நீருநில மண்டாத தாமரைப டர்ந்தோடி நீளமக லஞ்சோதி ...... வடிவான
nīrunila maṇṭāta tāmaraipa ṭarntōṭi nīḷamaka lañcōti ...... vaṭivāṉa
பாடல் 1111 · பாடல் 1111
pāṭal 1111
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
நீருநில மண்டாத தாமரைப டர்ந்தோடி நீளமக லஞ்சோதி ...... வடிவான
nīrunila maṇṭāta tāmaraipa ṭarntōṭi nīḷamaka lañcōti ...... vaṭivāṉa
நேசமல ரும்பூவை மாதின்மண மும்போல நேர்மருவி யுண்காத ...... லுடன்மேவிச்
nēcamala rumpūvai mātiṉmaṇa mumpōla nērmaruvi yuṇkāta ...... luṭaṉmēvic
சூரியனு டன்சோம னீழலிவை யண்டாத சோதிமரு வும்பூமி ...... யவையூடே
cūriyaṉu ṭaṉcōma ṉīḻalivai yaṇṭāta cōtimaru vumpūmi ...... yavaiyūṭē
தோகைமயி லின்பாக னாமெனம கிழ்ந்தாட சோதிஅயி லுந்தாரு ...... மருள்வாயே
tōkaimayi liṉpāka ṉāmeṉama kiḻntāṭa cōtiayi luntāru ...... maruḷvāyē
வாரியகி லங்கூச ஆயிரப ணஞ்சேடன் வாய்விடவொ டெண்பாலு ...... முடுபோல
vāriyaki laṅkūca āyirapa ṇañcēṭaṉ vāyviṭavo ṭeṇpālu ...... muṭupōla
வார்மணியு திர்ந்தோட வேகவினி றைந்தாட மாமயில்வி டுஞ்சேவல் ...... கொடியோனே
vārmaṇiyu tirntōṭa vēkaviṉi ṟaintāṭa māmayilvi ṭuñcēval ...... koṭiyōṉē
ஆரியன வன்தாதை தேடியின மும்பாடு மாடலரு ணஞ்சோதி ...... யருள்பாலா
āriyaṉa vaṉtātai tēṭiyiṉa mumpāṭu māṭalaru ṇañcōti ...... yaruḷpālā
ஆனைமுக வன்தேடி யோடியெய ணங்காத லாசைமரு வுஞ்சோதி ...... பெருமாளே.
āṉaimuka vaṉtēṭi yōṭiyeya ṇaṅkāta lācaimaru vuñcōti ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).