பூமன்னு நான்முகத்தோன் புத்தேளி ராங்கவர் கோன் மாமன்னு சோதி மணிமார்ப - னாமன்னும்
pūmaṉṉu nāṉmukattōṉ puttēḷi rāṅkavar kōṉ māmaṉṉu cōti maṇimārpa - ṉāmaṉṉum
போற்றிப் பஃறொடை · போற்றிப் பஃறொடை
pōṟṟip paḵṟoṭai
The complete continuous poem in its printed couplets, followed by its closing venpa.
96 passagesTamil with transliteration
பூமன்னு நான்முகத்தோன் புத்தேளி ராங்கவர் கோன் மாமன்னு சோதி மணிமார்ப - னாமன்னும்
pūmaṉṉu nāṉmukattōṉ puttēḷi rāṅkavar kōṉ māmaṉṉu cōti maṇimārpa - ṉāmaṉṉum
வேதம்வே தாந்தாம் விளக்கஞ்செய் விந்துவுடன் நாதநா தாந்த நடுவேதம் - போதத்தால்
vētamvē tāntām viḷakkañcey vintuvuṭaṉ nātanā tānta naṭuvētam - pōtattāl
ஆமளவுந் தேட அளவிறந்த வப்பாலைச் சேம வொளியெவருந் தேரும்வகை - மாமணிசூழ்
āmaḷavun tēṭa aḷaviṟanta vappālaic cēma voḷiyevarun tērumvakai - māmaṇicūḻ
மன்று ணிறைந்து பிறவி வழக்கறுக்க நின்ற நிருத்த நிலைபோற்றி - குன்றாத
maṉṟu ṇiṟaintu piṟavi vaḻakkaṟukka niṉṟa nirutta nilaipōṟṟi - kuṉṟāta
பல்லுயிர்வெவ் வேறு படைத்து மவைகாத்து மெல்லை யிளைப் பொழிய விட்டுவைத்துந் தொல்லையுறும்.
palluyirvev vēṟu paṭaittu mavaikāttu mellai yiḷaip poḻiya viṭṭuvaittun tollaiyuṟum.
அந்தமடி நடுவென் றெண்ண வளவிருந்து வந்த பெரிய வழிபோற்றி - முந்துற்ற
antamaṭi naṭuveṉ ṟeṇṇa vaḷaviruntu vanta periya vaḻipōṟṟi - muntuṟṟa
நெல்லுக் குமிதவிடு நீடு செம்பிற் காளிதமுந் தொல்லைக் கடறோன்றத் தோன்றுவரு - மெல்லாம்
nelluk kumitaviṭu nīṭu cempiṟ kāḷitamun tollaik kaṭaṟōṉṟat tōṉṟuvaru - mellām
ஒருபுடை யொப்பாய்த்தா னுள்ளவா றுண்டாய் அருவமா யெவ்வுயிரு மார்த்தே - யுருவுடைய
orupuṭai yoppāyttā ṉuḷḷavā ṟuṇṭāy aruvamā yevvuyiru mārttē - yuruvuṭaiya
மாமணியை யுள்ளடக்கு மாநாகம் வன்னிதனைத் தானடக்குங் காட்டத் தகுதியும் போன் - ஞானத்தின்
māmaṇiyai yuḷḷaṭakku mānākam vaṉṉitaṉait tāṉaṭakkuṅ kāṭṭat takutiyum pōṉ - ñāṉattiṉ
