Skip to content

மகேந்திர காண்டம் — நகரழி படலம் · நகரழி படலம்

nakaraḻi paṭalam

nakaraḻi paṭalam

nakaraḻi paṭalam, from Makēntira Kāṇṭam; poems 3.690–3.770.

81 versesTamil with transliteration

A spear and lotus for chapter 91 of Kanda Puranam.

ஆசுறும் அவுண வெள்ளம் ஐம்பது முடித்தோன் ஐஞ்? றோசனை அளவை யான்றே ஒராயிர மும்ப ரேகித் தேசுறு மேரு வென்னச் சிகரமோ ரிலக்கஞ் சூடி வீசுபொன் சுடர நின்ற வேரமொன் றங்கட் கண்டான்.

ācuṟum avuṇa veḷḷam aimpatu muṭittōṉ aiñ? ṟōcaṉai aḷavai yāṉṟē orāyira mumpa rēkit tēcuṟu mēru veṉṉac cikaramō rilakkañ cūṭi vīcupoṉ cuṭara niṉṟa vēramoṉ ṟaṅkaṭ kaṇṭāṉ.

Report an error

புறத்திருள் இரிய வைகும் பொலஞ்சுடர்ப் பொன்செய் வேரந் திறத்தியல் கோயில் முன்னஞ் சேர்ந்தது தன்னை வீரன் பறித்தொரு கரத்தின் ஏந்திப் பதகனாஞ் சூர பன்மன் அறத்தியல் இழுக்கி வைகும் அவைக்களம் வீசி ஆர்த்தான்.

puṟattiruḷ iriya vaikum polañcuṭarp poṉcey vēran tiṟattiyal kōyil muṉṉañ cērntatu taṉṉai vīraṉ paṟittoru karattiṉ ēntip patakaṉāñ cūra paṉmaṉ aṟattiyal iḻukki vaikum avaikkaḷam vīci ārttāṉ.

Report an error

பன்மணி செறிந்த பொற்பிற் பாயொளி எரிபொன் வேரம் மன்னவன் உறையுஞ் செம்பொன் மாயிரு மன்றில் போதல் மின்னவிர் மேரு வாதி வெற்பெலாம் மிகலின் ஒன்றிப் பொன்னகர் பொடிப்பச் செல்லுந் தன்மையைப் போலும்அம்மா.

paṉmaṇi ceṟinta poṟpiṟ pāyoḷi eripoṉ vēram maṉṉavaṉ uṟaiyuñ cempoṉ māyiru maṉṟil pōtal miṉṉavir mēru vāti veṟpelām mikaliṉ oṉṟip poṉṉakar poṭippac cellun taṉmaiyaip pōlumammā.

Report an error

வார்த்தரு கழற்கால் வீரன் வானுரும் ஏறும் உட்க ஆர்த்திடு துழனி யேகி அரசன்மே வியவத் தாணி சேர்த்தவர் கன்னத் தூடு செறியுமுன் எறித லுற்ற பேர்த்திடு செம்பொன் வேரம் பேரவை மிசையுற் றன்றே.

vārttaru kaḻaṟkāl vīraṉ vāṉurum ēṟum uṭka ārttiṭu tuḻaṉi yēki aracaṉmē viyavat tāṇi cērttavar kaṉṉat tūṭu ceṟiyumuṉ eṟita luṟṟa pērttiṭu cempoṉ vēram pēravai micaiyuṟ ṟaṉṟē.

Report an error

விற்செறி தூபிச் செம்பொன் வியன்மணி கஞலும் வேரங் கற்செறி பெருந்தோள் வீரன் எறிதலுங் கடிது நண்ணிப் பொற்செறி மார்பிற் சூரும் புதல்வருஞ் சிலரும் வைகுஞ் சிற்சில இடையே அன்றி மன்றெலாஞ் சிந்திற் றாமால்.

viṟceṟi tūpic cempoṉ viyaṉmaṇi kañalum vēraṅ kaṟceṟi peruntōḷ vīraṉ eṟitaluṅ kaṭitu naṇṇip poṟceṟi mārpiṟ cūrum putalvaruñ cilarum vaikuñ ciṟcila iṭaiyē aṉṟi maṉṟelāñ cintiṟ ṟāmāl.

Report an error

தடத்தனி வேரங் கீண்டு தபனியத் தவைக்கண் ஓச்சி இடித்தனன் ஒருதான் நிற்கும் எம்பிரா னேவல் தூதன் படைத்தளித திறுதி வேலைப் பசும்பொனார் தசும்பின் அண்டம் உடைத்துல கழித்து நிற்கும் ஒருபெருங் கடவுள் ஒத்தான்.

taṭattaṉi vēraṅ kīṇṭu tapaṉiyat tavaikkaṇ ōcci iṭittaṉaṉ orutāṉ niṟkum empirā ṉēval tūtaṉ paṭaittaḷita tiṟuti vēlaip pacumpoṉār tacumpiṉ aṇṭam uṭaittula kaḻittu niṟkum oruperuṅ kaṭavuḷ ottāṉ.

Report an error

புலவுகொள் அலகு வெவ்வாய்ப் புட்செறி பொதும்பர் தன்னில் பலமுடை உருமு வீழப் பட்டதோர் பரிச தென்னத் தொலைவகன் மைந்தன் விட்ட சூளிகை தகர்ப்பத் தொல்சீர் மலிவுறு சனங்க ளோடு மன்றமங் குற்ற தம்மா.

pulavukoḷ alaku vevvāyp puṭceṟi potumpar taṉṉil palamuṭai urumu vīḻap paṭṭatōr parica teṉṉat tolaivakaṉ maintaṉ viṭṭa cūḷikai takarppat tolcīr malivuṟu caṉaṅka ḷōṭu maṉṟamaṅ kuṟṟa tammā.

Report an error

இடிந்தன மிசையின் எல்லை இற்றபித் திகையின் சூழல் பொடிந்தன உத்தி ரங்கள் போதிகை பூழி யாகி முடிந்தன மதலை யாவும் முரிந்தன கபோதம் வீழ்ந்த மடிந்தன திருவுஞ் சீரும் மன்றழி வுற்ற தன்றே.

iṭintaṉa micaiyiṉ ellai iṟṟapit tikaiyiṉ cūḻal poṭintaṉa utti raṅkaḷ pōtikai pūḻi yāki muṭintaṉa matalai yāvum murintaṉa kapōtam vīḻnta maṭintaṉa tiruvuñ cīrum maṉṟaḻi vuṟṟa taṉṟē.

