ஆராதன ராடம் பரத்து மாறாதுச வாலம் பனத்து மாவாகன மாமந் திரத்து ...... மடலாலும்
ārātaṉa rāṭam parattu māṟātuca vālam paṉattu māvākaṉa māman tirattu ...... maṭalālum
பாடல் 1127 · பாடல் 1127
pāṭal 1127
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
ஆராதன ராடம் பரத்து மாறாதுச வாலம் பனத்து மாவாகன மாமந் திரத்து ...... மடலாலும்
ārātaṉa rāṭam parattu māṟātuca vālam paṉattu māvākaṉa māman tirattu ...... maṭalālum
ஆறார்தெச மாமண் டபத்தும் வேதாகம மோதுந் தலத்து மாமாறெரிதாமிந் தனத்து ...... மருளாதே
āṟārteca māmaṇ ṭapattum vētākama mōtun talattu māmāṟeritāmin taṉattu ...... maruḷātē
நீராளக நீர்மஞ் சனத்த நீடாரக வேதண்ட மத்த நீநானற வேறின்றி நிற்க ...... நியமாக
nīrāḷaka nīrmañ caṉatta nīṭāraka vētaṇṭa matta nīnāṉaṟa vēṟiṉṟi niṟka ...... niyamāka
நீவாவென நீயிங் கழைத்து பாராவர வாநந்த சித்தி நேரேபர மாநந்த முத்தி ...... தரவேணும்
nīvāveṉa nīyiṅ kaḻaittu pārāvara vānanta citti nērēpara mānanta mutti ...... taravēṇum
வீராகர சாமுண்டி சக்ர பாராகண பூதங் களிக்க வேதாளச மூகம் பிழைக்க ...... அமராடி
vīrākara cāmuṇṭi cakra pārākaṇa pūtaṅ kaḷikka vētāḷaca mūkam piḻaikka ...... amarāṭi
வேதாமுறை யோவென் றரற்ற ஆகாசக பாலம் பிளக்க வேர்மாமர மூலந் தறித்து ...... வடவாலும்
vētāmuṟai yōveṉ ṟaraṟṟa ākācaka pālam piḷakka vērmāmara mūlan taṟittu ...... vaṭavālum
வாராகர மேழுங் குடித்து மாசூரொடு போரம் பறுத்து வாணாசன மேலுந் துணித்த ...... கதிர்வேலா
vārākara mēḻuṅ kuṭittu mācūroṭu pōram paṟuttu vāṇācaṉa mēlun tuṇitta ...... katirvēlā
வானாடர சாளும் படிக்கு வாவாவென வாவென் றழைத்து வானோர்பரிதாபந் தவிர்த்த ...... பெருமாளே.
vāṉāṭara cāḷum paṭikku vāvāveṉa vāveṉ ṟaḻaittu vāṉōrparitāpan tavirtta ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).