கொலைவிழி சுழலச் சுழலச் சிலைநுதல் குவியக் குவியக் கொடியிடை துவளத் துவளத் ...... தனபாரக்
kolaiviḻi cuḻalac cuḻalac cilainutal kuviyak kuviyak koṭiyiṭai tuvaḷat tuvaḷat ...... taṉapārak
பாடல் 1154 · பாடல் 1154
pāṭal 1154
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
கொலைவிழி சுழலச் சுழலச் சிலைநுதல் குவியக் குவியக் கொடியிடை துவளத் துவளத் ...... தனபாரக்
kolaiviḻi cuḻalac cuḻalac cilainutal kuviyak kuviyak koṭiyiṭai tuvaḷat tuvaḷat ...... taṉapārak
குறியணி சிதறச் சிதறக் கரவளை கதறக் கதறக் குயில்மொழி பதறப் பதறப் ...... ப்ரியமோகக்
kuṟiyaṇi citaṟac citaṟak karavaḷai kataṟak kataṟak kuyilmoḻi pataṟap pataṟap ...... priyamōkak
கலவியி லொருமித் தொருமித் திலவிதழ் பருகிப் பருகிக் கரமொடு தழுவித் தழுவிச் ...... சிலநாளிற்
kalaviyi lorumit torumit tilavitaḻ parukip parukik karamoṭu taḻuvit taḻuvic ...... cilanāḷiṟ
கையிலுள பொருள்கெட் டருள்கெட் டனைவரும் விடுசிச் சியெனக் கடியொரு செயலுற் றுலகிற் ...... றிரிவேனோ
kaiyiluḷa poruḷkeṭ ṭaruḷkeṭ ṭaṉaivarum viṭucic ciyeṉak kaṭiyoru ceyaluṟ ṟulakiṟ ...... ṟirivēṉō
சலநிதி சுவறச் சவறத் திசைநிலை பெயரப் பெயரத் தடவரை பிதிரப் பிதிரத் ...... திடமேருத்
calaniti cuvaṟac cavaṟat ticainilai peyarap peyarat taṭavarai pitirap pitirat ...... tiṭamērut
தமனிய நெடுவெற் பதிரப் பணிமணி சிரம்விட் டகலச் சமனுடல் கிழியக் கிழியப் ...... பொருசூரன்
tamaṉiya neṭuveṟ patirap paṇimaṇi ciramviṭ ṭakalac camaṉuṭal kiḻiyak kiḻiyap ...... porucūraṉ
பெலமது குறையக் குறையக் கருவிகள் பறையப் பறையப் பிறநரிதொடரத் தொடரத் ...... திரள்கூகை
pelamatu kuṟaiyak kuṟaiyak karuvikaḷ paṟaiyap paṟaiyap piṟanaritoṭarat toṭarat ...... tiraḷkūkai
பெடையொடு குழறக் குழறச் சுரபதி பரவப் பரவப் ப்ரபையயில் தொடுநற் குமரப் ...... பெருமாளே.
peṭaiyoṭu kuḻaṟak kuḻaṟac curapati paravap paravap prapaiyayil toṭunaṟ kumarap ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).