பொருத கயல்விழி புரட்டிக் காட்டுவர் புளக தனவட மசைத்துக் காட்டுவர் புயலி னளகமும் விரித்துக் காட்டுவர் ...... பொதுமாதர்
poruta kayalviḻi puraṭṭik kāṭṭuvar puḷaka taṉavaṭa macaittuk kāṭṭuvar puyali ṉaḷakamum virittuk kāṭṭuvar ...... potumātar
பாடல் 1183 · பாடல் 1183
pāṭal 1183
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
பொருத கயல்விழி புரட்டிக் காட்டுவர் புளக தனவட மசைத்துக் காட்டுவர் புயலி னளகமும் விரித்துக் காட்டுவர் ...... பொதுமாதர்
poruta kayalviḻi puraṭṭik kāṭṭuvar puḷaka taṉavaṭa macaittuk kāṭṭuvar puyali ṉaḷakamum virittuk kāṭṭuvar ...... potumātar
புனித விதழ்மது நகைத்துக் காட்டுவர் பொலிவி னிடைதுகில் குலைத்துக் காட்டுவர் புதிய பரிபுர நடித்துக் காட்டுவ ...... ரிளைஞோரை
puṉita vitaḻmatu nakaittuk kāṭṭuvar polivi ṉiṭaitukil kulaittuk kāṭṭuvar putiya paripura naṭittuk kāṭṭuva ...... riḷaiñōrai
உ ருக அணைதனி லணைத்துக் காட்டுவர் உ டைமை யடையவெ பறித்துத் தாழ்க்கவெ உ ததி யமுதென நிகழ்த்திக் கேட்பவர் ...... பொடிமாயம்
u ruka aṇaitaṉi laṇaittuk kāṭṭuvar u ṭaimai yaṭaiyave paṟittut tāḻkkave u tati yamuteṉa nikaḻttik kēṭpavar ...... poṭimāyam
உ தர மெரிதர மருத்திட் டாட்டிகள் உ யிரினிலைகளை விரித்துச் சேர்ப்பவர் உ றவு கலவியை விடுத்திட் டாட்கொள ...... நினையாதோ
u tara meritara maruttiṭ ṭāṭṭikaḷ u yiriṉilaikaḷai virittuc cērppavar u ṟavu kalaviyai viṭuttiṭ ṭāṭkoḷa ...... niṉaiyātō
மருது பொடிபட வுதைத்திட் டாய்ச்செரி மகளி ருறிகளை யுடைத்துப் போட்டவர் மறுக வொருகயி றடித்திட் டார்ப்புற ...... அழுதூறும்
marutu poṭipaṭa vutaittiṭ ṭāycceri makaḷi ruṟikaḷai yuṭaittup pōṭṭavar maṟuka vorukayi ṟaṭittiṭ ṭārppuṟa ...... aḻutūṟum
வளரு நெடுமுகி லெதிர்த்துக் காட்டென அசட னிரணிய னுரத்தைப் பேர்த்தவன் மழையி னிரைமலை யெடுத்துக் காத்தவன் ...... மருகோனே
vaḷaru neṭumuki letirttuk kāṭṭeṉa acaṭa ṉiraṇiya ṉurattaip pērttavaṉ maḻaiyi ṉiraimalai yeṭuttuk kāttavaṉ ...... marukōṉē
விருது பலபல பிடித்துச் சூர்க்கிளை விகட தடமுடி பறித்துத் தோட்களை விழவு முறியவு மடித்துத் தாக்கிய ...... அயில்வீரா
virutu palapala piṭittuc cūrkkiḷai vikaṭa taṭamuṭi paṟittut tōṭkaḷai viḻavu muṟiyavu maṭittut tākkiya ...... ayilvīrā
வெகுதி சலதியை யெரித்துத் தூட்பட வினைசெ யசுரர்கள் பதிக்குட் பாய்ச்சிய விபுத மலரடி விரித்துப் போற்றினர் ...... பெருமாளே.
vekuti calatiyai yerittut tūṭpaṭa viṉaice yacurarkaḷ patikkuṭ pāycciya viputa malaraṭi virittup pōṟṟiṉar ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).