கலைகொடு பவுத்தர் காம கருமிகள் துருக்கர் மாய கபிலர்பக ரக்க ணாதர் ...... உலகாயர்
kalaikoṭu pavuttar kāma karumikaḷ turukkar māya kapilarpaka rakka ṇātar ...... ulakāyar
பாடல் 138 · பாடல் 138
pāṭal 138
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
கலைகொடு பவுத்தர் காம கருமிகள் துருக்கர் மாய கபிலர்பக ரக்க ணாதர் ...... உலகாயர்
kalaikoṭu pavuttar kāma karumikaḷ turukkar māya kapilarpaka rakka ṇātar ...... ulakāyar
கலகமிடு தர்க்கர் வாம பயிரவர் விருத்த ரோடு கலகலென மிக்க நூல்க ...... ளதனாலே
kalakamiṭu tarkkar vāma payiravar virutta rōṭu kalakaleṉa mikka nūlka ...... ḷataṉālē
சிலுகியெதிர் குத்தி வாது செயவுமொரு வர்க்கு நீதி தெரிவரிய சித்தி யான ...... வுபதேசந்
cilukiyetir kutti vātu ceyavumoru varkku nīti terivariya citti yāṉa ...... vupatēcan
தெரிதர விளக்கி ஞான தரிசந மளித்து வீறு திருவடி யெனக்கு நேர்வ ...... தொருநாளே
teritara viḷakki ñāṉa taricana maḷittu vīṟu tiruvaṭi yeṉakku nērva ...... torunāḷē
கெலையுற எதிர்த்த கோர இபமுக அரக்க னோடு குரகத முகத்தர் சீய ...... முகவீரர்
kelaiyuṟa etirtta kōra ipamuka arakka ṉōṭu kurakata mukattar cīya ...... mukavīrar
குறையுட லெடுத்து வீசி யலகையொடு பத்ர காளி குலவியிட வெற்றி வேலை ...... விடுவோனே
kuṟaiyuṭa leṭuttu vīci yalakaiyoṭu patra kāḷi kulaviyiṭa veṟṟi vēlai ...... viṭuvōṉē
பலமிகு புனத்து லாவு குறவநிதை சித்ர பார பரிமள தனத்தில் மேவு ...... மணிமார்பா
palamiku puṉattu lāvu kuṟavanitai citra pāra parimaḷa taṉattil mēvu ...... maṇimārpā
படைபொருது மிக்க யூக மழைமுகிலை யொட்டி யேறு பழநிமலை யுற்ற தேவர் ...... பெருமாளே.
paṭaiporutu mikka yūka maḻaimukilai yoṭṭi yēṟu paḻanimalai yuṟṟa tēvar ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).