Report an error

பீடிகை புரைத்த பொற்பிற் பேரவை தகர்த லோடும் பாடுற அரசர் சூழ்ந்த பரிசனர் தம்முட் சில்லோர் ஓடினர் சிலவர் மெய்யூ றுற்றனர் சிலவர் நெக்கு வீடினர் சிலவர் ஆற்ற மெலிந்தனர் புலம்ப லுற்றார்.

pīṭikai puraitta poṟpiṟ pēravai takarta lōṭum pāṭuṟa aracar cūḻnta paricaṉar tammuṭ cillōr ōṭiṉar cilavar meyyū ṟuṟṟaṉar cilavar nekku vīṭiṉar cilavar āṟṟa melintaṉar pulampa luṟṟār.

Report an error

நெக்கது பொதியி லாக நிரந்தது செம்பொற் பூழி திக்கொடு புவியும் வானுஞ் செறிந்தன அவுண ராகித் தொக்கனர் உடைந்து மாய்ந்து தொகைபிரிந் தழிந்தார் தொல்லைத் தக்கனின் உணர்வு தீர்ந்த தகுவர்கோன் இவற்றைக் கண்டான்.

nekkatu potiyi lāka nirantatu cempoṟ pūḻi tikkoṭu puviyum vāṉuñ ceṟintaṉa avuṇa rākit tokkaṉar uṭaintu māyntu tokaipirin taḻintār tollait takkaṉiṉ uṇarvu tīrnta takuvarkōṉ ivaṟṟaik kaṇṭāṉ.

Report an error

ஆயிர நாமத் தண்ணல் அனையவன் வன்மை காணா ஆயிரம் வடவை யேபோல் அழன்றுதன் னயலின் நின்ற ஆயிர நெடுந்தோள் ஐஞ்? றானனங் கொண்ட தீயோர் ஆயிரர் தம்மை நோக்கி அடலுரும் ஏற்றிற் சொல்வான்.

āyira nāmat taṇṇal aṉaiyavaṉ vaṉmai kāṇā āyiram vaṭavai yēpōl aḻaṉṟutaṉ ṉayaliṉ niṉṟa āyira neṭuntōḷ aiñ? ṟāṉaṉaṅ koṇṭa tīyōr āyirar tammai nōkki aṭalurum ēṟṟiṟ colvāṉ.

Report an error

விழிப்பரு நிவப்பின் ஓங்கும் வேரமொன் றதனைக் கீண்டே தெழிப்பொடு குமரன் தூதன் செலுத்தினன் செம்பொன் மன்றம் இழிப்புறத் தகர்ந்து வீழ்ந்த தீண்டுசில் லிடமே அன்றிப் பழிப்பெனக் கிதன்மேல் உண்டோ பட்டதென் புகழும் மன்னோ.

viḻipparu nivappiṉ ōṅkum vēramoṉ ṟataṉaik kīṇṭē teḻippoṭu kumaraṉ tūtaṉ celuttiṉaṉ cempoṉ maṉṟam iḻippuṟat takarntu vīḻnta tīṇṭucil liṭamē aṉṟip paḻippeṉak kitaṉmēl uṇṭō paṭṭateṉ pukaḻum maṉṉō.

Report an error

கோறலே கொற்ற மன்றால் ஒற்றனைக் குறுகி நீவிர் மாறுபோர் இயற்றி யேனும் மற்றவன் வழாத வாற்றல் ஈறுசெய் திடாது பற்றி எம்முனர்த் தருதிர் மெய்யின் ஊறுசெய் தவனை வானோ ருடன்சிறை உய்ப்ப னென்றான்.

kōṟalē koṟṟa maṉṟāl oṟṟaṉaik kuṟuki nīvir māṟupōr iyaṟṟi yēṉum maṟṟavaṉ vaḻāta vāṟṟal īṟucey tiṭātu paṟṟi emmuṉart tarutir meyyiṉ ūṟucey tavaṉai vāṉō ruṭaṉciṟai uyppa ṉeṉṟāṉ.

Report an error

அன்னவர் அதனைக் கேளா அரசவீ தருளிக் கேண்மோ ஒன்னலன் தூதன் சோரி உயிரொடு குடித்தற் குற்றாம் நின்னருள் ஆணை நாடி நெஞ்சகம் புழுங்கி யஞ்சி இன்னதோர் பொழுதுந் தாழ்த்தேம் இனியது புரிது மென்றார்.

aṉṉavar ataṉaik kēḷā aracavī taruḷik kēṇmō oṉṉalaṉ tūtaṉ cōri uyiroṭu kuṭittaṟ kuṟṟām niṉṉaruḷ āṇai nāṭi neñcakam puḻuṅki yañci iṉṉatōr poḻutun tāḻttēm iṉiyatu puritu meṉṟār.

Report an error

என்றனர் வணக்கஞ் செய்ய இனிதென உவகை பூத்துக் கன்றிய அவுணர் தங்கள் காவலன் விடுப்ப அங்கட் சென்றனர் பத்து நூற்றுத் திறலுடை மொய்ம்பர் முன்னம் நின்றிடு வீர வாகு நிலைமையை உரைக்க லுற்றாம்.

eṉṟaṉar vaṇakkañ ceyya iṉiteṉa uvakai pūttuk kaṉṟiya avuṇar taṅkaḷ kāvalaṉ viṭuppa aṅkaṭ ceṉṟaṉar pattu nūṟṟut tiṟaluṭai moympar muṉṉam niṉṟiṭu vīra vāku nilaimaiyai uraikka luṟṟām.

Report an error

வேரம தெறிந்தவை வீட்டி நின்றுளான் சூருரை நகர்வளந் தொலைச்சிச் சூழுநர் சேருறும் இருக்கையுஞ் சிதைப்பன் இன்றெனா ஓருறு புந்தியில் உன்னி னாரோ.

vērama teṟintavai vīṭṭi niṉṟuḷāṉ cūrurai nakarvaḷan tolaiccic cūḻunar cēruṟum irukkaiyuñ citaippaṉ iṉṟeṉā ōruṟu puntiyil uṉṉi ṉārō.

