Skip to content

பாடல் 299 · பாடல் 299

Song 299

pāṭal 299

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

வரிக்கலையி னிகரான விழிக்கடையி லிளைஞோரை மயக்கியிடு மடவார்கள் ...... மயலாலே

varikkalaiyi ṉikarāṉa viḻikkaṭaiyi liḷaiñōrai mayakkiyiṭu maṭavārkaḷ ...... mayalālē

Report an error

மதிக்குளறி யுளகாசு மவர்க்குதவி மிடியாகி வயிற்றிலெரி மிக்முள ...... அதனாலே

matikkuḷaṟi yuḷakācu mavarkkutavi miṭiyāki vayiṟṟileri mikmuḷa ...... ataṉālē

Report an error

ஒருத்தருட னுறவாகி ஒருத்தரொடு பகையாகி ஒருத்தர்தமை மிகநாடி ...... யவரோடே

oruttaruṭa ṉuṟavāki oruttaroṭu pakaiyāki oruttartamai mikanāṭi ...... yavarōṭē

Report an error

உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட உயர்ச்சிபெறு குணசீல ...... மருள்வாயே

uṇakkaiyiṭu paṭupāvi eṉakkuṉatu kaḻalpāṭa uyarccipeṟu kuṇacīla ...... maruḷvāyē

Report an error

விரித்தருண கிரிநாத னுரைத்ததமி ழெனுமாலை மிகுத்தபல முடனோத ...... மகிழ்வோனே

virittaruṇa kirināta ṉuraittatami ḻeṉumālai mikuttapala muṭaṉōta ...... makiḻvōṉē

Report an error

வெடித்தமணர் கழுவேற ஒருத்திகண வனுமீள விளைத்ததொரு தமிழ்பாடு ...... புலவோனே

veṭittamaṇar kaḻuvēṟa oruttikaṇa vaṉumīḷa viḷaittatoru tamiḻpāṭu ...... pulavōṉē

Report an error

செருக்கியிடு பொருசூரர் குலத்தையடி யறமோது திருக்கையினில் வடிவேலை ...... யுடையோனே

cerukkiyiṭu porucūrar kulattaiyaṭi yaṟamōtu tirukkaiyiṉil vaṭivēlai ...... yuṭaiyōṉē

Report an error

திருக்குலவு மொருநீல மலர்ச்சுனையி லழகான திருத்தணிகை மலைமேவு ...... பெருமாளே.

tirukkulavu morunīla malarccuṉaiyi laḻakāṉa tiruttaṇikai malaimēvu ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).