கண்ணை மறைத்த கடிய தொழி லாணவத்தால் எண்ணஞ் செயன்மாண்ட வெவ்வுயிர்க்கு முண்ணாடிக்
kaṇṇai maṟaitta kaṭiya toḻi lāṇavattāl eṇṇañ ceyaṉmāṇṭa vevvuyirkku muṇṇāṭik
கட்புலனாற் காணார்தங் கைகொடுத்த கோலேபோற் பொற்புடைய மாயைப் புணர்ப்பின்கண் - முற்பால்
kaṭpulaṉāṟ kāṇārtaṅ kaikoṭutta kōlēpōṟ poṟpuṭaiya māyaip puṇarppiṉkaṇ - muṟpāl
தனுகரண மும்புவன முந்தந் தவற்றான் மனமுதலாவந்தவிகா ரத்தால் - வினையிரண்டுங்
taṉukaraṇa mumpuvaṉa muntan tavaṟṟāṉ maṉamutalāvantavikā rattāl - viṉaiyiraṇṭuṅ
காட்டி யதனாற் பிறப்பாக்கிக் கைகொண்டு மீட்டறிவு காட்டும் வினைபோற்றி - நாட்டுகின்ற
kāṭṭi yataṉāṟ piṟappākkik kaikoṇṭu mīṭṭaṟivu kāṭṭum viṉaipōṟṟi - nāṭṭukiṉṟa
வெப்பிறப்பு முற்செ யிருவினையா நிச்சயித்துப் பொற்புடைய தந்தைதாய் போகத்துட் கர்ப்பமாய்ப்
veppiṟappu muṟce yiruviṉaiyā niccayittup poṟpuṭaiya tantaitāy pōkattuṭ karppamāyp
புல்லிற் பனிபோற் புகுந்திவலைக் குட்படுங்கால் எல்லைப் படாவுதரத் தீண்டியதீப் - பல்வகையா
pulliṟ paṉipōṟ pukuntivalaik kuṭpaṭuṅkāl ellaip paṭāvutarat tīṇṭiyatīp - palvakaiyā
லங்கே கிடந்த வநாதியுயிர் தம்பசியால் எங்கேனுமாக வெடுக்குவென - வெங்கும்பிக்
laṅkē kiṭanta vanātiyuyir tampaciyāl eṅkēṉumāka veṭukkuveṉa - veṅkumpik
காயக் கருக்குழியிற் காத்திருந்துங் காமியத்துக் கேயக்கை, கான்முதலா யெவ்வுறுப்பு - மாசறவே
kāyak karukkuḻiyiṟ kāttiruntuṅ kāmiyattuk kēyakkai, kāṉmutalā yevvuṟuppu - mācaṟavē
செய்து திருத்திப்பின்பி யோகிருத்தி முன்புக்க வையவழி யேகொண் டணைகின்ற - பொய்யாத
ceytu tiruttippiṉpi yōkirutti muṉpukka vaiyavaḻi yēkoṇ ṭaṇaikiṉṟa - poyyāta
னல்லவமே போற்றியம் மாயக்கா றான்மறைப்ப நல்ல வறிவொழிந்து நன்குதீ - தொல்லையுறா
ṉallavamē pōṟṟiyam māyakkā ṟāṉmaṟaippa nalla vaṟivoḻintu naṉkutī - tollaiyuṟā
வக்காலந் தன்னிற் பசியையறி வித்தழுவித் துக்காவி சொரத்தா யுண்ணடுங்கி மிக்கோங்குஞ்.
vakkālan taṉṉiṟ paciyaiyaṟi vittaḻuvit tukkāvi corattā yuṇṇaṭuṅki mikkōṅkuñ.
