Skip to content

பாடல் 1019 · பாடல் 1019

Song 1019

pāṭal 1019

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

சிற்றாயக் கூட்டத் தெரிவையர் வித்தாரச் சூழ்ச்சிக் கயல்விழி சற்றேறப் பார்த்துச் சிலபணி ...... விடையேவிச்

ciṟṟāyak kūṭṭat terivaiyar vittārac cūḻccik kayalviḻi caṟṟēṟap pārttuc cilapaṇi ...... viṭaiyēvic

Report an error

சிற்றாபத் தாக்கைப் பொருள்கொடு பித்தேறிக் கூப்பிட் டவர்பரி செட்டாமற் றூர்த்தத் தலைபடு ...... சிறுகாலை

ciṟṟāpat tākkaip poruḷkoṭu pittēṟik kūppiṭ ṭavarpari ceṭṭāmaṟ ṟūrttat talaipaṭu ...... ciṟukālai

Report an error

உ ற்றார்பெற் றார்க்குப் பெரிதொரு பற்றாயப் பூட்டுக் கயிறுகொ டுச்சாயத் தாக்கைத் தொழிலொடு ...... தடுமாறி

u ṟṟārpeṟ ṟārkkup peritoru paṟṟāyap pūṭṭuk kayiṟuko ṭuccāyat tākkait toḻiloṭu ...... taṭumāṟi

Report an error

உ க்காரித் தேக்கற் றுயிர்நழு விக்காயத் தீப்பட் டெரியுட லுக்கேன்மெய்க் காட்டைத் தவிர்வது ...... மொருநாளே

u kkārit tēkkaṟ ṟuyirnaḻu vikkāyat tīppaṭ ṭeriyuṭa lukkēṉmeyk kāṭṭait tavirvatu ...... morunāḷē

Report an error

வற்றாமுற் றாப்பச் சிளமுலை யிற்பால்கைப் பார்த்துத் தருமொரு மைக்காமக் கோட்டக் குலமயில் ...... தருபாலா

vaṟṟāmuṟ ṟāppac ciḷamulai yiṟpālkaip pārttut tarumoru maikkāmak kōṭṭak kulamayil ...... tarupālā

Report an error

மத்தோசைப் போக்கிற் றயிருறி நெய்பாலுக் காயச்சிக் கிருபதம் வைத்தாடிக் காட்டிப் பருகரி...... மருகோனே

mattōcaip pōkkiṟ ṟayiruṟi neypāluk kāyaccik kirupatam vaittāṭik kāṭṭip parukari...... marukōṉē

Report an error

கற்றாவிற் காட்டிக் கரைதுறை நற்றாயிற் காட்டிப் புகழ்கலை கற்றார் சொற் கேட்கத் தனிவழி ...... வருவோனே

kaṟṟāviṟ kāṭṭik karaituṟai naṟṟāyiṟ kāṭṭip pukaḻkalai kaṟṟār coṟ kēṭkat taṉivaḻi ...... varuvōṉē

Report an error

கைச்சூலக் கூற்றைக் கணைமத னைத்தூள்பட் டார்ப்பக் கனல்பொழி கர்த்தாவுக் கேற்கப் பொருளருள் ...... பெருமாளே.

kaiccūlak kūṟṟaik kaṇaimata ṉaittūḷpaṭ ṭārppak kaṉalpoḻi karttāvuk kēṟkap poruḷaruḷ ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).