Skip to content

பாடல் 172 · பாடல் 172

Song 172

pāṭal 172

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

நெற்றிவெ யர்த்துளி துளிக்க வேயிரு குத்துமு லைக்குட மசைத்து வீதியி னிற்பவர் மைப்படர் விழிக்க லாபியர் ...... மொழியாலே

neṟṟive yarttuḷi tuḷikka vēyiru kuttumu laikkuṭa macaittu vītiyi ṉiṟpavar maippaṭar viḻikka lāpiyar ...... moḻiyālē

Report an error

நித்தம யக்கிகள் மணத்த பூமலர் மெத்தையில் வைத்ததி விதத்தி லேயுட னெட்டுவ ரத்தொழில் கொடுத்து மேவியு ...... முறவாடி

nittama yakkikaḷ maṇatta pūmalar mettaiyil vaittati vitatti lēyuṭa ṉeṭṭuva rattoḻil koṭuttu mēviyu ...... muṟavāṭi

Report an error

உற்றவ கைப்படி பொருட்கள் யாவையு மெத்தவு நட்பொடு பறித்து நாடொறு முற்பன வித்தைகள் தொடுக்கு மாதர்க ...... ளுறவாமே

uṟṟava kaippaṭi poruṭkaḷ yāvaiyu mettavu naṭpoṭu paṟittu nāṭoṟu muṟpaṉa vittaikaḷ toṭukku mātarka ...... ḷuṟavāmē

Report an error

உச்சித மெய்ப்புற அனைத்து யாவுடன் மெய்ப்படு பத்தியி னிணக்க மேபெற வுட்குளிர் புத்தியை யெனக்கு நீதர ...... வருவாயே

uccita meyppuṟa aṉaittu yāvuṭaṉ meyppaṭu pattiyi ṉiṇakka mēpeṟa vuṭkuḷir puttiyai yeṉakku nītara ...... varuvāyē

Report an error

கற்றத மிழ்ப்புல வனுக்கு மேமகிழ் வுற்றொரு பொற்கொடி களிக்க வேபொரு கற்பனை நெற்பல அளித்த காரண ...... னருள்பாலா

kaṟṟata miḻppula vaṉukku mēmakiḻ vuṟṟoru poṟkoṭi kaḷikka vēporu kaṟpaṉai neṟpala aḷitta kāraṇa ...... ṉaruḷpālā

Report an error

கற்பந கர்க்களி றளித்த மாதணை பொற்புய மைப்புயல் நிறத்த வானவர் கட்கிறை யுட்கிட அருட்க்ரு பாகர ...... எனநாளும்

kaṟpana karkkaḷi ṟaḷitta mātaṇai poṟpuya maippuyal niṟatta vāṉavar kaṭkiṟai yuṭkiṭa aruṭkru pākara ...... eṉanāḷum

Report an error

நற்றவ ரர்ச்சனை யிடத்த யாபர வஸ்துவெ னப்புவி யிடத்தி லேவளர் நத்தணி செக்கரன் மகிழ்ச்சி கூர்தரு ...... மருகோனே

naṟṟava rarccaṉai yiṭatta yāpara vastuve ṉappuvi yiṭatti lēvaḷar nattaṇi cekkaraṉ makiḻcci kūrtaru ...... marukōṉē

Report an error

நட்டுவர் மத்தள முழக்க மாமென மைக்குல மெத்தவு முழக்க மேதரு நற்பழ நிப்பதி செழிக்க மேவிய ...... பெருமாளே.

naṭṭuvar mattaḷa muḻakka māmeṉa maikkula mettavu muḻakka mētaru naṟpaḻa nippati ceḻikka mēviya ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).