Skip to content

பாடல் 1234 · பாடல் 1234

Song 1234

pāṭal 1234

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

கிஞ்சுகமெ னச்சி வத்த தொண்டையள்மி கக்க றுத்த கெண்டையள்பு னக்கொ டிச்சி ...... யதிபாரக்

kiñcukame ṉacci vatta toṇṭaiyaḷmi kakka ṟutta keṇṭaiyaḷpu ṉakko ṭicci ...... yatipārak

Report an error

கிம்புரிம ருப்பை யொத்த குங்குமமு லைக்கு றத்தி கிங்கரனெ னப்ப டைத்த ...... பெயர்பேசா

kimpurima ruppai yotta kuṅkumamu laikku ṟatti kiṅkaraṉe ṉappa ṭaitta ...... peyarpēcā

Report an error

நெஞ்சுருகி நெக்கு நெக்கு நின்றுதொழு நிர்க்கு ணத்தர் நிந்தனையில் பத்தர் வெட்சி ...... மலர்தூவும்

neñcuruki nekku nekku niṉṟutoḻu nirkku ṇattar nintaṉaiyil pattar veṭci ...... malartūvum

Report an error

நின்பதயு கப்ர சித்தி யென்பனவ குத்து ரைக்க நின்பணித மிழ்த்ர யத்தை ...... யருள்வாயே

niṉpatayu kapra citti yeṉpaṉava kuttu raikka niṉpaṇita miḻtra yattai ...... yaruḷvāyē

Report an error

கஞ்சன்வர விட்ட துட்ட குஞ்சரம ருப்பொ சித்த கங்கனும தித்தி கைக்க ...... மதம்வீசுங்

kañcaṉvara viṭṭa tuṭṭa kuñcarama ruppo citta kaṅkaṉuma titti kaikka ...... matamvīcuṅ

Report an error

கந்தெறிக ளிற்று ரித்து வென்றுதிரு நட்ட மிட்ட கம்பனும திக்க வுக்ர ...... வடிவேல்கொண்

kanteṟika ḷiṟṟu rittu veṉṟutiru naṭṭa miṭṭa kampaṉuma tikka vukra ...... vaṭivēlkoṇ

Report an error

டஞ்சியஜ கத்ர யத்தை யஞ்சலென விக்ர மித்து அன்பர்புக ழப்பொ ருப்பொ ...... டமராடி

ṭañciyaja katra yattai yañcaleṉa vikra mittu aṉparpuka ḻappo ruppo ...... ṭamarāṭi

Report an error

அன்றவுண ரைக்க ளத்தில் வென்றுததி யைக்க லக்கி அண்டர்சிறை வெட்டி விட்ட ...... பெருமாளே.

aṉṟavuṇa raikka ḷattil veṉṟutati yaikka lakki aṇṭarciṟai veṭṭi viṭṭa ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).