Report an error

மறிப்பிணை முதலிய மான்கள் புள்ளினஞ் சிறப்புறு தண்டலை மணியிற் செம்பொனிற் குறிப்பினர் குயிற்றுசெய் குன்றம் யாவையும் பறித்தனன் திசைதொறும் பரவ வீசினான்.

maṟippiṇai mutaliya māṉkaḷ puḷḷiṉañ ciṟappuṟu taṇṭalai maṇiyiṟ cempoṉiṟ kuṟippiṉar kuyiṟṟucey kuṉṟam yāvaiyum paṟittaṉaṉ ticaitoṟum parava vīciṉāṉ.

Report an error

வரைவயி றுயிர்த்திடு மாசில் பல்பகை அரதன நிரைகளின் அணிய செம்பொனின் மரபினில் இயற்றிய வரம்பில் தெற்றிகள் விரைவொடு தொட்டனன் எடுத்து வீசினான்.

varaivayi ṟuyirttiṭu mācil palpakai arataṉa niraikaḷiṉ aṇiya cempoṉiṉ marapiṉil iyaṟṟiya varampil teṟṟikaḷ viraivoṭu toṭṭaṉaṉ eṭuttu vīciṉāṉ.

Report an error

முடிவகல் பேழையின் மூட்டு நீக்கியே அடியுறு கொள்கலம் அவற்றைச் சாய்த்தெனப் படியுறு மண்டபம் பலவுந் தொட்டெடா இடிபுரை ஓதையான் யாண்டும் வீசினான்.

muṭivakal pēḻaiyiṉ mūṭṭu nīkkiyē aṭiyuṟu koḷkalam avaṟṟaic cāytteṉap paṭiyuṟu maṇṭapam palavun toṭṭeṭā iṭipurai ōtaiyāṉ yāṇṭum vīciṉāṉ.

Report an error

மலரயன் மிசையுறு மாயற் புல்லுவான் நிலமகள் கைகளை நீட்டி யென்னவான் உலகெலாம் இகந்துமேல் ஓங்கு கோபுரம் பலபல பறித்தனன் பாங்கர் ஓச்சினான்.

malarayaṉ micaiyuṟu māyaṟ pulluvāṉ nilamakaḷ kaikaḷai nīṭṭi yeṉṉavāṉ ulakelām ikantumēl ōṅku kōpuram palapala paṟittaṉaṉ pāṅkar ōcciṉāṉ.

Report an error

மூளுறும் எரிசிகை முடித்துத் தானவர் கேளடு தமித்தமி கெழுமி யுற்றென வாளுறு மாமணி வயங்கு தூபிகைச் சூளிகை பலபல தொட்டு வீசினான்.

mūḷuṟum ericikai muṭittut tāṉavar kēḷaṭu tamittami keḻumi yuṟṟeṉa vāḷuṟu māmaṇi vayaṅku tūpikaic cūḷikai palapala toṭṭu vīciṉāṉ.

Report an error

கற்றிடும் விஞ்சையின் கழகம் பல்கடைத் தெற்றிகள் வேதிகை சிறந்த சாலைகள் துற்றிடு பழுமரச் சோலை வாவிகள் மற்றுள பிறவொடும் மட்டித் தானரோ.

kaṟṟiṭum viñcaiyiṉ kaḻakam palkaṭait teṟṟikaḷ vētikai ciṟanta cālaikaḷ tuṟṟiṭu paḻumarac cōlai vāvikaḷ maṟṟuḷa piṟavoṭum maṭṭit tāṉarō.

Report an error

கந்துக வியனிரை கரிகள் தேர்த்தொகை பந்தியிற் சாலையிற் பயின்று நின்றன அந்தமின் றாயின் அள்ளி அள்ளியே உந்தினன் திசைதொறும் உரற்றி வீழவே.

kantuka viyaṉirai karikaḷ tērttokai pantiyiṟ cālaiyiṟ payiṉṟu niṉṟaṉa antamiṉ ṟāyiṉ aḷḷi aḷḷiyē untiṉaṉ ticaitoṟum uraṟṟi vīḻavē.

Report an error

நிலவரை சூழ்தரு நேமி வெற்பென மலிதரு செம்மணி வகையிற் பண்ணிய பலவகை இயந்திரப் பதண இஞ்சிகள் ஒலிகழற் காலினான் உதைத்து வீட்டினான்.

nilavarai cūḻtaru nēmi veṟpeṉa malitaru cemmaṇi vakaiyiṟ paṇṇiya palavakai iyantirap pataṇa iñcikaḷ olikaḻaṟ kāliṉāṉ utaittu vīṭṭiṉāṉ.

Report an error

பூழியம் பொற்புயப் புனிதன் வெய்யசூர் வாழுறு கோநகர் வளத்தை யின்னணம் ஊழியின் மருத்தென உலாவி யட்டபின் சூழுறு கிடங்கருந் தூர்த்திட் டானரோ.

pūḻiyam poṟpuyap puṉitaṉ veyyacūr vāḻuṟu kōnakar vaḷattai yiṉṉaṇam ūḻiyiṉ marutteṉa ulāvi yaṭṭapiṉ cūḻuṟu kiṭaṅkarun tūrttiṭ ṭāṉarō.

Report an error

அறந்தலை நின்றிடா அரசன் கோயில்நின் றெறிந்திடு சிகரிகள் இலங்கு சூளிகை நிறைந்திடு மண்டபம் நெருங்கு காமர்காச் செறிந்தன பிறவொடு சென்று சேணெலாம்.

aṟantalai niṉṟiṭā aracaṉ kōyilniṉ ṟeṟintiṭu cikarikaḷ ilaṅku cūḷikai niṟaintiṭu maṇṭapam neruṅku kāmarkāc ceṟintaṉa piṟavoṭu ceṉṟu cēṇelām.

Report an error

உளர்ந்திடு வரியளி யுலாவு தொங்கலான் வளர்ந்திடு பாணியான் மன்னன் செல்வமாய்க் களைந்தெறி கின்றன கணிப்பி லாதவுங் கிளர்ந்திடு நெடுமுகில் கிழித்துச் சென்றவே.

uḷarntiṭu variyaḷi yulāvu toṅkalāṉ vaḷarntiṭu pāṇiyāṉ maṉṉaṉ celvamāyk kaḷainteṟi kiṉṟaṉa kaṇippi lātavuṅ kiḷarntiṭu neṭumukil kiḻittuc ceṉṟavē.

