வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் மாயமதொ ழிந்து ...... தெளியேனே
vātiṉai yaṭarnta vēlviḻiyar taṅkaḷ māyamato ḻintu ...... teḷiyēṉē
பாடல் 1318 · பாடல் 1318
pāṭal 1318
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள் மாயமதொ ழிந்து ...... தெளியேனே
vātiṉai yaṭarnta vēlviḻiyar taṅkaḷ māyamato ḻintu ...... teḷiyēṉē
மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மாபதம ணிந்து ...... பணியேனே
māmalarkaḷ koṇṭu mālaikaḷ puṉaintu māpatama ṇintu ...... paṇiyēṉē
ஆதியொடு மந்த மாகிய நலங்கள் ஆறுமுக மென்று ...... தெரியேனே
ātiyoṭu manta mākiya nalaṅkaḷ āṟumuka meṉṟu ...... teriyēṉē
ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட தாடுமயி லென்ப ...... தறியேனே
āṉataṉi mantra rūpanilai koṇṭa tāṭumayi leṉpa ...... taṟiyēṉē
நாதமொடு விந்து வானவுடல் கொண்டு நானிலம லைந்து ...... திரிவேனே
nātamoṭu vintu vāṉavuṭal koṇṭu nāṉilama laintu ...... tirivēṉē
நாகமணி கின்ற நாதநிலை கண்டு நாடியதில் நின்று ...... தொழுகேனே
nākamaṇi kiṉṟa nātanilai kaṇṭu nāṭiyatil niṉṟu ...... toḻukēṉē
சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற சோகமது தந்து ...... எனையாள்வாய்
cōtiyuṇar kiṉṟa vāḻvuciva meṉṟa cōkamatu tantu ...... eṉaiyāḷvāy
சூரர்குலம் வென்று வாகையொடு சென்று சோலைமலை நின்ற ...... பெருமாளே.
cūrarkulam veṉṟu vākaiyoṭu ceṉṟu cōlaimalai niṉṟa ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).