பரவரி தாகிய வரையென நீடிய பணைமுலை மீதினி ...... லுருவான
paravari tākiya varaiyeṉa nīṭiya paṇaimulai mītiṉi ...... luruvāṉa
பாடல் 226 · பாடல் 226
pāṭal 226
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
பரவரி தாகிய வரையென நீடிய பணைமுலை மீதினி ...... லுருவான
paravari tākiya varaiyeṉa nīṭiya paṇaimulai mītiṉi ...... luruvāṉa
பணிகளு லாவிட இழையிடை சாய்தரு பயிலிகள் வாள்விழி ...... அயிலாலே
paṇikaḷu lāviṭa iḻaiyiṭai cāytaru payilikaḷ vāḷviḻi ...... ayilālē
நிரவரி யோடியல் குழல்களி னாண்மலர் நிரைதரு மூரலி ...... னகைமீது
niravari yōṭiyal kuḻalkaḷi ṉāṇmalar niraitaru mūrali ...... ṉakaimītu
நிலவியல் சேர்முக மதிலுயர் மாமயல் நிலையெழ வேயலை ...... வதுவாமோ
nilaviyal cērmuka matiluyar māmayal nilaiyeḻa vēyalai ...... vatuvāmō
அரவணை யார்குழை பரசிவ ஆரண அரனிட பாகம ...... துறைசோதி
aravaṇai yārkuḻai paraciva āraṇa araṉiṭa pākama ...... tuṟaicōti
அமையுமை டாகினி திரிபுரை நாரணி அழகிய மாதருள் ...... புதல்வோனே
amaiyumai ṭākiṉi tiripurai nāraṇi aḻakiya mātaruḷ ...... putalvōṉē
குரவணி பூஷண சரவண தேசிக குககரு ணாநிதி ...... அமரேசா
kuravaṇi pūṣaṇa caravaṇa tēcika kukakaru ṇāniti ...... amarēcā
குறமக ளானைமின் மருவிய பூரண குருகிரி மேவிய ...... பெருமாளே.
kuṟamaka ḷāṉaimiṉ maruviya pūraṇa kurukiri mēviya ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).