Report an error

சூரெனும் அவுணர்கோன் படைத்த தொல்வளஞ் சேரிய மிசைவரத் தெரிந்து வானிடைச் சாருறு கடவுளர் தம்முள் ஏங்கியே ஏரியல் தொகைபிரிந் திரியல் போயினார்.

cūreṉum avuṇarkōṉ paṭaitta tolvaḷañ cēriya micaivarat terintu vāṉiṭaic cāruṟu kaṭavuḷar tammuḷ ēṅkiyē ēriyal tokaipirin tiriyal pōyiṉār.

Report an error

ஊனிவர் குருதிவேல் ஒருவன் ஓச்சிய தானவர் கோன்வளந் தகைந்து விண்ணவர் மேனிகழ் பதங்களை வீட்டி ஏகியே வானதி தன்னையும் வல்லை தூர்த்தவே.

ūṉivar kurutivēl oruvaṉ ōcciya tāṉavar kōṉvaḷan takaintu viṇṇavar mēṉikaḻ pataṅkaḷai vīṭṭi ēkiyē vāṉati taṉṉaiyum vallai tūrttavē.

Report an error

வெறித்திடு தார்ப்புய விடலை நொய்தினில் பறித்தெறி அவுணர்கோன் பலவ ளங்களும் எறித்திடு தீங்கதிர் எல்லை வேந்தனை மறைத்தன பணிபல மயங்கிச் சூழ்ந்தபோல்.

veṟittiṭu tārppuya viṭalai noytiṉil paṟitteṟi avuṇarkōṉ palava ḷaṅkaḷum eṟittiṭu tīṅkatir ellai vēntaṉai maṟaittaṉa paṇipala mayaṅkic cūḻntapōl.

Report an error

சோலையின் மண்டபத் தொகையிற் சூளிகைப் பாலினிற் சிகரியிற் பயின்ற புள்ளெலாம் மேலுறு செலவினில் விரைவின் ஏகியே மாலயன் புள்ளடு மருவி வைகியே.

cōlaiyiṉ maṇṭapat tokaiyiṟ cūḷikaip pāliṉiṟ cikariyiṟ payiṉṟa puḷḷelām mēluṟu celaviṉil viraiviṉ ēkiyē mālayaṉ puḷḷaṭu maruvi vaikiyē.

Report an error

செஞ்சுடர்ச் சூளிகை சிகர மாதிகள் விஞ்சிய மிசைவர விழித்துத் தாளிலோன் எஞ்சிய வுடலமும் இறுங்கொல் இன்றெனா அஞ்சினன் அழுங்கினன் அலரி பாகனே.

ceñcuṭarc cūḷikai cikara mātikaḷ viñciya micaivara viḻittut tāḷilōṉ eñciya vuṭalamum iṟuṅkol iṉṟeṉā añciṉaṉ aḻuṅkiṉaṉ alari pākaṉē.

Report an error

வள்ளுறு வசிகெழு வயிர மாமுடி உள்ளபல் சூளிகை உம்பர் செல்வன பிள்ளைகள் எறிந்திடப் பிறங்கு பம்பரம் பொள்ளென ஈண்டிவான் போவ போன்றவே.

vaḷḷuṟu vacikeḻu vayira māmuṭi uḷḷapal cūḷikai umpar celvaṉa piḷḷaikaḷ eṟintiṭap piṟaṅku pamparam poḷḷeṉa īṇṭivāṉ pōva pōṉṟavē.

Report an error

மீப்படு வியன்முகில கிழித்து விண்மிசை மாப்பெருஞ் சிகரிகள் வல்லை செல்வன நீப்பருங் ககனமான் நெடுங்க துப்பினில் சீப்பிடு கின்றதோர் செய்கை போலுமால்.

mīppaṭu viyaṉmukila kiḻittu viṇmicai māpperuñ cikarikaḷ vallai celvaṉa nīpparuṅ kakaṉamāṉ neṭuṅka tuppiṉil cīppiṭu kiṉṟatōr ceykai pōlumāl.

Report an error

பயனுறு பழுமரப் பைம்பொற் காமர்கா வயனெறி தந்திட அகல்விண் செல்வன நயனறும் அவுணனூர் நணிய கற்பகம் வியனுல இருந்திட மீள்வ போன்றவே.

payaṉuṟu paḻumarap paimpoṟ kāmarkā vayaṉeṟi tantiṭa akalviṇ celvaṉa nayaṉaṟum avuṇaṉūr naṇiya kaṟpakam viyaṉula iruntiṭa mīḷva pōṉṟavē.

Report an error

ஐயன தொற்றுவன் அள்ளி வீசிய செய்யபல் பொருள்களுஞ் செறிந்து சேணெலாங் கொய்யுளை வயப்பரிக் கொடிஞ்சித் தேர்மிசை வெய்யவன் செலவினை விலக்கு கின்றவே.

aiyaṉa toṟṟuvaṉ aḷḷi vīciya ceyyapal poruḷkaḷuñ ceṟintu cēṇelāṅ koyyuḷai vayapparik koṭiñcit tērmicai veyyavaṉ celaviṉai vilakku kiṉṟavē.

Report an error

திருமிகு சூளிகை சிகர மாதகள் நிரல்பட ஏகியே நிரந்த பல்வகைப் பருமணி யெரிசுடர் பரப்பி வான்படர் இரவிதன் கதிரையும் இகலி வென்றவே.

tirumiku cūḷikai cikara mātakaḷ niralpaṭa ēkiyē niranta palvakaip parumaṇi yericuṭar parappi vāṉpaṭar iravitaṉ katiraiyum ikali veṉṟavē.

Report an error

மின்னவிர் சிகரிபொன் வேர மாதிகள் என்னவும் வான்படர்ந் தெழாலின் விஞ்சையர் உன்னுறும் ஓங்கலும் உவண வைப்பெனும் பொன்னெயில் வட்டமும் பூழி செய்தவே.

miṉṉavir cikaripoṉ vēra mātikaḷ eṉṉavum vāṉpaṭarn teḻāliṉ viñcaiyar uṉṉuṟum ōṅkalum uvaṇa vaippeṉum poṉṉeyil vaṭṭamum pūḻi ceytavē.

