத்தில் இருந்து நோற்றலும் உன்றனக் கென்றுசென் றெடுத்தோம் விரைந்து வந்தொரு விண்ணவன் எங்களை வெகுண்டு கரந்து ணித்துமற் றவளைமீட் டேகினன் கண்டாய்.

puranta raṉpuṇar pulōmacai puviyilōr puṟattil iruntu nōṟṟalum uṉṟaṉak keṉṟuceṉ ṟeṭuttōm viraintu vantoru viṇṇavaṉ eṅkaḷai vekuṇṭu karantu ṇittumaṟ ṟavaḷaimīṭ ṭēkiṉaṉ kaṇṭāy.

Report an error

என்னு முன்னரே சொரிந்தன விழிகனல் எரிவாய் துன்னு தீம்புகைப் படலிகை உமிழ்ந்தது துண்டம் வன்னி காலுறு காலென உயிர்த்தது மதிபோல் மின்னல் வாளெயி றிதழினை மறைத்தது விரைவில்.

eṉṉu muṉṉarē corintaṉa viḻikaṉal erivāy tuṉṉu tīmpukaip paṭalikai umiḻntatu tuṇṭam vaṉṉi kāluṟu kāleṉa uyirttatu matipōl miṉṉal vāḷeyi ṟitaḻiṉai maṟaittatu viraivil.

Report an error

வெடிக்க லுற்றதெவ் வண்டமென் றையுற விரைவில் இடிக்க லுற்றது தீயவாய் நகைவந்த திதழுந் துடிக்க லுற்றது புருவமேல் நிமிர்ந்தது துள்ளிக் கடிக்க லுற்றன எயிற்றணி கறகற கலிப்ப.

veṭikka luṟṟatev vaṇṭameṉ ṟaiyuṟa viraivil iṭikka luṟṟatu tīyavāy nakaivanta titaḻun tuṭikka luṟṟatu puruvamēl nimirntatu tuḷḷik kaṭikka luṟṟaṉa eyiṟṟaṇi kaṟakaṟa kalippa.

Report an error

புயற்பு றந்தொறு நித்தில முதிர்ந்தவா போல வியர்ப்பு மிக்கன முறைமுறை அன்னது விளிய மயிர்ப்பு றந்தொறும் புலிங்கம்வந் தடைந்தன வல்லே செயிர்ப்பெ னுங்கனல் கிளர்ந்தது சிந்தையின் நின்றும்.

puyaṟpu ṟantoṟu nittila mutirntavā pōla viyarppu mikkaṉa muṟaimuṟai aṉṉatu viḷiya mayirppu ṟantoṟum puliṅkamvan taṭaintaṉa vallē ceyirppe ṉuṅkaṉal kiḷarntatu cintaiyiṉ niṉṟum.

Report an error

நீடு வெஞ்சினம் இத்திறம் அவனிடை நிகழ ஓடு கின்றனர் திசையுளார் உலைந்தனர் முனிவர் ஆடு கன்றதோர் தெய்வதக் கணிகையர் அவன்சீர் பாடு கின்றவர் யாவரும் பதைபதைத் திரிந்தார்.

nīṭu veñciṉam ittiṟam avaṉiṭai nikaḻa ōṭu kiṉṟaṉar ticaiyuḷār ulaintaṉar muṉivar āṭu kaṉṟatōr teyvatak kaṇikaiyar avaṉcīr pāṭu kiṉṟavar yāvarum pataipatait tirintār.

Report an error

தாங்க லுற்றிடு திசைக்கரி ஓடிய தரிக்கும் ஓங்கல் மேருவுங் குலைந்தன பணியெலாம் உலைந்த ஏங்கு கின்றனர் வானவர் நடுங்கினர் இரவி தீங்கு நாடியே பொயினன் மீண்டனன் திரிந்தான்.

tāṅka luṟṟiṭu ticaikkari ōṭiya tarikkum ōṅkal mēruvuṅ kulaintaṉa paṇiyelām ulainta ēṅku kiṉṟaṉar vāṉavar naṭuṅkiṉar iravi tīṅku nāṭiyē poyiṉaṉ mīṇṭaṉaṉ tirintāṉ.

Report an error

பார்ந டுங்கின விண்ணெலாம் நடுங்கின பரவை நீர்ந டுங்கின அயன்பதம் நடுங்கின நெடியோன் ஊர்ந டுங்கின அவுணரும் நடுங்கினர் உலகத்து ஆர்ந டுங்கிலர் அவன்சினஞ் சிறியதோ அன்றே.

pārna ṭuṅkiṉa viṇṇelām naṭuṅkiṉa paravai nīrna ṭuṅkiṉa ayaṉpatam naṭuṅkiṉa neṭiyōṉ ūrna ṭuṅkiṉa avuṇarum naṭuṅkiṉar ulakattu ārna ṭuṅkilar avaṉciṉañ ciṟiyatō aṉṟē.

Report an error

அண்ண லம்புகழ்ச் சூரபன் மாவென அறையுங் கண்ணில் புன்மனத் தவுணர்கோன் இத்திறங் கனன்று துண்ணெ னச்சினத் தமரர்கள் யாரையுந் தொலைப்பான் எண்ணி யுற்றிடும் இளையரைப் பார்த்திவை இசைப்பான்.

aṇṇa lampukaḻc cūrapaṉ māveṉa aṟaiyuṅ kaṇṇil puṉmaṉat tavuṇarkōṉ ittiṟaṅ kaṉaṉṟu tuṇṇe ṉacciṉat tamararkaḷ yāraiyun tolaippāṉ eṇṇi yuṟṟiṭum iḷaiyaraip pārttivai icaippāṉ.