சிந்தையுருக முலையுருகுந் தீஞ்சுவைப்பால் வந்துமடுப் பக்கண்டு வாழ்ந்திருப்பப் - பந்தித்த
cintaiyuruka mulaiyurukun tīñcuvaippāl vantumaṭup pakkaṇṭu vāḻntiruppap - pantitta
பாசப் பெருங்கயிற்றாற் பல்லுயிரும் பாலிக்க நேசத்தை வைத்த நெறிபோற்றி - பாசற்ற
pācap peruṅkayiṟṟāṟ palluyirum pālikka nēcattai vaitta neṟipōṟṟi - pācaṟṟa
பாளைப் பசும்பதத்தும் பாலனா மப்பதத்து நாளுக்கு நாட்சகல ஞானத்து - மூள்வித்துக்
pāḷaip pacumpatattum pālaṉā mappatattu nāḷukku nāṭcakala ñāṉattu - mūḷvittuk
கொண்டாள வாளக் கருவிகொடுத் தொக்க நின்று பண்டாரி யான படி போற்றி - தண்டாத
koṇṭāḷa vāḷak karuvikoṭut tokka niṉṟu paṇṭāri yāṉa paṭi pōṟṟi - taṇṭāta
புன்புலால் போர்த்த புழுக்குரம்பை மாமனையில் அன்புசேர் கின்றனகட் டைந்தாக்கி - முன்புள்ள
puṉpulāl pōrtta puḻukkurampai māmaṉaiyil aṉpucēr kiṉṟaṉakaṭ ṭaintākki - muṉpuḷḷa
உண்மை நிலைமை யொருகா லகலாது திண்மை மலத்தாற் சிறையாக்கிக் - கண்மறைத்து
uṇmai nilaimai yorukā lakalātu tiṇmai malattāṟ ciṟaiyākkik - kaṇmaṟaittu
மூலவருங் கட்டிலுயிர் மூடமா யுட்கிடப்பக் கால நியதி யதுகாட்டி - மேலோங்கு
mūlavaruṅ kaṭṭiluyir mūṭamā yuṭkiṭappak kāla niyati yatukāṭṭi - mēlōṅku
முந்திவியன் கட்டிலுயிர் சேர்த்துக் கலைவித்தை யந்தவராக மவைமுன்பு - தந்த
muntiviyaṉ kaṭṭiluyir cērttuk kalaivittai yantavarāka mavaimuṉpu - tanta
தொழிலறி விச்சை துணையாக மானி நெழிலுடைய முக்குணமுமெய்தி - மருளோடு
toḻilaṟi viccai tuṇaiyāka māṉi neḻiluṭaiya mukkuṇamumeyti - maruḷōṭu
மன்னு மிதயத்திற் சித்தத்தாற் கண்ட பொருள் இன்ன பொருளென் றியம்பவொண்ணா - வந்நிலை போய்க்
maṉṉu mitayattiṟ cittattāṟ kaṇṭa poruḷ iṉṉa poruḷeṉ ṟiyampavoṇṇā - vannilai pōyk
கண்டவியன் கட்டிற் கருவிகளீ ரைந்தொழியக் கொண்டுநியமித்தற்றை நாட்கொடுப்பப் - பண்டை
kaṇṭaviyaṉ kaṭṭiṟ karuvikaḷī raintoḻiyak koṇṭuniyamittaṟṟai nāṭkoṭuppap - paṇṭai
யிருவினையான் முன்புள்ள வின்பத்துன் பங்கள் மருவும்வகை யங்கே மருவி - யுருவுடனின்
yiruviṉaiyāṉ muṉpuḷḷa viṉpattuṉ paṅkaḷ maruvumvakai yaṅkē maruvi - yuruvuṭaṉiṉ
றோங்கு நுதலாய வோலக்க மண்டபத்திற் போங்கருவி யெல்லாம் புகுந்தீண்டி - நீங்காத
ṟōṅku nutalāya vōlakka maṇṭapattiṟ pōṅkaruvi yellām pukuntīṇṭi - nīṅkāta