Report an error

குன்றொடு சூளிகை கோபு ரம்பிற ஒன்றுடன் ஒன்றுபட் டுரிஞ்சி யாயிடைத் துன்றிய மணிதிசை தோறுஞ் சிந்துவ மின்றிகழ தாரகை விளிந்து வீழ்வபோல்.

kuṉṟoṭu cūḷikai kōpu rampiṟa oṉṟuṭaṉ oṉṟupaṭ ṭuriñci yāyiṭait tuṉṟiya maṇiticai tōṟuñ cintuva miṉṟikaḻa tārakai viḷintu vīḻvapōl.

Report an error

பொற்றைகள் சிகரகோ புரங்கள் தத்தமில் எற்றுழிப் புகையென எழுந்து பூழிகள் சுற்றிய புலிங்கமுந் தோன்று கின்றன வெற்றவெம் புயல்களு மின்னும் போலவே.

poṟṟaikaḷ cikarakō puraṅkaḷ tattamil eṟṟuḻip pukaiyeṉa eḻuntu pūḻikaḷ cuṟṟiya puliṅkamun tōṉṟu kiṉṟaṉa veṟṟavem puyalkaḷu miṉṉum pōlavē.

Report an error

ஏழுயர் களிறனான் எறிந்த யாவையுஞ் சூழுற வானிடைத் துவன்ற எற்றலிற் கேழுறு நுண்டுகள் கெழுமிச் சிந்துவ பூழியின் நெடுமழை பொழியுந் தன்மைபோல்.

ēḻuyar kaḷiṟaṉāṉ eṟinta yāvaiyuñ cūḻuṟa vāṉiṭait tuvaṉṟa eṟṟaliṟ kēḻuṟu nuṇṭukaḷ keḻumic cintuva pūḻiyiṉ neṭumaḻai poḻiyun taṉmaipōl.

Report an error

ஆரியன் ஓச்சிய அணிகொள் மண்டபம் வேரமொ டகன்பொழில் பிறவும் விண்ணுறீஇத் தாரகை முதற்சுடர்த் தனுக்கள் சார்ந்திடச் சோரியும் இடையிடை துளித்த தென்பவே.

āriyaṉ ōcciya aṇikoḷ maṇṭapam vēramo ṭakaṉpoḻil piṟavum viṇṇuṟīit tārakai mutaṟcuṭart taṉukkaḷ cārntiṭac cōriyum iṭaiyiṭai tuḷitta teṉpavē.

Report an error

புந்தியி லான்மகம் புகுந்த தீமையால் இந்திர னாதியோர் யாருஞ் சூரனால் நொந்தனர் அவன்நகர் வளமும் நோவுற அந்தரத் தவரையும் அலக்கண செய்தவே.

puntiyi lāṉmakam pukunta tīmaiyāl intira ṉātiyōr yāruñ cūraṉāl nontaṉar avaṉnakar vaḷamum nōvuṟa antarat tavaraiyum alakkaṇa ceytavē.

Report an error

வெற்புறழ் மொய்ம்பினான் விடுத்த சூளிகை பற்பல பொருந்தலும் பட்ட வன்னிபோய் எற்படு கதிருடை இரவி பச்சைமாப் பொற்புறு கொய்யுளை பூழி செய்ததே.

veṟpuṟaḻ moympiṉāṉ viṭutta cūḷikai paṟpala poruntalum paṭṭa vaṉṉipōy eṟpaṭu katiruṭai iravi paccaimāp poṟpuṟu koyyuḷai pūḻi ceytatē.

Report an error

பொன்னவிர் சிகரகோ புரங்க ளாதிய துன்னிய தாக்கலில் தோன்றித் தீப்பொறி இன்னுயிர் வழங்கிய வெல்லை எங்கணும் வன்னிபெய் மழையென மயங்கி வீழ்பவே.

poṉṉavir cikarakō puraṅka ḷātiya tuṉṉiya tākkalil tōṉṟit tīppoṟi iṉṉuyir vaḻaṅkiya vellai eṅkaṇum vaṉṉipey maḻaiyeṉa mayaṅki vīḻpavē.

Report an error

வழுவுறும் அவுணர்கோன் வளங்கள் யாவையும் கெழுதகு விசும்பினைக் கிழித்துச் சேறலின் எழிலிகள் வயிறுடைந் திரங்கி ஆற்றலா தழுதென உலகெலாம் அறல்சிந் துற்றவே.

vaḻuvuṟum avuṇarkōṉ vaḷaṅkaḷ yāvaiyum keḻutaku vicumpiṉaik kiḻittuc cēṟaliṉ eḻilikaḷ vayiṟuṭain tiraṅki āṟṟalā taḻuteṉa ulakelām aṟalcin tuṟṟavē.

Report an error

ஏசிலா அறிவன் விட்ட இன்னபல் வெறுக்கை யாவும் மாசகல் விசும்பின் ஏகி மதிமுடி அருள்பெற் றுள்ள கோசிகன் துறக்க முய்த்த கொற்றவன் தவறி யென்ன ஆசுற மீண்டு ஞாலத் தகிலமும் வீழந்த அன்றே.

ēcilā aṟivaṉ viṭṭa iṉṉapal veṟukkai yāvum mācakal vicumpiṉ ēki matimuṭi aruḷpeṟ ṟuḷḷa kōcikaṉ tuṟakka muytta koṟṟavaṉ tavaṟi yeṉṉa ācuṟa mīṇṭu ñālat takilamum vīḻanta aṉṟē.

Report an error

படிதனில் திசையின் பாலிற் பௌவத்திற் பழுவந் தன்னில் தடவரை தன்னில் இன்ன தகையன பிறவிற் சூர னுடையபல் வளங்க ளெல்லாம் உரற்றியே வீழ ஆண்டும் இடைதரு முயிரின் பொம்மல் வெருவிவீழ்ந் திரித லுற்ற.

paṭitaṉil ticaiyiṉ pāliṟ pauvattiṟ paḻuvan taṉṉil taṭavarai taṉṉil iṉṉa takaiyaṉa piṟaviṟ cūra ṉuṭaiyapal vaḷaṅka ḷellām uraṟṟiyē vīḻa āṇṭum iṭaitaru muyiriṉ pommal veruvivīḻn tirita luṟṟa.