Report an error

மீனெ டுத்துநம் மேவலில் திரிந்தவிண் ணவர்கோன் கானி டத்திருந் தொருவனைக் கொண்டிவர் கரங்கள் ஊனெ டுத்திடத் தறித்தனன் என்றிடின் ஒழிந்த மானு டத்தரும் அடுவரே இங்கினி மாதோ.

mīṉe ṭuttunam mēvalil tirintaviṇ ṇavarkōṉ kāṉi ṭattirun toruvaṉaik koṇṭivar karaṅkaḷ ūṉe ṭuttiṭat taṟittaṉaṉ eṉṟiṭiṉ oḻinta māṉu ṭattarum aṭuvarē iṅkiṉi mātō.

Report an error

பரம னேயலன் பங்கயத் தவிசினோன் அல்லன் திருவு வாவரு மார்புடைத் தேவனும் அல்லன் இரியும் வாசவன் தானலன் அவன்பணி இயற்றும் ஒருவ னாமிவர் கைதடிந் தாவிகொண் டுறைவான்.

parama ṉēyalaṉ paṅkayat taviciṉōṉ allaṉ tiruvu vāvaru mārpuṭait tēvaṉum allaṉ iriyum vācavaṉ tāṉalaṉ avaṉpaṇi iyaṟṟum oruva ṉāmivar kaitaṭin tāvikoṇ ṭuṟaivāṉ.

Report an error

விண்ம யங்குறு செருவிடைத் தானையால் வீக்கி எண்மை கொண்டுறும் அமரரைக் கொணர்தலும் எனது கண்முன் நின்றிடும் அவுணர்தங் கழிபசி யொழிய உண்மின் நீரெனக் காடுத்திலேன் அறநினைந் துற்றேன்.

viṇma yaṅkuṟu ceruviṭait tāṉaiyāl vīkki eṇmai koṇṭuṟum amararaik koṇartalum eṉatu kaṇmuṉ niṉṟiṭum avuṇartaṅ kaḻipaci yoḻiya uṇmiṉ nīreṉak kāṭuttilēṉ aṟaniṉain tuṟṟēṉ.

Report an error

மறைவைத் தேயமர் கின்றதோர் வாசவன் தனையும் நறைவைத் தேயமர் பூங்குழற் சசியையும் நான்முன் சிறைவைத் தேனிலன் சிறியரென் றுன்னினன் தீயின் குறைவைத் தோர்கள்போல் ஆயினேன் இத்திறங் குறியேன்.

maṟaivait tēyamar kiṉṟatōr vācavaṉ taṉaiyum naṟaivait tēyamar pūṅkuḻaṟ caciyaiyum nāṉmuṉ ciṟaivait tēṉilaṉ ciṟiyareṉ ṟuṉṉiṉaṉ tīyiṉ kuṟaivait tōrkaḷpōl āyiṉēṉ ittiṟaṅ kuṟiyēṉ.

Report an error

கைப்ப டுத்திய உயிர்ப்பலி கடிதின்உண் ணாது தப்ப விட்டதோர் மால்கரி யொத்தனன் தமியேன் இப்பு விக்கணே இவர்கரங் குறைத்திட்ட தெனது மெய்ப்ப டுத்திய ஊனமே அலதுவே றுண்டோ.

kaippa ṭuttiya uyirppali kaṭitiṉuṇ ṇātu tappa viṭṭatōr mālkari yottaṉaṉ tamiyēṉ ippu vikkaṇē ivarkaraṅ kuṟaittiṭṭa teṉatu meyppa ṭuttiya ūṉamē alatuvē ṟuṇṭō.

Report an error

பூத ரந்தனைச் சிஆதைடிந் திடுபுரந் தரனை மாத ரார்புகழ் சசிதனை நாடுவான் வழிக்கொள் தூதர் இன்னமுங் கண்டிலர் கொல்அவர் துணிவால் ஏத மின்றிஇப் புடவியிற் குறும்புசெய் திருத்தல்.

pūta rantaṉaic ciātaiṭin tiṭupuran taraṉai māta rārpukaḻ cacitaṉai nāṭuvāṉ vaḻikkoḷ tūtar iṉṉamuṅ kaṇṭilar kolavar tuṇivāl ēta miṉṟiip puṭaviyiṟ kuṟumpucey tiruttal.

Report an error

நீரி ருந்தனிர் புதல்வரும் இருந்தனர் நிகரில் தேரி ருந்தது நேமியும் இருந்தது சிறிதென் பேரி ருந்தது யானுமிங் கிருந்தனன் பின்னை யாரி ருந்துமென் இருந்துமா கின்றதென் அந்தோ.

nīri runtaṉir putalvarum iruntaṉar nikaril tēri runtatu nēmiyum iruntatu ciṟiteṉ pēri runtatu yāṉumiṅ kiruntaṉaṉ piṉṉai yāri runtumeṉ iruntumā kiṉṟateṉ antō.

Report an error

வான ளாவுவெண் பஞ்சியின் மால்வரை வறிதே தீநி லாயதோர் அளவையின் முடிந்திடுஞ் செயல்போல் தூநி லாவெயிற் றனையர்கைச் சோரியின் துளியால் போன தேபல அண்டமுங் கொண்டநம் புகழே.

vāṉa ḷāvuveṇ pañciyiṉ mālvarai vaṟitē tīni lāyatōr aḷavaiyiṉ muṭintiṭuñ ceyalpōl tūni lāveyiṟ ṟaṉaiyarkaic cōriyiṉ tuḷiyāl pōṉa tēpala aṇṭamuṅ koṇṭanam pukaḻē.

