வார ணந்தனை நேரான மாமுலை மீத ணிந்திடு பூணார மாரொளி வால சந்திர னேராக மாமுக ...... மெழில்கூர
vāra ṇantaṉai nērāṉa māmulai mīta ṇintiṭu pūṇāra māroḷi vāla cantira ṉērāka māmuka ...... meḻilkūra
பாடல் 197 · பாடல் 197
pāṭal 197
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
வார ணந்தனை நேரான மாமுலை மீத ணிந்திடு பூணார மாரொளி வால சந்திர னேராக மாமுக ...... மெழில்கூர
vāra ṇantaṉai nērāṉa māmulai mīta ṇintiṭu pūṇāra māroḷi vāla cantira ṉērāka māmuka ...... meḻilkūra
வார ணங்கிடு சேலான நீள்விழி யோலை தங்கிய வார்காது வாவிட வான இன்சுதை மோலான வாயித ...... ழமுதூறத்
vāra ṇaṅkiṭu cēlāṉa nīḷviḻi yōlai taṅkiya vārkātu vāviṭa vāṉa iṉcutai mōlāṉa vāyita ...... ḻamutūṟat
தோர ணஞ்செறி தார்வாழை யேய்தொடை மீதில் நின்றிடை நூல்போலு லாவியெ தோகை யென்றிட வாகாக வூரன ...... நடைமானார்
tōra ṇañceṟi tārvāḻai yēytoṭai mītil niṉṟiṭai nūlpōlu lāviye tōkai yeṉṟiṭa vākāka vūraṉa ...... naṭaimāṉār
தோத கந்தனை மாமாயை யேவடி வாக நின்றதெ னாஆய வோர்வது தோணி டும்படி நாயேனுள் நீயருள் ...... தருவாயே
tōta kantaṉai māmāyai yēvaṭi vāka niṉṟate ṉāāya vōrvatu tōṇi ṭumpaṭi nāyēṉuḷ nīyaruḷ ...... taruvāyē
கார ணந்தனை யோராநி சாசரர் தாம டங்கலு மீறாக வானவர் காவ லிந்திர னாடாள வேயயில் ...... விடும்வீரா
kāra ṇantaṉai yōrāni cācarar tāma ṭaṅkalu mīṟāka vāṉavar kāva lintira ṉāṭāḷa vēyayil ...... viṭumvīrā
கார்வி டந்தனை யூணாக வானவர் வாழ்த ரும்படி மேனாளி லேமிசை காள கண்டம காதேவ னார்தரு ...... முருகோனே
kārvi ṭantaṉai yūṇāka vāṉavar vāḻta rumpaṭi mēṉāḷi lēmicai kāḷa kaṇṭama kātēva ṉārtaru ...... murukōṉē
ஆர ணன்றனை வாதாடி யோருரை ஓது கின்றென வாராதெ னாவவ னாண வங்கெட வேகாவ லாமதி ...... விடும்வேலா
āra ṇaṉṟaṉai vātāṭi yōrurai ōtu kiṉṟeṉa vārāte ṉāvava ṉāṇa vaṅkeṭa vēkāva lāmati ...... viṭumvēlā
ஆத வன்கதி ரோவாது லாவிய கோபு ரங்கிளர் மாமாது மேவிய ஆவி னன்குடி யோனேசு ராதிபர் ...... பெருமாளே.
āta vaṉkati rōvātu lāviya kōpu raṅkiḷar māmātu mēviya āvi ṉaṉkuṭi yōṉēcu rātipar ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).