Skip to content

பாடல் 1092 · பாடல் 1092

Song 1092

pāṭal 1092

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

அனகனென அதிகனென அமலனென அசலனென அபயனென அதுலனென ...... அநபாயன்

aṉakaṉeṉa atikaṉeṉa amalaṉeṉa acalaṉeṉa apayaṉeṉa atulaṉeṉa ...... anapāyaṉ

Report an error

அடல்மதன னெனவிசைய னெனமுருக னெனநெருடி யவர்பெயரு மிடைசெருகி ...... யிசைபாடி

aṭalmataṉa ṉeṉavicaiya ṉeṉamuruka ṉeṉaneruṭi yavarpeyaru miṭaiceruki ...... yicaipāṭi

Report an error

வனசமணி பணிலமழை சுரபிசுரர் தருநிகர்கை மகிபஎன தினையளவு ...... ளவுமீயா

vaṉacamaṇi paṇilamaḻai curapicurar tarunikarkai makipaeṉa tiṉaiyaḷavu ...... ḷavumīyā

Report an error

மனிதர்கடை தொறுமுழலு மிடியொழிய மொழியொழிய மனமொழிய வொருபொருளை ...... அருள்வாயே

maṉitarkaṭai toṟumuḻalu miṭiyoḻiya moḻiyoḻiya maṉamoḻiya voruporuḷai ...... aruḷvāyē

Report an error

இனனிலவு தலைமலைய அடியினுகி ரிலைகளென இருசதுர திசையிலுர ...... கமும்வீழ

iṉaṉilavu talaimalaiya aṭiyiṉuki rilaikaḷeṉa irucatura ticaiyilura ...... kamumvīḻa

Report an error

இரணியச யிலம்ரசித சயிலமர கதசயில மெனவிமலை யமுனை யென ...... நிழல்வீசிக்

iraṇiyaca yilamracita cayilamara katacayila meṉavimalai yamuṉai yeṉa ...... niḻalvīcik

Report an error

ககனமழை யுகைகடவு ளுடலமென முதியவிழி கதுவியெழில் பொதியமிசை ...... படர்கோலக்

kakaṉamaḻai yukaikaṭavu ḷuṭalameṉa mutiyaviḻi katuviyeḻil potiyamicai ...... paṭarkōlak

Report an error

கலபகக மயில்கடவு நிருதர்கஜ ரததுரக கடகமுட னமர்பொருத ...... பெருமாளே.

kalapakaka mayilkaṭavu nirutarkaja rataturaka kaṭakamuṭa ṉamarporuta ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).