Report an error

இழிவும் இங்கிவர்க் குறுவதே இமையவர் தங்கள் வழியின் நின்றதோர் அரந்தையும் இவ்விடை வருமே பழியும் என்னிடத் தெய்துமே என்றும்இப் பழிதான் ஒழிவ தில்லையே பொறுப்பதே அதனையென் னுயிரே.

iḻivum iṅkivark kuṟuvatē imaiyavar taṅkaḷ vaḻiyiṉ niṉṟatōr arantaiyum ivviṭai varumē paḻiyum eṉṉiṭat teytumē eṉṟumip paḻitāṉ oḻiva tillaiyē poṟuppatē ataṉaiyeṉ ṉuyirē.

Report an error

மல்ல லந்தடந் தேர்கடக் கைம்மலை வயமா எல்லை யில்லவும் அவுணரும் எங்கணும் இருப்பச் சில்லை மென்குழல் அசமுகி படுவதித் திறமோ நல்ல நல்லஎன் னரசியல் முறையென நக்கான்.

malla lantaṭan tērkaṭak kaimmalai vayamā ellai yillavum avuṇarum eṅkaṇum iruppac cillai meṉkuḻal acamuki paṭuvatit tiṟamō nalla nallaeṉ ṉaraciyal muṟaiyeṉa nakkāṉ.

Report an error

நக்க காலையிற் காலுறும் வார்கழல் நரல மக்கள் தங்களிற் பானுகோ பப்பெயர் வலியோன் செக்கர் அங்கியிற் கிளர்ந்துதன் தந்தைமுன் செவ்வே புக்கு வந்தனை செய்துநின் றினையன புகல்வான்.

nakka kālaiyiṟ kāluṟum vārkaḻal narala makkaḷ taṅkaḷiṟ pāṉukō pappeyar valiyōṉ cekkar aṅkiyiṟ kiḷarntutaṉ tantaimuṉ cevvē pukku vantaṉai ceytuniṉ ṟiṉaiyaṉa pukalvāṉ.

Report an error

ஐய கேண்மதி நமதுகுற் றேவலால் அழுங்கித் தொய்ய லுள்ளமோ டிந்திரன் கரந்தனன் சுரரும் நொய்யர் இத்தொழில் நினைப்பதுஞ் செய்யலர் நுங்கை கையி ழந்ததென் மாயமோ உணர்கிலேன் கவல்வேன்.

aiya kēṇmati namatukuṟ ṟēvalāl aḻuṅkit toyya luḷḷamō ṭintiraṉ karantaṉaṉ curarum noyyar ittoḻil niṉaippatuñ ceyyalar nuṅkai kaiyi ḻantateṉ māyamō uṇarkilēṉ kavalvēṉ.

Report an error

வந்தி பெற்றிடு கான்முளை எட்டிவான் தவழும் இந்து வைக்கரங் கொண்டனன் என்பதோர் இயல்பே அந்த ரத்தரில் ஒருவனே இனையவர் அங்கை சிந்தி யுற்றனன் என்றுநீ உரைத்திடுந் திறனே.

vanti peṟṟiṭu kāṉmuḷai eṭṭivāṉ tavaḻum intu vaikkaraṅ koṇṭaṉaṉ eṉpatōr iyalpē anta rattaril oruvaṉē iṉaiyavar aṅkai cinti yuṟṟaṉaṉ eṉṟunī uraittiṭun tiṟaṉē.

Report an error

வலியர் ஆகியே புரிந்தனர் எனினுமற் றவர்கள் மெலியர் ஆற்றநீ வெகுளுறுந் தகைமைமே வினரோ ஒலித ருங்கடல் மீன்சுமந் துன்பணி யுழந்தார் அலியர் அல்லதை ஆண்டகை யார்கொலோ அனையோர்.

valiyar ākiyē purintaṉar eṉiṉumaṟ ṟavarkaḷ meliyar āṟṟanī vekuḷuṟun takaimaimē viṉarō olita ruṅkaṭal mīṉcuman tuṉpaṇi yuḻantār aliyar allatai āṇṭakai yārkolō aṉaiyōr.

Report an error

நறைம லர்க்கம லத்தனை வெகுளினும் நாரத் துறையுள் வைகிய முகுந்தனை வெகுளினும் உம்பர் எறிபு னற்சடை இறைவனை வெகுளினும் இயல்பே சிறியர் தம்மையும முனிதியோ பெருமையிற் சிறந்தோய்.

naṟaima larkkama lattaṉai vekuḷiṉum nārat tuṟaiyuḷ vaikiya mukuntaṉai vekuḷiṉum umpar eṟipu ṉaṟcaṭai iṟaivaṉai vekuḷiṉum iyalpē ciṟiyar tammaiyuma muṉitiyō perumaiyiṟ ciṟantōy.

Report an error

முத்தி றப்படுந் தேவரே அல்லதுன் முனிவிற் கெத்தி றத்தினர் இயைந்துளோர் இளையர்க்கும் இனைத்தே சித்த முற்றிடும் வெகுளியைத் தீருதி இன்னோர் கைத்த லந்தனை இழந்துழிப் பெயருவன் கடிதின்.

mutti ṟappaṭun tēvarē allatuṉ muṉiviṟ ketti ṟattiṉar iyaintuḷōr iḷaiyarkkum iṉaittē citta muṟṟiṭum vekuḷiyait tīruti iṉṉōr kaitta lantaṉai iḻantuḻip peyaruvaṉ kaṭitiṉ.

Report an error

விசைய வாளினால் இங்கிவர் கரந்தனை விட்டும் அசைவில் ஆடவன் றன்னைநின் னுளத்தின்மால் அளித்த சசியை இந்திரக் கள்வனைத் தம்முயிர் தமக்குப் பசையி லாததோர் அமரரைப் பற்றினன் படர்வேன்.

vicaiya vāḷiṉāl iṅkivar karantaṉai viṭṭum acaivil āṭavaṉ ṟaṉṉainiṉ ṉuḷattiṉmāl aḷitta caciyai intirak kaḷvaṉait tammuyir tamakkup pacaiyi lātatōr amararaip paṟṟiṉaṉ paṭarvēṉ.

