குடமென வொத்த கொங்கை குயில்மொழி யொத்த இன்சொல் குறமகள் வைத்த நண்பை ...... நினைவோனே
kuṭameṉa votta koṅkai kuyilmoḻi yotta iṉcol kuṟamakaḷ vaitta naṇpai ...... niṉaivōṉē
பாடல் 1080 · பாடல் 1080
pāṭal 1080
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
4 versesTamil with transliteration
குடமென வொத்த கொங்கை குயில்மொழி யொத்த இன்சொல் குறமகள் வைத்த நண்பை ...... நினைவோனே
kuṭameṉa votta koṅkai kuyilmoḻi yotta iṉcol kuṟamakaḷ vaitta naṇpai ...... niṉaivōṉē
வடவரை யுற்று றைந்த மகதெவர் பெற்ற கந்த மதசல முற்ற தந்தி ...... யிளையோனே
vaṭavarai yuṟṟu ṟainta makatevar peṟṟa kanta matacala muṟṟa tanti ...... yiḷaiyōṉē
இடமுடன் வைத்த சிந்தை யினைவற முத்தி தந்து இசையறி வித்து வந்து ...... எனையாள்வாய்
iṭamuṭaṉ vaitta cintai yiṉaivaṟa mutti tantu icaiyaṟi vittu vantu ...... eṉaiyāḷvāy
தடவரை வெற்பி னின்று சரவண முற்றெ ழுந்து சமர்கள வெற்றி கொண்ட ...... பெருமாளே.
taṭavarai veṟpi ṉiṉṟu caravaṇa muṟṟe ḻuntu camarkaḷa veṟṟi koṇṭa ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).