அகல்வினை யுட்சார் சட்சம யிகளொடு வெட்கா தட்கிடு மறிவிலி வித்தா ரத்தன ...... மவிகார
akalviṉai yuṭcār caṭcama yikaḷoṭu veṭkā taṭkiṭu maṟivili vittā rattaṉa ...... mavikāra
பாடல் 104 · பாடல் 104
pāṭal 104
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
அகல்வினை யுட்சார் சட்சம யிகளொடு வெட்கா தட்கிடு மறிவிலி வித்தா ரத்தன ...... மவிகார
akalviṉai yuṭcār caṭcama yikaḷoṭu veṭkā taṭkiṭu maṟivili vittā rattaṉa ...... mavikāra
அகில்கமழ் கத்து ரித்தனி யணைமிசை கைக்கா சுக்கள வருள்பவர் நட்பே கொட்புறு ...... மொருபோதன்
akilkamaḻ kattu rittaṉi yaṇaimicai kaikkā cukkaḷa varuḷpavar naṭpē koṭpuṟu ...... morupōtaṉ
பகலிர விற்போ திற்பணி பணியற விட்டா ரெட்டிய பரமம யச்சோ திச்சிவ ...... மயமாநின்
pakalira viṟpō tiṟpaṇi paṇiyaṟa viṭṭā reṭṭiya paramama yaccō ticciva ...... mayamāniṉ
பழநித னிற்போ யுற்பவ வினைவிள கட்சேர் வெட்சிகு ரவுபயில் நற்றாள் பற்றுவ ...... தொருநாளே
paḻanita ṉiṟpō yuṟpava viṉaiviḷa kaṭcēr veṭciku ravupayil naṟṟāḷ paṟṟuva ...... torunāḷē
புகலிவ னப்பே றப்புகல் மதுரைமன் வெப்பா றத்திகழ் பொடிகொடு புற்பாய் சுற்றிகள் ...... கழுவேறப்
pukaliva ṉappē ṟappukal maturaimaṉ veppā ṟattikaḻ poṭikoṭu puṟpāy cuṟṟikaḷ ...... kaḻuvēṟap
பொருதச மர்த்தா குத்திர துரகமு கக்கோ தைக்கிடை புலவரில் நக்கீ ரர்க்குத ...... வியவேளே
porutaca marttā kuttira turakamu kakkō taikkiṭai pulavaril nakkī rarkkuta ...... viyavēḷē
இகல்படு நெட்டூர் பொட்டெழ இளநகை யிட்டே சுட்டருள் எழுபுவி துய்த்தார் மைத்துனர் ...... மதலாய்வென்
ikalpaṭu neṭṭūr poṭṭeḻa iḷanakai yiṭṭē cuṭṭaruḷ eḻupuvi tuyttār maittuṉar ...... matalāyveṉ
றிடரற முப்பால் செப்பிய கவிதையின் மிக்கா ரத்தினை யெழுதிவ னத்தே யெற்றிய ...... பெருமாளே.
ṟiṭaraṟa muppāl ceppiya kavitaiyiṉ mikkā rattiṉai yeḻutiva ṉattē yeṟṟiya ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).