Report an error

அங்கண் உற்றிலர் மறைகுவ ரெயெனில் அகிலம் எங்கும் நாடுவன் அனையர்வாழ துறக்கநா டேகிச் செங்க னற்கொள அளிக்குவன் அமரர்தந் திறத்தை மங்கை மாரொடும் பற்றியோர் கன்னலின் வருவேன்.

aṅkaṇ uṟṟilar maṟaikuva reyeṉil akilam eṅkum nāṭuvaṉ aṉaiyarvāḻa tuṟakkanā ṭēkic ceṅka ṉaṟkoḷa aḷikkuvaṉ amarartan tiṟattai maṅkai māroṭum paṟṟiyōr kaṉṉaliṉ varuvēṉ.

Report an error

ஈதி யால்விடை தமியனுக் கென்றுநின் றிரப்பத் தாதை யாகிய அவுணர்கோன் முனிவினைத் தணிந்து போதி மைந்தநின் படையொடும் ஆங்கெனப் புகல ஆத வன்பகை அழகிதென் றுவகையை அடைந்தான்.

īti yālviṭai tamiyaṉuk keṉṟuniṉ ṟirappat tātai yākiya avuṇarkōṉ muṉiviṉait taṇintu pōti maintaniṉ paṭaiyoṭum āṅkeṉap pukala āta vaṉpakai aḻakiteṉ ṟuvakaiyai aṭaintāṉ.

Report an error

ஓகை சேர்தரு விண்ணவர் மணிமுடி உரிஞ்சிச் சேகை சேர்தரு தாதைதாள் உச்சியிற் சேர்த்தி வாகை சேர்சிறு தந்யைர் தம்மையும் வணங்கிப் போகை சேர்விடை கொண்டுதன் னிருக்கையிற் போனான்.

ōkai cērtaru viṇṇavar maṇimuṭi uriñcic cēkai cērtaru tātaitāḷ ucciyiṟ cērtti vākai cērciṟu tanyair tammaiyum vaṇaṅkip pōkai cērviṭai koṇṭutaṉ ṉirukkaiyiṟ pōṉāṉ.

Report an error

மைந்தன் ஏகலுஞ் சூரபன் மாவெனும் வலியோன் உந்து தீவிழி உழையரிற் சிலவரை நோக்கி அந்த நான்முகன் இங்ஙனம் வருகுவன் அவனை நந்தம் முன்னுறக் கொடுவரு வீரென நவின்றான்.

maintaṉ ēkaluñ cūrapaṉ māveṉum valiyōṉ untu tīviḻi uḻaiyariṟ cilavarai nōkki anta nāṉmukaṉ iṅṅaṉam varukuvaṉ avaṉai nantam muṉṉuṟak koṭuvaru vīreṉa naviṉṟāṉ.

Report an error

எங்கண் உற்றுளான் அயனெனக் கூவினர் ஏகிப் பங்க யத்தனைக் கண்டுநிற் கொணர்கெனப் பணித்தான் நங்கள் கொற்றவன் என்றலும் ஒல்லென நடவா அங்கம் ஐந்துடன் அவுணர்கள் மன்னன்முன் அணைந்தான்.

eṅkaṇ uṟṟuḷāṉ ayaṉeṉak kūviṉar ēkip paṅka yattaṉaik kaṇṭuniṟ koṇarkeṉap paṇittāṉ naṅkaḷ koṟṟavaṉ eṉṟalum olleṉa naṭavā aṅkam aintuṭaṉ avuṇarkaḷ maṉṉaṉmuṉ aṇaintāṉ.

Report an error

அணைந்த பூமகன் வைகலே பக்கநாள் அவற்றாற் புணர்ந்த யோகொடு கரணமே லுள்ளன புகல நுணங்கு சிந்தையால் அகிலமும் படைத்துளாய் நொய்தில் தணந்த கையிவர்க் குதவுதி என்றனன் தலைவன்.

aṇainta pūmakaṉ vaikalē pakkanāḷ avaṟṟāṟ puṇarnta yōkoṭu karaṇamē luḷḷaṉa pukala nuṇaṅku cintaiyāl akilamum paṭaittuḷāy noytil taṇanta kaiyivark kutavuti eṉṟaṉaṉ talaivaṉ.

Report an error

என்று தானிவை மொழிதலுந் திசைமுகன் இசைந்து வன்றி றற்கரங் கூடுக மற்றிவர்க் கெனலும் ஒன்றொர் மாத்திரைப் பொழுதின்முன் அவைவளர்ந் துறலும் நன்று நன்றுநின் வல்லபம் என்றுசூர் நவின்றான்.

eṉṟu tāṉivai moḻitalun ticaimukaṉ icaintu vaṉṟi ṟaṟkaraṅ kūṭuka maṟṟivark keṉalum oṉṟor māttiraip poḻutiṉmuṉ avaivaḷarn tuṟalum naṉṟu naṉṟuniṉ vallapam eṉṟucūr naviṉṟāṉ.

Report an error

அன்ன தற்பின்னர் அசமுகத் தணங்கினை அரசன் தொன்ன கர்க்குளே இருந்திடச் செய்துதுன் முகத்தி தன்னை மைந்தனோ டுய்த்தனன் புலோமசைத் தையல் முன்னி ருந்துழி காட்டியே வருகென மொழிந்து.

aṉṉa taṟpiṉṉar acamukat taṇaṅkiṉai aracaṉ toṉṉa karkkuḷē iruntiṭac ceytutuṉ mukatti taṉṉai maintaṉō ṭuyttaṉaṉ pulōmacait taiyal muṉṉi runtuḻi kāṭṭiyē varukeṉa moḻintu.