முன்னை மலத்திருளுண் மூடா வகையகத்துள் துன்னுமிரு ணீக்குஞ் சுடரேபோ - லந்நிலையே
muṉṉai malattiruḷuṇ mūṭā vakaiyakattuḷ tuṉṉumiru ṇīkkuñ cuṭarēpō - lannilaiyē
சூக்கஞ் சுடருருவிற் பெய்து தொழிற்குரியர் ஆக்கிப் பணித்த வறம் போற்றி - வேட்கைமிகு
cūkkañ cuṭaruruviṟ peytu toḻiṟkuriyar ākkip paṇitta vaṟam pōṟṟi - vēṭkaimiku
முண்டிப் பொருட்டா லொருகா லவியாது மண்டியெரி யும்பெருந்தீ மாற்றுதற்குத் திண்டிறல் சேர்
muṇṭip poruṭṭā lorukā laviyātu maṇṭiyeri yumperuntī māṟṟutaṟkut tiṇṭiṟal cēr
வல்லார்கள் வல்ல வகையாற் றொழில்புரிதல் எல்லா முடனே யொருங்கிசைந்து - செல்காலை
vallārkaḷ valla vakaiyāṟ ṟoḻilpurital ellā muṭaṉē yoruṅkicaintu - celkālai
முட்டாமற் செய்வினைக்கும் முற்செய்வினைக் குஞ் செலவு பட்டோ லை தீட்டும் படிபோற்றி - நட்டோ ங்கு
muṭṭāmaṟ ceyviṉaikkum muṟceyviṉaik kuñ celavu paṭṭō lai tīṭṭum paṭipōṟṟi - naṭṭō ṅku
மிந்நிலைமை மானுடருக் கேயன்றி யெண்ணிலா மன்னுயிர்க்கு மிந்த வழக்கேயாய் - முன்னுடைய
minnilaimai māṉuṭaruk kēyaṉṟi yeṇṇilā maṉṉuyirkku minta vaḻakkēyāy - muṉṉuṭaiya
நாணாள் வரையி லுடல்பிரித்து நல்வினைக்கண் வாணாளின் மாலா யயனாகி - நீணாகர்
nāṇāḷ varaiyi luṭalpirittu nalviṉaikkaṇ vāṇāḷiṉ mālā yayaṉāki - nīṇākar
வானாடர் கோமுதலாய் வந்த பெரும்பதத்து நானா விதத்தா நலம் பெறுநாள் - தான்மாள
vāṉāṭar kōmutalāy vanta perumpatattu nāṉā vitattā nalam peṟunāḷ - tāṉmāḷa
வெற்றிக் கடுந்தூதர் வேகத் துடன் வந்து பற்றித்தம் வெங்குருவின் பாற்காட்ட விற்றைக்கும்
veṟṟik kaṭuntūtar vēkat tuṭaṉ vantu paṟṟittam veṅkuruviṉ pāṟkāṭṭa viṟṟaikkum
இல்லையோ பாவி பிறவாமை யென்றெடுத்து நல்லதோ ரின்சொ னடுவாகச் - சொல்லியிவர்
illaiyō pāvi piṟavāmai yeṉṟeṭuttu nallatō riṉco ṉaṭuvākac - colliyivar
செய்திக்குத் தக்க செயலுறுத்து வீரென்று வெய்துற் றுரைக்க விடைகொண்டு - மையறருஞ்
ceytikkut takka ceyaluṟuttu vīreṉṟu veytuṟ ṟuraikka viṭaikoṇṭu - maiyaṟaruñ
செக்கி னிடைத்திரித்துந் தீவாயி லிட்டெரித்துந் தக்கநெருப் புத்தூண் தழுவுவித்து - மிக்கோங்கு
cekki ṉiṭaittirittun tīvāyi liṭṭerittun takkanerup puttūṇ taḻuvuvittu - mikkōṅku
நாராசங் காய்ச்சிச் செவிமடுத்து நாவரிந்து மீராவுன் னூனைத்தின் நென்றடித்தும் - பேராமல்
