கருவெனு மாயை உ ருவினில் மூழ்கி வயதள வாக ...... நிலமீதில்
karuveṉu māyai u ruviṉil mūḻki vayataḷa vāka ...... nilamītil
பாடல் 1323 · பாடல் 1323
pāṭal 1323
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
கருவெனு மாயை உ ருவினில் மூழ்கி வயதள வாக ...... நிலமீதில்
karuveṉu māyai u ruviṉil mūḻki vayataḷa vāka ...... nilamītil
கலைதெரிவாணர் கலைபல நூல்கள் வெகுவித மாக ...... கவிபாடித்
kalaiterivāṇar kalaipala nūlkaḷ vekuvita māka ...... kavipāṭit
தெருவழி போகி பொருளெனு மாசை திரவியம் நாடி ...... நெடிதோடிச்
teruvaḻi pōki poruḷeṉu mācai tiraviyam nāṭi ...... neṭitōṭic
சிலைநுதல் மாதர் மயலினில் மூழ்கி சிறுவித மாக ...... திரிவேனோ
cilainutal mātar mayaliṉil mūḻki ciṟuvita māka ...... tirivēṉō
அருளநு போக குருபர னேஉ ன் அடியவர் வாழ ...... அருள்வோனே
aruḷanu pōka kurupara ṉēu ṉ aṭiyavar vāḻa ...... aruḷvōṉē
அரனிரு காதில் அருள்பர ஞாந அடைவினை ஓதி ...... அருள்பாலா
araṉiru kātil aruḷpara ñāna aṭaiviṉai ōti ...... aruḷpālā
வெருவிடு சூரர் குலஅடி வேரை விழவிடு சாசு ...... வதிபாலா
veruviṭu cūrar kulaaṭi vērai viḻaviṭu cācu ...... vatipālā
மிடலுட லாளர் அடரசுர் மாள விடுமயில் வேல ...... பெருமாளே.
miṭaluṭa lāḷar aṭaracur māḷa viṭumayil vēla ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).