Report an error

உழைத்திர் இந்தபல் சிலதரை நோக்கியே உலகில் தழைத்த செங்கதிர்க் கடவுளைத் தாரகா கணத்தை எழுச்சி கொண்டுறு கோளினை யாரையும் இன்னே அழைத்தி ராலெனச் சொற்றனன் அவுணர்கட் கரசன்.

uḻaittir intapal cilatarai nōkkiyē ulakil taḻaitta ceṅkatirk kaṭavuḷait tārakā kaṇattai eḻucci koṇṭuṟu kōḷiṉai yāraiyum iṉṉē aḻaitti rāleṉac coṟṟaṉaṉ avuṇarkaṭ karacaṉ.

Report an error

சேடர் பற்பலர் விடைகொடு சேட்புலஞ் சென்று நேடி அன்னவர் தமையெலாங் கொணர்ந்துமுன் நிறுவ மூடு கொண்டலிற் கரந்தமின் பின்னெழு முறைபோல் கேடு கொண்டதொல் சினவெரி சூரனுட் கிளர்ந்த.

cēṭar paṟpalar viṭaikoṭu cēṭpulañ ceṉṟu nēṭi aṉṉavar tamaiyelāṅ koṇarntumuṉ niṟuva mūṭu koṇṭaliṟ karantamiṉ piṉṉeḻu muṟaipōl kēṭu koṇṭatol ciṉaveri cūraṉuṭ kiḷarnta.

Report an error

வியர்க்கும் நெஞ்சினன் கதிர் முதலோர்தமை விளியா அயர்க்கை இன்றியே வானிடைத் திரியுநீர் அறியா இயற்கை ஒன்றிலை எங்கைதன் செங்கையை எறிந்தோன் செயற்கை காணுதிர் வறிதுநீர் இருந்ததென் சேணில்.

viyarkkum neñciṉaṉ katir mutalōrtamai viḷiyā ayarkkai iṉṟiyē vāṉiṭait tiriyunīr aṟiyā iyaṟkai oṉṟilai eṅkaitaṉ ceṅkaiyai eṟintōṉ ceyaṟkai kāṇutir vaṟitunīr iruntateṉ cēṇil.

Report an error

இளையள் தன்கரங் குறைத்திடும் இமையவன் உயிரைக் களைதல் செய்திலீர் அல்லதேல் அனையனைக் கட்டித் தளைசெய் திவ்விடைக் கொணர்ந்திலீர் அல்லதத் தலையில் விளைவை வந்தெமக் குரைத்திலீர் நன்றுநும் மிகுதி.

iḷaiyaḷ taṉkaraṅ kuṟaittiṭum imaiyavaṉ uyiraik kaḷaital ceytilīr allatēl aṉaiyaṉaik kaṭṭit taḷaicey tivviṭaik koṇarntilīr allatat talaiyil viḷaivai vantemak kuraittilīr naṉṟunum mikuti.

Report an error

மறத்தி றத்தினால் எங்கைதன் கையையோர் வலியோன் குறைத்த தற்குநீர் அகத்தரே அல்லது குறிக்கில் புறத்தர் அன்றுநம் மாணையால் இத்தொழில் புரிவீர் முறைத்தி றங்கொலோ நுங்களுக் கிதுவென மொழிந்தான்.

maṟatti ṟattiṉāl eṅkaitaṉ kaiyaiyōr valiyōṉ kuṟaitta taṟkunīr akattarē allatu kuṟikkil puṟattar aṉṟunam māṇaiyāl ittoḻil purivīr muṟaitti ṟaṅkolō nuṅkaḷuk kituveṉa moḻintāṉ.

Report an error

நீதி இல்லவன் ஈங்கிஆவை உரைத்தலும் நிருப ஏதும் எங்களை வெகுளலை இங்கி இங்கிவள் கரத்தைக் காது வான்றனைக் கண்டிலம் இன்றுசெல் கதியின் மீது சென்றவெம் விழியென உரைத்தனர் விண்ணோர்.

nīti illavaṉ īṅkiāvai uraittalum nirupa ētum eṅkaḷai vekuḷalai iṅki iṅkivaḷ karattaik kātu vāṉṟaṉaik kaṇṭilam iṉṟucel katiyiṉ mītu ceṉṟavem viḻiyeṉa uraittaṉar viṇṇōr.

Report an error

துண்ட மாகியே இவள்கரந் துணிபட்ட செய்கை கண்டி லார்களாங் கதியிடைச் சென்றவாங் கண்கள் அண்டர் தஞ்செயல் அழகிதென் றனையரை யெல்லாந் தண்டல் இல்லதோர் சிறைபுரி வித்தனன் தலைவன்.

tuṇṭa mākiyē ivaḷkaran tuṇipaṭṭa ceykai kaṇṭi lārkaḷāṅ katiyiṭaic ceṉṟavāṅ kaṇkaḷ aṇṭar tañceyal aḻakiteṉ ṟaṉaiyarai yellān taṇṭal illatōr ciṟaipuri vittaṉaṉ talaivaṉ.

Report an error

தினகரன் முதலினோர் சிறையிற் புக்கபின் வினைஞரிற் சிலர்தமை விளித்து நீவிர்போய்த் துனைவரு மருத்துவர் தொகையைத் தம்மென முனிவொடு தூண்டினன் முடிவி லாற்றலான்.

tiṉakaraṉ mutaliṉōr ciṟaiyiṟ pukkapiṉ viṉaiñariṟ cilartamai viḷittu nīvirpōyt tuṉaivaru maruttuvar tokaiyait tammeṉa muṉivoṭu tūṇṭiṉaṉ muṭivi lāṟṟalāṉ.