nārācaṅ kāyccic cevimaṭuttu nāvarintu mīrāvuṉ ṉūṉaittiṉ neṉṟaṭittum - pērāmal
அங்காழ் நரகத் தழுத்துவித்தும் பின்னுந்தம் வெங்கோப மாறாத வேட்கையரா - யிங்கொருநாள்
aṅkāḻ narakat taḻuttuvittum piṉṉuntam veṅkōpa māṟāta vēṭkaiyarā - yiṅkorunāḷ
எண்ணிமுதற் காணாத வின்னற் கடுநரகம் பன்னொடுநாட் செல்லும் பணிகொண்டு - முன்னாடிக்
eṇṇimutaṟ kāṇāta viṉṉaṟ kaṭunarakam paṉṉoṭunāṭ cellum paṇikoṇṭu - muṉṉāṭik
கண்டு கடன்கழித்தல் காரியமா மென்றண்ணிக் கொண்டுவரு நோயின் குறிப்பறிவார் - மண்டெரியிற்
kaṇṭu kaṭaṉkaḻittal kāriyamā meṉṟaṇṇik koṇṭuvaru nōyiṉ kuṟippaṟivār - maṇṭeriyiṟ
காச்சிச் சுடவறுக்கக் கண்ணுரிக்க நன்னிதிய மீய்த்துத்தாய் தந்தைதம ரின்புறுதல் - வாய்த்த நெறி
kāccic cuṭavaṟukkak kaṇṇurikka naṉṉitiya mīyttuttāy tantaitama riṉpuṟutal - vāytta neṟi
யோடியதே ரின்கீ ழுயிர்போன கன்றாலே நீடுபெரும் பாவமின்றே நீங்குமென - நாடித்தன்
yōṭiyatē riṉkī ḻuyirpōṉa kaṉṟālē nīṭuperum pāvamiṉṟē nīṅkumeṉa - nāṭittaṉ
மைந்தனையு மூர்ந்தோன் வழக்கே வழக்காக நஞ்சனைய சிந்தை நமன்றூதர் - வெஞ்சினத்தால்
maintaṉaiyu mūrntōṉ vaḻakkē vaḻakkāka nañcaṉaiya cintai namaṉṟūtar - veñciṉattāl
அல்ல லுறுத்து மருநரகங் கண்டுநிற்க வல்ல கருணை மறம்போற்றி - பல்லுயிர்க்கும்
alla luṟuttu marunarakaṅ kaṇṭuniṟka valla karuṇai maṟampōṟṟi - palluyirkkum
இன்ன வகையா லிருவினைக்க ணின்றருத்தி முன்னைமுத லென்ன முதலில்லோ - நல்வினைக்கண்
iṉṉa vakaiyā liruviṉaikka ṇiṉṟarutti muṉṉaimuta leṉṉa mutalillō - nalviṉaikkaṇ
எல்லா வுலகு மெடுப்புண் டெடுப்புண்டு செல்காலம் பின்னரகஞ் சேராமே - நல்லநெறி
ellā vulaku meṭuppuṇ ṭeṭuppuṇṭu celkālam piṉṉarakañ cērāmē - nallaneṟi
யெய்துவதோர் காலந்தன் னன்பரைக்கண் டின்புறுதல் உய்யு நெறிசிறிதே யுண்டாக்கிப் - பையவே
yeytuvatōr kālantaṉ ṉaṉparaikkaṇ ṭiṉpuṟutal uyyu neṟiciṟitē yuṇṭākkip - paiyavē
மட்டாய் மலராய் வருநாளின் முன்னைநாண் மொட்டா யுருவா முறைபோலக் - கிட்டியதோர்
maṭṭāy malarāy varunāḷiṉ muṉṉaināṇ moṭṭā yuruvā muṟaipōlak - kiṭṭiyatōr
நல்ல பிறப்பிற் பிறப்பித்து நாடும்வினை யெல்லை யிரண்டு மிடையொப்பிற் - பல் பிறவி
nalla piṟappiṟ piṟappittu nāṭumviṉai yellai yiraṇṭu miṭaiyoppiṟ - pal piṟavi
