வரைத்தடங் கொங்கை யாலும் வளைப்படுஞ் செங்கை யாலும் மதர்த்திடுங் கெண்டையாலும் ...... அனைவோரும்
varaittaṭaṅ koṅkai yālum vaḷaippaṭuñ ceṅkai yālum matarttiṭuṅ keṇṭaiyālum ...... aṉaivōrum
பாடல் 20 · பாடல் 20
pāṭal 20
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
வரைத்தடங் கொங்கை யாலும் வளைப்படுஞ் செங்கை யாலும் மதர்த்திடுங் கெண்டையாலும் ...... அனைவோரும்
varaittaṭaṅ koṅkai yālum vaḷaippaṭuñ ceṅkai yālum matarttiṭuṅ keṇṭaiyālum ...... aṉaivōrum
வடுப்படுந் தொண்டை யாலும் விரைத்திடுங் கொண்டை யாலும் மருட்டிடுஞ் சிந்தை மாதர் ...... வசமாகி
vaṭuppaṭun toṇṭai yālum viraittiṭuṅ koṇṭai yālum maruṭṭiṭuñ cintai mātar ...... vacamāki
எரிப்படும் பஞ்சு போல மிகக்கெடுந் தொண்ட னேனும் இனற்படுந் தொந்த வாரி ...... கரையேற
erippaṭum pañcu pōla mikakkeṭun toṇṭa ṉēṉum iṉaṟpaṭun tonta vāri ...... karaiyēṟa
இசைத்திடுஞ் சந்த பேதம் ஒலித்திடுந் தண்டை சூழும் இணைப்பதம் புண்ட ரீகம் ...... அருள்வாயே
icaittiṭuñ canta pētam olittiṭun taṇṭai cūḻum iṇaippatam puṇṭa rīkam ...... aruḷvāyē
சுரர்க்குவஞ் சஞ்செய் சூரன் இளக்ரவுஞ் சந்த னோடு துளக்கெழுந் தண்ட கோளம் ...... அளவாகத்
curarkkuvañ cañcey cūraṉ iḷakravuñ canta ṉōṭu tuḷakkeḻun taṇṭa kōḷam ...... aḷavākat
துரத்தியன் றிந்த்ர லோகம் அழித்தவன் பொன்று மாறு சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே
turattiyaṉ ṟintra lōkam aḻittavaṉ poṉṟu māṟu cuṭapparuñ caṇṭa vēlai ...... viṭuvōṉē
செருக்கெழுந் தும்பர் சேனை துளக்கவென் றண்ட மூடு தெழித்திடுஞ் சங்க பாணி ...... மருகோனே
cerukkeḻun tumpar cēṉai tuḷakkaveṉ ṟaṇṭa mūṭu teḻittiṭuñ caṅka pāṇi ...... marukōṉē
தினைப்புனஞ் சென்று லாவு குறத்தியின் பம்ப ராவு திருப்பரங் குன்ற மேவு ...... பெருமாளே.
tiṉaippuṉañ ceṉṟu lāvu kuṟattiyiṉ pampa rāvu tirupparaṅ kuṉṟa mēvu ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).