Skip to content

பாடல் 1151 · பாடல் 1151

Song 1151

pāṭal 1151

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

கறுத்து நீவிடு கூர்வேலி னுங்கடை சிவத்து நீடிய வாய்மீன வொண்குழை கடக்க வோடிய ஆலால நஞ்சன ...... வஞ்சநீடு

kaṟuttu nīviṭu kūrvēli ṉuṅkaṭai civattu nīṭiya vāymīṉa voṇkuḻai kaṭakka vōṭiya ālāla nañcaṉa ...... vañcanīṭu

Report an error

கயற்க ணார்கனி வாயூற லுண்டணி கழுத்து மாகமு மேகீப வங்கொடு கலக்க மார்பக பாடீர குங்கும ...... கொங்கைமீதே

kayaṟka ṇārkaṉi vāyūṟa luṇṭaṇi kaḻuttu mākamu mēkīpa vaṅkoṭu kalakka mārpaka pāṭīra kuṅkuma ...... koṅkaimītē

Report an error

உ றுத்து மாரமு மோகாவ டங்களு மருத்து நேரிய கூர்வாள்ந கம்பட உ டுத்த ஆடையும் வேறாயு ழன்றுக ...... ழன்றுவீழ

u ṟuttu māramu mōkāva ṭaṅkaḷu maruttu nēriya kūrvāḷna kampaṭa u ṭutta āṭaiyum vēṟāyu ḻaṉṟuka ...... ḻaṉṟuvīḻa

Report an error

உ ருக்கு நாபியின் மூழ்காம ருங்கிடை செருக்கு மோகன வாராத ரங்களை யொழிக்க வோர்வகை காணேனு றுந்துணை ...... யொன்றுகாணேன்

u rukku nāpiyiṉ mūḻkāma ruṅkiṭai cerukku mōkaṉa vārāta raṅkaḷai yoḻikka vōrvakai kāṇēṉu ṟuntuṇai ...... yoṉṟukāṇēṉ

Report an error

நிறத்த நூபுர பாதார விந்தமு முடுத்த பீலியும் வாரார்த னங்களும் நிறத்தி லேபடு வேலான கண்களும் ...... வண்டுபாட

niṟatta nūpura pātāra vintamu muṭutta pīliyum vārārta ṉaṅkaḷum niṟatti lēpaṭu vēlāṉa kaṇkaḷum ...... vaṇṭupāṭa

Report an error

நெறித்த வோதியு மாயான்ம னம்பர தவிக்க மால்தர லாமோ கலந்திட நினைக்க லாமென வேல்வேடர் கொம்புட ...... னண்புகூர்வாய்

neṟitta vōtiyu māyāṉma ṉampara tavikka māltara lāmō kalantiṭa niṉaikka lāmeṉa vēlvēṭar kompuṭa ...... ṉaṇpukūrvāy

Report an error

மறித்த வாரிதி கோகோவெ னும்படி வெறுத்த ராவணன் வாணாளை யம்பினில் வதைத்த மாமனு மேவார்பு ரங்கனல் ...... மண்டமேரு

maṟitta vāriti kōkōve ṉumpaṭi veṟutta rāvaṇaṉ vāṇāḷai yampiṉil vataitta māmaṉu mēvārpu raṅkaṉal ...... maṇṭamēru

Report an error

வளைத்த தாதையு மாறான குன்றமு மனைத்து லோகமும் வேதாக மங்களும் மதித்த சேவக வானாளு மும்பர்கள் ...... தம்பிரானே.

vaḷaitta tātaiyu māṟāṉa kuṉṟamu maṉaittu lōkamum vētāka maṅkaḷum matitta cēvaka vāṉāḷu mumparkaḷ ...... tampirāṉē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).