கடைசி வந்தகன் றுரைபு கன்றிரு குழையை யுந்துரந் தரிப ரந்தொளிர் கரிய கண்துறந் தவர்நி றந்தொளை ...... படவோடக்
kaṭaici vantakaṉ ṟuraipu kaṉṟiru kuḻaiyai yunturan taripa rantoḷir kariya kaṇtuṟan tavarni ṟantoḷai ...... paṭavōṭak
பாடல் 1148 · பாடல் 1148
pāṭal 1148
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
கடைசி வந்தகன் றுரைபு கன்றிரு குழையை யுந்துரந் தரிப ரந்தொளிர் கரிய கண்துறந் தவர்நி றந்தொளை ...... படவோடக்
kaṭaici vantakaṉ ṟuraipu kaṉṟiru kuḻaiyai yunturan taripa rantoḷir kariya kaṇtuṟan tavarni ṟantoḷai ...... paṭavōṭak
கலைநெ கிழ்ந்திருங் குழல்ச ரிந்திட முலைசு மந்தசைந் திடையொ சிந்துயிர் கவர இங்கிதங் கெறுவி தம்பெற ...... விளையாடும்
kalaine kiḻntiruṅ kuḻalca rintiṭa mulaicu mantacain tiṭaiyo cintuyir kavara iṅkitaṅ keṟuvi tampeṟa ...... viḷaiyāṭum
படைம தன்பெருங் கிளைதி ருந்திய அதர கிஞ்சுகந் தனையு ணர்ந்தணி பணிநி தம்பஇன் பசுக முந்தர ...... முதிர்காம
paṭaima taṉperuṅ kiḷaiti runtiya atara kiñcukan taṉaiyu ṇarntaṇi paṇini tampaiṉ pacuka muntara ...... mutirkāma
பரவ சந்தணிந் துனையு ணர்ந்தொரு மவுன பஞ்சரம் பயில்த ருஞ்சுக பதம டைந்திருந் தருள்பொ ருந்தும ...... தொருநாளே
parava cantaṇin tuṉaiyu ṇarntoru mavuṉa pañcaram payilta ruñcuka patama ṭaintirun taruḷpo runtuma ...... torunāḷē
வடநெ டுஞ்சிலம் புகள்பு லம்பிட மகித லம்ப்ரியங் கொடும கிழ்ந்திட வருபு ரந்தரன் தனபு ரம்பெற ...... முதுகோப
vaṭane ṭuñcilam pukaḷpu lampiṭa makita lampriyaṅ koṭuma kiḻntiṭa varupu rantaraṉ taṉapu rampeṟa ...... mutukōpa
மகர வெங்கருங் கடலொ டுங்கிட நிசிச ரன்பெருங் குலமொ ருங்கிற வனச னின்றழும் படிநெ ருங்கிய ...... வொருசூதம்
makara veṅkaruṅ kaṭalo ṭuṅkiṭa nicica raṉperuṅ kulamo ruṅkiṟa vaṉaca ṉiṉṟaḻum paṭine ruṅkiya ...... vorucūtam
அடியொ டும்பிடுங் கியத டங்கர வடிவ அஞ்சுரும் புறவி ரும்பிய அடவி யுந்தொழும் பொடுதொ ழும்படி ...... யநுராக
aṭiyo ṭumpiṭuṅ kiyata ṭaṅkara vaṭiva añcurum puṟavi rumpiya aṭavi yuntoḻum poṭuto ḻumpaṭi ...... yanurāka
அவச மும்புனைந் தறமு னைந்தெழு பருவ தஞ்சிறந் தகன தந்தியின் அமுத மென்குயங் களின்மு யங்கிய ...... பெருமாளே.
avaca mumpuṉain taṟamu ṉainteḻu paruva tañciṟan takaṉa tantiyiṉ amuta meṉkuyaṅ kaḷiṉmu yaṅkiya ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).