அதல விதலமுத லந்தத்த லங்களென அவனி யெனஅமரர் அண்டத்த கண்டமென அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென ...... அங்கிபாநு
atala vitalamuta lantatta laṅkaḷeṉa avaṉi yeṉaamarar aṇṭatta kaṇṭameṉa akila calatiyeṉa eṇṭikkuḷ viṇṭuveṉa ...... aṅkipānu
பாடல் 106 · பாடல் 106
pāṭal 106
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
அதல விதலமுத லந்தத்த லங்களென அவனி யெனஅமரர் அண்டத்த கண்டமென அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென ...... அங்கிபாநு
atala vitalamuta lantatta laṅkaḷeṉa avaṉi yeṉaamarar aṇṭatta kaṇṭameṉa akila calatiyeṉa eṇṭikkuḷ viṇṭuveṉa ...... aṅkipānu
அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென அறையு மறைஅயனஅ ருந்தத்து வங்களென அணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு ...... சம்ப்ரதாயம்
amuta katirkaḷeṉa antitta mantrameṉa aṟaiyu maṟaiayaṉaa runtattu vaṅkaḷeṉa aṇuvi laṇuveṉani ṟaintiṭṭu niṉṟatoru ...... campratāyam
உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலி ருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்வி லுணரு மநுபவம னம்பெற்றி டும்படியை ...... வந்துநீமுன்
utaya meḻairuḷvi ṭintakka ṇantaṉili rutaya kamalamuki ḻaṅkaṭṭa viḻntuṇarvi luṇaru manupavama ṉampeṟṟi ṭumpaṭiyai ...... vantunīmuṉ
உதவ இயலினியல் செஞ்சொற்ப்ர பந்தமென மதுர கவிகளில்ம னம்பற்றி ருந்துபுகழ் உரிய அடிமையுனை யன்றிப்ப்ர பஞ்சமதை ...... நம்புவேனோ
utava iyaliṉiyal ceñcoṟpra pantameṉa matura kavikaḷilma ṉampaṟṟi runtupukaḻ uriya aṭimaiyuṉai yaṉṟippra pañcamatai ...... nampuvēṉō
ததத ததததத தந்தத்த தந்ததத திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு ...... திந்திதோதி
tatata tatatatata tantatta tantatata tititi tititititi tintitti tintititi takuku takutakuku tantatta tantakuku ...... tintitōti
சகக சககெணக தந்தத்த குங்கெணக டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி தகக தகதகக தந்தத்த தந்தகக ...... என்றுதாளம்
cakaka cakakeṇaka tantatta kuṅkeṇaka ṭiṭiṭi ṭiṭiṭiṭiṭi ṭiṇṭiṭṭi ṭiṇṭiṭiṭi takaka takatakaka tantatta tantakaka ...... eṉṟutāḷam
பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக அகில நிசிசரர்ந டுங்கக்கொ டுங்கழுகு பரிய குடர்பழுவெ லும்பைப்பி டுங்கரண ...... துங்ககாளி
patalai timilaituṭi tampaṭṭa mumperuka akila nicicararna ṭuṅkakko ṭuṅkaḻuku pariya kuṭarpaḻuve lumpaippi ṭuṅkaraṇa ...... tuṅkakāḷi
பவுரி யிடநரிபு லம்பப்ப ருந்திறகு கவரி யிடஇகலை வென்றுச்சி கண்டிதனில் பழநி மலையின்மிசை வந்துற்ற இந்திரர்கள் ...... தம்பிரானே.
pavuri yiṭanaripu lampappa runtiṟaku kavari yiṭaikalai veṉṟucci kaṇṭitaṉil paḻani malaiyiṉmicai vantuṟṟa intirarkaḷ ...... tampirāṉē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).