Skip to content

பாடல் 158 · பாடல் 158

Song 158

pāṭal 158

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

சீயுதிர மெங்கு மேய்புழுநி ரம்பு மாயமல பிண்ட நோயிடுகு ரம்பை தீநரிகள் கங்கு காகமிவை தின்ப ...... தொழியாதே

cīyutira meṅku mēypuḻuni rampu māyamala piṇṭa nōyiṭuku rampai tīnarikaḷ kaṅku kākamivai tiṉpa ...... toḻiyātē

Report an error

தீதுளகு ணங்க ளேபெருகு தொந்த மாயையில்வ ளர்ந்த தோல்தசையெ லும்பு சேரிடந ரம்பு தானிவைபொ திந்து ...... நிலைகாணா

tītuḷaku ṇaṅka ḷēperuku tonta māyaiyilva ḷarnta tōltacaiye lumpu cēriṭana rampu tāṉivaipo tintu ...... nilaikāṇā

Report an error

ஆயுதுந மன்கை போகவுயி ரந்த நாழிகையில் விஞ்ச ஊசிடுமி டும்பை யாகியவு டம்பு பேணிநிலை யென்று ...... மடவார்பால்

āyutuna maṉkai pōkavuyi ranta nāḻikaiyil viñca ūciṭumi ṭumpai yākiyavu ṭampu pēṇinilai yeṉṟu ...... maṭavārpāl

Report an error

ஆசையைவி ரும்பி யேவிரக சிங்கி தானுமிக வந்து மேவிடம யங்கு மாழ்துயர்வி ழுந்து மாளுமெனை யன்பு ...... புரிவாயே

ācaiyaivi rumpi yēviraka ciṅki tāṉumika vantu mēviṭama yaṅku māḻtuyarvi ḻuntu māḷumeṉai yaṉpu ...... purivāyē

Report an error

மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டு பார்முழுது மண்ட கோளமுந டுங்க வாய்பிளறி நின்று மேகநிகர் தன்கை ...... யதனாலே

māyaivala kañca ṉālviṭave kuṇṭu pārmuḻutu maṇṭa kōḷamuna ṭuṅka vāypiḷaṟi niṉṟu mēkanikar taṉkai ...... yataṉālē

Report an error

வாரியுற அண்டி வீறொடுமு ழங்கு நீரைநுகர் கின்ற கோபமொடெ திர்ந்த வாரண இரண்டு கோடொடிய வென்ற ...... நெடியோனாம்

vāriyuṟa aṇṭi vīṟoṭumu ḻaṅku nīrainukar kiṉṟa kōpamoṭe tirnta vāraṇa iraṇṭu kōṭoṭiya veṉṟa ...... neṭiyōṉām

Report an error

வேயினிசை கொண்டு கோநிரைபு ரந்து மேயல்புரி செங்கண் மால்மருக துங்க வேலகிர வுஞ்ச மால்வரையி டிந்து ...... பொடியாக

vēyiṉicai koṇṭu kōniraipu rantu mēyalpuri ceṅkaṇ mālmaruka tuṅka vēlakira vuñca mālvaraiyi ṭintu ...... poṭiyāka

Report an error

வேலைவிடு கந்த காவிரிவி ளங்கு கார்கலிசை வந்த சேவகன்வ ணங்க வீரைநகர் வந்து வாழ்பழநி யண்டர் ...... பெருமாளே.

vēlaiviṭu kanta kāvirivi ḷaṅku kārkalicai vanta cēvakaṉva ṇaṅka vīrainakar vantu vāḻpaḻani yaṇṭar ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).