Report an error

ஒற்றரில் ஒருசிலர் ஒல்லை ஏகியே குற்றமின் மருத்துவர் குழாத்தைக் கூவியே பற்றிமுன் உய்த்தலும் பதைக்கும் நெஞ்சினான் தெற்றென் ஆங்கவர்க் கிதனைச் செப்புவான்.

oṟṟaril orucilar ollai ēkiyē kuṟṟamiṉ maruttuvar kuḻāttaik kūviyē paṟṟimuṉ uyttalum pataikkum neñciṉāṉ teṟṟeṉ āṅkavark kitaṉaic ceppuvāṉ.

Report an error

வானிடை மண்ணிடை மாதி ரத்திடை மேனிகழ் கடலிடை வியன்பி லத்திடை ஊனிடை யுயிரிடை ஒழிந்து நின்றிடும் ஏனைய பொருளிடை எங்கும் நிற்றிரால்.

vāṉiṭai maṇṇiṭai māti rattiṭai mēṉikaḻ kaṭaliṭai viyaṉpi lattiṭai ūṉiṭai yuyiriṭai oḻintu niṉṟiṭum ēṉaiya poruḷiṭai eṅkum niṟṟirāl.

Report an error

ஏணுறு கின்றஎன் இளையள் கையையோர் சேணினன் வாள்கொடு சேதித் திட்டதைக் காணுதிர் உமக்கெவர் கரக்கற் பாலினோர் நீணகர் குறுகியிந் நிலைமை சொற்றிலீர்.

ēṇuṟu kiṉṟaeṉ iḷaiyaḷ kaiyaiyōr cēṇiṉaṉ vāḷkoṭu cētit tiṭṭataik kāṇutir umakkevar karakkaṟ pāliṉōr nīṇakar kuṟukiyin nilaimai coṟṟilīr.

Report an error

தரியலர் சூழ்ச்சியால் தகுவர்க் கிப்பழி வருவது நன்றென மகிழ்ந்து வைகினீர் பெருமிதம் நன்றெனப் பேச மாறுசொல் உரையற நின்றனர் உலவைப் பண்ணவர்.

tariyalar cūḻcciyāl takuvark kippaḻi varuvatu naṉṟeṉa makiḻntu vaikiṉīr perumitam naṉṟeṉap pēca māṟucol uraiyaṟa niṉṟaṉar ulavaip paṇṇavar.

Report an error

வன்றிறல் இன்றியே மனத்தில் அச்சமாய் நின்றிடு கால்களை நீடு கால்களிற் துன்றிய கனைகழற் சூர னென்பவன் ஒன்றொரு சிறைதனில் உய்த்திட் டானரோ.

vaṉṟiṟal iṉṟiyē maṉattil accamāy niṉṟiṭu kālkaḷai nīṭu kālkaḷiṟ tuṉṟiya kaṉaikaḻaṟ cūra ṉeṉpavaṉ oṉṟoru ciṟaitaṉil uyttiṭ ṭāṉarō.

Report an error

ஈற்றினை இழைத்திட இருக்குங் கால்களைச் சீற்றமொ டவுணர்கோன் சிறையில் வீட்டினான் சாற்றிடின் உலகமேல் தவத்தி னால்வரும் பேற்றினும் உளதுகொல் பெருமைத் தானதே.

īṟṟiṉai iḻaittiṭa irukkuṅ kālkaḷaic cīṟṟamo ṭavuṇarkōṉ ciṟaiyil vīṭṭiṉāṉ cāṟṟiṭiṉ ulakamēl tavatti ṉālvarum pēṟṟiṉum uḷatukol perumait tāṉatē.

Report an error

திரிதத மருத்தரைச் சிறையில் வைத்தபின் குரைகழல் வினைஞரைக் கூவி இற்றையாண் டிருதுநன் மதிமுதல் எல்லை யாளரைத் தருதிரென் றுரைத்தலுந தாழ்ந்து போயினார்.

tiritata maruttaraic ciṟaiyil vaittapiṉ kuraikaḻal viṉaiñaraik kūvi iṟṟaiyāṇ ṭirutunaṉ matimutal ellai yāḷarait tarutireṉ ṟuraittaluna tāḻntu pōyiṉār.

Report an error

ஏவல ராயினோர் ஏகி யெல்லையின் காவலராகிய கடவு ளோர்தமைக் கூவினர் பற்றியே கொடுவந் துய்த்தலுந் தேவர்கள் மாற்றலன் சீறிக் கூறுவான்.

ēvala rāyiṉōr ēki yellaiyiṉ kāvalarākiya kaṭavu ḷōrtamaik kūviṉar paṟṟiyē koṭuvan tuyttalun tēvarkaḷ māṟṟalaṉ cīṟik kūṟuvāṉ.

Report an error

புல்லிய மகபதி புணர்த்த அச்செயல் ஒல்லுவ தென்றதற் குள்ள மாகிநீர் எல்லிரு மனமகிழ்ந் திருத்திர் என்னொடுஞ் சொல்லிய வந்திலீ ரியாண்டுந் துன்னினீர்.

pulliya makapati puṇartta acceyal olluva teṉṟataṟ kuḷḷa mākinīr elliru maṉamakiḻn tiruttir eṉṉoṭuñ colliya vantilī riyāṇṭun tuṉṉiṉīr.

Report an error

நிரந்தரம் நம்பணி நெறியின் நின்றுநீர் இருந்ததிற் பயனெவன் இருக்கலா மையால் வருந்தவ றென்சுரர் மருங்குற் றீரெனா அருந்தளை இட்டனன் அவர்கள் தம்மையும்.

nirantaram nampaṇi neṟiyiṉ niṉṟunīr iruntatiṟ payaṉevaṉ irukkalā maiyāl varuntava ṟeṉcurar maruṅkuṟ ṟīreṉā aruntaḷai iṭṭaṉaṉ avarkaḷ tammaiyum.