Report an error

அலைந்தது பரிதி ஓங்கல் அதிர்ந்தது மேருச் சையங் குலைந்தது சூழுங் குன்றங் குலுங்கிய அசலம் ஏழுங் கலைந்தது நாகர் வைப்புங் கலங்கிய கடலும் பாரும் உலைந்தன உயிர்கண் முற்றும் ஓடின திசையின் யானை.

alaintatu pariti ōṅkal atirntatu mēruc caiyaṅ kulaintatu cūḻuṅ kuṉṟaṅ kuluṅkiya acalam ēḻuṅ kalaintatu nākar vaippuṅ kalaṅkiya kaṭalum pārum ulaintaṉa uyirkaṇ muṟṟum ōṭiṉa ticaiyiṉ yāṉai.

Report an error

தண்படு தொடலை மார்பன் தானெறிந் தவற்றிற் பல்வே றொண்புவி முழுதுஞ் சிந்திற் றொழிந்தன உலப்பி லாத எண்பதி னாயி ரப்பேர் யோசனை யெல்லைத் தாகிக் கண்படு சூரன் ஊரின் கல்லென வீழ்ந்த மாதோ.

taṇpaṭu toṭalai mārpaṉ tāṉeṟin tavaṟṟiṟ palvē ṟoṇpuvi muḻutuñ cintiṟ ṟoḻintaṉa ulappi lāta eṇpati ṉāyi rappēr yōcaṉai yellait tākik kaṇpaṭu cūraṉ ūriṉ kalleṉa vīḻnta mātō.

Report an error

முடிந்திடல் அரிய சூரன் மொய்வளம் அவனூர் முற்றுந் தடிந்தெறி உருமே றென்னத் தணப்பற வீழ்த லோடும் இடிந்தன மாட வீதி யாவையும் கடிகா இற்ற பொடிந்தன சிகரி யாதி புரிசைகள் மறிந்து மாண்ட.

muṭintiṭal ariya cūraṉ moyvaḷam avaṉūr muṟṟun taṭinteṟi urumē ṟeṉṉat taṇappaṟa vīḻta lōṭum iṭintaṉa māṭa vīti yāvaiyum kaṭikā iṟṟa poṭintaṉa cikari yāti puricaikaḷ maṟintu māṇṭa.

Report an error

மண்டபஞ் சிகரி வேரம் அணிமதில் மாட கூடம் எண்டகு பொதியின் முற்றும் இடிபட எழுபொற் பூழி விண்டொடு திசைபார் யாண்டும் வெறுக்கையின் வடிவ மாக்கி அண்டர்தம் உலகீ தென்றே அறிகுறா வகைசெய் தன்றே.

maṇṭapañ cikari vēram aṇimatil māṭa kūṭam eṇṭaku potiyiṉ muṟṟum iṭipaṭa eḻupoṟ pūḻi viṇṭoṭu ticaipār yāṇṭum veṟukkaiyiṉ vaṭiva mākki aṇṭartam ulakī teṉṟē aṟikuṟā vakaicey taṉṟē.

Report an error

புடையகல் பொன்செய் மூதூர் பொள்ளெனத் தகர்ந்து வீழ மிடைதரு வீதி முற்று மேயின சனங்கள் பூசல் கடைவரு நாள தெல்லைக் ககனமூ தண்ட கூடம் உடைதலும் முடியும் ஆவி அரற்றுமா றொத்த தன்றே.

puṭaiyakal poṉcey mūtūr poḷḷeṉat takarntu vīḻa miṭaitaru vīti muṟṟu mēyiṉa caṉaṅkaḷ pūcal kaṭaivaru nāḷa tellaik kakaṉamū taṇṭa kūṭam uṭaitalum muṭiyum āvi araṟṟumā ṟotta taṉṟē.

Report an error

நாக முந்து நறுநிழல் மாதவி நாக முந்து நறுநிழற் பொற்கணி சேக ரம்பல சிந்திடு காழுடைச் சேக ரம்பல வோடு சிதைந்தவே.

nāka muntu naṟuniḻal mātavi nāka muntu naṟuniḻaṟ poṟkaṇi cēka rampala cintiṭu kāḻuṭaic cēka rampala vōṭu citaintavē.

Report an error

கோட ரங்குல வுற்றிட வான்றொடுங் கோட ரங்குல வுற்றிடு தண்டலைக் கோட ரங்குலங் கோலஞ்செய் பொன்வரைக் கோட ரங்குல வுற்றிறை கொண்டவே.

kōṭa raṅkula vuṟṟiṭa vāṉṟoṭuṅ kōṭa raṅkula vuṟṟiṭu taṇṭalaik kōṭa raṅkulaṅ kōlañcey poṉvaraik kōṭa raṅkula vuṟṟiṟai koṇṭavē.

Report an error

ஓடும் வாவியின் மீனினம் ஓங்குபுள் ளோடும் வாவிவிண் ணுற்றிட வீதியின் மாட மாலை வரிசையின் மல்கிய மாட மாலை மறிந்திடி பட்டதே.

ōṭum vāviyiṉ mīṉiṉam ōṅkupuḷ ḷōṭum vāviviṇ ṇuṟṟiṭa vītiyiṉ māṭa mālai varicaiyiṉ malkiya māṭa mālai maṟintiṭi paṭṭatē.

Report an error

அண்ட ரண்டரும் அந்நகர் மாண்டன அண்ட ரண்டம் அளவிடு சூளிகை மண்ட பம்மதின் மாடந் தரித்தயர் மண்ட பம்மதின் மாதவம் யாவதே.

aṇṭa raṇṭarum annakar māṇṭaṉa aṇṭa raṇṭam aḷaviṭu cūḷikai maṇṭa pammatiṉ māṭan tarittayar maṇṭa pammatiṉ mātavam yāvatē.

Report an error

பூவை யன்ன மணிமயில் பொற்புறு பூவை யன்ன மணிமயில் பொற்புறா வாவி யோடைவண் டான மழிந்திட வாவி யோடைவண் டானம் அழியுமால்.

pūvai yaṉṉa maṇimayil poṟpuṟu pūvai yaṉṉa maṇimayil poṟpuṟā vāvi yōṭaivaṇ ṭāṉa maḻintiṭa vāvi yōṭaivaṇ ṭāṉam aḻiyumāl.

