ஆல காலமெ னக்கொலை முற்றிய வேல தாமென மிக்கவி ழிக்கடை யாலு மோகம்வி ளைத்துவி தத்துட ...... னிளைஞோரை
āla kālame ṉakkolai muṟṟiya vēla tāmeṉa mikkavi ḻikkaṭai yālu mōkamvi ḷaittuvi tattuṭa ...... ṉiḷaiñōrai
பாடல் 113 · பாடல் 113
pāṭal 113
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
ஆல காலமெ னக்கொலை முற்றிய வேல தாமென மிக்கவி ழிக்கடை யாலு மோகம்வி ளைத்துவி தத்துட ...... னிளைஞோரை
āla kālame ṉakkolai muṟṟiya vēla tāmeṉa mikkavi ḻikkaṭai yālu mōkamvi ḷaittuvi tattuṭa ...... ṉiḷaiñōrai
ஆர வாணைமெ யிட்டும றித்துவி கார மோகமெ ழுப்பிய தற்குற வான பேரைய கப்படு வித்ததி ...... விதமாகச்
āra vāṇaime yiṭṭuma ṟittuvi kāra mōkame ḻuppiya taṟkuṟa vāṉa pēraiya kappaṭu vittati ...... vitamākac
சால மாலைய ளித்தவர் கைப்பொருள் மாள வேசிலு கிட்டும ருட்டியெ சாதி பேதம றத்தழு வித்திரி ...... மடமாதர்
cāla mālaiya ḷittavar kaipporuḷ māḷa vēcilu kiṭṭuma ruṭṭiye cāti pētama ṟattaḻu vittiri ...... maṭamātar
தாக போகமொ ழித்துஉனக்கடி யானென் வேள்விமு கத்தவ முற்றிரு தாளை நாளும்வ ழுத்திநி னைத்திட ...... அருள்வாயே
tāka pōkamo ḻittuuṉakkaṭi yāṉeṉ vēḷvimu kattava muṟṟiru tāḷai nāḷumva ḻuttini ṉaittiṭa ...... aruḷvāyē
வால மாமதி மத்தமெ ருக்கறு காறு பூளைத ரித்தச டைத்திரு வால வாயன ளித்தரு ளற்புத ...... முருகோனே
vāla māmati mattame rukkaṟu kāṟu pūḷaita rittaca ṭaittiru vāla vāyaṉa ḷittaru ḷaṟputa ...... murukōṉē
மாய மானொட ரக்கரை வெற்றிகொள் வாலி மார்புதொ ளைத்திட விற்கொடு வாளி யேவிய மற்புய னச்சுதன் ...... மருகோனே
māya māṉoṭa rakkarai veṟṟikoḷ vāli mārputo ḷaittiṭa viṟkoṭu vāḷi yēviya maṟpuya ṉaccutaṉ ...... marukōṉē
நாலு வேதந விற்றுமு றைப்பயில் வீணை நாதனு ரைத்தவ னத்திடை நாடி யோடிகு றத்தித னைக்கொடு ...... வருவோனே
nālu vētana viṟṟumu ṟaippayil vīṇai nātaṉu raittava ṉattiṭai nāṭi yōṭiku ṟattita ṉaikkoṭu ...... varuvōṉē
நாளி கேரம்வ ருக்கைப ழுத்துதிர் சோலை சூழ்பழ நிப்பதி யிற்றிரு ஞான பூரண சத்தித ரித்தருள் ...... பெருமாளே.
nāḷi kēramva rukkaipa ḻuttutir cōlai cūḻpaḻa nippati yiṟṟiru ñāṉa pūraṇa cattita rittaruḷ ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).