Report an error

தூவலி கெழுவிய சூரன் பின்பில ஏவலர் தங்களை விளித்திட் டிப்புவி காவலர் தமையெலாங் கடிது வம்மெனக் கூவுதிர் தம்மெனக் கூறித் தூண்டினான்.

tūvali keḻuviya cūraṉ piṉpila ēvalar taṅkaḷai viḷittiṭ ṭippuvi kāvalar tamaiyelāṅ kaṭitu vammeṉak kūvutir tammeṉak kūṟit tūṇṭiṉāṉ.

Report an error

தூண்டலும் அளவைதீர் தூத ரோடியே ஈண்டிய காவலர் இனத்தை மாநிலந் தேண்டினர் பற்றியே சென்று வென்றிகொள் ஆண்டகை இறைவன தவையின் உய்ப்பவே.

tūṇṭalum aḷavaitīr tūta rōṭiyē īṇṭiya kāvalar iṉattai mānilan tēṇṭiṉar paṟṟiyē ceṉṟu veṉṟikoḷ āṇṭakai iṟaivaṉa tavaiyiṉ uyppavē.

Report an error

ஆக்கையில் வியர்ப்புற அச்சம் நாணுயிர் தாக்குற நனியுளந் தளாக் கைதொழுங் காக்குநர் தொகுதியைக் காவல் மன்னவன் நோக்கினன் வெகுண்டிது நுவறல் மேயினான்.

ākkaiyil viyarppuṟa accam nāṇuyir tākkuṟa naṉiyuḷan taḷāk kaitoḻuṅ kākkunar tokutiyaik kāval maṉṉavaṉ nōkkiṉaṉ vekuṇṭitu nuvaṟal mēyiṉāṉ.

Report an error

எளித்துற லின்றிகம் ஏவல் நீங்கியே களித்திடு சசியொடுங் கடவுள் வாசவன் ஒளித்தனன் இம்பரின் உம்பர் இல்லைநீர் அளித்தது சாவும் அழகி தாமரோ.

eḷittuṟa liṉṟikam ēval nīṅkiyē kaḷittiṭu caciyoṭuṅ kaṭavuḷ vācavaṉ oḷittaṉaṉ impariṉ umpar illainīr aḷittatu cāvum aḻaki tāmarō.

Report an error

குறித்திடு புரைமனக் கொண்ட லூர்பவன் நெறித்திகழ ஆணையின் நின்ற தூதுவன் மறித்திரு முகனுடை மங்கை தன்கரம் அறுத்தவண் இருந்தனன் அதுவுந் தேர்ந்திலீர்.

kuṟittiṭu puraimaṉak koṇṭa lūrpavaṉ neṟittikaḻa āṇaiyiṉ niṉṟa tūtuvaṉ maṟittiru mukaṉuṭai maṅkai taṉkaram aṟuttavaṇ iruntaṉaṉ atuvun tērntilīr.

Report an error

மறங்கிளர் தேறல்வாய் மடுத்து வைகலுங் கறங்குறு நிலையராய்க் கலங்கி னீர்கொலோ உறங்கினி ரேகொலோ ஓம்பலீர் கொலோ பிறங்குதொல் வளமையால் பித்துற் றீர்கொலோ.

maṟaṅkiḷar tēṟalvāy maṭuttu vaikaluṅ kaṟaṅkuṟu nilaiyarāyk kalaṅki ṉīrkolō uṟaṅkiṉi rēkolō ōmpalīr kolō piṟaṅkutol vaḷamaiyāl pittuṟ ṟīrkolō.

Report an error

ஓயுமென் பகைஞரோ டுறவுற் றீர்கொலோ வாயவர் தங்களுக் கஞ்சி னீர்கொலோ சேயிழை யாரிடைச் செருக்குற் றீர்கொலோ நீயிர்கள் இருந்ததென் நிலைமை யென்னவே.

ōyumeṉ pakaiñarō ṭuṟavuṟ ṟīrkolō vāyavar taṅkaḷuk kañci ṉīrkolō cēyiḻai yāriṭaic cerukkuṟ ṟīrkolō nīyirkaḷ iruntateṉ nilaimai yeṉṉavē.

Report an error

எண்டரும் எந்தைநீ இசைத்த தன்மையிற் கொண்டிலம் ஒன்றுமக் குவல யந்தனைப் பண்டுதொட் டளிக்குதும் பகைஞர் யாரையுங் கண்டிலங் கரந்துறை கதையுங் கேட்டிலம்.

eṇṭarum entainī icaitta taṉmaiyiṟ koṇṭilam oṉṟumak kuvala yantaṉaip paṇṭutoṭ ṭaḷikkutum pakaiñar yāraiyuṅ kaṇṭilaṅ karantuṟai kataiyuṅ kēṭṭilam.

Report an error

தாயெனும் ஏழகத் தலையள் துன்முக ஆயிழை யொடும்வரல் அதுவும் அன்னர்கை போயதுந் தெரிந்திலம் புந்தி கொள்ளுதி மாயமி தாகுமால் மன்ன என்னவே.

tāyeṉum ēḻakat talaiyaḷ tuṉmuka āyiḻai yoṭumvaral atuvum aṉṉarkai pōyatun terintilam punti koḷḷuti māyami tākumāl maṉṉa eṉṉavē.

Report an error

மிடைதரு வெறுக்கையை மிசைந்து மால்கொளீஇப் புடவியை யிடைதொறும் போற்றல் செய்திலீர் இடையுற என்வயின் இனைய தோர்பழி அடைவது மாயையாம் அழகிதே என்றான்.

miṭaitaru veṟukkaiyai micaintu mālkoḷīip puṭaviyai yiṭaitoṟum pōṟṟal ceytilīr iṭaiyuṟa eṉvayiṉ iṉaiya tōrpaḻi aṭaivatu māyaiyām aḻakitē eṉṟāṉ.

