Skip to content

பாடல் 1181 · பாடல் 1181

Song 1181

pāṭal 1181

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

பூசல் வந்திரு தோடார் காதொடு மோதி டுங்கயல் மானார் மானமில் போக மங்கையர் கோடா கோடிய ...... மனதானார்

pūcal vantiru tōṭār kātoṭu mōti ṭuṅkayal māṉār māṉamil pōka maṅkaiyar kōṭā kōṭiya ...... maṉatāṉār

Report an error

பூர குங்கும தூளா மோதப டீர சண்பக மாலா லாளித பூத ரங்களின் மீதே மூழ்கிய ...... அநுராக

pūra kuṅkuma tūḷā mōtapa ṭīra caṇpaka mālā lāḷita pūta raṅkaḷiṉ mītē mūḻkiya ...... anurāka

Report an error

ஆசை யென்கிற பாரா வாரமு மேறு கின்றில னானா பேதஅ நேக தந்த்ரக்ரியாவே தாகம ...... கலையாய

ācai yeṉkiṟa pārā vāramu mēṟu kiṉṟila ṉāṉā pētaa nēka tantrakriyāvē tākama ...... kalaiyāya

Report an error

ஆழி யுங்கரை காணே னூபுர பாத பங்கய மோதே னேசில னாயி னுங்குரு நாதா நீயருள் ...... புரிவாயே

āḻi yuṅkarai kāṇē ṉūpura pāta paṅkaya mōtē ṉēcila ṉāyi ṉuṅkuru nātā nīyaruḷ ...... purivāyē

Report an error

வாச வன்பதி பாழா காமல்நி சாச ரன்குலம் வாழா தேயடி மாள வன்கிரிகூறாய் நீறெழ ...... நெடுநேமி

vāca vaṉpati pāḻā kāmalni cāca raṉkulam vāḻā tēyaṭi māḷa vaṉkirikūṟāy nīṟeḻa ...... neṭunēmi

Report an error

மாத வன்தரு வேதா வோடலை மோது தெண்கடல் கோகோ கோவென மாமு றிந்திட நீள்வே லேவிய ....... ; ளையோனே

māta vaṉtaru vētā vōṭalai mōtu teṇkaṭal kōkō kōveṉa māmu ṟintiṭa nīḷvē lēviya ....... ; ḷaiyōṉē

Report an error

வீசு தென்றலும் வேள்பூ வாளியு மீறு கின்றமை யாமோ காமவி டாய்கெ டும்படி காவா யாவியை ...... யெனஏனல்

vīcu teṉṟalum vēḷpū vāḷiyu mīṟu kiṉṟamai yāmō kāmavi ṭāyke ṭumpaṭi kāvā yāviyai ...... yeṉaēṉal

Report an error

மீது சென்றுற வாடா வேடுவர் பேதை கொங்கையின் மீதே மால்கொடு வேடை கொண்டபி ரானே வானவர் ...... பெருமாளே.

mītu ceṉṟuṟa vāṭā vēṭuvar pētai koṅkaiyiṉ mītē mālkoṭu vēṭai koṇṭapi rāṉē vāṉavar ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).