Report an error

மொய்யு டைத்தறி மோதித் தளைபரீஇ மையு டைப்பெரு மால்கரி சோரிநீர் மெய்யி டத்துக விண்முகி லச்சுறக் கையெ டுத்துக் கதறி உடைந்தவே.

moyyu ṭaittaṟi mōtit taḷaiparīi maiyu ṭaipperu mālkari cōrinīr meyyi ṭattuka viṇmuki laccuṟak kaiye ṭuttuk kataṟi uṭaintavē.

Report an error

ஈடு சான்ற வெருத்த முரிந்திட நீடு பூநுதல் நெக்குறக் கிம்புரிக் கோடு சிந்தக் குருதியு குத்தரோ ஓடி வீழ்வ உவாக்கள் அரற்றியே.

īṭu cāṉṟa verutta murintiṭa nīṭu pūnutal nekkuṟak kimpurik kōṭu cintak kurutiyu kuttarō ōṭi vīḻva uvākkaḷ araṟṟiyē.

Report an error

கார்கொள் சிந்துரங் காயத் திடையிடைச் சோரி சோர்தரத் தோன்றுவ ஈற்றினின் மேரு வாதி விலங்கலை மெய்க்கனல் சாரும் வெம்புகை தன்னொடுஞ் சூழ்ந்தபோல்.

kārkoḷ cinturaṅ kāyat tiṭaiyiṭaic cōri cōrtarat tōṉṟuva īṟṟiṉiṉ mēru vāti vilaṅkalai meykkaṉal cārum vempukai taṉṉoṭuñ cūḻntapōl.

Report an error

கோடிகள் இற்ற கொடிஞ்சி முரிந்தன இடைகொள் பீடிகை எல்லைகள் நெக்கன அடிகொள் சில்லியும் ஆருஞ் சிதைந்தன பொடிய தாகிப் புரண்டன தேர்களே.

kōṭikaḷ iṟṟa koṭiñci murintaṉa iṭaikoḷ pīṭikai ellaikaḷ nekkaṉa aṭikoḷ cilliyum āruñ citaintaṉa poṭiya tākip puraṇṭaṉa tērkaḷē.

Report an error

பந்தி தோறும் பராவிய ஐங்கதிக் கந்து கங்கள் கலங்கி நெரிந்திட நொந்து மேனி நொறில்வரு செம்புனல் சிந்தி யோடச் சிதறிய திக்கெலாம்.

panti tōṟum parāviya aiṅkatik kantu kaṅkaḷ kalaṅki nerintiṭa nontu mēṉi noṟilvaru cempuṉal cinti yōṭac citaṟiya tikkelām.

Report an error

சிதவல் கொண்டிடு செம்மயிர்க் கொய்யுளை மதுகை வெம்பரி வாய்களின் வீழ்தரு முதிர வாரி யொலிகடல் புக்கதால் இதுகொ லோவட வைக்கனல் என்னவே.

citaval koṇṭiṭu cemmayirk koyyuḷai matukai vempari vāykaḷiṉ vīḻtaru mutira vāri yolikaṭal pukkatāl ituko lōvaṭa vaikkaṉal eṉṉavē.

Report an error

காள வெங்கரிக் காலின் வயப்பரித் தாளின் ஊடகப் பட்டுத் தரைபுகா மூளை சிந்த முழுதுடல் பூழியாய் மாளு கின்றனர் மாநக ரோர் சிலர்.

kāḷa veṅkarik kāliṉ vayapparit tāḷiṉ ūṭakap paṭṭut taraipukā mūḷai cinta muḻutuṭal pūḻiyāy māḷu kiṉṟaṉar mānaka rōr cilar.

Report an error

ஆளி மொய்ம்புடை அண்ணல்முன் வீசின நீளு மாநகர் ஞொள்ளலின் வீழ்தலுந் தோளி ழந்து சுவல்முரிந் தொய்யெனத் தாளி ழந்து தரங்கமுற் றார்சிலர்.

āḷi moympuṭai aṇṇalmuṉ vīciṉa nīḷu mānakar ñoḷḷaliṉ vīḻtalun tōḷi ḻantu cuvalmurin toyyeṉat tāḷi ḻantu taraṅkamuṟ ṟārcilar.

Report an error

பொற்றை யன்ன பொலன்மணி மாளிகை இற்று வீழ்தலும் என்னிது வென்றெழீஇ வெற்ற வெள்ளிடை மேவுதல் முன்னியே முற்றம் வந்திடு முன்மறிந் தார்சிலர்.

poṟṟai yaṉṉa polaṉmaṇi māḷikai iṟṟu vīḻtalum eṉṉitu veṉṟeḻīi veṟṟa veḷḷiṭai mēvutal muṉṉiyē muṟṟam vantiṭu muṉmaṟin tārcilar.

Report an error

ஊடு மைந்தரும் ஒண்டொடி மாதரும் மாட மோடு மறிந்தனர் தம்முடல் வீடி விண்மிசை வேற்றுரு வெய்தியே கூடி யேவழிக் கொண்டன ரோர்சிலர்.

ūṭu maintarum oṇṭoṭi mātarum māṭa mōṭu maṟintaṉar tammuṭal vīṭi viṇmicai vēṟṟuru veytiyē kūṭi yēvaḻik koṇṭaṉa rōrcilar.

Report an error

உவமன் இல்லவன் ஓச்சின எங்கணும் அவதி யின்றிப் பொழிய வவைதெரீஇத் தவறி லாதுசெய் தாழ்வரை கீண்டெடாக் கவிகை யாத்தமைக் காத்துநிற் பார்சிலர்.

uvamaṉ illavaṉ ōcciṉa eṅkaṇum avati yiṉṟip poḻiya vavaiterīit tavaṟi lātucey tāḻvarai kīṇṭeṭāk kavikai yāttamaik kāttuniṟ pārcilar.

Report an error

விறற்கொள் வாகு விடுத்தன கல்லக வுறைப்பின் வீழ ஒதுங்கிடம் இன்மையிற் சிறக்கு மாநகர்ச் செந்தரைக் கொண்டகீழ் அறைக்கு ளேபுக் கலமரு வார்சிலர்.

viṟaṟkoḷ vāku viṭuttaṉa kallaka vuṟaippiṉ vīḻa otuṅkiṭam iṉmaiyiṟ ciṟakku mānakarc centaraik koṇṭakīḻ aṟaikku ḷēpuk kalamaru vārcilar.