யத்தமதிலன்றோ வளவென்று பார்த்திருந்து சத்தி பதிக்குந் தரம் போற்றி - முத்திதரு
yattamatilaṉṟō vaḷaveṉṟu pārttiruntu catti patikkun taram pōṟṟi - muttitaru
நன்னெறிவிஞ் ஞானகலர் நாடுமல மொன்றினையு மந்நிலையே யுண்ணின் றறுத்தருளிப் - பின்னன்பு
naṉṉeṟiviñ ñāṉakalar nāṭumala moṉṟiṉaiyu mannilaiyē yuṇṇiṉ ṟaṟuttaruḷip - piṉṉaṉpu
மேவா விளங்கும் பிரளயா கலருக்குத் தேவாய் மலகன்மந் தீர்த்தருளிப் -பூவலயந்
mēvā viḷaṅkum piraḷayā kalarukkut tēvāy malakaṉman tīrttaruḷip -pūvalayan
தன்னின்று நீங்காச் சகலர்க் கவர்போல முன்னின்று மும்மலந்தீர்த் தாட்கொள்கை - யன்னவனுக்
taṉṉiṉṟu nīṅkāc cakalark kavarpōla muṉṉiṉṟu mummalantīrt tāṭkoḷkai - yaṉṉavaṉuk
காதிகுண மாதலினா லாடுந் திருத்தொழிலுஞ் சோதி மணிமிடற்றுச் சுந்தரமும் - பாதியாம்
kātikuṇa mātaliṉā lāṭun tiruttoḻiluñ cōti maṇimiṭaṟṟuc cuntaramum - pātiyām
பச்சை யிடமும் பவளத் திருச்சடைமேல் வைச்ச நதியு மதிக் கொழுந்து - மச்சமற
paccai yiṭamum pavaḷat tiruccaṭaimēl vaicca natiyu matik koḻuntu - maccamaṟa
வாடு மரவு மழகார் திருநுதன்மேல் நீடுருவ வன்னி நெடுங்கண்ணும் - கேடிலயங்
vāṭu maravu maḻakār tirunutaṉmēl nīṭuruva vaṉṉi neṭuṅkaṇṇum - kēṭilayaṅ
கூட்டுந் தமருகமுங் கோல வெரியகலும் பூட்டரவக் கச்சும் புலியதளும் - வீட்டின்ப
kūṭṭun tamarukamuṅ kōla veriyakalum pūṭṭaravak kaccum puliyataḷum - vīṭṭiṉpa
வெள்ளத் தழுத்தி விடுந்தா ளினுமடியார் உள்ளத் தினும்பிரியா வொண்சிலம்புங் - கள்ளவினை
veḷḷat taḻutti viṭuntā ḷiṉumaṭiyār uḷḷat tiṉumpiriyā voṇcilampuṅ - kaḷḷaviṉai
வென்று பிறப்பறுக்கச் சாத்திவீ ரக்கழலும் ஒன்றுமுருத் தோன்றாம லுள்ளடக்கி - யென்றும்
veṉṟu piṟappaṟukkac cāttivī rakkaḻalum oṉṟumurut tōṉṟāma luḷḷaṭakki - yeṉṟum
இறவாத வின்பத் தெமையிருத்த வேண்டிப் பிறவா முதல்வன் பிறந்து - நறவாருந்
iṟavāta viṉpat temaiyirutta vēṇṭip piṟavā mutalvaṉ piṟantu - naṟavārun
தாருலா வும்புயத்துச் சம்பந்த நாதனென்று பேரிலா நாதனொரு பேர்புனைந்து - பாரோர்தம்
tārulā vumpuyattuc campanta nātaṉeṉṟu pērilā nātaṉoru pērpuṉaintu - pārōrtam
உண்டி யுறக்கம் பயமின்ப மொத்தொழுகிக் கொண்டு மகிழ்ந்த குணம் போற்றி - மிண்டாய
uṇṭi yuṟakkam payamiṉpa mottoḻukik koṇṭu makiḻnta kuṇam pōṟṟi - miṇṭāya
