Skip to content

பாடல் 255 · பாடல் 255

Song 255

pāṭal 255

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

கரிக்குழல் விரித்தும் புறக்கயல் விழித்துங் கரிக்குவ டிணைக்குந் ...... தனபாரக்

karikkuḻal virittum puṟakkayal viḻittuṅ karikkuva ṭiṇaikkun ...... taṉapārak

Report an error

கரத்திடு வளைச்சங் கிலிச்சர மொலித்துங் கலைத்துகில் மினுக்யும் ...... பணிவாரைத்

karattiṭu vaḷaiccaṅ kiliccara molittuṅ kalaittukil miṉukyum ...... paṇivārait

Report an error

தரித்துள மழிக்குங் கவட்டர்க ளிணக்கந் தவிர்த்துனது சித்தங் ...... களிகூரத்

tarittuḷa maḻikkuṅ kavaṭṭarka ḷiṇakkan tavirttuṉatu cittaṅ ...... kaḷikūrat

Report an error

தவக்கடல் குளித்திங் குனக்கடி மையுற்றுன் தலத்தினி லிருக்கும் ...... படிபாராய்

tavakkaṭal kuḷittiṅ kuṉakkaṭi maiyuṟṟuṉ talattiṉi lirukkum ...... paṭipārāy

Report an error

புரத்தையு மெரித்தங் கயத்தையு முரித்தொண் பொடிப்பணி யெனப்பன் ...... குருநாதா

purattaiyu merittaṅ kayattaiyu murittoṇ poṭippaṇi yeṉappaṉ ...... kurunātā

Report an error

புயப்பணி கடப்பந் தொடைச்சிக ரமுற்றின் புகழ்ச்சிய முதத்திண் ...... புலவோனே

puyappaṇi kaṭappan toṭaiccika ramuṟṟiṉ pukaḻcciya mutattiṇ ...... pulavōṉē

Report an error

திரட்பரி கரிக்கும் பொடிப்பட வுணர்க்குந் தெறிப்புற விடுக்குங் ...... கதிர்வேலா

tiraṭpari karikkum poṭippaṭa vuṇarkkun teṟippuṟa viṭukkuṅ ...... katirvēlā

Report an error

சிறப்பொடு குறப்பெண் களிக்கும்வி சயத்தென் திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே.

ciṟappoṭu kuṟappeṇ kaḷikkumvi cayatteṉ tiruttaṇi yirukkum ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).