முகைமுளரி ப்ரபைவீசு மெழில்கனக மலைபோலு முதிர்விலிள தனபார ...... மடவார்தோள்
mukaimuḷari prapaivīcu meḻilkaṉaka malaipōlu mutirviliḷa taṉapāra ...... maṭavārtōḷ
பாடல் 185 · பாடல் 185
pāṭal 185
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
முகைமுளரி ப்ரபைவீசு மெழில்கனக மலைபோலு முதிர்விலிள தனபார ...... மடவார்தோள்
mukaimuḷari prapaivīcu meḻilkaṉaka malaipōlu mutirviliḷa taṉapāra ...... maṭavārtōḷ
முழுகியமி ழநுபோக விழலனென வுலகோர்கள் மொழியுமது மதியாமல் ...... தலைகீழ்வீழ்ந்
muḻukiyami ḻanupōka viḻalaṉeṉa vulakōrkaḷ moḻiyumatu matiyāmal ...... talaikīḻvīḻn
தகமகிழ விதமான நகையமுத மெனவூற லசடரக மெழவாகி ...... மிகவேயுண்
takamakiḻa vitamāṉa nakaiyamuta meṉavūṟa lacaṭaraka meḻavāki ...... mikavēyuṇ
டழியுமொரு தமியேனு மொழியுமுன திருதாளி னமுதுபரு கிடஞான ...... மருளாயோ
ṭaḻiyumoru tamiyēṉu moḻiyumuṉa tirutāḷi ṉamutuparu kiṭañāṉa ...... maruḷāyō
மகரமெறி திரைமோது பகரகடல் தடவாரி மறுகுபுனல் கெடவேலை ...... விடுவோனே
makarameṟi tiraimōtu pakarakaṭal taṭavāri maṟukupuṉal keṭavēlai ...... viṭuvōṉē
வரிசையவுண் மகசேனை யுகமுடிய மயிலேறி வருபவனிரு கரதீர ...... முருகோனே
varicaiyavuṇ makacēṉai yukamuṭiya mayilēṟi varupavaṉiru karatīra ...... murukōṉē
பகர்வரிய ரெனலாகு முமைகொழுந ருளமேவு பரமகுரு வெனநாடு ...... மிளையோனே
pakarvariya reṉalāku mumaikoḻuna ruḷamēvu paramakuru veṉanāṭu ...... miḷaiyōṉē
பணிலமணி வெயில்வீசு மணிசிகர மதிசூடு பழநிமலை தனில்மேவு ...... பெருமாளே.
paṇilamaṇi veyilvīcu maṇicikara maticūṭu paḻanimalai taṉilmēvu ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).