வாறு சமயப் பொருளுமறி வித்தவற்றிற் பேறின்மை யெங்களுக்கே பேறாக்கித் - தேறாத
vāṟu camayap poruḷumaṟi vittavaṟṟiṟ pēṟiṉmai yeṅkaḷukkē pēṟākkit - tēṟāta
சித்தந் தெளியத் திருமேனி கொண்டுவரும் அத்தகைமை தானே யமையாமல் - வித்தகமாஞ்
cittan teḷiyat tirumēṉi koṇṭuvarum attakaimai tāṉē yamaiyāmal - vittakamāñ
சைவ நெறியிற் சமய முதலாக வெய்து மபிடேக மெய்துவித்துச் - செய்யதிருக்
caiva neṟiyiṟ camaya mutalāka veytu mapiṭēka meytuvittuc - ceyyatiruk
கண்ணருளா நோக்கிக் கடியபிறப் பாற்பட்ட புண்ணு மிருவினையும் போயகல - வண்ணமலர்க்
kaṇṇaruḷā nōkkik kaṭiyapiṟap pāṟpaṭṭa puṇṇu miruviṉaiyum pōyakala - vaṇṇamalark
கைத்தலத்தை வைத்தருளிக் கல்லாய நெஞ்சுருக்கி மெய்த்தகைமை யெல்லாம் விரித்தோதி - யொத்தொழுகுஞ்
kaittalattai vaittaruḷik kallāya neñcurukki meyttakaimai yellām virittōti - yottoḻukuñ
சேணா ரிருள்வடிவுஞ் செங்கதிரோன் பானிற்பக் காணா தொழியுங் கணக்கேபோ - லாணவத்தின்
cēṇā riruḷvaṭivuñ ceṅkatirōṉ pāṉiṟpak kāṇā toḻiyuṅ kaṇakkēpō - lāṇavattiṉ
ஆதி குறையாம லென்பா லணுகாமல் நீதி நிறுத்து நிலைபோற்றி - மேதக்கோர்
āti kuṟaiyāma leṉpā laṇukāmal nīti niṟuttu nilaipōṟṟi - mētakkōr
செய்யுஞ் சரியை திகழ்கிரியா யோகத்தால் எய்துஞ்சீர் முத்திபத மெய்துவித்து - மெய்யன்பாற்
ceyyuñ cariyai tikaḻkiriyā yōkattāl eytuñcīr muttipata meytuvittu - meyyaṉpāṟ
காணத் தகுவார்கள் கண்டாற் றமிப்பின்பு நாணத் தகுஞான நன்னெறியை - வீணே
kāṇat takuvārkaḷ kaṇṭāṟ ṟamippiṉpu nāṇat takuñāṉa naṉṉeṟiyai - vīṇē
யெனக்குத் தரவேண்டி யெல்லாப் பொருட்கு மனக்கு மலரயன்மால் வானோர் - நினைப்பினுக்குந்
yeṉakkut taravēṇṭi yellāp poruṭku maṉakku malarayaṉmāl vāṉōr - niṉaippiṉukkun
தூரம்போ லேயணிய சுந்தரத்தா ளென்றலைமேல் ஆரும் படிதந் தருள்செய்த - பேராளன்
tūrampō lēyaṇiya cuntarattā ḷeṉṟalaimēl ārum paṭitan taruḷceyta - pērāḷaṉ
தந்தபொரு ளேதென்னிற் றான்வேறு நான்வேறாய் வந்து புணரா வழக்காக்கி - முந்தியென்றன்
tantaporu ḷēteṉṉiṟ ṟāṉvēṟu nāṉvēṟāy vantu puṇarā vaḻakkākki - muntiyeṉṟaṉ
உள்ளமென்று நீங்கா தொளித்திருந்து தோன்றி நிற்குங் கள்ளமின்று காட்டுங் கழல்போற்றி - வள்ளன்மையால்
uḷḷameṉṟu nīṅkā toḷittiruntu tōṉṟi niṟkuṅ kaḷḷamiṉṟu kāṭṭuṅ kaḻalpōṟṟi - vaḷḷaṉmaiyāl
