Skip to content

பாடல் 119 · பாடல் 119

Song 119

pāṭal 119

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

4 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

இலகிய களபசு கந்த வாடையின் ம்ருகமத மதனைம கிழ்ந்து பூசியெ இலைசுருள் பிளவைய ருந்தி யேயதை ...... யிதமாகக்

ilakiya kaḷapacu kanta vāṭaiyiṉ mrukamata mataṉaima kiḻntu pūciye ilaicuruḷ piḷavaiya runti yēyatai ...... yitamākak

Report an error

கலவியி லவரவர் தங்கள் வாய்தனி லிடுபவர் பலபல சிந்தை மாதர்கள் கசனையை விடுவது மெந்த நாளது ...... பகர்வாயே

kalaviyi lavaravar taṅkaḷ vāytaṉi liṭupavar palapala cintai mātarkaḷ kacaṉaiyai viṭuvatu menta nāḷatu ...... pakarvāyē

Report an error

சிலைதரு குறவர்ம டந்தை நாயகி தினைவன மதனிலு கந்த நாயகி திரள்தன மதனில ணைந்த நாயக ...... சிவலோகா

cilaitaru kuṟavarma ṭantai nāyaki tiṉaivaṉa mataṉilu kanta nāyaki tiraḷtaṉa mataṉila ṇainta nāyaka ...... civalōkā

Report an error

கொலைபுரி யசுரர்கு லங்கள் மாளவெ அயிலயி லதனையு கந்த நாயக குருபர பழநியி லென்று மேவிய ...... பெருமாளே.

kolaipuri yacurarku laṅkaḷ māḷave ayilayi lataṉaiyu kanta nāyaka kurupara paḻaniyi leṉṟu mēviya ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).