Skip to content

பாடல் 1185 · பாடல் 1185

Song 1185

pāṭal 1185

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

மதன தனுநிக ரிடைக்கே மன முருக வருபிடி நடைக்கே யிரு வனச பரிபுர மலர்க்கே மது ...... கரம்வாழும்

mataṉa taṉunika riṭaikkē maṉa muruka varupiṭi naṭaikkē yiru vaṉaca paripura malarkkē matu ...... karamvāḻum

Report an error

வகுள ம்ருகமத மழைக்கே மணி மகர மணிவன குழைக்கே மட மகளிர் முகுளித முலைக்கே கட ...... லமுதூறும்

vakuḷa mrukamata maḻaikkē maṇi makara maṇivaṉa kuḻaikkē maṭa makaḷir mukuḷita mulaikkē kaṭa ...... lamutūṟum

Report an error

அதர மதுரித மொழிக்கே குழை யளவு மளவிய விழிக்கே தள வனைய தொருசிறு நகைக்கே பனி ...... மதிபோலும்

atara maturita moḻikkē kuḻai yaḷavu maḷaviya viḻikkē taḷa vaṉaiya toruciṟu nakaikkē paṉi ...... matipōlum

Report an error

அழகு திகழ்தரு நுதற்கே யந வரத மவயவ மனைத்தூ டினு மவச முறுமயல் தவிர்த்தாள் வது ...... மொருநாளே

aḻaku tikaḻtaru nutaṟkē yana varata mavayava maṉaittū ṭiṉu mavaca muṟumayal tavirttāḷ vatu ...... morunāḷē

Report an error

உ ததி புதைபட அடைத்தா தவன் நிகரிலிரதமும் விடுக்கா நகர் ஒருநொ டியில்வெயி லெழச்சா நகி ...... துயர்தீர

u tati putaipaṭa aṭaittā tavaṉ nikariliratamum viṭukkā nakar oruno ṭiyilveyi leḻaccā naki ...... tuyartīra

Report an error

உ பய வொருபது வரைத்தோள் களு நிசிச ரர்கள்பதி தசக்ரீ வமு முருள ஒருகணை தெரித்தா னும ...... வுனஞான

u paya vorupatu varaittōḷ kaḷu nicica rarkaḷpati tacakrī vamu muruḷa orukaṇai terittā ṉuma ...... vuṉañāṉa

Report an error

திதமி லவுணர்த மிருப்பா கிய புரமு மெரியெழ முதற்பூ தர திலத குலகிரிவளைத்தா னும ...... கிழவானோர்

titami lavuṇarta miruppā kiya puramu meriyeḻa mutaṟpū tara tilata kulakirivaḷaittā ṉuma ...... kiḻavāṉōr

Report an error

திருவ நகர்குடி புகச்சீ கர மகர சலமுறை யிடச்சூ ரொடு சிகர கிரிபொடி படச்சா டிய ...... பெருமாளே.

tiruva nakarkuṭi pukaccī kara makara calamuṟai yiṭaccū roṭu cikara kiripoṭi paṭaccā ṭiya ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).