Report an error

மாதர் தங்களை மக்களை அன்னையைத் தாதை மாரைத் தமதுகைப் பற்றியே ஏதின் மாடம் இகந்துகச் சோரிநீர் வீதி போந்து வெருவிநிற் பார்சிலர்.

mātar taṅkaḷai makkaḷai aṉṉaiyait tātai mārait tamatukaip paṟṟiyē ētiṉ māṭam ikantukac cōrinīr vīti pōntu veruviniṟ pārcilar.

Report an error

கருவி வானினுங் கண்ணகன் திக்கினுந் தரணி தன்னினுந் தாவிலன் வீசிய திருவ ளங்கள் செறிந்தன விழ்தலும் வெருவிப் போய்க்கடல் வீழ்ந்தொளிப் பார்சிலர்.

karuvi vāṉiṉuṅ kaṇṇakaṉ tikkiṉun taraṇi taṉṉiṉun tāvilaṉ vīciya tiruva ḷaṅkaḷ ceṟintaṉa viḻtalum veruvip pōykkaṭal vīḻntoḷip pārcilar.

Report an error

கிழிந்த சென்னியிற் கேழ்படு செம்புனல் கழிந்து தோன்றவுங் கண்டனர் ஐயுறாப் பொழிந்து மெய்ப்புறம் போர்த்தலுந் தேற்றியே அழிந்தி ரங்குற ஆகுலிப் பார்சிலர்.

kiḻinta ceṉṉiyiṟ kēḻpaṭu cempuṉal kaḻintu tōṉṟavuṅ kaṇṭaṉar aiyuṟāp poḻintu meyppuṟam pōrttalun tēṟṟiyē aḻinti raṅkuṟa ākulip pārcilar.

Report an error

ஆடல் மொய்ம்பினன் ஆர்த்துமுன் வீசிய மாட வீதி வளநகர் எங்கணும் நீட வீழதலும் நிற்றலை அஞ்சியே ஓடி யூறுற் றுயிர்துறப் பார்சிலர்.

āṭal moympiṉaṉ ārttumuṉ vīciya māṭa vīti vaḷanakar eṅkaṇum nīṭa vīḻatalum niṟṟalai añciyē ōṭi yūṟuṟ ṟuyirtuṟap pārcilar.

Report an error

திங்கள் சூடி திருமகன் விட்டன எங்கும் வீழும் இறப்பினை நோக்கியே அங்கி வெங்கணை தொட்டறுத் தன்னவை தங்கள் ஆருயிர் தாங்கிநிற் பார்சிலர்.

tiṅkaḷ cūṭi tirumakaṉ viṭṭaṉa eṅkum vīḻum iṟappiṉai nōkkiyē aṅki veṅkaṇai toṭṭaṟut taṉṉavai taṅkaḷ āruyir tāṅkiniṟ pārcilar.

Report an error

மையல் மாதரும் மைந்தரும் ஆவியும் பொய்யில் புந்தியும் ஒன்றிப் புணர்தலுஞ் செய்ய மாடஞ் சிகரமொ டேவிழ மெய்யும் ஒன்றி விளிந்திடு வார்சிலர்.

maiyal mātarum maintarum āviyum poyyil puntiyum oṉṟip puṇartaluñ ceyya māṭañ cikaramo ṭēviḻa meyyum oṉṟi viḷintiṭu vārcilar.

Report an error

அந்தண் மாடத் தறிவன் விடுத்தன வந்து வீழ மறிந்துரு மேறெனச் சிந்த வேயுகு செம்பொறி மெய்ப்பட வெந்து சின்னம் விரவுறு வார்சிலர்.

antaṇ māṭat taṟivaṉ viṭuttaṉa vantu vīḻa maṟinturu mēṟeṉac cinta vēyuku cempoṟi meyppaṭa ventu ciṉṉam viravuṟu vārcilar.

Report an error

வரங்கொள் வீர மகேந்திரத் தின்னணந் தரங்க மெய்திச் சனங்களெல் லாமிரீஇ உரங்கள் சிந்தி அழிந்துழி ஒல்லென இரங்கும் ஓதை எழுகடல் உண்டதே.

varaṅkoḷ vīra makēntirat tiṉṉaṇan taraṅka meytic caṉaṅkaḷel lāmirīi uraṅkaḷ cinti aḻintuḻi olleṉa iraṅkum ōtai eḻukaṭal uṇṭatē.

Report an error

மன்றி னிற்கரி பொய்த்து மனுநெறி கொன்று வாழுங் கொடியர்தம் மில்லெனத் துன்று மாடத் தொகைவெள் ளிடையதாய்ப் பொன்றி வீழ்ந்தன புல்லென வாகியே.

maṉṟi ṉiṟkari poyttu maṉuneṟi koṉṟu vāḻuṅ koṭiyartam milleṉat tuṉṟu māṭat tokaiveḷ ḷiṭaiyatāyp poṉṟi vīḻntaṉa pulleṉa vākiyē.

Report an error

நீறு பட்ட நெடுநகர் எங்கணும் ஊறு பட்ட உயிர்கடஞ் சோரிநீர் ஆறு பட்டிட அங்கவை யோடளாய்ச் சேறு பட்டன செக்கர்விண் போலவே.

nīṟu paṭṭa neṭunakar eṅkaṇum ūṟu paṭṭa uyirkaṭañ cōrinīr āṟu paṭṭiṭa aṅkavai yōṭaḷāyc cēṟu paṭṭaṉa cekkarviṇ pōlavē.

Report an error

மலிந்த சீர்த்தி மகேந்திர மாபுரம் அலைந்து தொல்லைத் திருமுழு தற்றதால் மெலிந்தி டும்படி விண்ணவர் தம்மெலாம் நலிந்த வன்வளம் நன்றுறு மேகொலாம்.

malinta cīrtti makēntira māpuram alaintu tollait tirumuḻu taṟṟatāl melinti ṭumpaṭi viṇṇavar tammelām nalinta vaṉvaḷam naṉṟuṟu mēkolām.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).