Skip to content

பாடல் 22 · பாடல் 22

Song 22

pāṭal 22

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

அந்தகன் வருந்தினம் பிறகிடச் சந்ததமும் வந்துகண் டரிவையர்க் கன்புருகு சங்கதந் தவிரமுக் ...... குணமாள

antakaṉ varuntiṉam piṟakiṭac cantatamum vantukaṇ ṭarivaiyark kaṉpuruku caṅkatan taviramuk ...... kuṇamāḷa

Report an error

அந்திபக லென்றிரண் டையுமொழித் திந்திரிய சஞ்சலங் களையறுத் தம்புய பதங்களின் பெருமையைக் ...... கவிபாடிச்

antipaka leṉṟiraṇ ṭaiyumoḻit tintiriya cañcalaṅ kaḷaiyaṟut tampuya pataṅkaḷiṉ perumaiyaik ...... kavipāṭic

Report an error

செந்திலை யுணர்ந்துணர்ந் துணர்வுறக் கந்தனை யறிந்தறிந் தறிவினிற் சென்றுசெரு குந்தடந் தெளிதரத் ...... தணியாத

centilai yuṇarntuṇarn tuṇarvuṟak kantaṉai yaṟintaṟin taṟiviṉiṟ ceṉṟuceru kuntaṭan teḷitarat ...... taṇiyāta

Report an error

சிந்தையு மவிழ்ந்தழிந் துரையொழித் தென்செய லழிந்தழிந் தழியமெய்ச் சிந்தைவர என்றுநின் தெரிசனைப் ...... படுவேனோ

cintaiyu maviḻntaḻin turaiyoḻit teṉceya laḻintaḻin taḻiyameyc cintaivara eṉṟuniṉ tericaṉaip ...... paṭuvēṉō

Report an error

கொந்தவிழ் சரண்சரண் சரணெனக் கும்பிடு புரந்தரன் பதிபெறக் குஞ்சரி குயம்புயம் பெறஅரக் ...... கருமாளக்

kontaviḻ caraṇcaraṇ caraṇeṉak kumpiṭu purantaraṉ patipeṟak kuñcari kuyampuyam peṟaarak ...... karumāḷak

Report an error

குன்றிடிய அம்பொனின் திருவரைக் கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக் குண்டல மசைந்திளங் குழைகளிற் ...... ப்ரபைவீசத்

kuṉṟiṭiya ampoṉiṉ tiruvaraik kiṇkiṇi kiṇiṉkiṇiṉ kiṇiṉeṉak kuṇṭala macaintiḷaṅ kuḻaikaḷiṟ ...... prapaivīcat

Report an error

தந்தன தனந்தனந் தனவெனச் செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித் தண்டைகள் கலின்கலின் கலினெனத் ...... திருவான

tantaṉa taṉantaṉan taṉaveṉac ceñciṟu cataṅkaikoñ ciṭamaṇit taṇṭaikaḷ kaliṉkaliṉ kaliṉeṉat ...... tiruvāṉa

Report an error

சங்கரி மனங்குழைந் துருகமுத் தந்தர வருஞ்செழுந் தளர்நடைச் சந்ததி சகந்தொழுஞ் சரவணப் ...... பெருமாளே.

caṅkari maṉaṅkuḻain turukamut tantara varuñceḻun taḷarnaṭaic cantati cakantoḻuñ caravaṇap ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).