கனத்தறப் பணைத்தபொற் கழைப்புயத் தனக்கிரிக் கனத்தையொத் துமொய்த்தமைக் ...... குழலார்தங்
kaṉattaṟap paṇaittapoṟ kaḻaippuyat taṉakkirik kaṉattaiyot tumoyttamaik ...... kuḻalārtaṅ
பாடல் 258 · பாடல் 258
pāṭal 258
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
கனத்தறப் பணைத்தபொற் கழைப்புயத் தனக்கிரிக் கனத்தையொத் துமொய்த்தமைக் ...... குழலார்தங்
kaṉattaṟap paṇaittapoṟ kaḻaippuyat taṉakkirik kaṉattaiyot tumoyttamaik ...... kuḻalārtaṅ
கறுத்தமைக் கயற்கணிற் கருத்துவைத் தொருத்தநிற் கழற்பதத் தடுத்திடற் ...... கறியாதே
kaṟuttamaik kayaṟkaṇiṟ karuttuvait toruttaniṟ kaḻaṟpatat taṭuttiṭaṟ ...... kaṟiyātē
இனப்பிணிக் கணத்தினுக் கிருப்பெனத் துருத்தியொத் திசைத்தசைத் தசுக்கிலத் ...... தசைதோலால்
iṉappiṇik kaṇattiṉuk kiruppeṉat turuttiyot ticaittacait tacukkilat ...... tacaitōlāl
எடுத்தபொய்க் கடத்தினைப் பொறுக்குமிப் பிறப்பறுத் தெனக்குநித் தமுத்தியைத் ...... தரவேணும்
eṭuttapoyk kaṭattiṉaip poṟukkumip piṟappaṟut teṉakkunit tamuttiyait ...... taravēṇum
பனைக்கரச் சினத்திபத் தனைத்துரத் தரக்கனைப் பயத்தினிற் பயப்படப் ...... பொரும்வேலா
paṉaikkarac ciṉattipat taṉaitturat tarakkaṉaip payattiṉiṟ payappaṭap ...... porumvēlā
பருப்பதச் செருக்கறத் துகைக்குமுட் பதத்தினைப் படைத்தகுக் குடக்கொடிக் ...... குமரேசா
paruppatac cerukkaṟat tukaikkumuṭ patattiṉaip paṭaittakuk kuṭakkoṭik ...... kumarēcā
தினைப்புனப் பருப்பதத் தினிற்குடிக் குறத்தியைச் செருக்குறத் திருப்புயத் ...... தணைவோனே
tiṉaippuṉap paruppatat tiṉiṟkuṭik kuṟattiyaic cerukkuṟat tiruppuyat ...... taṇaivōṉē
திருப்புரப் புறத்தியற் றிருத்தகுத் துநித்திலத் திருத்திசைத் திருத்தணிப் பெருமாளே.
tiruppurap puṟattiyaṟ ṟiruttakut tunittilat tirutticait tiruttaṇip perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).