அடியார்ம னஞ்சலிக்க எவராகி லும்ப ழிக்க அபராதம் வந்து கெட்ட ...... பிணிமூடி
aṭiyārma ṉañcalikka evarāki lumpa ḻikka aparātam vantu keṭṭa ...... piṇimūṭi
பாடல் 1203 · பாடல் 1203
pāṭal 1203
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
அடியார்ம னஞ்சலிக்க எவராகி லும்ப ழிக்க அபராதம் வந்து கெட்ட ...... பிணிமூடி
aṭiyārma ṉañcalikka evarāki lumpa ḻikka aparātam vantu keṭṭa ...... piṇimūṭi
அனைவோரும் வந்து சிச்சி யெனநால்வ ருஞ்சி ரிக்க அனலோட ழன்று செத்து ...... விடுமாபோற்
aṉaivōrum vantu cicci yeṉanālva ruñci rikka aṉalōṭa ḻaṉṟu cettu ...... viṭumāpōṟ
கடையேன்ம லங்கள் முற்று மிருநோயு டன்பி டித்த கலியோடி றந்து சுத்த ...... வெளியாகிக்
kaṭaiyēṉma laṅkaḷ muṟṟu mirunōyu ṭaṉpi ṭitta kaliyōṭi ṟantu cutta ...... veḷiyākik
களிகூர என்ற னுக்கு மயிலேறி வந்து முத்தி கதியேற அன்பு வைத்து ...... னருள்தாராய்
kaḷikūra eṉṟa ṉukku mayilēṟi vantu mutti katiyēṟa aṉpu vaittu ...... ṉaruḷtārāy
சடைமீது கங்கை வைத்து விடையேறு மெந்தை சுத்த தழல்மேனி யன்சி ரித்தொர் ...... புர்முணும்
caṭaimītu kaṅkai vaittu viṭaiyēṟu mentai cutta taḻalmēṉi yaṉci rittor ...... purmuṇum
தவிடாக வந்தெ திர்த்த மதனாக முஞ்சி தைத்த தழல்பார்வை யன்ற ளித்த ...... குருநாதா
taviṭāka vante tirtta mataṉāka muñci taitta taḻalpārvai yaṉṟa ḷitta ...... kurunātā
மிடிதீர அண்ட ருக்கு மயிலேறி வஞ்சர் கொட்டம் வெளியாக வந்து நிர்த்த ...... மருள்வோனே
miṭitīra aṇṭa rukku mayilēṟi vañcar koṭṭam veḷiyāka vantu nirtta ...... maruḷvōṉē
மினநூல்ம ருங்குல் பொற்பு முலைமாதி ளங்கு றத்தி மிகுமாலொ டன்பு வைத்த ...... பெருமாளே.
miṉanūlma ruṅkul poṟpu mulaimāti ḷaṅku ṟatti mikumālo ṭaṉpu vaitta ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).