தன்னைத் தெரிவித்துத் தன்றாளி நுட்கிடந்த வென்னைத் தெரிவித்த வெல்லையின்கண் -மின்னாரும்
taṉṉait terivittut taṉṟāḷi nuṭkiṭanta veṉṉait terivitta vellaiyiṉkaṇ -miṉṉārum
வண்ண முருவ மருவுங் குணமயக்கம் எண்ணங் கலைகாலமெப்பொருளு - முன்னமெனக்
vaṇṇa muruva maruvuṅ kuṇamayakkam eṇṇaṅ kalaikālamepporuḷu - muṉṉameṉak
கில்லாமை காட்டிப்பின்பெய்தியவா காட்டியினிச் செல்லாமை காட்டுஞ் செயல்போற்றி - யெல்லாம்போய்த்
killāmai kāṭṭippiṉpeytiyavā kāṭṭiyiṉic cellāmai kāṭṭuñ ceyalpōṟṟi - yellāmpōyt
தம்மைத் தெளிந்தாராய்த் தாமே பொருளாகி யெம்மைப் புறங்கூறி யின்புற்றுச் - செம்மை
tammait teḷintārāyt tāmē poruḷāki yemmaip puṟaṅkūṟi yiṉpuṟṟuc - cemmai
யவிகாரம் பேசு மகம்பிரமக் காரர் வெளியா மிருலில் விடாதே - யொளியாய்நீ
yavikāram pēcu makampiramak kārar veḷiyā mirulil viṭātē - yoḷiyāynī
நின்ற நிலையே நிகழ்த்தி யொருபொருள்வே றின்றியமை யாமை யெடுத்தோதி - யொன்றாகச்
niṉṟa nilaiyē nikaḻtti yoruporuḷvē ṟiṉṟiyamai yāmai yeṭuttōti - yoṉṟākac
சாதித்துத் தம்மைச் சிவமாக்கி யிப்பிறவிப் பேதந் தனிலின்பப் பேதமுறாப் - பாதகரோ
cātittut tammaic civamākki yippiṟavip pētan taṉiliṉpap pētamuṟāp - pātakarō
டேகமாய்ப் போகாம லெவ்விடத்துங் காட்சி தந்து போகமாம் பொற்றாளி நுட்புணர்த்தி - யாதியுடன்
ṭēkamāyp pōkāma levviṭattuṅ kāṭci tantu pōkamām poṟṟāḷi nuṭpuṇartti - yātiyuṭaṉ
நிற்க வழியா நிலையிதுவே யென்றருளி யொக்க வியாபகந்தன் நுட்காட்டி - மிக்கோங்கு
niṟka vaḻiyā nilaiyituvē yeṉṟaruḷi yokka viyāpakantaṉ nuṭkāṭṭi - mikkōṅku
மாநந்த மாக்கடலி லாரா வமுதளித்துத் தான்வந்து செய்யுந் தகுதியினால் - ஊனுயிர்தான்
mānanta mākkaṭali lārā vamutaḷittut tāṉvantu ceyyun takutiyiṉāl - ūṉuyirtāṉ
முன்கண்ட காலத்து நீங்காத முன்னோனை யென்கொண்டு போற்றிசைப்பேன் யான்
muṉkaṇṭa kālattu nīṅkāta muṉṉōṉai yeṉkoṇṭu pōṟṟicaippēṉ yāṉ
போற்றி திருத்தில்லை போற்றி சிவபோகம் போற்றியவன் மெய்ஞ்ஞானப் புண்ணிய நூல் - போற்றியெங்கள் வெம்பந்த வாழ்க்கைவிட வேறாய்வந் துண்ணின்ற சம்பந்த மாமுனிபொற் றாள்.
pōṟṟi tiruttillai pōṟṟi civapōkam pōṟṟiyavaṉ meyññāṉap puṇṇiya nūl - pōṟṟiyeṅkaḷ vempanta vāḻkkaiviṭa vēṟāyvan tuṇṇiṉṟa campanta māmuṉipoṟ ṟāḷ.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).