ஆனாத பிருதிவிப் பாச நிகளமும் மாமாய விருளுமற் றேகி பவமென வாகாச பரமசிற் சோதி பரையைய ...... டைந்துளாமே
āṉāta pirutivip pāca nikaḷamum māmāya viruḷumaṟ ṟēki pavameṉa vākāca paramaciṟ cōti paraiyaiya ...... ṭaintuḷāmē
பாடல் 203 · பாடல் 203
pāṭal 203
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
ஆனாத பிருதிவிப் பாச நிகளமும் மாமாய விருளுமற் றேகி பவமென வாகாச பரமசிற் சோதி பரையைய ...... டைந்துளாமே
āṉāta pirutivip pāca nikaḷamum māmāya viruḷumaṟ ṟēki pavameṉa vākāca paramaciṟ cōti paraiyaiya ...... ṭaintuḷāmē
ஆறாறி னதிகமக் க்ராய மநுதினம் யோகீச ரெவருமெட் டாத பரதுரி யாதீத மகளமெப் போது முதயம ...... நந்தமோகம்
āṟāṟi ṉatikamak krāya manutiṉam yōkīca revarumeṭ ṭāta paraturi yātīta makaḷamep pōtu mutayama ...... nantamōkam
வானாதி சகலவிஸ்த் தார விபவரம் லோகாதி முடிவுமெய்ப் போத மலரயன் மாலீச ரெனுமவற் கேது விபுலம ...... சங்கையால்நீள்
vāṉāti cakalavist tāra vipavaram lōkāti muṭivumeyp pōta malarayaṉ mālīca reṉumavaṟ kētu vipulama ...... caṅkaiyālnīḷ
மாளாத தனிசமுற் றாய தரியநி ராதார முலைவில்சற் சோதி நிருபமு மாறாத சுகவெளத் தாணு வுடனினி ...... தென்றுசேர்வேன்
māḷāta taṉicamuṟ ṟāya tariyani rātāra mulaivilcaṟ cōti nirupamu māṟāta cukaveḷat tāṇu vuṭaṉiṉi ...... teṉṟucērvēṉ
நானாவி தகருவிச் சேனை வகைவகை சூழ்போது பிரபலச் சூரர் கொடுநெடு நாவாய்செல் கடலடைத் தேறி நிலைமையி ...... லங்கைசாய
nāṉāvi takaruvic cēṉai vakaivakai cūḻpōtu pirapalac cūrar koṭuneṭu nāvāycel kaṭalaṭait tēṟi nilaimaiyi ...... laṅkaicāya
நாலாறு மணிமுடிப் பாவி தனையடு சீராமன் மருகமைக் காவில் பரிமள நாவீசு வயலியக் கீசர் குமரக ...... டம்பவேலா
nālāṟu maṇimuṭip pāvi taṉaiyaṭu cīrāmaṉ marukamaik kāvil parimaḷa nāvīcu vayaliyak kīcar kumaraka ...... ṭampavēlā
கானாளு மெயனர்தற் சாதி வளர்குற மானொடு மகிழ்கருத் தாகி மருடரு காதாடு முனதுகட் பாண மெனதுடை ...... நெஞ்சுபாய்தல்
kāṉāḷu meyaṉartaṟ cāti vaḷarkuṟa māṉoṭu makiḻkarut tāki maruṭaru kātāṭu muṉatukaṭ pāṇa meṉatuṭai ...... neñcupāytal
காணாது மமதைவிட் டாவி யுயவருள் பாராயெ னுரைவெகுப் ப்ரீதி யிளையவ காவேரி வடகரைச் சாமி மலையுறை ...... தம்பிரானே.
kāṇātu mamataiviṭ ṭāvi yuyavaruḷ pārāye ṉuraivekup prīti yiḷaiyava kāvēri vaṭakaraic cāmi malaiyuṟai ...... tampirāṉē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).