Report an error

ஒலிகெழும் உவரிப் புத்தேள் உள்ளுறை வடவைச் செந்தீத் தொலைவுழி எழுவ தேபோல் சூரனுட் சினமீக் கொள்ள மலிகதிர் இருள்புக் கென்ன வாளுரீஇ மருங்கே தானைத் தலைவர் நின்றாரை ஏவித் தனித்தனி தண்டஞ் செய்வான்.

olikeḻum uvarip puttēḷ uḷḷuṟai vaṭavaic centīt tolaivuḻi eḻuva tēpōl cūraṉuṭ ciṉamīk koḷḷa malikatir iruḷpuk keṉṉa vāḷurīi maruṅkē tāṉait talaivar niṉṟārai ēvit taṉittaṉi taṇṭañ ceyvāṉ.

Report an error

சிற்சிலர் தமது நாவைச் செங்கையைச் சேதித் திட்டான் சிற்சிலர் துண்டந் தன்னைச் செவிகளைக் களைதல் செய்தான் சிற்சிலர் மருமந் தன்னைச் சிறுபுறத் தொடுகொய் வித்தான் சிற்சிலர் தாளைத் தோளைச் சென்னியைச் சேதிப் பித்தான்.

ciṟcilar tamatu nāvaic ceṅkaiyaic cētit tiṭṭāṉ ciṟcilar tuṇṭan taṉṉaic cevikaḷaik kaḷaital ceytāṉ ciṟcilar maruman taṉṉaic ciṟupuṟat toṭukoy vittāṉ ciṟcilar tāḷait tōḷaic ceṉṉiyaic cētip pittāṉ.

Report an error

எறிதரு கழற்காற் சூரன் இத்திறம் பல்தண் டங்கள் முறையினிற் செய்து சீய முழுமணித் தவிசில் தீர்ந்து விறல்கெழும் இனையர் செல்ல விடைகொடுத் தயனை நோக்கி மறைமுனி போதி யென்ன மற்றவன் இனைய சொற்றான்.

eṟitaru kaḻaṟkāṟ cūraṉ ittiṟam paltaṇ ṭaṅkaḷ muṟaiyiṉiṟ ceytu cīya muḻumaṇit tavicil tīrntu viṟalkeḻum iṉaiyar cella viṭaikoṭut tayaṉai nōkki maṟaimuṉi pōti yeṉṉa maṟṟavaṉ iṉaiya coṟṟāṉ.

Report an error

மன்னவர் மன்ன கேண்மோ வான்கதிர் உடுக்கள் ஏனோர் இந்நில மடந்தை வேலைக் கிறையவர் யாரு மென்றும் உன்னுடைப் பணியில் நிற்பர் உலகிவர் இன்றி யாகா அன்னவர் பிழையுட் கொள்ளேல் அருஞ்சிறை சிடுத்தி என்றான்.

maṉṉavar maṉṉa kēṇmō vāṉkatir uṭukkaḷ ēṉōr innila maṭantai vēlaik kiṟaiyavar yāru meṉṟum uṉṉuṭaip paṇiyil niṟpar ulakivar iṉṟi yākā aṉṉavar piḻaiyuṭ koḷḷēl aruñciṟai ciṭutti eṉṟāṉ.

Report an error

குறையிரந் தினைய கூறிக் கோகன தத்தோன் வேண்ட நறையிருந் துலவு தாரோன் நன்றென இசைவு கொள்ளா உறையிருந் திலங்கும் வாட்கை ஒற்றரை நோக்கி நந்தஞ் சிறையிருந் தோரைத் தம்மின் என்றலுஞ் சென்றங் குய்த்தார்.

kuṟaiyiran tiṉaiya kūṟik kōkaṉa tattōṉ vēṇṭa naṟaiyirun tulavu tārōṉ naṉṟeṉa icaivu koḷḷā uṟaiyirun tilaṅkum vāṭkai oṟṟarai nōkki nantañ ciṟaiyirun tōrait tammiṉ eṉṟaluñ ceṉṟaṅ kuyttār.

Report an error

வன்றளை உற்றோர் தம்மை மன்னவர் மன்னன் பாரா என்றுநம் பணியில் நிற்றிர் இந்திர னொடுசேர் கல்லிர் சென்றிடு நுங்கள் தொன்மை செய்திட வென்ன அன்னோர் நன்றிது புரிதும் என்னா நயமொழி புகன்று போனார்.

vaṉṟaḷai uṟṟōr tammai maṉṉavar maṉṉaṉ pārā eṉṟunam paṇiyil niṟṟir intira ṉoṭucēr kallir ceṉṟiṭu nuṅkaḷ toṉmai ceytiṭa veṉṉa aṉṉōr naṉṟitu puritum eṉṉā nayamoḻi pukaṉṟu pōṉār.

Report an error

போதலுங் கமலத் தோற்கும் புதல்வர்க்கும் அமைச்சர் யார்க்கும் மேதகு முனிவர் யார்க்கும் வியன்படைத் தலைமை யோர்க்கும் போதலை உதவிச் சூரன் உறையுளிற் புகுந்தான் முன்செல் ஆதவன் பகைஞன் செய்த செயலினை அறைத லுற்றேன்.

pōtaluṅ kamalat tōṟkum putalvarkkum amaiccar yārkkum mētaku muṉivar yārkkum viyaṉpaṭait talaimai yōrkkum pōtalai utavic cūraṉ uṟaiyuḷiṟ pukuntāṉ muṉcel ātavaṉ pakaiñaṉ ceyta ceyaliṉai aṟaita luṟṟēṉ.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).