Skip to content

பாடல் 248 · பாடல் 248

Song 248

pāṭal 248

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

எலுப்பு நாடிக ளப்பொடி ரத்தமொ டழுக்கு மூளைகள் மச்சொடு கொட்புழு விருக்கும் வீடதி லெத்தனை தத்துவ ...... சதிகாரர்

eluppu nāṭika ḷappoṭi rattamo ṭaḻukku mūḷaikaḷ maccoṭu koṭpuḻu virukkum vīṭati lettaṉai tattuva ...... catikārar

Report an error

இறப்பர் சூதக வர்ச்சுத ரப்பதி யுழப்பர் பூமித ரிப்பர்பி றப்புட னிருப்பர் வீடுகள் கட்டிய லட்டுறு ...... சமுசாரம்

iṟappar cūtaka varccuta rappati yuḻappar pūmita ripparpi ṟappuṭa ṉiruppar vīṭukaḷ kaṭṭiya laṭṭuṟu ...... camucāram

Report an error

கெலிப்பர் மால்வலை பட்டுறு துட்டர்கள் அழிப்பர் மாதவ முற்றுநி னைக்கிலர் கெடுப்பர் யாரையு மித்திர குத்தரர் ...... கொலைகாரர்

kelippar mālvalai paṭṭuṟu tuṭṭarkaḷ aḻippar mātava muṟṟuni ṉaikkilar keṭuppar yāraiyu mittira kuttarar ...... kolaikārar

Report an error

கிருத்தர் கோளகர் பெற்றுதி ரிக்கள வரிப்பர் சூடக ரெத்தனை வெப்பிணி கெலிக்கும் வீடதை நத்தியெ டுத்திவ ...... ணுழல்வேனோ

kiruttar kōḷakar peṟṟuti rikkaḷa varippar cūṭaka rettaṉai veppiṇi kelikkum vīṭatai nattiye ṭuttiva ...... ṇuḻalvēṉō

Report an error

ஒலிப்பல் பேரிகை யுக்ரவ மர்க்கள மெதிர்த்த சூரரை வெட்டியி ருட்கிரி யுடைத்து வானவர் சித்தர்து தித்திட ...... விடும்வேலா

olippal pērikai yukrava markkaḷa metirtta cūrarai veṭṭiyi ruṭkiri yuṭaittu vāṉavar cittartu tittiṭa ...... viṭumvēlā

Report an error

உலுத்த ராவண னைச்சிர மிற்றிட வதைத்து மாபலி யைச்சிறை வைத்தவன் உலக்கை ராவிந டுக்கடல் விட்டவன் ...... மருகோனே

ulutta rāvaṇa ṉaiccira miṟṟiṭa vataittu māpali yaicciṟai vaittavaṉ ulakkai rāvina ṭukkaṭal viṭṭavaṉ ...... marukōṉē

Report an error

வலிக்க வேதனை குட்டிந டித்தொரு செகத்தை யீனவள் பச்சைநி றத்தியை மணத்த தாதைப ரப்ரம ருக்கருள் ...... குருநாதா

valikka vētaṉai kuṭṭina ṭittoru cekattai yīṉavaḷ paccaini ṟattiyai maṇatta tātaipa raprama rukkaruḷ ...... kurunātā

Report an error

வனத்தில் வாழும யிற்குல மொத்திடு குறத்தி யாரைம யக்கிய ணைத்துள மகிழ்ச்சி யோடுதி ருத்தணி பற்றிய ...... பெருமாளே.

vaṉattil vāḻuma yiṟkula mottiṭu kuṟatti yāraima yakkiya ṇaittuḷa makiḻcci yōṭuti ruttaṇi paṟṟiya ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).