எந்தத் திகையினு மலையினு முவரியி னெந்தப் படியினு முகடினு முளபல எந்தச் சடலமு முயிரியை பிறவியி னுழலாதே
entat tikaiyiṉu malaiyiṉu muvariyi ṉentap paṭiyiṉu mukaṭiṉu muḷapala entac caṭalamu muyiriyai piṟaviyi ṉuḻalātē
பாடல் 206 · பாடல் 206
pāṭal 206
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
எந்தத் திகையினு மலையினு முவரியி னெந்தப் படியினு முகடினு முளபல எந்தச் சடலமு முயிரியை பிறவியி னுழலாதே
entat tikaiyiṉu malaiyiṉu muvariyi ṉentap paṭiyiṉu mukaṭiṉu muḷapala entac caṭalamu muyiriyai piṟaviyi ṉuḻalātē
இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி னம்பொற் கழலிணை களில்மரு மலர்கொடு என்சித் தமுமன முருகிநல் சுருதியின் முறையோடே;
intac caṭamuṭa ṉuyirnilai peṟanaḷi ṉampoṟ kaḻaliṇai kaḷilmaru malarkoṭu eṉcit tamumaṉa murukinal curutiyiṉ muṟaiyōṭē;
சந்தித் தரஹர சிவசிவ சரணென கும்பிட் டிணையடி யவையென தலைமிசை தங்கப் புளகித மெழஇரு விழிபுனல் குதிபாயச்
cantit tarahara civaciva caraṇeṉa kumpiṭ ṭiṇaiyaṭi yavaiyeṉa talaimicai taṅkap puḷakita meḻairu viḻipuṉal kutipāyac
சம்பைக் கொடியிடை விபுதையி னழகுமு னந்தத் திருநட மிடுசர ணழகுற சந்தச் சபைதனி லெனதுள முருகவும் வருவாயே;
campaik koṭiyiṭai viputaiyi ṉaḻakumu ṉantat tirunaṭa miṭucara ṇaḻakuṟa cantac capaitaṉi leṉatuḷa murukavum varuvāyē;
தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி தந்தத் தனதன டுடுடுடு டமடம துங்கத் திசைமலை யுவரியு மறுகச லரிபேரி
tontat tikukuṭa takukuṭa ṭimiṭimi tantat taṉataṉa ṭuṭuṭuṭu ṭamaṭama tuṅkat ticaimalai yuvariyu maṟukaca laripēri
துன்றச் சிலைமணி கலகல கலினென சிந்தச் சுரர்மல ரயன்மறை புகழ்தர துன்புற் றவுணர்கள் நமனுல குறவிடு மயில்வேலா;
tuṉṟac cilaimaṇi kalakala kaliṉeṉa cintac curarmala rayaṉmaṟai pukaḻtara tuṉpuṟ ṟavuṇarkaḷ namaṉula kuṟaviṭu mayilvēlā;
கந்தச் சடைமுடி கனல்வடி வடலணி யெந்தைக் குயிரெனு மலைமகள் மரகத கந்தப் பரிமள தனகிரி யுமையரு ளிளையோனே-
kantac caṭaimuṭi kaṉalvaṭi vaṭalaṇi yentaik kuyireṉu malaimakaḷ marakata kantap parimaḷa taṉakiri yumaiyaru ḷiḷaiyōṉē-
கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள் அம்பொற் கொடியிடை புணரரி மருகநல் கந்தப் பொழில்திகழ் குருமலை மருவிய பெருமாளே.
kañcap patamivar tirumakaḷ kulamakaḷ ampoṟ koṭiyiṭai puṇarari marukanal kantap poḻiltikaḻ kurumalai maruviya perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).