Skip to content

பாடல் 179 · பாடல் 179

Song 179

pāṭal 179

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

போத கந்தரு கோவே நமோநம நீதி தங்கிய தேவா நமோநம பூத லந்தனை யாள்வாய் நமோநம ...... பணியாவும்

pōta kantaru kōvē namōnama nīti taṅkiya tēvā namōnama pūta lantaṉai yāḷvāy namōnama ...... paṇiyāvum

Report an error

பூணு கின்றபி ரானே நமோநம வேடர் தங்கொடி மாலா நமோநம போத வன்புகழ் ஸாமீ நமோநம ...... அரிதான

pūṇu kiṉṟapi rāṉē namōnama vēṭar taṅkoṭi mālā namōnama pōta vaṉpukaḻ sāmī namōnama ...... aritāṉa

Report an error

வேத மந்திர ரூபா நமோநம ஞான பண்டித நாதா நமோநம வீர கண்டைகொள் தாளா நமோநம ...... அழகான

vēta mantira rūpā namōnama ñāṉa paṇṭita nātā namōnama vīra kaṇṭaikoḷ tāḷā namōnama ...... aḻakāṉa

Report an error

மேனி தங்கிய வேளே நமோநம வான பைந்தொடி வாழ்வே நமோநம வீறு கொண்டவி சாகா நமோநம ...... அருள்தாராய்

mēṉi taṅkiya vēḷē namōnama vāṉa paintoṭi vāḻvē namōnama vīṟu koṇṭavi cākā namōnama ...... aruḷtārāy

Report an error

பாத கஞ்செறி சூராதி மாளவெ கூர்மை கொண்டயி லாலே பொராடியெ பார அண்டர்கள் வானாடு சேர்தர ...... அருள்வோனே

pāta kañceṟi cūrāti māḷave kūrmai koṇṭayi lālē porāṭiye pāra aṇṭarkaḷ vāṉāṭu cērtara ...... aruḷvōṉē

Report an error

பாதி சந்தர னேசூடும் வேணியர் சூல சங்கர னார்கீத நாயகர் பார திண்புய மேசேரு சோதியர் ...... கயிலாயர்

pāti cantara ṉēcūṭum vēṇiyar cūla caṅkara ṉārkīta nāyakar pāra tiṇpuya mēcēru cōtiyar ...... kayilāyar

Report an error

ஆதி சங்கர னார்பாக மாதுமை கோல அம்பிகை மாதா மநோமணி ஆயி சுந்தரி தாயான நாரணி ...... அபிராமி

āti caṅkara ṉārpāka mātumai kōla ampikai mātā manōmaṇi āyi cuntari tāyāṉa nāraṇi ...... apirāmi

Report an error

ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய ஆவி னன்குடி வாழ்வான தேவர்கள் ...... பெருமாளே.

āval koṇṭuvi ṟālē cirāṭave kōma ḷampala cūḻkō yilmīṟiya āvi ṉaṉkuṭi vāḻvāṉa tēvarkaḷ ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).